Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

1 hour ago, ampanai said:

தோட்ட நிர்வாகங்களால் எவ்வித வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. பொலிஸ் ஊடரங்குச்சட்டம் அமுலில் இருக்கும் போது கூட நாளாந்த தொழில் நடவடிக்கைகளுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.என தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மலையக மக்கள் பற்றி எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளும் குரல் எழுப்பாமல் இருக்கிறது கவலையானது.

அவங்க ஊரடங்கு தளர்த்தப்பட்ட கொஞ்ச நேரத்தில போதிய உணவுப் பொருட்களை வாங்க முடியவில்லை எனச் சொல்றாங்க, போதிய போக்குவரத்தும் இல்லை.

பிரதமருடன் செல்பீ எடுத்துப்போட்டு பிரபல்யமாக நினைக்கும் கபடதாரிகள் அந்தந்த நேரத்துக்குரிய மக்களின் தேவைகளை பேசுறதில்ல. 

  • Like 1
Link to comment
Share on other sites

102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது – சுகாதார அமைச்சு

In இலங்கை     March 24, 2020 2:39 pm GMT     0 Comments     1023     by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 5 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இரண்டு நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வௌியேறியுள்ளனர் என்றும் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 229 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார மேம்பட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொழும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வைத்தியசாலையில் பணியாற்றிய சமூக வைத்திய நிபுணர் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

http://athavannews.com/102-பேருக்கு-கொரோனா-தொற்று-உ/

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் வேறு எவருக்கும் கொரோனா இல்லை!: சத்தியமூர்த்தி

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக எவரும் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், கொரோனோ தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரையில் 21 பேர் பரிசோதனை செய்து வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தற்போதும் சந்தேகத்தின் பேரில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. – என்றார்.

http://www.vanakkamlondon.com/sathyamoorthi-24-03-2020/

Link to comment
Share on other sites

திருகோணமலை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 289 குடும்பங்கள் கண்காணிப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த இவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 147 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர் என திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.என்.கே.டமயந்த விஜய சிறி ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று மாலை அவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை கந்தளாய் பொலிஸ் பிரிவில் 132 குடும்பங்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தொற்று உள்ளதா என கண்டறியப்படுவதற்காகவும் சந்தேகிக்கப்படுபவர்களை கையாள்வதற்கும் 7 விசேட குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் பயிற்சி பெற்ற தலா 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். இவர்கள் சுகாதார உத்தியோகத்தர்களுடன் இணைந்து பணியாற்றுவர். இவர்களுக்கு அம்பியுலனஸ் வண்டியுடன் விசேட வாகனங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.


https://www.thaarakam.com/news/118993

Link to comment
Share on other sites

கண்காணிப்பு நிலையங்களில் இருந்து இரண்டாவது குழுவினரும் வௌியேற்றம்!

வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டாவது குழுவினரும் இன்று (புதன்கிழமை) அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு – புனானை மற்றும் கந்தக்காடு நிலையத்தில் இருந்த 201 பேரே இவ்வாறு கண்காணிப்பின் பின்னர் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று மட்டக்களப்பு – புனானை கண்காணிப்பு நிலையத்திலிருந்து 203 பேரும், கந்தக்காடு நிலையத்திலிருந்து 108 பேரும் என 311 பேர் கண்காணிப்பின் பின்னர் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கண்காணிப்பு-நிலையங்களில/

Link to comment
Share on other sites

அரசாங்கத்தின் முக்கிய அறிவுறுத்தல்!: இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் காணப்படுமானால்....

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். இலங்கை நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசிய பொறுப்ப்பாகும்.

*மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.

*முடியுமான வரை நீங்கள் மட்டும் தனியாக இருப்பதற்கு ஒரு அறையை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

*மற்ற குடியிருப்பாளர்களிடமிருந்து ஒரு மீட்டருக்கும் அதிகமான தூரத்தை பராமரிக்கவும்.

*முடியுமான வரை தனியான கழிப்பறை / குளியலறையை பயன்படுத்தவும். இல்லையென்றால், கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்திய பின் அவற்றின் தாழ்ப்பாள் மற்றும் கைப்பிடிகளை சவர்க்காரம் பாவித்து கழுவவும்..

*விருந்தினர்களை வீட்டுக்கு வரவழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

*நீங்களும் பிற குடியிருப்பாளர்களும் முடியுமான வரை குறைந்தது இருபது வினாடிகள் சவர்க்காரம் உபயோகித்து கைகளை கழுவ வேண்டும்.

*நீங்கள் உபயோகிக்கும் தட்டு, கோப்பை, துவாய் மற்றும் படுக்கை போன்றவற்றை மற்ற குடியிருப்பாளர்கள் பொருட்களுடன் சேராமல் தனியாக வைத்துக்கொள்ளவும். இவற்றை கழுவும் போதும் பிறரின் பொருட்களுடன் சேராமல் தனியாக சவர்க்காரம் பாவித்து கழுவவும்.

*தும்மும் போது அல்லது இருமும் போது முழங்கையின் மூலம், அல்லது கைக்குட்டை / திசு கடதாசியில் வாயை மூடி தும்மவும். ஒரு முறை உபயோகித்த திசு கைக்குட்டையை மூடியுடனான குப்பைக் கூடை ஒன்றிற்குள் வீசவும்.

*நீங்கள் பயன்படுத்தும் முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு முறை பயன்படுத்திய பிறகு, அதை மீண்டும் பயன்படுத்தாமல் மூடியுடனான குப்பைக் கூடை ஒன்றிற்குள் வீசவும்..

*மிகவும் முக்கியமாக, நீங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தால் அல்லது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் என சந்தேகத்திற்கிடமான நபருடன் தொடர்பில் இருந்திருந்தால், உடனடியாக அப்பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவும்.

*மருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 ஆலோசனை சேவையை நீங்கள் அணுகலாம்.

*சிகிச்சைக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ள, 1990 மருத்துவ அவசர ஊர்தி சேவையைத் தொடர்பு கொள்ளவும்.

*மேற்கண்ட அறிகுறிகளைக் கொண்ட,
கடந்த 14 நாட்களுக்குள் எந்த நாட்டிலிருந்தும் இலங்கைக்கு திரும்பியுள்ளவர்கள்,
அறிகுறிகள் தோன்றுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட கொவிட் 19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருத்தவர்கள்,
விசேட வைத்திய நிபுணரினால் கடுமையான நிமோனியா நோயுடையவர் என தீர்மானிக்கப்பட்ட பயண மற்றும் நோய்த் தொடர்பு வரலாற்றை கொண்டிராதவர்கள்,
உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையிலிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

https://www.virakesari.lk/article/78599

Link to comment
Share on other sites

யாழில் கொரோனா கிருமி தொற்று நீக்கி விசிறும் பணி ஆரம்பம் !

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

jaffna_corona.jpg

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பணி மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னேடுக்கப்படவுள்ளது.

சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநாகர ஆணையாளர் த.ஜெயசீலன், பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரும் இந்தப் பணியின் ஆரம்பத்தில் பங்கேற்றிருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78602

Link to comment
Share on other sites

சமூக இடைவெளி என்றால் என்ன? அதை பின்பற்றுவதால் சமூகத்தில் ஏற்படப் போகும் நன்மைகள் என்ன? கொரோனா வைரஸுக்கு சமூக இடைவெளி எனப்படும் Social distancing மட்டும்தான் தீர்வா? உலக சுகாதார நிறுவனம் சொல்வது என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

முகக்கவசத்தை தவறாக பயன்படுத்துவதன் மூலமும் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது - விஷேட வைத்திய நிபுணர்

கொரோனா தொற்றுநோய் இலங்கையில் வேகமாகப் பரவாததால், பொது மக்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என்று சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் பாபா பாலிஹவதன சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அந்த முக கவசங்களை பயன்படுத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

"ஏதேனும் ஒரு நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே முக கவசங்களை அணிய வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். முகமூடியை அணிவதற்கான நுட்பங்கள், அதன் சரியான பயன்பாடு மற்றும் அதை அகற்றுதல் ஆகியவை கவனமாக துல்லியமாக செய்யப்பட வேண்டும்.

மேலும் ஒரு சாதாரண நபர் அதைப் பயன்படுத்துவது கடினம் முக கவசத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சில நேரங்களில் COVID-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் "என்று டொக்டர் பாலிஹவதன எச்சரித்தார்.</p>
<p>மேலும் 4 வைரஸ் தொற்று நோயாளர்கள் இன்று (நேற்று)பதிவாகியுள்ளதாக மருத்துவ நிபுணர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இத்தாலியைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் அமெரிக்காவிலிருந்து மற்றொரு நபர். "இலங்கையில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நோயளர்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிக எச்சரிக்கை மாவட்டங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது, ஏனெனில் இதுவரை கண்டறியப்பட்ட 102 தொற்று நோயளர்களில் பெரும்பாலானவை அந்த மாவட்டங்களான கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 10 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேரும், கலுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதா இல்லையா என்பதை விட , அந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது அவசியம், "என்று டொக்டர் ஜாசிங்க பொதுமக்களை வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/78604

Link to comment
Share on other sites

ஆண்களை அதிகளவில் இலக்கு வைக்கும் கொரோனா! காரணத்தை கண்டறிந்தது ஆய்வுக்குழு

ஆண்களிடம் மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் அதிகளவில் இருப்பதனால் கொரோனா வைரஸ் ஆண்களை அதிகம் தாக்குவதாக சர்வதேச அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பான ஆய்வுகளை சர்வதேசத்தின் பல நிறுவனங்களும், அமைப்புக்களும் மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில், இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களில் 60 வீதமானவர்கள் ஆண்கள் என்பதுடன், இறந்தவர்களில் 70 வீதமானவர்களும் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வின் முடிவுகளின்படி, பெண்களை விட ஆண்கள் மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் தான் இதற்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா பாதிப்பு உள்ளான அமெரிக்கர்கள் அதனை மறைப்பதாக அமெரிக்காவின் சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இதனால், காணப்படும் நிலைமை குறித்து உலகளாவிய ரீதியாக புரிந்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல உலக நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக அரை குறையாகவும் முழுமையாகவும் முடக்கப்பட்டுள்ள நிலையிலும் இவை அனைத்துக்கு சவால் விடுத்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இன்னும் குறிப்பிடத்தக்க காலம் செல்லும் எனவும் நபர்கள் முடிந்தவரை ஒருவருக்கு ஒருவர் இடையிலான இடைவெளிகளை பேண வேண்டியது முக்கியமானது என சுகாதார அதிகாரிகள் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வைரஸ் தாக்கத்தினால் இலங்கையும், இந்தியாவும் முழுமையாக தமது நாடுகளை முடக்கியிருக்கின்றன. இலங்கையில் தற்போது வரை 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/world/80/139788?ref=ibctamil-recommendation

கர்ப்பிணிப்பெண்ணுக்கு கொரோனா: தனியார் வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டது சீல்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கோவிட் -19 (கொரோனா வைரஸ்) இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து பாணந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டைச் சேர்ந்த உறவினர்கள் கொண்ட குழு பாணந்துறையில் வசித்து வந்த குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து வெளியேறியது.

இது குறித்த தகவல்களுக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிட்டனர்.

அந்த பெண் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை மீறி அப்பகுதியில் பல இடங்களுக்குச் சென்று சில நாட்களுக்கு முன்பு பாணந்துறையில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். கர்ப்பிணிப் பெண் தனது உண்மையான நிலையை மறைத்து கிளினிக்கில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

அதன்படி, பெண் மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்ற பாணந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/139784?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

இலங்கையில் 550 பேருக்கு கொரோனா தொற்று :  அவர்கள் நடமாடியிருந்தால் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர் - மருத்துவ அதிகாரிகள் கணிப்பீடு

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி சுமார் 550 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும், அவர்கள் பொது வெளியில் நடமாடுபவர்களாக இருந்தால் அவர்களுடன் சுமார் 19,000 பேர் தொடர்புகளைப் பேணியிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமை காணப்பட்டால் அது இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரங்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இலங்கையில் நேற்று புதன்கிழமை நண்பகல் வரை 101 நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுப்படுத்தப்பட்டிருந்தது.

இவர்களில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து விமான நிலையத்தில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டு அங்கிருந்து நேரடியாக தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவர்களாவர்.

ஏனைய 69 பேரும் தொற்றுக்குள்ளானோரிடம் தொடர்புகளைப் பேணியதால் பாதிக்கப்பட்டோராவர்.

சாதாரணதொரு கணிப்பீட்டின் படி 550 பேர் இலங்கையில் கொரோன தொற்றுக்குள்ளாகியிருக்கக் கூடும் எனபதோடு இவர்கள் பொது வெளியில் நடமாடுபவர்களாகவும் இருக்கலாம்.

இந்த 550 பேரும் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களிலோ அல்லது சாதாரணமாக வீடுகளில் இருப்பவர்களிலும் உள்ளடங்கலாம்.

இந்த 550 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பிற்கு உற்படாமல் இருப்பார்களாயின் இவர்கள் சுமார் 19,000 நபர்களுடன் தொடர்புகளைப் பேணியிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே தொற்று நோய் தடுப்பு பிரிவு, இராணுவம் மற்றும் பொலிஸார் இவர்களைத் தேடும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கணிப்பின் படி 550 தொற்றுக்குள்ளானோரும் அவர்கள் தொடர்புகளைப் பேணிய 19,000 பேரும் பொது வெளியில் நடமாடுவார்களாயின் அது இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். அத்தோடு கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை ஆகிய மாவட்டங்கள் கூடுதல் பாதிப்புடைய மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் இம் மாதம் 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை விமான நிலையம் மூடப்பட்டமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளால் 50 வீதம் மக்கள் ஒன்று கூடல் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும். அத்தோடு இம் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் 75 வீதம் மக்கள் மத்தியில் ஒன்று கூடலை தவிர்க்க முடிந்துள்ளது.

இவ்வாறு ஒன்று கூடலை தவிர்த்திருக்காவிட்டால் 30 நாட்களுக்குள் ஒரு நபரிடமிருந்து சுமார் 500 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும். எனினும் 50 வீதம் தூர இடைவெளி பேணப்பட்டமையால் நபரொருவரிலிருந்து பரவும் வேகம் 15 ஆகவும் 75 வீதம் தூர இடைவெளி பேணப்பட்டதால் பரவலானது 2.5 வீதமாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/78619

Link to comment
Share on other sites

வவுனியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலில்!

கொரனா வைரஸ்தாக்கம் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் இதுவரை 208 பேர் வருகை தந்துள்ளதுடன் அவர்களில் 137 பேர் சுய தனிமைபடுத்தப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும் செட்டிகுளம் பிரிவில் 17 பேரும், வவுனியா வடக்கில் 8 பேர் மற்றும் யாழில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேர் உட்பட 137 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட வெளிநாட்டில் இருந்து வருகைதந்த விமானபயணிகள் 538 பேர் வவுனியா மாவட்டத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் 212 பேரும், பெரியகட்டு இராணுவமுகாமில் 120 பேரும்,பூவரசங்குளத்தில் 206 பேரும் என 538 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/139808

Link to comment
Share on other sites

இன்று மாலை 4.30 வரை புதிதாக எந்த தொற்றும் கண்டுபிடிக்கேலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கொரோனா அச்சம் காரணமாக நாடளாவியரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மாதாந்தம் கிளினிக் செல்லும் மக்களுக்காக அவர்களுடைய வீடுகளை தேடி சென்று தேவையான சிகிச்சை மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

Mull-Doc1-copy.jpg

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி நிரோசினி திலீபன் தலைமையில் வைத்தியர் நிரோசா சிரேஸ்ட தாதியர் சுகிந்தன், மருந்தாளர், பணியாளர்கள், வாகன சாரதி ஆகியோர் தங்களது வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக் பெறுவோருக்கு நடமாடும் சேவை மூலம் ஒவ்வொருவருடைய வீட்டு வாசலுக்கு சென்று பரிசோதித்து அவர்களுக்குரிய மருந்துகளை இன்று(25.03.2020) வழங்கி வருகின்றனர். இதை அறிந்து மருத்துவ தேவை நிமிர்த்தம் செல்லும் ஏனைய நோயாளிகளுக்கும் மருந்துகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. 

https://www.thaarakam.com/news/119301

Link to comment
Share on other sites

This evening the COVID - 19 laboraty esults came and tested all seven cases are negative. Still all should be more vigilant - வைத்தியர் சத்தியமூர்த்தி 

thangamuthu.sathiyamoorthy

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

Link to comment
Share on other sites

நாட்டில் கடந்த 24 மணி நேரத்திற்குள் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை

நாட்டை அச்சுறுத்தி, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நேற்று முன்தினம் 24 ஆம் திகதி மாலை பெண்ணொருவர் குணமடைந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் (இன்று காலை -26.03.2020 ) எந்த கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78660

Link to comment
Share on other sites

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது!

In இலங்கை     March 26, 2020 4:08 am GMT     0 Comments     1081     by : Jeyachandran Vithushan

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுலான கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/பொலிஸ்-ஊரடங்குச்-சட்டத்த/

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

ஆட்டுக்குக் குளிப்பாட்டி பொட்டிட்டு மாலைசூடி அழகுபார்த்தபின் கோவிலில் சாமிக்குப் பலிகொடுப்பதுபோல், அம்பனை அவர்களின் ஆத்திசூடியானது கொரோனா பிடியிலிருந்து விடுபட மனிதர்களுக்கு நல்லழிகள் காட்டிவிட்டு ஓரிடத்தில் கொரோனாவுக்குப் பலியாகவும் சொல்கிறதே.🤔  

'ஐ யமின்றி அனைத்தும் உண்' 

பாம்பு வெளவால் நாய் பூனை புழு பூச்சி அனைத்தையும்கூட உண்ணலாம்போல் இந்த ஆத்திசூடி வழிகாட்டுவதுபோல் தெரிகிறதே....😩

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.