Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வுகள். 12 .05.2020

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் உட்புறம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் அமர்ந்துள்ளனர், மேஜை மற்றும் உட்புறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா எண்ணிக்கை 915 ஆகியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 22 பேர் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 915 ஆக அதிகரித்திருப்பதாக இன்று அதிகாலை சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது.

http://thinakkural.lk/article/41650

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு, கம்பஹா ஊரடங்கு அடுத்த இரண்டு வாரங்களுக்காவது தொடரும்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் அடுத்த இரண்டு வாரங்களுக்காவது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவித்திருக்கும் அதிகாரிகள், அதன் பின்னர் நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே அதனை நீடிப்பதா இல்லையா என்பதையிட்டு முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

அதேவேளையில் சர்வதேச ரீதியாக கொரோனா நிலைமை மேம்படும் வரையில் இலங்கை வரும் பயணிகள் விமானங்களுக்கான தடை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். இது குறித்த நிலைதைகளை அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்தே முடிவெடுக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.

 

http://thinakkural.lk/article/41785

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடைய 10 பேர் நேற்று (15) இரவு 11.30 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது. 

477 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 449 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறளரகளன-எணணகக-அதகரபப/175-250319

Link to comment
Share on other sites

‘கிழக்கில் கொரோனா தொற்று இல்லை’

சகா

கிழக்கு மாகாணத்தில், அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்று எதுவும் ஏற்படவில்லைனெவும் எந்தவொரு நோயாளியும் இனங்காணப்படவில்லையெனவும் தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் அழகையா லதாகரன், கிழக்கு மாகாண மக்கள், சுகாதார கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு வேண்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாகவது, “ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் அம்பாறை மாவட்டத்தில் இருவரும் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு, குணமாகி வீடு சென்றுள்ளனர். அதன்பிறகு யாரும் இனங்காணப்படவில்லை.

“எனினும், ஒலுவில் துறைமுகக் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் சிலர் இனங்காணப்பட்டு, சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

“மேலும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இதுவரை சிகிச்சைபெற்றுவந்த 62 பேரில் 61 பேர் பூரண சுகமடைந்து, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

“இவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே அதாவது கொழும்பு, கம்பஹா, களுததுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். ஒருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்” என்றார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிழக்கில்-கொரோனா-தொற்று-இல்லை/73-250329

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றாளர்களாக நேற்றைய தினம் 22 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 520 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 428 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்களின்-எண்ணிக்கை-அதிகரிப்பு/175-250338

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 25 பேர்; மொத்தம் 960

இலங்கையில் நேற்று (16) மொத்தமாக 25 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது.

கண்டறியப்பட்ட 25 பேரில் 23 கடற்படையினரும், சென்னையில் இருந்து திரும்பியவர் ஒருவர் உட்பட தனிமை மையத்தில் உள்ள இருவரும் அடங்குகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 431 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

https://newuthayan.com/நேற்று-மட்டும்-25-பேர்-மொ/

 

Link to comment
Share on other sites

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 538 பேர் குணமடைந்துள்ளதுடன், 415 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்களின்-எண்ணிக்கை-அதிகரிப்பு/175-250363

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (18) 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

424 பேர் தொடர்ந்தும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 540 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தறறளரகளன-எணணகக-ஆயரதத-அணமததளளத/175-250434

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 569 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 442 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-28-பரகக-கரன-வரஸ-தறற/150-250487

Link to comment
Share on other sites

கொவிட்-19 தடுப்புமருந்து சோதனையில் நம்பிக்கையளிக்கும் ஆரம்ப முடிவுகள்

சிறிய எண்ணிக்கையிலான தன்னார்வலர்களில் கொவிட்-19-க்கு எதிரான சோதனை தடுப்பு மருந்து முதலாவது சிகிச்சை சோதனைகளில் இருந்து நம்பிக்கை அளிக்கும் ஆரம்ப முடிவுகளை ஐக்கிய அமெரிக்க உயிரியல் நிறுவனமாக மொடெர்னா நேற்று பதிவுசெய்துள்ளது.

கொவிட்-19-இலிருந்து குணமடைந்தோரிலிருந்து அவதானிக்கப்பட்ட நோயெதிர்ப்பு பதிலளிப்பொன்றை தடுப்பு மருந்து mRNA-1273 பெற்ற எண்மரிடம் இத்தடுப்புமருந்து வெளிப்படுத்தியதாக மொடெர்னா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த செய்தியை வரவேற்றுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவர்கள் என்ன முடியுமென்பது நம்பமுடியாதெனவும், தான் முடிவுகளைப் பார்வையிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை எலியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தடுப்புமருந்தானது அதன் நுரையீரல்களில் கொவிட்-19 பிரதியிடுவதை தடுத்ததாக மொடெர்னா தெரிவித்துள்ளது.

குறித்த தடுப்பு மருந்து தயாரிப்பில் ஏறத்தாழ அரை பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் முதலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தாண்டு ஜனவரி மாதத்ததுக்குள் 300 மில்லியன் தடுப்புமருந்துகளை ஐக்கிய அமெரிக்க சனத்தொகையைப் பாதுகாப்பதற்காக வேண்டுகின்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நிர்வாகத்தின் மூலமாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன், பிரான்ஸின் சனோஃபிக்கு நிதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழமையாக தடுப்புமருந்தொன்று கண்டுபிடிக்க ஆண்டுக்கணக்காகும் என்ற நிலையில், கொவிட்19-ஆலான அதிக உயிரிழப்புகள் இதை விரைவாக்கியுள்ளது.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கவட-19-தடபபமரநத-சதனயல-நமபககயளககம-ஆரமப-மடவகள/50-250503

Link to comment
Share on other sites

Image

 

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 27 தொற்றாளர்களில் டுபாயிலிருந்து நாடு திரும்பிய 15 பேர், குவைத்திலிருந்து திரும்பிய ஒருவர், 11 கடற்படையினர்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.