Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கொரோனா

February 2, 2021

 

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில்  நேற்று  பெறப்பட்ட மாதிரிகளின் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூத்தில் 373 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் #யாழ்_பல்கலை #மாணவர்கள் #கொரோனா #கேதீஸ்வரன்

 

https://globaltamilnews.net/2021/156355/

 

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் இலங்கையில் முதல் வைத்தியர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 32 வயதான இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வைத்தியர் ஒருவர் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (2) உயிரிழந்துள்ளார்.

spacer.png

இவ்வாறு உயிரிழந்த வைத்தியர் 32 வயதுடைய, கயான் தன்தநாராயன ஆவார்.

இவர் ராகம வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த முதல் வைத்தியர் இவராவார்.

இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/99637

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் 80 சதவீதமான சுகாதாரத் துறையினர் கொவிட் -19 தடுப்பூசி பெற்றனர்

February 3, 2021

Ketheeswaran-DR.jpg

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையில் நேற்றைய நான்காம் நாளில் 704 பேர் டோஸ் பெற்றுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் 7 ஆயிரத்து 925 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இது மொத்த உத்தியோகத்தர்கள் எண்ணிக்கையில் 80 சதவீதமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் 9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர்.
இந்தப் பணியில் முதல் நாளில் 2 ஆயிரத்து 997 பேர் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இது 30 சதவீதத்தினர் ஆகும்.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 530 சுகாதார சேவையாளர்கள் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

மூன்றாம் நாளான திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 694 பேர் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.
நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை  704 பேர் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 299 பேரும் கிளிநொச்சியில் 110 பேரும் மன்னாரில் 40 பேரும் வவுனியாவில் 240 பேரும் முல்லைத்தீவில் 15 பேரும் இன்று கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றனர்.
அதன் மூலம் இதுவரை 80 சதவீத சேவையாளர்கள் தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பவதிகள் மற்றும் கர்ப்பம் தரிக்க காத்திருப்போர் என மூன்று வகையினரை இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதனால் அவ்வாறானவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர் என தெரிவித்தார்.  #வடக்கில் #சுகாதாரத்துறையினர் #கொவிட்19 #தடுப்பூசி

 

https://globaltamilnews.net/2021/156398/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அவர்களில், 11 பேர் மன்னார் முசலியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.வவுனியா செட்டிக்குளம் வைத்தியாலையில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன் கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நால்வர் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் முசலியில் அண்மையில் கொரோனாவால் உயிரிழந்தவருடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், அண்மையில் முசலி வாடியில் தொழிலாளி ஒருவருக்குக் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய ஏழு பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 403 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதிலேயே 14 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)
 

 

http://samakalam.com/வடக்கு-மாகாணத்தில்-மேலும/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் நேற்று 21 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

(சி.எல்.சிசில்)

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுப் புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

kethiswaran-300x251.jpg

அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 776 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவி ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவி ஒருவருக்கு தொற்றுஉள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பதுளையிலிருந்து வருகை தந்து கல்வி பயின்றவர்.

அத்துடன், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. அவர் கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் தானாக முன்வந்து பி.சி.ஆர் மாதிரிகளை வழங்கியவர்.

மன்னார் நானாட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் ஹற்றன் நஷனல் வங்கியின் நானாட்டான் கிளை உத்தியோகத்தர்களாவர்.

அந்த வங்கிக் கிளை உத்தியோகத்தர்களிடம் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் கிளை அலுவலகம் நேற்று முன்தினம் முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அத்துடன் நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மூவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு பேர் மன்னார் நகர் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்குச் சென்ற நிலையில் மாதிரிகள் பெறப்பட்டன என்றார்.

 

https://thinakkural.lk/article/110345

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் 72ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு

 
1-102.jpg
 24 Views

சிறீலங்காவில் இதுவரை மொத்தமாக 72ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 375ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 211ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் உலகளவில் 107,947,179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,367,196 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,871,294 ஆக அதிகரித்துள்ள நிலையில், 155,360 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=41989

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உருமாறிய கொரோனா வைரஸ் சிறீலங்காவில் கண்டுபிடிப்பு

 
1-102.jpg
 16 Views

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட அதிகம் பரவும்  தன்மை கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B-1.1.7 பரம்பரை) நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B-1.1.7 பரம்பரை) அதிகம் பரவும் தன்மை கொண்டது.

இந்நிலையில், மஹியங்கனையில் இரு தொழிற்சாலைகளில் பரவிய கொரோனா தொற்று மற்றும் பி.சிஆர் இயந்திரங்கள் பழுதானமை காரணமாகவே அண்மைய நாட்களில் கொரோனா நோயாளர்கள் அதிகம் பதிவாகினர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=42064

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதியவகை கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு

 
1-118.jpg
 21 Views

சிறீலங்காவில் கண்டறியப்பட்ட பரவிவரும் புதியவகை கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சு ஆய்வினை ஆரம்பித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 56 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 66 ஆயிரத்து 984 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 688 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறறுவரும் அதேவேளை 384 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு பொது மக்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பயணங்களை மட்டுப்படுத்தவும், அதிகளவிலான மக்கள் இருக்கும் இடங்களைத் தவிர்க்கவும், முக்கவசம் அணியவும், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர், வைரஸை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், புதியவகை கொரோனா பரவல் குறித்து  சுகாதார அமைச்சு ஆய்வினை ஆரம்பித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய மாறுபாட்டின் பரவல் வீதம் அதிகமாக காணப்படுவதாக ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தற்போது குறித்த தொற்று, கொழும்பு, அவிசாவளை, இங்கிரிய, பியகம, வத்தளை, மத்துகம, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=42135

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ நிபுணருக்கு கோரோனா வைரஸ் தொற்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.குறித்த வைத்தியர் கொழும்புக்குச் சென்று திரும்பிய நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்து, தாமே முன்வந்து பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற இந்த பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கோரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக எந்தவிதமான இடையூறுகளும் இன்றி நடைபெறுகின்றன.அவற்றை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.மருத்துவர் நோயாளிகளைப் பார்வையிடுவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மருத்துவ வல்லுநருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டமை தொடர்பில் எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் வைத்தியசாலையில் உரிய சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மருத்துவர் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.குறித்த வைத்தியர் கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸை அண்மையில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் சிறிபவானந்தராஜா மேலும் தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-போதனா-வைத்த-9/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் கொரோனா பாதிப்பு 1,000ஐத் தாண்டியது

February 24, 2021

kethees-1024x577.jpg

வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 4 பேராக அதிகரித்துள்ளது.

மாந்தை மேற்கில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் உள்பட 42 பேர் வடமாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 443 பேரின் பிசிஆர் பரிசோதனையில் 29 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடந்த வாரம் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தனர். அந்த திருமண நிகழ்வில் மன்னார் ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையோரும் பூநகரி வலைப்பாடு கிராமத்தில் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.

அவ்வாறு திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மடு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழில் 17 பேருக்கு கொரோனா 

அதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர் மற்றும் நோயாளி ஒருவருக்கும் என மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு மன்னாரில் உள்ள உறவினர்கள் வந்து திரும்பிய நிலையில் தொற்று அறிகுறியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் பருத்தித்துறையைச் சேர்ந்த 13 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் #வடக்குமாகாணத்தில் #கேதீஸ்வரன் #கொரோனா #மாந்தை

 

https://globaltamilnews.net/2021/157312/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 52 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கொரோனா கொத்தணி உ ருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அங்கு நேற்றைய தினத்தில் 52 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த சிறைச்சாலையில் தொற்றுக்கு உள்ளான கைதிகளுடன் தொடர்புகளை பேணிய ஏனைய கைதிகள் மற்றும் அதிகாரிகளையும், அவர்களை பார்வையிட வந்த உறவினர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்றைய தினத்தில் சிறைச்சாலை கைதிகள் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-சிறைச்சாலை-3/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் 85 ஆயிரத்தையும் கடந்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 376 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கையின் பதிவான மொத்தக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 85,336 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 358 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொவிட்-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

அநேரம் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து இரண்டு நேயாளார்களும், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 16 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்சமயம் மினுவாங்கொட-பேலியகொட கொவிட்-19 கொத்தணியுடன் தொடர்புடைய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 81,093 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 448 கொரோனா நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கையும் 81,769 ஆக பதிவாகியுள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 3,070 சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தில் 397 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 493 இல் இருந்து 497 ஆக அதிகரித்துள்ளது.

Covid_19_Death_06.03.2021.jpg

 

https://www.virakesari.lk/article/101683

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகர் டிப்போ பணியாளர்கள் 8பேர் உள்ளிட்ட 22 பேருக்கு கொரோனா

March 9, 2021

Ketheeswaran-DR.jpg

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 8பேர், காரைநகர் இ.போ.ச சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் காப்பாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 387 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  382 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 21பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

யாழ்ப்பாணம் மாநகர பொதுச்சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், கார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றுபவர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலையைச் சேர்ந்த 90 பேரிடம் பி.சி.ஆர்.பரிசோதனை நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் அடங்குகின்றனர்.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார். #காரைநகர்_டிப்போ #பணியாளர்கள் #கொரோனா #கேதீஸ்வரன் #சாரதிகள் #நடத்துனர்கள்

 

https://globaltamilnews.net/2021/157839/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பல்கலை மாணவர் இருவர் உட்பட 9 பேருக்கு நேற்று தொற்று உறுதி: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

(சி.எல்.சிசில்)

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மானிப்பாயைச் சேர்ந்த தாய், மகள் உட்பட யாழ்ப்பாணத்தில் 6 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப் பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

kethiswaran-300x251.jpg

அவர் மேலும் தெரிவிக்கையில்-யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 304 பேரின்
மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவரும் தொற்றாளராகக் கண்டறியப்பட்டனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தோற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த தாய்க்கும் மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணம் நகர நவீன சந்தை வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் 21 வயது இளைஞன் ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் கொரோனா நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் 15 வயதுச் சிறுமிக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மரக்கறி சந்தையில் சிலரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் பெண் வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பரந்தனைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.

 

https://thinakkural.lk/article/115348

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இதன்படி, நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதுடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மூன்று வீடுகளில் வர்ணப்பூச்சு வேலை செய்வதற்காக பளை பகுதியிலிருந்து சென்றிருந்த ஒருவர் மூலமே இவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை சாலையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இவர், அங்கு சாரதிப் பயிற்சிப் பாடசாலையில் பணியாற்றுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவினில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் இவர், ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்புடையவராவார்.

மேலும், ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்புடைய ஊர்காவற்றுறை மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கும் மன்னாரில் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.(15)

 

http://www.samakalam.com/வடக்கு-மாகாணத்தில்-மேலு-3/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நகர சந்தை வியாபாரிகள் 09 பேர் உள்ளிட்ட 21 பேருக்கு யாழில் கொரோனா

March 23, 2021

corona-new.jpg

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று  செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 பேர் கொவிட் -19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 600 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதன் போது 23 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ்.நகர் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் பனை உற்பத்தி பொருள்கள் வியாபாரிகளும் மூவர் மரக்கறி வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் காரைநகர் பேருந்துச் சாலை பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள்.

மன்னாரில் நகரைச் சேர்ந்த மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளையில் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் #கேதீஸ்வரன் #யாழ்_நகர_சந்தை #வியாபாரிகள் #கொரோனா
 

 

https://globaltamilnews.net/2021/158453/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனாவைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட 19 பேருக்கு தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகிய ஆய்வுகூடங்களில் 634 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அவர்களில் 29 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 மருத்துவர்கள், தாதியர்கள் மூவர் உட்பட 19 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.மருத்துவர்கள் இருவர், தாதிய உத்தியோகத்தர்கள் மூவர், சுகாதார ஊழியர்கள் நால்வர், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சுத்திகரிப்புப் பணியாளர் ஒருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், நகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)

 

http://www.samakalam.com/யாழ்-போதனாவைத்தியசாலையி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலியில் 127 பேர் உட்பட யாழில் 143 பேருக்கு கொவிட்-19 தொற்று

 

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 27 , பி.ப. 11:10 - 0      - 22

- எம். றொசாந்த் 

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானோரில், திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள், தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 746 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே 143 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட ஏழு பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருத்த நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/திருநெல்வேலியில்-127-பேர்-உட்பட-யாழில்-143-பேருக்கு-கொவிட்-19-தொற்று/71-268838

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி முடக்கம்; யாழில் 244 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

March 28, 2021

mahesan.png

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி கண்காணிப்பு வலயமாக மாறறப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார்.

அதேவேளை திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயம் மற்றும் திருநெல்வேலி பரமேஸ்வரா ஆரம்ப பாடசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.

அந்தப் பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை மற்றும் தொழில் நிமிர்த்தம் வெளியில் செல்பவர்கள் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில்  மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மார்ச் மாதம் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று 143 பேருக்கு தோற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்து வரும் ஒரிரு நாள்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.

 நேற்று வரையிலான கால பகுதியில் யாழில் 244 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார பிரிவுகளில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

திருநெல்வேலி பாற்பண்ணை பிரதேசம் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அபாய இடர் வலயமாக திருநெல்வேலி பிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் மற்றும் பரமேஸ்வரா ஆரம்ப பாடசாலை 
 ஆகிய இரு பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் பேசி முடிவுக்கு வந்துள்ளோம்.

அத்துடன், பாற்பண்ணை பகுதி மக்கள் வெளியில் நடமாடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளோம். அத்தியாவசிய சேவை, தொழில் நிமிர்த்தம் வெளியில் வருகை தருவோர் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து வெளியேற முடியும்.

சிறப்புக் காரணங்களுக்காக கிராமத்திலிருந்து வெளியில் செல்வோர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் விண்ணப்பித்து
அனுமதி கிடைத்தால் பயணிக்க முடியும்.

யாழ்ப்பாணம் மாநகர், திருநெல்வேலி நகர் கடைகளை மூடி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டால் பாடசாலைக்குச் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்றார். #திருநெல்வேலி_பாற்பண்ணை #முடக்கம் #தனிமைப்படுத்தல் #மகேசன் #யாழ்ப்பாணம் #கொரோனா

https://globaltamilnews.net/2021/158641/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.திருநெல்வேலியில் உள்நுழைய வெளியேற மறு அறிவித்தல் வரை தடை

 
1-227-696x563.jpg
 40 Views

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்துக்குள் மறு அறிவித்தல் வரை மக்கள் உள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  இந்த அறிவிப்பு குறித்து  தெரிவிக்கையில், “திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம், கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள் நுழைவதும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி, திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம் ஆகியனவும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. எனினும் அவசியத் தேவை, தொழில் நிமித்தம் காரணமாக வெளியே செல்கின்றவர்கள் தங்களது அலுவலக அடையாள அட்டையை காண்பித்து பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  நேற்றைய தினம் கூட 244 குடும்பங்கள், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் பெரும்பாளானோர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே திருநெல்வேலி பாற்பண்ணை பிரதேசம் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டு, அபாய இடர் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது”  என்றார்.

 

https://www.ilakku.org/?p=45679

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அதிகரிக்கும் கொரோனா – வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வர்த்தகர் சங்கம் அறிவுறுத்தல் 

1-218-696x475.jpg
 17 Views

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்காணப்படும் நிலைமைகளை அடுத்து, வவுனியாவிலுள்ள வர்த்தகர்களை நடைமுறையிலுள்ள சுகாதார முறைகளை இறுக்கமாகவும் முழுமையாக பின்பற்றுமாறு வர்த்தகர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது . 

இது குறித்து வர்த்தகர் சங்கம் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து காணப்படும் நிலைமையை அடுத்து வவுனியா நகரிற்கு வரும் பொதுமக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

எதிர்வரும் தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் நன்மை கருதியும் தொற்றாளர்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களில் நடைமுறைகளிலுள்ள சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து கைகழுவி சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும்.

வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் சமூக இடைவெளிகளையும் பின்பற்றுமாறும் வாடிக்கையாளர்களை கைகழுவி வர்த்தக நிலையங்களுக்குள் அனுமதிக்குமாறும் நகரில் சுகாதாரத்துறையினர்  காவல்துறையினருடன்  இணைந்து வவுனியாவில் இடம்பெற்று வரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கு தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

மேலும் சமூகத்தில் ஏற்படவிருக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் முன்னர் இடம்பெற்றதைப்போன்று வவுனியா நகரை முடக்கல் நிலைமைகளுக்குள் கொண்டு செல்லாமல் இருப்பதற்கும்  ஒத்துழைப்புக்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா வைத்தியசாலை தாதியருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் குறித்த இளைஞருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியாவில் நேற்றுமுன்தினம் நான்கு தாதியர்கள் உட்பட 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=45853

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்று – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கல்வி பயிலும் கண்டியைச் சேர்ந்த மாணவியொருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைகழகம் திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் சுமார் 400 மாணவிகள் தங்கியுள்ள நிலையில், அங்கிருந்து வெளிச்செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குறித்த மாணவி கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.(15)

 

http://www.samakalam.com/கொரோனா-தொற்று-யாழ்ப்பாண/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழ மாணவர் விடுதி தற்காலிகமாக மூடல்

 
1-25.jpg
 31 Views

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைகழகம் திரும்பிய நிலையில் தனிமைப் படுத்தலிற்குள்ளாக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மாணவி கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியின் ஒருபகுதி சுமார் 400 மாணவர்களுடன் இன்றுமுதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளிச்செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களிற்கு கட்டம், கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 

https://www.ilakku.org/?p=46287

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மேலும் 129 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 88 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பாற்பண்ணை – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு ஆயிரத்து 3 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

129 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் 88 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இதன்மூலம் கடந்த 14 நாள்களில் யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/103460

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

 
1-101-696x387.jpg
 21 Views

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக  அரசாங்கத் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மேலும் நால்வர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கொரோனாத்தொற்றினால் இதுவரையில் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 95 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்றாலும் இது மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்தமையை சுட்டிக்காட்டிய அவர், அது மற்றொரு அலையின் அவசரநிலை என கருத முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் தொற்றுகள் பதிவாகியிருப்பதே ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

https://www.ilakku.org/?p=47261

 
 
 
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.