Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ், ஆபத்தான நோய்கள் உள்ள சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக சிரேஸ்ட பிரஜைகள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம், அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவர்களை நாடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இலகுவாக வெற்றிபெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனாவால்-உயிரிழந்தவர-2/

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை முடக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – GMOA

 
1-114-696x377.jpg
 22 Views

நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வயோதிபர்கள் மற்றும் தொற்றுநோய் ஆகியவற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

எமது நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு நூற்றுக்கு 0.2 வீதத்தில் காணப்படுகின்றது. ஆனால் உலக நாடுகளில் 2 அல்லது 3 என்ற ரீதியில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் நாட்டில் தொடர்ந்தும் கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக 9 வழிமுறைகளை அறிவித்துள்ளோம்.

இதிலே பிரதானமாக விநியோக நடவடிக்கைகள் ஊடாக தொற்று பரவுவதை தடுத்தல். மீன் விற்பனை மற்றும் ஆடை தொழிற்சாலை ஆகியவற்றில் ஏற்பட்ட தொற்றுபரவல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது.

இதற்கு குறித்த தொழிற்தளங்களில் முறையாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமையே காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே இதுபோன்ற விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது. இந்த நிலையில் 490 பொலிஸ் பிரிவுகளில் 200 மேற்பட்ட பிரிவுகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் நாட்டை முழுமையாக முடக்க வேண்டி ஏற்படும்.

ஆகவே அந்த நிலை ஏற்படாத விதத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி செல்லவே நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ilakku.org/இலங்கையை-முடக்காமல்-கொரோ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் மேலும் மூவருக்கு கொரோனா ! கிழக்கில் கொரோனா எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது

By Sayan
 
139027216_15884703226031n.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய போரதீவு பட்டபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக பி.சி.ஆர் பரிசோதனையில் இன்று வியாழக்கிழமை கண்டுப்பிடிக்கப்படதையடுத்து 31 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ..லதாகரன் தெரிவித்தார் .

 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய குறித்த நபரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

 

இதனையடுத்து குறித்த தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு கோட்டுக் கொண்டுள்ளார் 

 

http://www.battinews.com/2020/10/corona .html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- சில இடங்கள் முடக்கம்

IMG-20201029-WA0142-1-696x615.jpg
 19 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவு பட்டாபுரம் பகுதியில்  கோவிட் 19 தொற்று ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் சுகாதார திணைக்களம் மற்றும் பிரதேசசபை,பொலிஸார் மற்றும் படையினர் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

26-10-2020ம் திகதி வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் இனங்காணப்பட்டு வெல்லாவெளி பொதுச் சுகாதார வைத்திய அலுவலகத்தில் வைத்து 30பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பட்டாபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் 26வயதுடைய நபர் ஒருவர் இனங்காணப்பட்டார்.

இவர் கொழும்பு பம்பலப்பட்டியில் கடமையாற்றிய நிலையில், கடந்த 22ஆம் திகதி இலங்கை போக்குவரத்துசபை பஸ்ஸில் மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ளார். இவர் கொரோனா தொற்றுக் குள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து பெரிய போரதீவு பட்டாபுரத்தில் 5 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் மற்றும் வெல்லாவெளி பொதுச்சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் உள்ளனர்.

தற்போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள வெல்லாவெளி இராணுவ சோதனைச்சாவடி வீதி மூடப்பட்டுள்ளதுடன் பொறுகாம வீதி பெரிய போரதீவு சந்தி (பட்டிருப்பு) மூடப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து பொதுமக்களின் வீதீப் போக்குவரத்தை முற்றாக தடை செய்துள்ளனர்.குறிப்பாக பழுகாமம் பெரியபோரதீவு பட்டாபுரம் முனைத்தீவு பொறுகாமம் கோவில் போரதீவு ஆகிய கிராமங்கள் ஆகியனவற்றில் பொதுமக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனியின் ஆலோசனையின் கீழ் குடி நீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளதுடன் வீடுகளுக்கு தொற்று நீக்கும் செயற்பாடுகள் பிரதேசசபை ஊழீயர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிசாரும் இராணுவத்தினரும் பொதுச்சுகாதார பரிசோதக உத்தியோகஸ்தர்களும் கொரோனா நோய் இனங்கானப்பட்டவருடன் தொடர்புடைய நபர்களை தேடும் பனியில் ஈடுபட்டுவருகின்றனர்.

https://www.ilakku.org/மட்டக்களப்பில்-அதிகரிக-2/

Link to comment
Share on other sites

நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா பரவியது; மொத்த எண்ணிக்கு 10 ஆயிரத்தை நெருங்குகின்றது

corona.12.jpgநாட்டில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் 53 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள். ஏனைய 115 பேரும் பேலியகொடை கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மட்டும் 600 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில்தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரையான பாதிப்பு 9 ஆயிரத்து 800 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், நாட்டில் தொற்று கண்டறியப்பட்டோரில் இதுவரை 4 ஆயிரத்து 142 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளஅதேவேளை இன்னும் 5 ஆயிரத்து 600 பேருக்கு மேல் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/84453

Link to comment
Share on other sites

வடமராட்சி கொரோனா நோயாளி சென்று வந்த இடங்கள் அறிவிப்பு!

பருத்தித்துறை – கீரிமலைக்கான 763ம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டு வரும் அரச பேருந்தில் கொரோனா தொற்றாளர் பயணம் செய்துள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்களுக்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புபட்டு வடமராட்சி, பொலிகண்டி பிரதேசத்தில் வசித்து வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை நேற்று இரவு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த தொற்றாளரிடம் சுகாதாரப்பிரிவினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் அவரது பயண வழித்தடங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர் பேலியகொடை மீன் சந்தையிலிருந்து வந்த பின்னர்,

 

https://newuthayan.com/வடமராட்சி-கொரோனா-நோயாளி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- வரும் நாட்கள் மேலும் ஆபத்தாக மாறலாம்!

 
1-121.jpg
 24 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதன் காரணமாக, எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக மாறியுள்ளதென சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மாதங்களில் மந்த நிலையில் காணப்பட்ட கொரோனா தொற்று, சில நாட்களாக வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக இது வரையில் சுமார் பத்தாயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தும் நியைங்கள், கொரோனா சிகிச்சை மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் 19 பேர் வரையில் உயிரிழந்தும் உள்ளனர்.

இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினராலும் எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த வைத்தியர் ஜயருவன் பண்டார, கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளதோடு, தற்போது செயலிழந்து காணப்படும் பி.சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தை மீண்டும் செயற்படுத்துவதற்காகச் சீன விசேட வல்லுநர்கள் இன்று இலங்கை வரவுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தல் என்பது சிறை வாழ்க்கை அல்ல என்றும் அது இந்த சமூகத்தின் நலனைக் கருத் திற்கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு விசேட செய் முறையெனவும்  அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையடுத்து “நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் நம்பிக்கை தரும் விதத்தில் இல்லை” என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் பல நோயாளிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உபுல் ரோகண, கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த கரிசனைகள் உருவாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.

ஆனால் பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்று பழுதாகியுள்ள நிலையில், கொழும்பு மாநகரசபைக்குள் பலர் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர்களை சோதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பது கடினமாக காணப்படுகின்றது, குறிப்பாக மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளில் இந்த நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் போதியளவு ஆய்வு கூட வசதிகள் இன்மையால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

போதியளவு ஆய்வு கூட வசதிகள் இல்லாததன் காரணமாக கொரோனா நோயாளிகள் என சந்தேகிக்கப்பட்ட பத்தாயிரம் பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட பிசிஆர் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு மருத்துவமனைகள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளதால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன என்றும் கூறப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்குடன், நாடு முழுவதும் 117 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அவர்  தெரிவித்துள்ளார்.

அதன் படி கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும், குருணாகல் மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுக்கு முன்னர் ஊரடங்கு சட்டம் அமுலி லிருந்த 68 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பொலிஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட காலத்தில் அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரைத் தவிர வேறு யாரும் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்க மாட்டார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல, ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில்,“கொரோனாவின் முதல் அலை நாட்டில் உருவானபோது அதைத் தோற்கடிக்க ஊடகங்கள் அதிக ஆதரவு வழங்கியது. அதே போல இம்முறையும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எனவே அதிகபட்ச பங்களிப்பை ஊடகங்கள் வழங்க வேண்டும்”  என்றுள்ளார்.

https://www.ilakku.org/covid-19-dr-jayaruwan-bandara-sri-lanka/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

இந்த சூழலில், ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல, ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில்,“கொரோனாவின் முதல் அலை நாட்டில் உருவானபோது அதைத் தோற்கடிக்க ஊடகங்கள் அதிக ஆதரவு வழங்கியது. அதே போல இம்முறையும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எனவே அதிகபட்ச பங்களிப்பை ஊடகங்கள் வழங்க வேண்டும்”  என்றுள்ளார்.

அதாவது உண்மையான எண்ணிக்கையை தயவு செய்து வெளியிடாமல் , யாரவது செத்து விழுந்தால் இனம்தெரியாத நோயினால் மர்கயா என்று அறிவியுங்கள் என்று சொல்லவருகிறார் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் – கரவெட்டி இராஜகிராமம் முடக்கப்பட்டது

யாழ்.கரவெட்டி – இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் அமுல் படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும் போது இவ்வாறு தெரிவீத்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் ஒருவர் ராஜ கிராமத்தினைச் சேர்ந்தவர் என்பதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ராஜ கிராமத்தில் 70 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேபோல் பாசையூர் மேற்கு மற்றும் குருநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.(15

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-கரவெட்டி-இராஜகிராம/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் - பருத்தித்துறை வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களும் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 ஆம் இலக்க வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன.

spacer.png

கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது.

கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்த பல தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்களாகப் பணியாற்றும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த நிலையில் அவர் கிராமத்தில் நடமாடியுள்ளார்.

இந்த நிலையில் ராஜ கிராமத்தில் 60 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த யாராவது தனியார் பஸ் சேவையில் கடமையாற்றினால் பயணிகளுக்கு தொற்று ஏற்படலாம். அதனால் தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையோரைக் கண்டறியும் வகையில் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 

https://www.virakesari.lk/article/93272

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மருத்துவ பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை!

 
1-126.jpg
 23 Views

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்திய சாலையில் மாத்திரம் பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று யாழ் . பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று  இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ். கேதீஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிப்பதற்கு அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பி. சி. ஆர் பரிசோதனைகளுக்குத் தேவையான மாதிரிகளை மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வது எனவும், ஆய்வ நடவடிக்கைகளுக்கான நுண்ணுயிரியல் சிறப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேவையான உயரியல் காப்பு முறைகளைக் கண்காணித்து, அறிவுறுத்தல் வழங்குவதற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் ஒட்டுண்ணியியல் நிபுணர் வைத்திய கலாநிதி திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் செயற்படுவார் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரியல் மற்றும் ஆய்வு கூடக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியை யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன் மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் பணியாற்றுவதற்கென நுண்ணுயிரியல் ஆய்வுகூடவியலாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கு யாழ். பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும். இதனை 180 ஆக அதிகரிப்பதற்காக, ரூபா 50 லட்சம் பெறுமதியான புதிய பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இந்தக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/யாழ்-மருத்துவ-பீடத்தில்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் உடுவிலில் தாய் மற்றும் 10 வயதுடைய மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் நேற்று பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் அவை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு இன்றிரவு அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே பெண் தனது மகளுடன் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்கள் மூவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, வெள்ளவத்தையில் இயங்கும் யாழ்.ஹோட்டல் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையில் ஒருவர் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் என்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/93315

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா

 
Jaffna-Peninsula-consisting-four-sub-reg
 12 Views

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிசிஆர் சோதனைகளின் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வேலணை, நல்லூர், உடுவில் பகுதிகளை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலணை ஊர்காவற்துறை பகுதியில் மூவரும்,நல்லூர் பகுதியில் ஒருவருக்கும் உடுவில் பகுதியில் தாய்மகள் இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதியாகியுள்ளது.

https://www.ilakku.org/யாழ்ப்பாணத்தில்-மேலும்-ஆ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

 
1-129-696x377.jpg
 29 Views

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு சீருடையில்லாமல் வருகை தருபவர்கள் உண்மையில் பொது சுகாதார பரிசோதகர்கள்தானா என்பதை உறுதிசெய்துகொள்வதற்கான உரிமை பொதுமக்களுக்குள்ளது என  இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

மஹாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்ற கொள்ளையர்கள், வீட்டில் இருப்பவர்களுக்குத் தாம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்றும் கொரோனா ,பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் சென்றுள்ளதுடன், சந்தேக நபர்கள் வீட்டிலிருந்தவர்களுக்கு மருந்துவில்லை ஒன்றை வழங்கி அதனை அருந்துமாறும் தெரிவித்துள்ளனர்.

மருந்தை அருந்தியவுடன் வீட்டார் மயக்கமடைந்துள்ளனர். பின்னர் சந்தேக நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மயக்கமுற்ற வீட்டார் நேற்று வெள்ளிக் கிழமை காலையிலேயே மீண்டும் சுயநினைவுக்குத் திரும்பியுள்ளனர் என குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹானா இதனைத் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குச் சுகாதார அதிகாரிகள் வருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்வதற்கு முன்னர் ஒருபோதும் மருந்து அருந்த வேண்டி தேவையில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்துள்ளார்.

அதனால் பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இவ்வாறான நெருக்கடி நிலைமையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மோசடி நபர்கள் சமூகத்தில் இருப்பதினால் மக்கள் இது போன்ற நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/சுகாதார-பரிசோதகர்கள்-சங்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்…

October 31, 2020

Corona-b-virus.jpg

தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க கொழும்பு ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு எப்படி வந்தது என்பது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://globaltamilnews.net/2020/152544/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம்: மீன் உணவைத் தவிர்க்கும் இலங்கையர்கள்?

 
1-133-696x392.jpg
 21 Views

இலங்கையில் மினுவங்கொட மற்றும் பேலியகொட பகுதிகளில் இதுவரை சுமார் 6000திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவிட்-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இந்த தொற்றின் பின்னர், நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதில் அச்சப்பட்டு மீன் உணவு வகைகளை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட மீன் சந்தையிலிருந்தே நாடு முழுவதும் மீன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மீன் விற்பனையாளர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டமை அண்மை காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் கோவிட் தொற்று பரவி வருகின்றமையினால், நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதை பெருமளவு நிறுத்திக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக மீனவர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.ilakku.org/கொரோனா-அச்சம்-மீன்-உணவைத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பரவும் கொரோனா, அதிக வீரியம் கொண்டதா?

 
1-696x475.jpg
 40 Views

இலங்கையில் கோவிட் 19 தொற்று காரணமாக இதுவரை 10,424 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இந்த மாத ஆரம்பத்தில் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்ட நிலையில், அன்றிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ ஆரம்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம்காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையில் தற்போது பரவி வரும் கோவிட்-19 வைரஸானது, மிகவும் வீரியம் கொண்டது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.

இந்த தகவலைத் தொடர்ந்து இலங்கையில் தற்போது பரவிவரும் வைரஸானது, ‘B.1.42’ என்ற பிரிவை சேர்ந்த வல்லமை மிக்க வைரஸ் என சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவிக்கின்றார்.

இலங்கையில் இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட வைரஸ்கள், B.1, B.2, B 1.1, B.4 ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவை எனக் கூறும் அவர்,

இந்த வைரஸ், கடந்த காலங்களில் பரவிய வைரஸை விடவும் அதிக வீரியம் கொண்டமையினால், குறித்த வைரஸ் அதிவேகமாக பரவும் வல்லமையை கொண்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

https://www.ilakku.org/இலங்கையில்-பரவும்-கொரோனா/

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றாளருடன் பஸ்ஸில் யாழ் வந்த 6 பயணிகள் தலைமறைவு; தேடும் பணி பொலிஸாரிடம் ஒப்படைப்பு

jaffna-board.pngயாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“யாழ்ப்பாணத்துக்கு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட என்.சி.ஜி என்ற பெயர் கொண்ட டபிள்யூ.பி.என்.சி 8760 என்ற இலக்கமுடைய பஸ்ஸில் பயணித்தவர்கள் சமூக அக்கறையுடன் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் பஸ் சேவை நிறுவனத்திடமிருந்து பயணித்தவர்களின் தொலைபேசி இலக்கம் பெறப்பட்டு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் நேற்று ஈடுபட்டனர். அவ்வாறு 37 பயணிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், சாரதியும் நடத்துநரும் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் சுயதனிமைப்படுத்தப்பனர். எனினும் அந்த பஸ்ஸில் பயணித்த 6 பேர் அலைபேசியை நிறுத்தி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

https://thinakkural.lk/article/85080

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று

 
01-6-1-696x465.jpg  
 2 Views

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடைய பத்து பேர் சுய தனிமைப் படுத்தல் படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

களுதாவளை நான்காம் வட்டாரத்தில் பி.சி.ஆர் பரிசோதனையின்போது நேற்று  மாலை ஒருவர்  கொரோனா தொற்றுக்குள்ளானது இனங்காணப்பட்டது.

இவர் கடந்த 24ஆம் திகதி கொழும்பில் இருந்து வந்துள்ளதாகவும் நேற்று அவர் பி.சிஆர் பரிசோதனைக்குட்படுத்தப் பட்ட நிலையிலேயே அவர் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

தற்போது குறித்த நபரின் வீடும் அருகில் உள்ள மற்றொரு வீடும் குறித்த நபரின் மனைவி பொருட்கொள்ளனவில்  ஈடுபட்ட இரண்டு வர்த்தக நிலையங்களும் தனிமைப் படுத்தலுக்குட்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்து மண்முனை தென் எருவில் பற்று சுகாதார பிராந்தியத்தில் தங்கியுள்ளவர்கள் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறும் அவ்வாறானவர்கள் தொடர்பான விபரங்களை, மண்முனை தென் எருவில் பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகருடன் 0778399450என்னும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம் போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 52குடும்பங்களைச் சேர்ந்த 97பேர் சுயதனிமைப் படுத்தலுக்குட்படுத்தப் பட்டுள்ளதாக போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் போரதீவு, பட்டாபுரம் பகுதியில் கொழும்பில்  ஒருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவருடன் தொடர்புடைய 12குடும்பங்களை சேர்ந்த 51பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாவடிமுன்மாரி பகுதியில் கொழும்பில் இருந்துவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து இதுவரையில் 22குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் ரமேஸ் தெரிவித்துள்ளார்.

இவர்களில் பலருக்கு பி.சி.ஆர் சோதனைகள் நடாத்தப்பட்டபோதிலும் யாருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டபோதிலும் இன்னும் 14நாட்களுக்கு பின்னரும் அவர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்குட்படுத்தப் படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கிழக்கு மாகாணத்தில் வீடுகளில் 2230பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதுடன் அவர்களில் 757பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அம்பாறை மாவட்டத்தில் மூன்று பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும் இனங்காணப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம்,தெகியத்தன்கண்டி,பதியத்தலாவ ஆகிய பகுதியில் தலா ஒருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி,களுதாவளை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/மட்டக்களப்பில்-வேகமாக-பர/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1592 குடும்பங்களை சேர்ந்த 3959பேர் தனிமைப்படுத்தல்

November 1, 2020

batticaloa..pngமட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்களின் விடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று என மருத்து பரிசோதனைகள் மூலம் உறுதியானவர்கள் மாவட்டத்தில் 35பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் இதில் கொறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 31பேரும் வெல்லாவெளி பட்டிப்பளை களுவாஞ்சிக்குடி ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தலா ஒருவர் என அடையாளம் கானப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் மாவட்ட ஊடகப் பிரவுக்கு இன்று தெரிவித்தார்.

கொரோனா நோய் தொற்றுகாரனமாக தொழில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான 5000.00ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான நிதியினை அரசாங்க அதிபரின் துரித நடவடிக்கையினால் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல அவர்களினால் உடணடியாக நிதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுக்கு நேற்றுமுதல் உலர் உணவுப்பொதிகளை வழங்குவதற்கு அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.

உலர் உணவு பொருட்களை வழங்கும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எதிர்காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதிகமாக தொற்றாளர்கள் மற்றும் நோயாளர்கள் அடையளம் காணப்படுகின்ற பகுதியாக கொறளைப்பற்று மத்தி பிரதேசமே கானப்படுகின்றது இங்கு 1335பேர் தனிமைப்படுத்தலுக்கும் 31பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர் அதேபோன்று கொரோனா தொற்றாளர்கள் குறைவாக பதிவான பிரதேசமாக பட்டிப்பளை கானப்படுகின்றது இங்கு 11குடுப்பளை சார்ந்த 47பேர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் நோய்தொற்று உறுதியானவர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் தொழில் நிமிர்த்தம் சென்று வந்தவர்களாகவே உள்ளனர் இவர்களுக்கான மருத்துவ உதவிகளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்ப்படுத்தி வருகின்றனர் இதற்காக கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளரான வைத்திய கலாநிதி எம்.அச்சுதன் அவர்களின் சிறந்த மேற்பார்வையில் பணிகள் மக்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

https://thinakkural.lk/article/85177

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு யாழ் மாநகராட்சி மன்ற சுகாதார வைத்திய அதிகாரிகளின் புதிய அறிவித்தல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தைகளை மூட நடவடிக்கை - நல்லூர் பிரதேச சபை தவிசாளர்

சுகாதார நடைமுறைகளை, விதிகளை பின்பற்றாமல் அசண்டையீனமாக நடந்து கொண்டால் சந்தைகளை மூட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த. தியாக மூர்த்தி தெரிவித்துள்ளார்.

spacer.png

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் உள்ள பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில் சந்தை ஆகியன நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது.

குறித்த சந்தைகளுக்கு தினமும் பெருமளவான மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்று அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக எமது ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் விதிகளையும் பின்பற்றுமாறு கோரி வருவதுடன் எமது சபையின் உத்தியோகஸ்தர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இருந்த போதிலும் பெருமளவான வியாபாரிகள் , பொதுமக்கள் சுகாதார நடைமுறைகள் விதிகளை மீறி செயற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று உள்ளன.

தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் வியாபாரிகள் , பொதுமக்கள் ஈடுபட்டால் எமது ஆளுகைக்குள் உள்ள திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில் சந்தை என்பவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
 

https://www.virakesari.lk/article/93405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு நீடிப்பு குறித்து முழுவிபரம்!

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே கடந்த இரு தினங்களும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்நிலையைக் கருத்திற் கொண்டு மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இம்மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறையினர் மற்றும் ஏனைய தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.

விசேட அறிவித்தலொன்றின் மூலம் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கடந்த 29 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதனை 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நீக்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த இரு தினங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு திங்களன்று ஊரடங்;கை நீக்காமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

அதற்கமைய இம்மாதம் 9 ஆம் திகதி காலை 5 மணி வரை மேல் மாகாணம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் தொடர்புகள் குறித்து ஆராய்ந்து பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பேலியகொடை, கேகாலை, குருணாகல் மற்றும் குளியாபிட்டி ஆகிய பகுதிகளிலும் இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். மேல் மாகாணம் மாத்திரமன்றி இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்கும் , குருணாகல் நகரசபை எல்லைக்கும் , குளியாபிட்டிய பொலிஸ் பிரிவிற்கும் இதே போன்று 9 ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும்.

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மக்களை அனைவரும் தத்தமது வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வேறெந்த தேவைக்காகவும் வெளியிடங்களுக்குச் செல்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கப்பட மாட்டாது. தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதோடு தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய முதலாம் மற்றும் ஏனைய தொடர்பாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவு பொருட்கள் நிவாரணம் வழங்கப்படுவதோடு , ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு கடந்த முறையைப் போன்று 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக குறித்த பகுதிக்குள் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அத்தோடு கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களுக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/93428

 

கிளிநொச்சி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் கிளை கொத்தணிகள் உருவாகலாம் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

(எம்.மனோசித்ரா)

நாட்டின் 24 மாவட்டங்களிலும் கொவிட் கிளை கொத்தணிகள் ஏற்படக் கூடிய எச்சரிக்கை நிலவுவதாக தெரிவித்துள்ள சுகாதார தரப்பு மேல் மாகாணம் அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய பகுதி என்பதால் அதனை தொடர்ந்தும் முடக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பாதுகாப்பு துறையினரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் அதிகரித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகள் தொடர்ந்தும் காணப்படுகின்ற நிலையில் அவற்றுக்கு சமாந்தரமான வேறு கொத்தணிகள் பிரிதொரு இடத்தில் உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு ஏற்பட்டால் எம்மால் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையே ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பெருமளவானோர் சமூகத்திலிருந்தே இனங்காணப்படுகின்றனர். தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அல்ல. இவ்வாறான நிலைமையை சீராக்குவதற்கு துதிரமான செயற்பாடுகளை முன்னெடுத்தால் மாத்திரமே எதிர்காலத்தை சிறந்ததாக்கலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

125 பொலிஸ் அதிகாரிகளுக்கு தொற்றுறுதி

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 125 ஆக உயர்வடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்தார். அத்தோடு 2400 பொலிஸ் அதிகாரிகள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை. எனினும் கொழும்பு விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாம்களில் சமையலறையில் உள்ளவர்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் வாங்குவதற்கு சென்றதையடுத்தே பொலிஸ் அதிகாரிகளும் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேல்மாகாணத்திலிருந்து சென்ற 550 பேர் தனிமைப்படுத்தலில்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் மேல் மாகாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்குச் சென்ற 550 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களின் கணிகாணப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/93425

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா எச்சரிக்கை- ஊரடங்கு குறித்து புதிய அறிவிப்பு

 
1-98-696x435.jpg
 

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பு குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  நாலக  கலுவெவ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள   அறிக்கையில்,

“2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நடைமுறைப்படுத்தும் வகையில் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 2020.11.02 திங்கட்கிழமை நீக்கப்படமாட்டாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைவாக  COVID – 19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, தற்பொழுது மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 2020 நவம்பர் மாதம் 02 திகதி காலை 5.00 மணி தொடக்கம் 2020 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணி வரையில் மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

மேல் மாகாணத்திற்கு மேலதிகமாக, இரத்தினபுரி மாவட்டத்தில், எஹலியகொடை பொலிஸ் பிரிவிலும், குருநாகல் மாநகரசபை எல்லைப் பகுதியிலும், குளியாப்பிட்டி பொலிஸ் எல்லை பகுதியிலும் இவ்வாறே 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி காலை 5.00 மணி தொடக்கம் 2020 நவம்பர் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று COVID  19 வைரஸ் தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/கொரோனா-எச்சரிக்கை-ஊரடங்/

கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் – த.காண்டீபன்

 
Dr-Kandeeban-768x432-696x392.jpg
 50 Views

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வீரியம் கொண்டதென எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்றானது எவ்வித அறிகுறிகளும் இல்லாமலே மக்களிடத்தில் பரவி வருகின்றது என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கொரோனாத் தொற்றானது, தொற்று ஏற்பட்டாலும் எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டாமலேயே மக்களிடத்தே பரவிவருகின்ற காரணத்தினால், நாம் 14 நாட்கள் கடக்கும் வரையில் எவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்று கூறுவது கடினம்.

முக்கியமாக பி.சி.ஆர் பரிசோதனையின் பிரகாரமே அறிகுறி இல்லாதவர்களுக்கும், தொற்று இருக்கின்றதா, இல்லையா என முடிவுசெய்யவேண்டியுள்ளது.

அதேவேளை குறித்த கொரோனத் தொற்றானது பி.சி.ஆர் பரிசோதனையிலும் கிட்டத்தட்ட 70 வீதமானவர்களுக்கு தொற்று இருந்தால்கூட சாதாரண முடிவுகளைக் காட்டுகின்றது.

ஆகையினால் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கடினமான காரியமாகும்.

எனவே எமக்குச்சந்தேகமான அனைவரையும் சுய தனிமைப் படுத்தலிலோ, அல்லது மற்றவர்களுடன் சம்பந்தப்படாத ஓர் இடத்திலேயோ தனிமைப்படுத்துவதை நாம் வழக்கமாகக்கொண்டுள்ளோம்.” என்றார்.

அதே நேரம் களுபோவில போதனா வைத்தியாசாலையின் 15பி வோர்ட்டில் பணியாற்றிய மருத்துவர்கள் இருவரும் தாதியொருவரும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பழுதடைந்த பிசிஆர் இயந்திரம் திங்கட்கிழமையிலிருந்து மீண்டும் செயற்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/கொரோனாத்-தொற்றைக்-கண்டுப/

 

Link to comment
Share on other sites

397 பேர் நேற்று மட்டும் பாதிப்பு; கொரோனா தொற்றாள் தொகை 11 ஆயிரத்தை தாண்டியது

 

coronavirus_home_page-2.jpgநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மட்டும் மொத்தமாக 397 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த பாதிப்பு பதினொராயிரத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 41 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்பதுடன் ஏனைய 356 பேரும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 582ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை நான்காயிரத்து 905 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் ஆறாயிரத்து 135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://thinakkural.lk/article/85245

9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை காலை 5 மணி தொடக்கம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும் குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/9-ஆம்-திகதி-வரை-ஊரடங்கு-நீடிப்பு/150-257827

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.