Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

கொரோனா வைரஸ்: ’இலங்கையில் 2000 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்’ - மருத்துவர்கள் சங்கம்

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், 178 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இவர்களில் ஐவர் உயிரிழந்துள்ள அதேவேளை, 34 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 257 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுகாதார கட்டமைப்பின் பிரகாரம், 2000 கோவிட் 19 நோயாளர்களுக்கு மாத்திரமே சிகிச்சை அளிக்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-52187511

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

இன்று போதனா வைத்தியசாலையில் இருவருக்கும் கோப்பாய் பிரதேசத்தில் 18 பேருக்கும் கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

- Dr. Thangamuthu Sathiyamoorthy

Link to comment
Share on other sites

இன்று போதனா வைத்தியசாலையில் இருவருக்கும் கோப்பாய் பிரதேசத்தில் 18 பேருக்கும் கொரோனா தொற்றுக்கான  ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

- Dr. Thangamuthu Sathiyamoorthy

 


අද දින ශික්ෂණ රෝහලේ දෙදෙනෙකුත් කෝපායි ප්‍රදේශයේ දහ අට දෙනෙකුත් කොරෝනා ආසාදනය වී ඇද්දැයි නිගමනය කිරීමට විද්‍යාගාර පර්යේෂණයට යොමු කරන ලදී. කිසිවකුටත් රෝගය ආසාදනය වී නොමැති බව තහවුරු වී ඇත

Link to comment
Share on other sites

9ஆம் திகதி சகல மருந்தகங்களையும் திறக்க அனுமதி

நாட்டிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளை மறுதினம் (09) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 5.00 மணிவரை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/9ஆம்-திகதி-சகல-மருந்தகங்களையும்-திறக்க-அனுமதி/175-248139

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் திறமையாக சமாளிக்கிறார்கள் கோத்தாவுக்கு நல்லா ஐடியா குடுக்கிற கூட்டம் எல்லாத்தையும் சமாளிக்குது இல்லை 30 வருட யுத்தம் பட்டறிவை குடுத்து இருக்கு .

கத்தி மேல் நடப்பது போல் இந்த விடயம் எங்காவது சிறு பிழையும் பூதகரமாகி விடும் .

Link to comment
Share on other sites

கிருமி தொற்று நீக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு

வ.சக்தி 

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் கூடும் பொதுவிடங்களில், கிருமி தொற்று நீக்கும் பணிகள், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் பொதுமக்கள் கூடிய நிரந்தர சந்தைகள், தற்காலிக சந்தைகள் உள்ளிட்ட பல்பொருள் விற்பனை நிலையங்கள், பொலிஸ் வளாகம், தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்நிர வளாகங்கள் ஆகிய இடங்களில்,  மாநகர சுகாதாரப் பிரிவினர், தொற்று நீக்கும் பணிகளை, இன்று(7) முன்னெடுத்தனர்.

மேற்படித் தொற்று நீக்கும் பணிகள், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர் து.மதன், தீயணைப்புப் பிரிவின் பொறுப்பாளர் வி.பிரதீபன் ஆகியோரது கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

image_3550c671fe.jpgimage_56a4e196ab.jpg
 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிருமி-தொற்று-நீக்கும்-பணிகள்-தொடர்ந்து-முன்னெடுப்பு/73-248135

Link to comment
Share on other sites

210 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அட்டப்பளம் கிராமத்தில், வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ள 210 குடும்பங்களுக்கு, உலருணவுப் பொருள்கள், திங்கட்கிழமை (06) நடைபெற்றது.

அன்னை சிவகாமி அற கட்டளையின் ஏற்பாட்டில்,  நாளாந்த கூலித் தொழிலாளர்களுக்கான உலர் உணவு வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, விஞ்ஞான கண்டுபிடிப்பாளரும், அன்னை சிவகாமி அற கட்டளையின்  மக்கள் தொடர்பாளருமான தன்னார்வ தொண்டர் எஸ். வினோஜ்குமார் தெரிவித்தார்.

அன்னை சிவகாமி அற கட்டளையின் ஸ்தாபகரும், பொதுநல சேவையாளருமான மகாதேவன் சத்தியரூபனின் மனித நேய வேலை திட்டத்துக்கு அமைய இவை வழங்கப்பட்டு வருகின்றன.

http://www.tamilmirror.lk/அம்பாறை/210-குடும்பங்களுக்கு-வாழ்வாதார-உதவிகள்-வழங்கி-வைப்பு/74-248129

image_1e02694bd0.jpg

Link to comment
Share on other sites

தனிமைப்படுத்தல் காலம்  21 நாட்களாக அதிகரிப்பு : இதுவரை வெளியேறியுள்ள 3415 பேருக்கும் விசேட அறிவிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டிருந்தாலும், தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோரின் தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார்.

இந்நிலையில் ஏற்கனவே 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள சுய தனிமைப்படுதலுக்கு உள்ளாகுமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று வரை இலங்கையில் தனிமைப்படுத்தல் முகாம்கள் அல்லது நிலையங்களில் மட்டும் 3415 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியிருந்தனர்.

இவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே அவ்வாறு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுதலில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் உடற் கூற்று வைத்திய நிபுணர் ஆனந்த விஜேநாயக்க,
 

' இதுவரை தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோருக்கு வெறும் சான்றிதழ் மட்டுமே விநியோகிக்கப்பட்டது.

இனி மேல் அந்த காலத்தை நிறைவு செய்யும் அனைவரையும் விஷேட வைத்திய பரிசோதனைக்குட்படுத்துவோம். உட்படுத்தி கொரோனா தொடர்பில் பரிசோதனைகளை செய்து அது குறித்த வைத்திய அறிக்கையையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பிய நிலையில் 7 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/79497

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

 

எதிர்வரும் சில வாரங்களுக்கு யாழ்.மாவட்ட மக்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகவே தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு உத்தரவையும் மீறி வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை புரிந்துகொள்ளாமல் சிலர் வீடுகளில் இருந்து வெளியேறி வெளியில் நடமாடுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் டொக்டர் சத்தியமூர்த்தி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

http://thinakkural.lk/article/38199

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

 

யாழ்.மாவட்டத்தில் 4வது நாளான இன்று நண்பகல்வரை கொரோனா நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 69 பேருக்கும், தனிமைப்படுத்தலில் உள்ள 97 பேருக்குமாக 166 பேருக்கு இதுவரை பரிசோதனை நடாத்தப்பட்டிருக்கின்றது. எனினும் எவரும் தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை.

மாவட்டத்தில் இதுவரை 7 பேர் மட்டுமே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என பணிப்பாளர் கூறியுள்ளார்.

 

http://thinakkural.lk/article/38216

Link to comment
Share on other sites

‘செயற்றிட்டங்கள் தளர்வடைவதால் எண்ணிக்கை அதிகரிக்கலாம்’

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டங்கள் தளர்வடைவதால், எதிர்வரும் நாள்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தளர்வடையாமல் இருக்கும் என்றால் இந்த எண்ணிக்கை அதிகரிக்காது என்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதை தாங்கள் அவதானித்துள்ளதாகவும் அவர் கூறினார்

இந்நிலையில், இந்தோனேஷியா, டுபாய், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்றுக்கு உள்ளானோர் மற்றும் அவர்களுடன் பழகியவர்களே தற்போது இனங்காணப்பட்டு வருகின்றனர் என்றும் நோயாளர்களை இனங்காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பரிசோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறு அதிகரிக்கப்படும் அளவுக்குற்ப நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்றும்  உண்மையில் பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.

தற்போதுள்ள நிலைவரத்துக்கு அமைய, நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படவில்லை என்றும் எனினும் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதை தான் மீண்டும் கூறுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/செற்றிட்டங்கள்-தளர்வடைவதால்-எண்ணிக்கை-அதிகரிக்கலாம்/175-248186

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனம் Australia Aid Medical Foundation (AMAF) யாழ் போதனா வைத்தியசாலைக்கு N - 95 maskஇனை அன்பளிப்பு செய்தது. இன்னும் சில நாட்களில் மிக முக்கியமான சில உபகரணங்களை அன்பளிப்புச் செய்ய இருக்கின்றார்கள்.

AMAF நிறுவனம் யாழ் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருக்கின்ற பல்வேறு வைத்தியசாலைகளுக்கும் பொதுமக்களுக்கும் கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக பல உதவிகளை செயற்படுத்துவது மிகவும் பாராட்டுதற்குரியது. தொடர்ச்சியான உதவிக்கு பாடுபடும் AMAF நிறுவனத்துக்கும் அதன் நன்கொடையாளர்களுக்கும் வைத்தியசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், உட்புறம்

Link to comment
Share on other sites

தற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம்- பவித்திரா

நாட்டில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை எதிர்வரும் 14 நாட்களுக்கும் பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து நோயாளர்களும் இனங்காணப்படுவர்.

அவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டால் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக ஒழிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/79536

 

முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் தாராபுரம் கிராமம்..! காரணம் இதுதான் !

கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லவில்லை என்பதோடு , அந்நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்திற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வராங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/79534

Link to comment
Share on other sites

7ஆவது மரணம் பதிவு

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த ஏழாவது நபர் இன்று உயிரிழந்துள்ளார்.

48 வயதுடைய ஒருவரே இவ்வாற உயிரிழந்துள்ளாரென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/7ஆவத-மரணம-பதவ/175-248210

Link to comment
Share on other sites

அவதானம்..! எமது பெற்றோர்களையே 'கொரோனா" அதிகம் தாக்குகின்றது : வைத்தியர் உமாகாந்த்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

 

யாழ்.மாவட்டத்தில் 4வது நாளான இன்று நண்பகல்வரை கொரோனா நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 69 பேருக்கும், தனிமைப்படுத்தலில் உள்ள 97 பேருக்குமாக 166 பேருக்கு இதுவரை பரிசோதனை நடாத்தப்பட்டிருக்கின்றது. எனினும் எவரும் தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை.

மாவட்டத்தில் இதுவரை 7 பேர் மட்டுமே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என பணிப்பாளர் கூறியுள்ளார்.

 

http://thinakkural.lk/article/38216

கன நாள் ஊருக்கு ரெலிபோன் எடுக்கேல்லை எண்டுட்டு நேற்று ஒராளோடை கதைச்சன்.
கொரோனா என்ன மாதிரியெண்டு வாய் தவறி கேட்டுப்போட்டன். தொடங்கிச்சுதே  மனிசன் கோதாரி விழுவான் எண்ட திருநாமத்தோடை.....காது குடுத்து கேக்கேலாமல் போச்சுது....எண்டாலும் எடிட் பண்ணி கொஞ்சத்தை இரத்தினச்சுருக்கமாய் சொல்லுறன்..

கொரோனாகால ஆரம்பத்திலையே யாழ்ப்பாணப்பக்கம் கொரோனா வரவே வராது எண்டு நிறுதிட்டமாய் கவுண்மேந்தும் சனமும் நினைச்சு இருந்தவையாம்.
ஏனெண்டால் யாழ்ப்பாண பக்கம் ஏற்கனவே ஒரு கண்கானிப்பு பிரதேசம் மட்டுமில்லாமல் வெளிநாட்டு சனத்தின்ரை ஈடுபாடு குறைஞ்ச பிரதேசமாம்.
அப்பிடி நினைச்சிருக்க சுவீசிலை இருந்து ஒரு கோதாரிவிழுவான் வந்தானாம்......மதம் மாத்துறதுக்கு ஆக்களையெல்லாம் தண்ணீக்கை தோய்ச்சு தோய்ச்சு எடுத்தானாம்.
அது மட்டுமில்லாமல் பாடையிலை போவான் எல்லாருக்கும் வருத்ததை குடுத்துட்டு தான் ஓடித்தப்பீட்டானாம்.
சனத்தின்ரை வயித்தெரிச்சல் உவனை சும்மா விடாதாம்.
கூலிக்கு வேலை செய்யிற சனமெல்லாம் சரியாய் கஸ்ரபடினமாம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் முதலாவது கொரோனா நோயாளி இனம்காணப்பட்டுள்ளார் 

  • Sad 1
Link to comment
Share on other sites

சகலருக்கும் பரிசோதனை?

இலங்கையிலிருக்கும் சகலருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையைத் தயாரிப்பதற்காக, பிரதிச் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அமல் ஹர்ஷ டீ சில்வா தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவொன்றையும் சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

சிறு சிறு குழுக்களின் ஊடாக, முழு நாட்டு மக்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் முறைமையைத் தயாரிக்குமாறும், அக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறு சிறு குழுக்களை அமைத்து, ஜேர்மனியில் இவ்வாறான பரிசோதனைகள் முன்னெடுக்கப் படுகின்றனவென, வைத்திய அமல் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில், அரச மற்றும் தனியார் வசம், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடிய இயந்திரங்கள் 50 மட்டுமே உள்ளன என்றும் அவற்றை வைத்துகொண்டு, ஒரு நாளைக்கு 250 பரிசோதனைகளை மட்டுமே முன்னெடுக்க முடியும் என்றும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சகலரககம-பரசதன/150-248233

Link to comment
Share on other sites

’சுய தனிமையிலும் சிக்கல் ஏற்படலாம்’

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் போது, அதற்கான வசதிகள் சில வீடுகளில் இல்லாதுள்ளதால், அந்த வீடுகளிலுள்ள ஏனையோருக்கும் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று, இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனால், பிரதேச ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை உருவாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ள அச்சங்கம், இதனூடாக, வீடுகளிலுள்ள ஏனையவர்களுக்கும் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியுமென்று சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதாரத் தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளின்படி பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இம்மாத இறுதிக்குள் கொரோனா பரவலை முற்றாகத் தடுக்கலாம் என்றும், பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சுய-தனிமையிலும்-சிக்கல்-ஏற்படலாம்/175-248227

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.