Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா – இலங்கையில் 24 மணித்தியாலங்களில் எவருக்கும் இல்லை – 300 பேர் வெளியேறினர் – 2பேர் பூரண சுகம்…

March 28, 2020

 

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எவரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2 நோயாளிகள் பூரண குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும்,  குணமடைந்த இருவரும் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 9 பேர் இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ,  நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள  106 கொரோனா நோயாளர்களில்  9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதில் 87 பேர் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலும், மின்னேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறனர்.

மேலும் 109 பேர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாட்டின் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 300 பேர் வெளியேறியேறியதாக அறிவிப்பு….

வெளிநாடுகளிலிருந்து  இலங்கை திரும்பி  கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு குழுவினர் இன்று தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 300 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு வெளியேறி சென்றதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2020/139455/

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

இலங்கையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 பேர் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, வைத்தியசாலையில் 101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நோய் தொற்று சந்தேகத்தில் 199 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78824

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோன வைரஸ் தொற்றால் முதல் இறப்பு சம்பவம் IDH மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. 

மாறவில பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதானவரே உயிரிழந்துள்ளார்.  சிறுநீரகம் மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனளிக்காது  உயிரிழந்துள்ளார்.

நன்றி வட்சப்

Link to comment
Share on other sites

இலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் !

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 110 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 9 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78838

Link to comment
Share on other sites

இலங்கையில் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; 8 பேரின் நிலைமை கவலைக்கிடம்

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் இதுவரை (இன்று 23/03/2020 மலை 6.00 மணி) 110 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 9 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது, அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில்  இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 101 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவர்கள் அந்தந்த வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டது.

இன்று சனிக்கிழமை மட்டும் புதிதாக நான்கு கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனையடுத்து இதுவரை கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய , கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தோரில் இன்று மட்டும் இருவர் குணமடைந்து வெளியேறினர்.

அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்ற இருவரே இவ்வாறு குணமடைந்து வெளியேறினர்.

இந்நிலையில் தற்போது சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களில், அதிகமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டியுள்ளது. இதில் 25 பேர் வரையிலானோர் கொழும்பு மாவட்டத்துக்குள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர்.

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், இரத்தினபுரி, குருணாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட நாடளாவிய ரீதியில் 21 வைத்தியசாலைகளில ;5 வெளிநாட்டவர்கள்  உட்பட 199 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் 96 பேரும், வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் 22 பேரும், ஹோமாகம மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளில் தலா 12 பேரும் சந்தேகத்தில் சிகிச்சை பெறும் 199 பேரில் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் அடுத்து வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்று பரவும் வேகம் இலங்கைக்குள் அதிகரிக்கலாம் எனும் சந்தேகம் நிலவும் நிலையில், ஊரடங்கு காலப்பகுதியில் அனைவரையும் தத்தமது வீடுகளுக்குள்ளேயே தனிமைபப்ட்டிருக்க அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்த ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலைமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் கீழ் உடனடி நிவாரணம் வழங்குவதற்காக இந்த பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்றாட நடவடிக்கையினை தங்குதடையின்றி முன்னெடுப்பதற்காக பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிரமங்களை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது இதன் நோக்கில் இப்பொறிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தேவையான ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 0760 390 981 , 0760 390 437 , 0766 527 589 , 0760 390 732 , 0760 390 752 அகிய  தொலைபேசி இலக்கங்களுடாக பொது மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்குமாறு அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு  கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 1358 வாகனங்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

https://www.virakesari.lk/article/78837

Link to comment
Share on other sites

எதிர்வரும் ஏப்ரல் 23 வரையிலான இருவார காலம் மிக முக்கியமானது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ள்ளானவர்களின் கால தரவுகளின் பிரகாரம், இலங்கையில் கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளாகி நோயரும்பு காலம் பூர்த்தியாகி அந்த நோய்த்தொற்றலுக்கு உள்ளான பலர் அதை வெளிக்க்காட்ட கூடும், அல்லது அவர்களில் இருந்து தொற்று பரவ கூடும்.

எனவே, கூடுமானவரை வீட்டிற்குள் இருக்கவும்.

மார்ச் 23 முதல் ஏப்ரல் 3 வரையான காலப்பகுதி இலங்கையை பொறுத்தவரை மிக முக்கியமானது. இந்த காலப்பகுதியில் வெளியில் செல்வதையோ யாருடையதாவது வீடுகளுக்கு செல்வதையோ தயவு செய்து தவிருங்கள்.

பேராசிரியர் ரோகினி செனிவிரத்ன
(ஓய்வு பெற்ற சிரேஷ்ட வைத்திய நிபுணர் ரகுநாதன் அவர்களின் முகநூலில் இருந்து பிரதிபண்ணப்பட்டது )

 

Link to comment
Share on other sites

யாழிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்ற டக்ளஸின் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் |

கொரோனா தொற்று இலங்கையிலும் தன் ஆதிக்கத்தை செலுத்திவரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் முகமாக அரசு பல்வேறு முன்னாயத்த நடவடிக்கைகளையும் தற்பாதுகாப்பு விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா  நோயின் தாக்கம் யாழ் மாவட்டத்திலும் உணரப்பட்டுள்ளமையால் அப்பரிசோதனையை துரிதகதியில் மேற்கொள்வதற்கு ஏதுவாக அதன் மருத்துவ பரிசோதனையை யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தமைக்கு அமைய அமைச்சரவை அந் நடைமுறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின்போது கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலையில், அவற்றை இயக்கும் ஆளணி மற்றும் தொடர்புடைய பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தார்.

இதற்கமைய யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் உள்ள பி.சி.ஆர் இயந்திரத்தை இயக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், வரும் புதன்கிழமையில் இருந்து யாழ்ப்பாணத்தில் குறித்த பரிசோதனையை ஆரம்பிக்க முடியும் என தான் நம்புவதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் புதன்கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் கொரொனா வைரசுக்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78808

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

co.JPG


இதுவரை 9 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதுவரை உலகளாவிய ரீதியில் 663,740 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் 30,879 பேர் உயிரிழந்துள்ளனர்.

142,183 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78852

Link to comment
Share on other sites

மக்களே அவதானம் ! கொரோனா வைரஸ் பரவலின் 2 ஆம் கட்ட  அவதான  நிலையில் இலங்கை !

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முழு உலகுமே சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா , இத்தாலி, ரஷ்யா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் வைரஸ் தாக்கத்திலிருந்து மீள முடியாது தவிக்கின்றது. மறுப்பறம் மேற்குலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை சர்வதேச சமூகத்தை அச்சம் கொள்ள வைத்துள்ளது. அதே போன்று சீனா அந்த அபாய நிலையிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் நிலை அபாயவலயத்தில் இலங்கை தற்போதுள்ளது. இந்த இரண்டாம் நிலை அவதானம் அல்லது அபாய வலயமென அரசாங்கம் எதனை குறிப்பிடுகின்றது என்பதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி கடந்த 11 ஆம் திகதி (மார்ச்) அடையாளம் காணப்பட்டார்.  இந்த திகதியிலிருந்து 14 நாட்களாக கருத கூடிய மார்ச் 25 ஆம் திகதி வரையான கால எல்லையை கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கிய முதலாவது காலக்கட்டமாக அல்லது ஆரம்ப நிலையாக கருதப்பட்டது.

கடந்த புதன்கிழமையுடன் 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்த கொரோனா வைரஸ் பரவலுக்கான முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அதன் இரண்டாம் கட்ட வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கையானதும் அபாயகரமானதுமான காலப்பகுதியில் இலங்கை உள்ளது. ஏனெனில் முதலாவது வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் ஊடாக எத்தனை  பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்பது வெளிப்படுகின்ற காலப்பகுதியிலேயே இலங்கை தற்போதுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் தொடக்கம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி வரைக்கும் பதிவாகியிருந்த 106 பேரிடிருந்து பரவி எண்ணிக்கையின் அளவு இந்த இரு வாரத்திற்குள் வெளிப்பட வேண்டும். இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் இரண்டாது கட்ட அபாய நிலையாக அரசாங்கம் தற்போது கருதுகின்றது.

வைரஸ் தொற்று பரவாமளிருக்க அரசாங்கம் கடந்த நாட்களில் அமுல்படுத்தியிருந்த ஊரடங்கு சட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைளின் ஊடாக இரண்டாம் கட்ட அபாய நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கிலேயே செயற்பட்டது. ஆனால் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்தமை மற்றும் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடித்தமை போன்ற சம்பவங்கள் வைரஸ் தொற்று தீவிரமடையலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

எனவே தான் அரசாங்கம் மக்களின் நடமாட்டத்தை முழு அளவில் முடக்கும் வகையில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் தொடக்கம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி வரைக்கும் பதிவாகியிருந்த 106 பேரிடிருந்து பரவி எண்ணிக்கையின் அளவு இந்த இரு வாரத்திற்குள் வெளிப்பட வேண்டும். இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் இரண்டாது கட்ட அபாய நிலையாக அரசாங்கம் தற்போது கருதுகின்றது.

வைரஸ் தொற்று பரவாமளிருக்க அரசாங்கம் கடந்த நாட்களில் அமுல்படுத்தியிருந்த ஊரடங்கு சட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைளின் ஊடாக இரண்டாம் கட்ட அபாய நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கிலேயே செயற்பட்டது. ஆனால் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்தமை மற்றும் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடித்தமை போன்ற சம்பவங்கள் வைரஸ் தொற்று தீவிரமடையலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

எனவே தான் அரசாங்கம் மக்களின் நடமாட்டத்தை முழு அளவில் முடக்கும் வகையில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. இந்த நிலை பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 10 திகதி வரை தொடரும் . ஏனெனில் இரண்டாம் கட்ட அவதானத்திற்காக அரசாங்கம் மேலும் 14 நாட்களை கணித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. எனவே இந்த இருவார காலம் என்பது இலங்கைக்கு கொரோனா வைரஸ் குறித்த முக்கியமான காலப்பகுதியாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78856

Link to comment
Share on other sites

வைத்தியசாலைகளுக்கு கிளினிக் வரவேண்டாமென வலியுறுத்தல்
Editorial   / 2020 மார்ச் 29 , மு.ப. 08:56 - 0      - 3
கே.கண்ணன் 

எளிதில் கிருமித் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய நீரிழிவு, இதய நோய்,  உயர் குருதியமுக்கம், கொலஸ்ரோல் போன்ற தொற்றா நோயாளிகளை, வைத்தியசாலைகளுக்கு வரவேண்டாமென, சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பில் சுகாதார அமைச்சு  வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், மேற்படி நோயாளிகளுக்குக் காணப்படும் அதிக ஆபத்துக் காரணமாக நோயாளர்கள், பிணி நிலையத்துக்கு (கிளினிக்) வரவேண்டாம் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அதற்குப் பதிலாக அவர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள ஆரோக்கியமான பொறுப்புடைய ஒருவரை, பிணி நிலையத்துக்கு கிளினிக் புத்தகத்துடன் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இது குறித்த தேவையான சேவைகள் வழங்குவதற்காக அரச வைத்தியசாலைகள் பிணி நிலைய நேர அட்டவணையின்படி செயல்பட்டு வருவதுடன், இரு மாதங்களுக்குத் தேவையான மருந்தும் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும், பிணி நிலையத்துக்கு அவர்களால் வரமுடியாவிட்டால் ஏதேனுமொரு வார நாள்களில் அம்மருந்துகளை வெளிநோயாளர்கள் பிரிவில் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பிணி நிலைய புத்தகப் பதிவுகள் அல்லது நோயறிதல் அட்டைகள், ஊரடங்கு அமுலின் போது அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தலாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/வைத்தியசாலைகளுக்கு-கிளினிக்-வரவேண்டாமென-வலியுறுத்தல்/175-247581

Link to comment
Share on other sites

அத்தியாவசிய தேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மக்கள் தகவல்களை தெரிவிக்கவும் தகவல் அறிந்து கொள்ளவும் “அத்தியாவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு”வினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின்

வழிநடாத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது.

பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும்.

  • தொலைபேசி இலக்கங்கள் - 0114354854, 0114733600
  • நேரடி தொலைபேசி இலக்கங்கள் - 0113456200, 0113456201, 0113456202, 0113456203, 0113456204
  • பெக்ஸ் இலக்கங்கள் - 0112333066 0114354882
  • மின்னஞ்சல் முகவரி - ptf@pmoffice.gov.lk

https://www.ibctamil.com/srilanka/80/140035

Link to comment
Share on other sites

ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 12:55 - 0      - 14


கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஐ.டீ.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவோரில் ஐவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென, சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஐவர்-தீவிர-சிகிச்சைப்-பிரிவில்/175-247597

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைப் பாராட்டினார் பிரிட்டன் பிரஜை

 

கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்கு, பிரட்டனை விட இலங்கை நன்றாகத் திட்டமிட்டுள்ளது என, இலங்கைக்கு சுற்றுலா வந்த பின்னர் பிரிட்டனுக்குத் திரும்பிய சுற்றுலாப் பயணியொருவர், அங்குள்ள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பிரட்டனுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் ஏற்பாடுகள் நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலாப்பயணி, மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்தார் என்றும் இரண்டு வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

அவர் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வரும்போதே, விமானத்துக்குள் வைத்து, தங்களைப் பற்றிய விவரங்களை நிரப்புமாறு ஒரு படிவம் வழங்கப்பட்டது என்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும்போது, அங்கிருந்த விமானநிலைய அதிகாரிகள், தங்களைப் பற்றிய அனைத்துத் தரவுகளையும் அறிந்து வைத்திருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், விமான நிலையத்தில் இருந்து தங்களுடைய ஹோட்டலுக்குச் செல்வதற்கு முன்னர், பல இயந்திரங்கள் பல பரிசோதனைகள் தனக்கு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையைப்-பாராட்டினார்-பிரிட்டன்-பிரஜை/175-247601

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு

(எம்.எப்.எம்.பஸீர்)


கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டோர் 117 பேர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி இன்று  இரவு 7.45 மணியாகும் போது மொத்தமாக இரு வெளிநாட்டவர்கள் உட்பட 106 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இரு வெளிநாட்டவர்கள் உட்பட 96 பேர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.


இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ள நிலையில், அவர்கள் அவ்வந்த வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று மட்டும் சிலாபம் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இருந்து இருவரும் நேற்று 9 பேரும் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருந்தனர்.

இதனிடையே தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 6.00 மணிக்கு 19 மாவட்டங்களில் தளர்த்தப்படவுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இவ்வாறு ஊரடங்கு நாளை காலை தளர்த்தப்படுகின்றது. அவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீள பிறப்பிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. எனினும் கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பதிவான முதல் மரணம் நேற்று சம்பவித்திருந்தது.  60 வயதான மாரவில பகுதியைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட 4 ஆவது தொற்றாளராக அடையாளம் கணப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

அவருக்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முதல் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டிருந்த நிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலதிகமாக நீரிழிவு மற்றும் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த குறித்த நபரின் இறுதிக் கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் நியமங்கள் மற்றும் தொற்று நோய் சட்ட விதிகளுக்கு அமைய கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றது.

சட்டவைத்திய அதிகாரி சன்ன பெரேராவின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர்கள், முல்லேரியா பொலிசாரின் கட்டுப்பாட்டில் இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

இதன்போது, உயிரிழந்த நபரின் உறவினர்கள் இருவர் மட்டும் பங்கேற்றிருந்தனர். அவரது மனைவி பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பங்கேற்கவில்லை. குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாக முதல், ஜேர்மனியில் இருந்து வந்த சுற்றுலா குழுவொன்றுக்கு வழிகாட்டியாக செயற்பட்டிருந்தார்.

இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் அடையாளம் காணப்பட்டோர் 29 பேராவர். களுத்துறையில் 17 பேரும் புத்தளத்தில் 12 பேரும் கம்பஹாவில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டுள்ளோர் நால்வராவர்

இதனிடையே மேலும் 117 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 21 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78916

Link to comment
Share on other sites

Corona Virus 🦠: கொரோனா எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நாட்கள் உயிர் வாழும்? கொரோனாவை ஒரு நிமிடத்தில் உங்கள் வீட்டில் இருந்து துரத்துவது எப்படி?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

 

இவருடைய பெயர் மதனழகன் 🙂

காத்தான்குடியை முற்றாக முடக்கப் போறார்களாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படும் போது என்ன செய்ய வேண்டும்? அரச அதிபர் விளக்கம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா மக்களுக்கு விடுக்கும் பணிவான அறிவித்தல் நாளை காலை 6.00 மணிக்கு ஊரடக்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. அவ்வேளைகளில் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுவது அவசியமாகும்.

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொது மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் பல செயல்த்திட்டங்கள் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்தாகவும் இது மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடக பிரிவுக்கு தெவித்தார்.

மாவட்டத்தில் சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்றுவந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது எனவும் இதற்கான மாற்று நடவடிக்கையாக மரக்கறி வகைகளை நடமாடும் சேவையாக சகல வீதிகளுக்கும் வாகனங்கள் ஊடாக எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி கட்டுப்பாட்டு விலைகளில் வழங்க அரசாங்க அதிபரும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளர் ஆர். எப். அன்வர் சதாத்தும் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர். இதில் பொருட்களை பதுக்கிவைத்தல் அதிக விலைக்கு பொருட்களை விற்பணை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாளை காலை ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பல்பொரு விற்பணை நிலைங்களும் மருந்தகங்களும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கான பொருட்களை வழங்கவுள்ளனர் பொது மக்கள் சுகாதார பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கன்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் அதில் முக்கியமாக ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றி வரிசை கிரமமாக தங்களின் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்து கொன்டு அங்கும் இங்கும் அலைவதை தவிர்த்து தங்களின் வீடுகளுக்கு சென்று விடுமாறு வேண்டப்படுகின்றனர்.

கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துளைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்கையை வாழ்வதற்கு சகல தரப்பினரும் ஒத்துளைப்பை வழங்குவது அவசியமாகும்.

http://thinakkural.lk/article/37434

ஓய்வூதியம் மற்றும் மாதாந்த முதியோர் கொடுப்பனவு வீடுகளுக்கே அனுப்பிவைக்கப்படும்

அரச அலுவலர்களுக்கான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும், இருபத்தி மூன்று இலட்சம் சமூர்த்திக் குடும்பங்களுக்கு ஆரம்பக் கொடுப்பனவாக 5000 ரூபாவையும், அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத, காத்திருப்புப் பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கும் ஏற்புடைய கொடுப்பனவை வழங்கவும் ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன் ஓய்வூதிய, முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அனுமதியின் கீழ் ஓய்வுபெற்றோர் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 2020.04.03 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (2020.03.28) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் செயலணியின் பங்களிப்பு வழங்கப்படும் .

http://thinakkural.lk/article/37431

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.