Jump to content

மூடப்பட்ட மைதானங்களிற்குள் ஐபிஎல்- ஆராய்கின்றது இந்திய கிரிக்கெ


Recommended Posts

                  கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளை மூடிய மைதானத்திற்குள் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஆராய்ந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளை மூடிய மைதானத்தி;ற்குள் நடத்துவது குறித்து சிந்தித்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள கடும் நடவடிக்கைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் ஏப்பிரல் 15 ம் திகதி வரை வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படலாம் என இந்திய கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.


ipl.jpg


ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் வர்த்தக விசா பிரிவிற்குள் அடங்குகின்றனர் என தெரிவித்துள்ள பிசிசிஐ அதிகாரியொருவர் மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் காரணமாக வெளிநாட்டு வீரர்கள்&nbsp; இந்தியா வரமுடியாத நிலையேற்படலாம் என தெரிவித்துள்ளார்.<

இதேவேளை இந்தியாவின் சுகாதார அமைச்சு&nbsp; தேசிய விளையாட்டு அமைப்புகள் அனைத்தையும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டு;ள்ளது.

கொரோனா வைரசினை கருத்தில் கொண்டு பெருமளவு இரசிகர்கள் கூடுவதற்கான சந்தர்ப்பங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு&nbsp; இந்தியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோன வைரஸ் அச்சம் காரணமாக இம்முறை ஐபிஎல் போட்டிகள்; பிற்போடப்படலாம் அல்லது ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் மாத்திரம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படலாம் என மகராஸ்டிரா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகராஸ்டிராவின் சுகாதார அமைச்சர் ராஜேஸ் தோபே இதனை தெரிவித்துள்ளார்.

மும்பாயில் இருவர் கொரோனாவைரசினால்&nbsp; பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மாநில அரசாங்கம் போட்டிகளை இரத்துசெய்யலாம் அல்லது தொலைக்காட்சிகளில் மாத்திரம் ரசிகர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ipl_2020_main.jpg


ஐபிஎல்போட்டிகளை ரசிகர்கள் பார்ப்பதற்கான டிக்கெட்களை விற்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில அமைச்சரவை இது குறித்து ஆராய்ந்துள்ளது நாங்கள் இரு விதமான முடிவுகளிற்கு வந்துள்ளோம், ஒன்று போட்டிகளை ஒத்திவைப்பது அல்லது மைதானத்தில் பார்ப்பதற்கு கட்டணம் அறவிடாமல் போட்டிகளை நடத்துவது என்பதே அந்த இரண்டு முடிவுகள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மைதானத்திற்கு பெருமளவானவர்கள் போட்டிகளை பார்ப்பதை வருவதை தடுப்பதற்காக போட்டிகளை தொலைக்காட்சியில் ஓளிபரப்பு செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Link to comment
Share on other sites

இந்தியர்கள் சோறு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் கிரிக்கெட் மாட்ச் பார்க்காமல் இருப்பார்களா என்பது சந்தேகமே.??🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Paanch said:

இந்தியர்கள் சோறு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் கிரிக்கெட் மாட்ச் பார்க்காமல் இருப்பார்களா என்பது சந்தேகமே.??🤔

101 % உண்மை தோழர்.. வீடியோ கேமாவது சேற் செய்து ஒளிபரப்பு செய்வார்கள்..👍

Link to comment
Share on other sites

முடங்கியது விளையாட்டு உலகம்!! எதைப் பாத்து பொழுகைப் போக்குவது?

கொரொனா ரொம்ப போறடிக்குது போங்க.. எவ்வளவு நேரம் தான் அதையே பார்த்துக் கொண்டிருப்பது?

வேறை எதையும் பார்க்கலாம் எண்டால், பாஸ்கிட்போல் எனப்படும் கூடைப்பந்து போட்டிகள் நேற்று திடீரென இடைநிறுத்தப்பட்டன. பெரும் வர்த்தகமான அதன் நிறுத்தம் இன்று பங்குச் சந்தைகள் வரை எதிரொலித்தது. கடந்த திங்கள் ரொரன்ரோ ரப்ரேஸ் அணி, அமெரிக்காவின் யூற்றா ஜாஸ் அணியுடன் விளையாடியது. அவ்வணியின் வீரர் ஒருவரே கோவிட்-19 தாக்கத்திற்குள்ளாகியிருப்பதை அடுத்தே கூடைப்பந்து போட்டிகள் இடைநிறுத்தப்பட்டன. இன்று அவ்வணியின் மேலும் ஒரு வீரரில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை ரொரன்ரோ அணியின் வீரர்கள், அவர்கள் குடும்பங்கள், அணுசரனை அலுவலகர்கள் அனைவரும் தற்போது இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனார்.

இதன் எதிரொலி சற்று முன்னர் என்.எச்.எல். (NHL) எனப்படும் ஜஸ் கொக்கி லீக் தனது போட்டிகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. முதலில் இன்றைய காலைப்பயிற்சிகள் ரத்தாகின. இக்காலப்பகுதியின் இரண்டு பாரிய விளையாட்டுக்கள் முடங்கன. தற்போது ஆரம்பித்துள்ள அமெரிக்க உதைபந்தாட்டப் போட்டிகளை நடாத்தும் சங்கம் எம்.எல்.எஸ் (MLS) தனது போட்களை 30 நாட்கள் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இம்மாக இறுதியில் ஆரம்பிக்கவுள்ள பேஸ்போல் போட்டிகளுக்கான பயிற்சிப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதனை உடன் நிறுத்துவதாக அதன் அமைப்பு எம்.எல்.பி (MLB) அறிவித்துள்ளது. விரைவில் ஆரம்பமாகவிருந்த அமெரிக்கன் கால்ப்பந்து போட்டிகளும் ஆரம்பமாகுமா? என்பது தற்போது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

இருக்க உலகளாவிய ஆண்கள் ரெனிஸ் போட்டிகளை ஒருங்கமைக்கும் அமைப்பு, அடுத்த 6 வாரங்களுக்கு போட்டிகளைத் தள்ளிப்போடுவதாக அறிவித்துள்ளது.

ஜரோப்பாவின் கால்ப்பந்து போட்டிகளும் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக முடக்கப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக் தகுதிகான் போட்டிகள் பல பல நாடுகளில் தற்போது நடைபெற்று வருகின்றன. அவற்றில் பல தொடர்ந்தும் பின்போடப்பட்டோ அல்லது களங்கள் மாற்றப்பட்டோ வருகின்றன. தற்போதைய நிலை வரும் நாட்களில் மேலும் மோசமடைவது தவிர்க்கமுடியாத யதார்த்தமாகிவிட்ட நிலையில், கோடையில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் யப்பானில் திட்டமிட்ட முறையில் நடைபெறுமா? அல்லது தள்ளிப்போகுமா? என்ற கேள்வி பெரிதாக எழுந்து நிற்கிறது..

அனைத்து விளையாட்டுகளும் முடங்கிப் போனால் எதைப்பார்த்து பொழுதைக் கழிப்பது. நாடு நாடாக வீட்டிற்குள் முடக்கிவிட்டு என்ன செய்வது.

 கொலிவூட்டில் இருந்து பொலிட் வரை திரைப்படங்கள் வேறு தள்ளிப்போகின்றன. வந்தேன் பார் எனவெளிக்கிட்ட ஜேம்ஸ் பொண்ட் (“No Time to Die”) தற்போது நவம்பர் என ஓடி ஒளித்துவிட்டார். 

முகநூல்

Link to comment
Share on other sites

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!

 

by : Anojkiyan

IPL.jpg

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஐ.பி.எல். தொடரைக்காண மைதானங்களில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே எதிர்ப்பை பதிவு செய்தன.

அத்தோடு, வெளிநாட்டு சுற்றுலா விசாவுக்கு மத்திய அரசு ஏப்ரல் 15ஆம் திகதி வரை தடைவிதித்துள்ளதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டு ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஐ.பி.எல். இன் உயர் நிர்வாகம் ஆகியோர் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தின் பின்னர் இந்த முடிவினை உத்தியோகபூர்வமாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

http://athavannews.com/கொரோனா-அச்சுறுத்தல்-கார-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தமாக கிருபனிடம் இருந்து இன்னும் உத்தியோக பூர்வமான அறிவித்தால் வரவில்லை......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, suvy said:

இது சம்பந்தமாக கிருபனிடம் இருந்து இன்னும் உத்தியோக பூர்வமான அறிவித்தால் வரவில்லை......!   😁

யாழ்கள போட்டியையும் ஒத்தி வைக்கவேண்டியதுதான்! இந்த வருஷம் போட்டியில் புதிதாக கலந்துகொண்டவரை கொரானா  விடாமல் துரத்திக் கலைக்கின்றது போலிருக்கு!!🤡

Link to comment
Share on other sites

All English elite football is suspended until at least 3 April


Uefa has postponed next week's Champions League and Europe League fixtures

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.