Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்தது- சற்றுமுன்னர் மற்றுமொரு மரணம்

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார அமைச்சு இதனை உறுதிசெய்துள்ளதுடன் இலங்கையில்11 வது கொரோனா வைரஸ்மரணம் நிகழ்ந்துள்ளதை உறுதிசெய்துள்ளது

.coronavirusdeathmgn1-300x169.jpg

குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயது நபர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹோமாஹம மருத்துவமனையில் கிசிச்சை பெற்றுவந்த நபரே உயிரிழந்துள்ளார்.

http://thinakkural.lk/article/44538

 

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டது

நாடு தழுவிய  ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளது .

கடந்த சனிக்கிழமை 30 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் இன்று முதலாம் திகதி திங்கட்கிழமை அதிகாலை வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.

இந்நிலையில், நாடு தழுவிய  ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளது .

அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல், ஜூன் 3 ஆம் திகதி வரை தினமும் இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன் படி ஜூன் 6 ஆம் திகதி தொடக்கம் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

http://thinakkural.lk/article/44500

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

corona-2-0604-1.jpg

ஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 40 பேரில் 32 பேர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என்பதுடன், 7 பேர் கடற் படை உறுப்பினர்கள் என்பதோடு, மற்றைய நபர் கடற்படை உறுப்பினர் ஒருவரின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 849 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 84 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் நேற்று 12 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரை 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்பத குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஒரேநாளில்-40-பேருக்கு-கொரோ/

Link to comment
Share on other sites

"முக கவசங்களை கழுத்தில் அணியலாமா?"

கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க மக்கள் முகக் கவசங்களை முகத்தில் அணிய வேண்டுமே தவிர, கழுத்தில் அணியக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
 

மக்கள் நெருக்கமாக இருப்பதால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கிறது. மருத்துவ பரிசோதனைகளை அதிகப்படுத்துவதால் நோய் தொற்றாளர்களை அதிக அளவில் கண்டறிய முடிகிறது. நோய் தொற்று அதிகமானாலும் உயிரிழப்பை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சமுதாய பங்களிப்பு அவசியம்.

வெளியில் செல்லும் பொழுது முக கவசங்களை கட்டாயம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இன்றைய திகதியில் பலர் முக கவசங்களை அணிந்து செல்கிறார்கள். ஆனால் மற்றவர்களுடன் பேசும்பொழுது முக கவசத்தை முகத்திலிருந்து நீக்கிவிட்டு, கழுத்தில் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

இது தவறு. மற்றவர்களுடன் பேசும் போது வாய் மற்றும் மூக்கு பகுதியை கண்டிப்பாக மூடியிருக்கும் வகையில் கவசத்தை அணிய வேண்டும். அத்துடன் இருமும் போதும், தும்மும் போதும் கைகளை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

சிலருக்கு முக கவசம் அணிவது புதுவித அனுபவமாக இருப்பதால், அதனை மருத்துவ ஊழியர்கள் பரிசோதிக்கும் தருணத்தில் மட்டும் முகத்தில் அணிகிறார்கள். ஏனைய தருணத்தில் அதனை கழுத்தில் இருப்பது போல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தவறு. இவ்வாறு அணிவதால் எவ்வித பயனும் இல்லை.

அதே தருணத்தில் கொரோனா தொற்றினை குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் இதுவரை முழுமையான அளவில் கண்டறிய படாததால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் உள்ள முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதே தருணத்தில் தற்பொழுது இந்தியாவில் நானோ தொழில் நுட்பத்துடன் கூடிய முக கவசத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். இத்தகைய முக கவசம் மக்களை விட. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

டொக்டர் சுப்பிரமணியம்.

https://www.virakesari.lk/article/83304

Link to comment
Share on other sites

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,692ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 836 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 845 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறளரகளன-எணணகக-மலம-அதகரபப/175-251338

Link to comment
Share on other sites

கொரோனா தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வு

வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களை, சுகாதார நடவடிக்கை மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, மாணவர்களின் பெற்றோர்களை விழிப்பூட்டும் விசேட செயலமர்வுகள் தற்பொழுது நடத்தப்பட்டு வருகின்றன.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் மாணவர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வளிமுறைகள் பற்றி இதன்போது தெளிவுபடுத்தப்படுவதுடன், தமது பிள்ளைகளுக்கு அவதானமாக பின்பற்ற அறிவூட்டுமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இதன்படி, மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி, வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலைகளில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம். அச்சுதனின் வழிகாட்டுதலில், புளியந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஏ.ராஜ்குமார் தலைமையில், இவ்வாறான பெற்றோரை விழிப்பூட்டும் செயலமர்வுகள், நேற்று (02) நடைபெற்றன.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கொரோனா-தொடர்பில்-பெற்றோருக்கு-விழிப்புணர்வு/73-251315

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 66 பேருக்கு தொற்று!

இலங்கையில் நேற்று (03) மொத்தமாக 66 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,749 ஆக உயர்ந்துள்ளது.

கண்டறியப்பட்டவர்களில் கடற்படை வீரர்கள் 31 பேரும், கட்டாரில் இருந்து 19 பேரும், பங்களாதேஷில் இருந்து 14 பேரும், குவைத்தில் இருந்து 2 பேருமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 35 பேர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 902 ஆக காணப்படுகிறது.

836 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

https://newuthayan.com/நேற்று-மட்டும்-66-பேருக்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

June 7, 2020

DR.ROY_.jpg

மன்னார்–பேசாலை மற்றும் வங்காலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 57 பேர்    சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தெரிவித்தார்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி சட்ட விரோதமாக நாட்டிற்குள் இந்தியாவில் இருந்து வருகை தந்த நபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களுக்கு நேரடியாக உதவி செய்த ஐந்து நபர்கள் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின்   உதவியுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் இவர்களுடன் தொடர்புடைய பேசாலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவைச் சேர்ந்த 12 குடும்பத்தைச் சேர்ந்த 52 நபர்கள் அவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த விடையம் தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை.  இது  பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக நாங்கள் மேற்கொள்ளும் சாதாரண நடவடிக்கை.

குறித்த  நடவடிக்கை ஊடக இவர்கள் தொடர்ச்சியாக  14 நாட்கள்     சுய தனிமைப்படுத்தப்பட்டு அவதானிக்கப்படுவார்கள். இவ்வாறான செயற்பாடுகளின் போது    பொது மக்கள் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடு   இருக்கின்றது.

 இவ்வாறான சட்ட விரோத ரீதியாக எமது நாட்டுக்குள் உற் பிரவேசிக்கும் மக்களை குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் மக்கள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருந்து எங்களுடைய சுகாதார துறைக்கு உடனடியாக அறியத் தரும் பட்சத்தில் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் எங்கள் நாட்டுக்குள் இந்த கொரோனா தொற்று   ஏற்படுவதை தடுக்கலாம் என்பதை நாங்கள் மக்களுக்கு தெரிவித்துக்கொள்ளுகின்றோம் என மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் மேலும் தெரிவித்தார். #மன்னார் #பேசாலை #தனிமைப் படுத்தல் #வைத்தியஅதிகாரி

 

http://globaltamilnews.net/2020/144468/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்று 1,905 ஆக உயர்வு!

இலங்கையில் இன்று (15) இதுவரை 16 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,905 ஆக உயர்ந்துள்ளது.

கண்டறியப்பட்டவர்களில் கடற்படை வீரர்கள் 3 பேரும், மாலைத்தீவில் இருந்து 6 பேரும், குவைத்தில் இருந்து 5 பேரும், பங்களாதேஷில் இருந்து ஒருவரும், பாகிஸ்தானில் இருந்து ஒருவருமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 13 பேர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 552 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,342 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/கொரோனா-தொற்று-1901-ஆக-உயர்வு/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மேற்படி பெண், குவைத்திலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடு சென்ற பின்னர் நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

https://newuthayan.com/குணமடைந்தவருக்கு-மீண்டு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1,914பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1914ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுடைய 532 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதுடன், 1371 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.  

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/1-914பரகக-கரன-தறற/150-251993

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.