Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகங்கள் எப்போது திறக்கப்படும்; அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் தாெடர்பில் முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களும் எப்போது திறக்கப்படும் என்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று (12) அறிவித்துள்ளது.

இதன்படி,

  • ஊழியர்களுக்காக மே 4ம் திகதி முதலும் திறக்கப்படும்.
  • இறுதியாண்டு மாணவர்களுக்காக மே 11ம் திகதி முதலும் திறக்கப்படும்.
  • அனைத்து மாணவர்களுக்குமாக மே 18ம் திகதி முதலும் திறக்கப்படும்.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/பல்கலைக்-கழகங்கள்-மீள/

 

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

203ஆக உயர்ந்தது

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203ஆக உயர்வடைந்துள்ளது.

 

http://thinakkural.lk/article/38558

Link to comment
Share on other sites

சற்று முன்னர் வெளியான அறிக்கை! மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 56 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/141090
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 20ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக மீண்டும் அறிவிப்பு

Apr 13, 20200

 

எதிர்வரும் 20ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக மீண்டும் அறிவிப்பு

நாட்டில் நிலவும் அசாதாரணமான நிலை காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதற்கு முன்னரும் இதுபோன்ற காலப்பகுதி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/எதிர்வரும்-20ஆம்-திகதி-வரை/

Link to comment
Share on other sites

மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று
Editorial   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 05:03 - 

இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.''

அதனையடுத்து, கொரோனா  வைரஸ் தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.

56 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-நலவரகக-கரன-தறற/150-248487

Link to comment
Share on other sites

“அடுத்த  இரு வாரத்திற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவர முடியும்”

(ஆர்.யசி)
 

இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் " கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போதுமானதாக இருக்கும், ஏப்ரல் மாத இறுதியுடன் நாட்டில் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

நாட்டில் " கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறான நிலைமைகள் முன்னெடுக்கப்படும் என்பதற்கு பதில் தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறுகையில்,

மிகவும் கடினமான கால கட்டத்தில் நாம் இன்று முகங்கொடுத்து வருகின்றோம். நாளாந்தம் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

எனினும் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் தவிர்ந்து ஏனையவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படாத வண்ணமே உள்ளதாக வைத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் மக்களை பாதுகாக்க எடுத்த வேலைத்திட்டத்தின் பிரதிபலன் என்றே கூற வேண்டும்.

எவ்வாறு இருப்பினும் இப்போது நாம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நாம் முன்னெடுத்தால் மட்டுமே எம்மால் வெகு சீக்கிரமாக இந்த நிலைமைகளில் இருந்து விடுபட முடியும். எவ்வாறு இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் வெளி மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என்ற நிலைப்பாடும் உள்ளது. 

ஆகவே அடுத்த இரண்டு வார காலம் மக்கள் எமக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என்றார்.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜெயசிங்க தெரிவிக்கையில்,

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலானது குறைந்ததாக கருத முடியாது. ஆனால் நாம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களின் மூலமாக நிலைமைகளை இன்றுவரை கட்டுபாட்டில் வைத்திருகின்றோம்.

ஆகவே இதே நிலைமை மேலும் இருவார காலமேனும் தொடர வேண்டும். அவ்வாறு கடுமையான சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே எம்மால் நாட்டின் நிலைமைகளை சரிசெய்ய முடியும்.

ஆகவே அடுத்த இரண்டு வாரகாலம் சுகாதார வேலைத்திட்டங்களை மிகச் சரியாக முன்னெடுத்தால் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் நாட்டில் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவர முடியும். அதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செய்து வருகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/79881

Link to comment
Share on other sites

இடர் காலப்பகுதியில் பல உத்தியோகத்தர்கள் இரவு பகலாக கடமையாற்றி கொண்டிருக்கிறார்கள். 

புது வருடத்தில் அவர்களின் சேவைகள் தொடர்கின்றது.

இந்த ஆபத்தான நேரத்தில் நிறைய அதிகாரிகள் இரவும் பகலும் பணியில் உள்ளனர். புத்தாண்டிலும் அவர்களின் சேவை தொடரும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், தொப்பி மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், கார் மற்றும் வெளிப்புறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 45 பேர் கைது; 13 வாகனங்கள் கைப்பற்றல்

திருக்கோவில் நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 45 பேரை இன்று திங்கட்கிழமை காலை (13) 6 மணி வரையிலான 24 மணித்தியாலயத்தில் கைது செய்துள்ளதுடன் 13 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பழரிவில் 13 பேரும், மட்க்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் 9 பேரும், வாழைச்சேளை பொலிஸ் பிரிவில் 3 பேரும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 8 பேரும், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் 4 பேரும், வவுணதீவு பொலஜஸ் பிரிவில் 5 பேரும், காத்தான்குடி பொலஸ் பிரிவில் 1 உட்பட 45 பேரை ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய போது கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி தொடக்கம் இன்று திங்கட்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன் இவர்கள் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள். லொறி ஒன்று உட்பட 13 வாகனங்களை கைப்பற்றியுள்ளனர்.

 

இதில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு மே மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

http://thinakkural.lk/article/38658

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா பரிசோதனையில் எந்த நபருக்கும் தொற்று இல்லை

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று பரிசோதிக்கப்பட்ட 17 பேரில் எந்தவொரு நபருக்கும் கொரோனோ தொற்று இல்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் மற்றும் தனிமைப்படுத்தலில் வைத்துள்ளவர்களுக்கும் நடாத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரையில் 7 பேருக்கு மாத்திரமே கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/யாழ்-போதனா-பரிசோதனையில்/

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு வரை 217ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 218ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/141169

Link to comment
Share on other sites

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்
Editorial   / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 07:31 -


கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மிக்க பகுதிகளாக பேருவளை பன்னில மற்றும் சீனகொரோட்டுவ பகுதிகள் அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-இரண்டு-பகுதிகள்-முடக்கம்/175-248503

Link to comment
Share on other sites

கொரோனா அச்சம் : வடக்கில் தனியான தீவு

 

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை (14.04.2020) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் குணமடைந்தவர்களின் தொகை 61 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளதுடன், அதில் 152 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்தோடு, ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79950

Link to comment
Share on other sites

பேருவளையில் கொரோனா தொற்று அதிகரிப்பு

பேருவளை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை, 34 ஆக அதிகரித்துள்ளதாக, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார். 
 
பேருவளை பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட, பன்னில மற்றும் சீன கொட்டுவ கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 219 பேர,; கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (14) ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பன்னில, சீன கொட்டுவ, கரந்தகொட, அம்பேபிட்டிய ஆகிய  பகுதிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிகளில்; பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 140 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பேருவளையில்-கொரோனா-தொற்று-அதிகரிப்பு/175-248542

Link to comment
Share on other sites

‘வடக்கில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 12 பேருக்கு COVID-19 தொற்று’

இன்றைய பரிசோதனையின்போது வடக்கில் இரண்டு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் எட்டுப் பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேரில் நான்கு பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 24 பேருக்கான COVID-19 தொற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனைகள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டன. 14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர். ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர். எட்டுப் பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியைச் சேர்ந்த தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள்.

அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக இம்மாதம் முதலாம், மூன்றாம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஆறு பேருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடககல-தனமபபடததபபடடரநத-12-பரகக-COVID-19-தறற/71-248550

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழில் இன்று கண்டறிந்த 8 பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்!

யாழ்ப்பாணம் – பலாலி தனிமை மையத்தித்தில் இன்று கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் (7 மற்றும் 11 – வயது) மகள்கள் இருவரும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் 8 பேரில் 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள் எனறும் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/யாழில்-இன்று-கண்டறிந்த-8/

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தொடரும் அச்சுறுத்தல்! புதிதாக சில பகுதிகள் முடக்கப்படலாம்!!

977-7.jpgயாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அது மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளையில் யாழ்ப்பாணத்தில் புதிதாக சில பகுதிகளை முடக்குவது தொடர்பில் இன்று ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்தினார்.

இதன்போதே அவர், கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதால், பொது மக்கள் சுகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளையில், யாழ்ப்பாணத்தில் மேலும் 8 கொரோனா நோயாளர்கள் நேற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் அப்பகுதியில் உள்ள பலரிடம் அடுத்துவரும் நாள்களில் விரைந்து கொரோனாத் தொற்றுக்கான சோதனைகள் நடத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கொரோனா பாதித்த நோயாளிகள் யாழ்ப்பாணத்தில் நீண்ட நாள்களின் பின்னர் இனங்காணப்பட்டு வருகின்றமை காரணமாக அது பரவுவதற்குச் சந்தர்ப்பம் உள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் இனங்காணப்பட்டுள்ள பகுதிகளை பாதுகாப்புக் கருதி மீண்டும் முடக்குவது குறித்து உயர்மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அநேகமாக இந்த முடிவு இன்று எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://thinakkural.lk/article/38755

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-Worldwide-Update.jpg

வடக்கில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா – யாழில் 8 பேருக்கும், முழங்காவில்லில் 4 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாம்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 8 பேரில் நால்வரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி,

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று தொடர்பில் இன்றைய பரிசோதனையில் இரு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 4 வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.

ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர்.

ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்.

8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

( குறிப்பு: அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக April 1, April 3 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.)

http://athavannews.com/வடக்கில்-இன்று-மட்டும்-12-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் குணமடைவோர் தொகை உயர்கிறது

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (15) மேலும் இருவர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

தொற்று நோய் பிரிவு வெளியிட்ட இன்று காலை 10 மணி வரையிலான நிலைவரம் தொடர்பான அறிக்கையிலேயே இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 163 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 233 ஆகும்.

தொற்றுக்கு உள்ளானோர் 233
இப்போது சிகிச்சை பெறுவோர் 163
குணமடைந்தோர் 63
இறப்புக்கள் 07
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்)

15

 

https://newuthayan.com/இலங்கையில்-குணமடைவோர்/

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.