Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மட்டும் 57 பேருக்கு தொற்று; சற்றுமுன் 43 பேருக்கு உறுதியானது!

இலங்கையில் இன்று (11) இதுவரை 57 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,511 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 13 பேருக்கும், குறித்த மையத் தொடர்பினால் 39 பேருக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து அழைத்து வந்த நால்வருக்கும் குவைத்தில் இருந்து அழைத்து வந்த ஒருவருக்குமாக 57 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 520 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,980 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இன்று-மட்டும்-57-பேருக்கு-த/

 

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இதுவரை 94 பேருக்கு காெராேனா!

இன்று இதுவரை 94 பேருக்கு கொரோனா தொற்று. கந்தக்காட்டு மையம் -76, கந்தக்காடு மையத் தொடர்பு -18. எண்ணிக்கை 2605.

https://newuthayan.com/இன்று-இதுவரை-94-பேருக்கு-கா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 19 பேருக்கு தொற்று!

இலங்கையில் இன்று (14) இதுவரை 19 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,665 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 9 பேர், சேனபுர மையத்தில் 4 பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 6 பேர் என மொத்தம் 19 பேருக்கே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 666 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,988 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/இன்று-19-பேருக்கு-தொற்று/

 

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பொலிஸுக்கு கொரோனா! பொலிஸார் 41 பேர் தனிமைப்படுத்தல்

1584557991-Police-curfew-covid-19-in-Sri-Lanka-l.jpg?189db0&189db0

 

ஹோமாகம – நுகேகொட நான்காம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி பொலிஸ் ஏஸ்பி அலுவலகத்தை சேர்ந்த 30 பேரும், ஹோமாகம பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பேரும் ஹபராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

https://newuthayan.com/பெண்-பொலிஸுக்கு-கொரோனா-ப/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2728 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 676 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதுவரை 2041பேர் குணமாகியுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயல-தறறளர-எணணகக-மலம-உயரவ/150-253410

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 22 பேருக்கு தொற்று!

PicsArt_06-27-04.30.13.jpg?189db0&189db0

இலங்கையில் நேற்று (22) 22 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,752 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 21 பேர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 677 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 2,064 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/நேற்று-மட்டும்-22-பேருக்கு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐடிஎச்சிலிருந்து கொரோனா தொற்றாளி தப்பியோட்டம்!

20200724_064611.jpg?189db0&189db0

ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதைக்கு அடிமையான கொரோனா தொற்றாளி ஒருவர் இன்று (24) காலை தப்பிச் சென்றுள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த எல்சியாம் நஷீம் என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இவரை தேடி கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பல்வேறு பொலிஸ் மற்றும் இராணுவ குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர் குறித்து தகவலறிந்தால் அல்லது இந்நபரை கண்டால் 119 – 0718591017, 0718592290 or 0718591864. ஆகிய இயக்கங்களுக்கு அழைக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

https://newuthayan.com/ஐடிஎச்சிலிருந்து-கொரோனா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒருவருக்கு “வீக் கொரோனா” தொற்று!

20200728_151544-960x444.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் 7ம் இலக்க விடுதியின் தனிமைப்படுத்தல் அறையில் சிகிச்சை பெற்ற நிலையில் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்ட நபருக்கே நேற்று (27) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியா்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு அவா்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். அவா்களுக்கு 31ம் திகதி பாிசோதனை நடத்தப்படும்.

இவ்வாறு இன்று (28) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் போதனாசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி விளக்கமளித்துள்ளார். மேலும்,

“கடந்த 7ம் திகதி சவுதியில் இருந்து வந்த 208 பேருடன் தங்கியிருந்தவா் 22ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அன்றைய தினம் மாலையே 7ம் விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் அறைக்கு அவர் மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பபட்டார். மீண்டும் 25ம் திகதி சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதற்கமைய நேற்று மாலை நடத்தப்பட்ட பி.சி.ஆர் பாிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனினும் அவருக்கு தொற்று குறைந்தளவிலேயே உள்ளது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணா்கள் குழு கூடி இந்த விடயத்தை ஆழமாக ஆராய்ந்துள்ளது.

குறித்த நபா் வைத்தியசாலையில் தங்கியிருந்த காலப்பகுதியில் வேறு யாருடனும் நேரடியாக தொடா்புகளை பேணினாரா? என்பதை ஆராய்ந்துள்ளோம். இதற்கமைய குறித்த நபா் தங்கியிருந்த விடுதியிலும், தனிமைப்படுத்தல் விடுதியிலும் பணியாற்றிய 4 உத்தியோகஸ்த்தா்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான குறைந்தளவு சந்தர்ப்பம் உள்ளதென்ற அடிப்படையில் அவர்கள் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பாிசோதனைகள் எதிா்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் பாதுகாப்பு அங்கிகள், முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டே குறித்த நபா் பரிசோதிக்கப்பட்டுள்ளாா். இதேபோல் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வந்தவா் என்ற அடிப்படையில் கையுறை, முக கவசம் அணிந்துள்ளதுடன், சமூக இடைவெளியினையும் பேணியிருக்கின்றனா்.

ஆகவே யாழ்.போதனா வைத்திசாலையில் உள்ள மற்றவா்களுக்கோ, ஊழியா்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் இந்த நோய் பரவும் வேகம் தீவிரமானது என்பதால் நாம் மிக அவதானமாக உள்ளோம்” – என்றார்.

https://newuthayan.com/யாழில்-ஒருவருக்கு-வீக்-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தொற்று உறுதியானவருக்கு கொழும்பில் தொற்று இல்லெயன்று முடிவு!

74284680-negative-rubber-stamp-grunge-design-with-dust-scratches-effects-can-be-easily-removed-for-a-clean-cr-960x568.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்பட்ட நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் யாழ் போதனாசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த நபருக்கு மீளவும் இரண்டு தடவைகள் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்த இரண்டு தடவைகளும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/யாழில்-தொற்று-உறுதியானவர/

 

 
 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 72 மணி நேரத்தில் 89 புதியகொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர்

COVID-19-500.png

 

இலங்கையில் கடந்த 72 மணி நேரத்தில் 89 புதியகொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஆயிரத்து 197 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 42 பேர் வெளிநாட்டினர் என்பதுடன், ஆயிரத்து 155 பேர் இலங்கையர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறும் அவர் பொது மக்களிடம் கேட் டுக்கொண்டுள்ளார்.

மேலும் பாடசாலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுகாதார உத்தரவுகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு கற்பிப்பது அவசியமாகும் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.ilakku.org/இலங்கையில்-72-மணி-நேரத்தில/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

“பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” - இராணுவத் தளபதி எச்சரிக்கை

 

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும் என்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் சமூகத்தினுள் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெரும்பாலானவர்கள் தொற்றுக்குள்ளாகின்றனர்.

எனினும் சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உற்சவங்கள் நடத்தப்படும்போதும் பொறுப்பற்று செயற்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல்களிலுள்ள ஊழியர்களும் சுகாதார பாதுகாப்புடன் பொறுப்பாக செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கை சிறந்த மட்டத்திலுள்ளது. மக்களின் ஒத்துழைப்பினாலேயே இதனை எம்மால் பேண முடிந்தது.

இந்த நிலைமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் சமூகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டார்கள் என்பதை மறக்காமல் அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/150839?ref=imp-news

Link to comment
Share on other sites

இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை

 

 

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) கடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு  கூறியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,283ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 200 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து நேற்று வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/இலங்கையில்-அதிகரித்து-செ/

Link to comment
Share on other sites

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட மூவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 18 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 88 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் 186 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்ககையில் மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுமட்டும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களில், பிரித்தானியா மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 12 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 100 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் 185 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 12 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 100 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் 177 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/நாட்டில்-மேலும்-மூவருக்-2/

 

Link to comment
Share on other sites

புதிய கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம்

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாலைத்தீவில் இருந்து வருகை தந்த 8 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த கடற்படையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3,298 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண மாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 185 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/70772

Link to comment
Share on other sites

மாத்தறை ஹோட்டலில் தங்கியிருந்த ரஸ்ய பிரஜைக்கு கொரோனா – தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை

மாத்தறையில் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தரஸ்ய பிரஜை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்துஅவருடன்தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.


மத்தல சர்வதேச விமானநிலையத்துக்கு சமீபத்தில் வந்த ரஸ்ய விமானமொன்றின் பணியாளர் ஒருவர் ஹோட்டலொன்றிலிருந்து அம்பாந்தோட்டை வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் ஏனைய விமானப்பணியாளர்களுடன் மாத்தறையில் உள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் முதலில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் பாதிக்கப்படவில்லை என தெரியவந்தது என தெரிவித்துள்ளனர்.
எனினும் இரண்டாவது சோதனையின் போதுஅவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ஹோட்டல் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், ரஸ்ய பிரஜையுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://thinakkural.lk/article/71769

ரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை – இராணுவதளபதி

ரஸ்யாவிலிருந்து வந்த பயணிகள் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விபரங்களை அதிகாரிகள் கொவிட் 19 தொடர்பான செயலணிக்கு தெரிவிக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவிலிருந்து வந்த பயணியொருவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வழமையாக அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுவது வழமை என தெரிவித்துள்ள இராணுவதளபதி எனினும் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நபர் மூலம் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவு என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/71873

ரஸ்ய பிரஜை குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை- பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரஸ்ய பிரஜை குறித்து அதிகாரிகள் பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என பொதுசுகாதா பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ரஸ்ய பிரஜை விமானநிலையத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் பல பகுதிகளுக்கு சென்றுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக ரஸ்ய பிரஜை எந்த பகுதிகளுக்கு சென்றார் என்பதை கண்டுபிடித்த பின்னர் தொடர்புபட்ட நபர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய பிரஜை பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரும் வரை அதிகாரிகள் எநத தகவலையும் தெரிவிக்காதது கவலையளிக்கின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

http://thinakkural.lk/article/71865

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்று அபாய நிலை குறைவடையவில்லை – தொற்று நோய்ப் பிரிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத்  தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதன்கிழமை ரஷ்யாவிலிருந்து வந்த விமானத்திலுள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இவருடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்லாமல் நேரடியாக மாத்தளை பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது பாரதூரமான விடயம் கிடையாது. எனினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

இதில் இராஜதந்திரிகளுக்கு அவர்களது சொந்த தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வரும் பெரும்பாலானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுவதால் நாட்டில் வைரஸ் பரவும் அபாயம் குறைவடையவில்லை.

எனவே பொதுமக்களை அடிப்படை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/இலங்கையில்-கொரோனா-தொற்ற-23/

Link to comment
Share on other sites

ரஷ்ய கொரோனா தொற்றாளியால் 37 பேர் தனிமைப்படுத்தல்!

மாத்தறை – பொல்சேன, பரமுல்ல பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் 23 ஊழியர்கள் உட்பட 37 பேர் இன்று (24) தனிமைப்படுத்தப்பட்டனர்.

குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய விமானப் பணியாளர் குழுவில் உள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று (23) கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பிரஜைகள் 15 பேர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக கடந்த 13ம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் குறித்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

அவர்கள் இன்று சீனா பயணமாக இருந்ததுடன், நேற்று முன்தினம் மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிசிஆர் பரிசோதனைக்குட்பட்டனர். இதனையடுத்தே அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதி செய்யப்பட்டது

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான ரஷ்யப் பிரஜை சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்கள் அம்பாந்தோட்டையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டதுடன், ஹோட்டலின் ஊழியர்கள் குழு ஹபராதுவையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் தம்புத்தேகம, எம்பிலிப்பிட்டிய, தெனியாய, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் மாலிம்பட ஆகிய பகுதிளைச் சேர்ந்தவர்களாவர். ஹோட்டல் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்ய பிரஜைகள் பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி, மனைவி, பிள்ளைகள் இருவர் சகிதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த தொற்றாளியுடன் இருந்த ஏனைய ரஷ்ய பிரஜைகள் இரண்டு சுப்பர் மார்கட்களுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://newuthayan.com/ரஷ்ய-கொரோனா-தொற்றாளியால்/

Link to comment
Share on other sites

மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டாரிலிருந்து வருகை தந்த 6 பேர், உக்ரேனிலிருந்து வருகை தந்த 3 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த இருவர், அல்பீனியாவிலிருந்து வந்த ஒருவர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 345 ஆக அதிகரித் துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண மாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.

174 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொ டர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/72305

Link to comment
Share on other sites

நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பதினொரு பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தஅதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு, வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் சென்னையில் இருந்து நாடு திரும்பிய எட்டுப்பேரும், பங்களாதேஷிலிருந்து வந்த இருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து திரும்பிய ஒருவரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து மூவாயிரத்து 208 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் இன்றும் 139பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாட்டில்-கொரோனா-தொற்று-க-4/

Link to comment
Share on other sites

நாட்டில் நேற்று 06 பேர் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதாரப் பிரிவு

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 06 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

coronavirus.jpg

ஒமானிலிருந்து நாடுதிரும்பிய 3 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய கடலோடி ஒருவர், ஒமானிலிருந்து நாடு திரும்பிய இந்தியக் கடலோடி ஒருவர், அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பிய ஒருவர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ள மை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/75575

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ லங்காவில் மீண்டும் ஊரடங்கு! அனைத்து பாடசாலைகளும் மூட உத்தரவு!

 

Link to comment
Share on other sites

இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை

கம்பஹா, திவுலப்பிட்டியவில் 39 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு  ஐடிஎச் க்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக அந்தப் பெண், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, அந்த வைத்தியசாலையைச் சேர்ந்த பணியாளர்கள் 15 பேர் மற்றும் அப்பெண் கடமையாற்றிய  நிறுவனத்தைச் சேர்ந்த 45 பேர் அடங்களாக 60 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கையில்-பெண்ணுக்கு-கொரோனா-60-பேருக்கு-சுயதனிமை/150-256223

Link to comment
Share on other sites

 

திவுலபிட்டிய பாடசாலை மாணவர்கள் 1500 பேர் தனிமைப்படுத்தல்

திவுலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சுமார் 1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திவுலபிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணின் மகள் கல்வி கற்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

school.jpg

குறித்த ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் இன்று கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

https://thinakkural.lk/article/76984

Link to comment
Share on other sites

ஆனமடுவவில் இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவை கொரோனா- சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சி

ஆனமடுவவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது தடவையாக கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவை தேனன்குரிய பகுதியைசேர்ந்த 23வயது இளைஞனே மூன்றாவது தடவையாக பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Screenshot_20201005-122651_Chrome.jpg
ஆகஸ்ட் 18ம்திகதி ஐக்கிய இராச்சியத்திலிருந்து வந்த இளைஞர் ஒருவர் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை அவருக்கு கொவிட் 19 பாதிப்புள்ளமை முதலில் தெரியவந்தது என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகன தெரிவித்துள்ளார்.
வெலிக்கந்தை மருத்துவமனையிலிருந்து வெளியேறிய இளைஞர் தன்னை வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அந்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பிசிஆர் சோதனையின் போது இரண்டாவது தடவை அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது எனஉபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

ph1-1-300x169.jpg
அதன் பின்னர் அந்த இளைஞர் இரணவில கொவிட் 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடவை அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர் அவரது வீட்டை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும் அவர் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கானசூழலை ஏற்படுத்துவதற்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
சுய தனிமைப்படுத்தலில்இருந்தவேளை ஒக்டோபர் இரண்டாம் திகதி அந்தஇளைஞர் சிலாபத்தில் உள்ள கொவிட் சோதனை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது அவருக்கு மீண்டும் கொரோனாவைரஸ் பாதிப்புள்ளமை தெரியவந்துள்ளது.

https://thinakkural.lk/article/76971

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.