Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்களுக்கு டெல்டா?

கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், டெல்டா தொற்றானது வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களைப் போன்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவக் கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://athavannews.com/2021/1231016

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

118365703 gettyimages 1232138888  இலங்கையில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.


 

 
மேலும் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பயன்பாட்டிலுள்ள அனைத்து கொவிட் தடுப்பூசிகளும் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு எதிராக செயற்படுகின்றன என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

டெல்டா கொரோனா வைரஷிற்கு எதிராக தடுப்பூசி போடுவது சிறந்த பாதுகாப்பாகும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை  தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


 
இதைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளில் கோவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களை மாத்திரம் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/sri-lanka-surpasses-300000-total-coronavirus-cases/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மேலும் மூவர் கொவிட் தொற்றால் மரணம்!

கொரோனா தொற்றினால் இன்று (29) வியாழக்கிழமை மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் இன்று நண்பகல் உயிரிழந்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்வடைந்துள்ளது.
 

https://newuthayan.com/யாழில்-மேலும்-மூவர்-கொவி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்

வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர் கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர்.

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் இன்றுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 284 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸையாவது பெற்றுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 62.09 சதவீதமாகும்.

vaccine.JPG

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் 67.54 சதவீதமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். அடுத்தபடியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 63.70 சதவீதமானோர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்கள் முறையே 3,4,5ஆம் இடங்களில் உள்ளன.

 

https://www.virakesari.lk/article/110621

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி பெற்றதற்கான அட்டையை நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் கைவசம் வைத்திருப்பது கட்டாயம்!

நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையை கைவசம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை நிராகரிப்போர் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக எந்த ஒரு நபரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அட்டையை தம்வசம் வைத்திருப்பது மிக முக்கியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாது நிராகரிப்போர் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிசாருக்கு அறியத்தருமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

 

https://newuthayan.com/தடுப்பூசி-பெற்றதற்கான-அட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று

IMG 20210805 102548 மன்னாரில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று

 

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளோடு அவசர கலந்துரையாடல் ஒன்றை மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் நடத்தியுள்ளார்.


 

 
இந்தக் கலந்துரையாடலில் மன்னர் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை நகர சபை பிரதிநிதிகள், வலய கல்வி அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ருந்தனர்.

இந்த கூட்டத்தில் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல்  கருத்து தெரிவிக்கையில்

“மன்னார் மாவட்டத்தில் அனைவரினதும்  ஒத்துழைப்போடு கொரோனா தொற்றினை  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் தற்போது மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று  சடுதியாக உயர்ந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இதனால்  பொதுமக்கள் மீண்டும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.


 
துறை சார்ந்த அதிகாரிகள் இது விடயமாக கவனம் செலுத்த வேண்டும் என்றும்  குறிப்பாக பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டு அதற்குரிய தண்டனைகளை விதிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.  முக கவசங்களை உரிய முறையில் அணிதல் தொற்று நீக்கிகளால் கைகளை கழுவுவது  போன்ற செயற்பாடுகள் தொடர்ந்து அவதானிக்கப்படவுள்ளது.

மேலும் பொது போக்குவரத்துகளில் இருக்கைகளின் அளவுக்கு மாத்திரமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்து பொறுப்பானவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக பிரதேச சபை, நகர சபையினர் அதிகூடிய கவனம் எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/rising-infections-in-manar/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் தொற்றாளர்களில், 75 வீதமானவர்களுக்கு டெல்டா வைரஸ்!

August 6, 2021
spacer.png

 

கொழும்பு நகர எல்லைக்குள் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுள் 75 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.

ஜூலை மாத ஆரம்பத்தில் 19.3% டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதிலும் அது தற்போது 75% ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/2021/164258

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்டா அதிகரிப்பு :வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்- பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு

டெல்டா அதிகரிப்பு :வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்- பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு

பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 


 
இலங்கையில், டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வருவதால் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம், ஒவ்வொரு நபருக்கும் நோய் தாக்கும் அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 1.5 சதவீதம் பேர் இறக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

+அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.

+திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் பிற பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்

+பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

+அறை, அரங்குகள், லிஃப்ட், வாகனங்கள் போன்ற மூடப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளாதீர்கள்.

+அவ்வப்போது கைகளை சவற்காரமிட்டு கழுவவும்

+இரண்டு மீட்டருக்கு மேல் சமூக இடைவெளி பின்பற்றவேண்டும்

+நோய் தொற்று அறிகுறி இருந்தால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

 

 

https://www.ilakku.org/dont-get-uot-of-the-house-government-warns-public/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

டெல்டா அதிகரிப்பு :வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்- பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு

டெல்டா அதிகரிப்பு :வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்- பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு

பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

 

பானையை ஆற்றிலை போட்டு
பாணி குடிச்சு சேக்கஸ் காட்டி  சுத்துமாத்து விடாமல் ஒழுங்காய் தடுப்பூசிகளையும் ஏற்றி மருத்துவ உபகரணங்களையும் தயார் நிலையிலை வைத்திருந்தால் ஏனிந்த மீண்டுமொரு அவலம்?
 

Bild

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பிறந்து ஒரு நாளேயான பச்சிளங் குழந்தைக்கும் தொற்று

corona ch யாழில் பிறந்து ஒரு நாளேயான பச்சிளங் குழந்தைக்கும் தொற்று

 

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் பிறந்த குழந்தைக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 
குழந்தையும் தாயும் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் குழந்தைக்குப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டிருந்தது எனவும், அதன்போதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் வைத்தியசாலை கொரோனா பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/infection-of-a-one-day-old-baby-born-in-jaffna/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனையும் கடந்தது!

கொவிட்-19 தொற்றுக்கு எதிராக சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மில்லியனையும் கடந்துள்ளது.

அதன்படி சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர்களின் தொகை நாட்டில் 2,061,775 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நேற்றைய தினம் மாத்திரம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 153,678 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்று மொத்தமாக 248,656 நபர்களகுக்கு தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் 23,135 நபர்கள் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோயைும் 1,021 நப்கள் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.

பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 711 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் 75 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

995 நபர்களுக்கு மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, மொத்தமாக 2,938,568 தனிநபர்கள் இலங்கையில் கொவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/110960

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் சுவாமிகள் இருவர் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் சுவாமிகள் இருவர், 45 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி இ.உதயகுமார் இதை தெரிவித்தார்.இந்நிலையில் மிஷன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மாமாங்கம் பகுதியில் 21 தொற்றாளர்களும், புளியந்தீவு பகுதியில் 09 தொற்றாளர்களும், நாவற்குடா கிழக்குப் பகுதியில் 12 தொற்றாளர்களும், மஞ்சந்தொடுவாய் பகுதியில் 06 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி இ.உதயகுமார் தெரிவித்தார்.இந்நிலையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.(15)

http://www.samakalam.com/மட்டக்களப்பு-இராமகிருஷ்/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதனை அடுத்தே சுகாதார பிரிவினர் அவருடன் பழகியவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர். இதேவேளை வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதனின் பிரியாவிடை வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.அதில் தற்போதைய பிரதம செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அத்துடன் நிர்வாக தேவைகள் நிமித்தம் வடக்கு மாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள். திணைக்கள அதிகாரிகள் பலரும் பிரதம செயலாளருடன் தொடர்பினை கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)

 

http://www.samakalam.com/வடக்கு-மாகாண-பிரதம-செயலா/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் 156 பேர் உயிரிழப்பு; இலங்கையில் உச்சம் தொடும் கொரோனா தொற்று

 

deaths 0 ஒரே நாளில் 156 பேர் உயிரிழப்பு; இலங்கையில் உச்சம் தொடும் கொரோனா தொற்றுஇலங்கையில் ஒரே நாளில் கொரோனாத் தொற்றினால் மேலும் 156 பேர் மரணமாகினர்.

நேற்றைய தினம் இவர்கள் மரணமடைந்ததாக சுகாதாரத் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்தது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 5,620ஆக உயர்ந்துள்ளது.

 

https://www.ilakku.org/156-deaths-in-a-single-day-corona-infection-peaking-in-srilanka/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் கடந்த 48 மணி நேரத்தில் 1354 தொற்றுக்கள்:09 மரணங்கள். 25ஆயிரத்தை தாண்டியது தொற்று:432 மரணம் என்கிறார் மாகாண பணிப்பாளர்.

By Shana
 

கிழக்குமாகாணத்தில் வழமைக்குமாறாக கடந்த 48 மணிநேரத்தில் 1354தொற்றுகளும் ,09 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம்கூறிநிற்கிறது என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் கண்டிராத கொரோனாத் தொற்றுக்களின் பதிவு கடந்த இருதினங்களாக இடம்பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் 684 தொற்றுக்கள், நேற்றைய தினம் 670 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. இது பாரிய ஆத்துக்கான சமிக்ஞையாகக்கூட எடுக்கலாம் .


நேற்றைய தினம் ஏற்பட்ட 670 தொற்றுக்களில் அம்பாறை சுகாதாரப்பிரிவில் 261 தொற்றுக்களும், கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் 150தொற்றுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 08 தொற்றுக்கள் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 251தொற்றுக்களும் , ஏற்பட்டுள்ளன.

அம்பாறைப்பிராந்தியத்தில் அதிகூடிய 62தொற்றுக்கள், தெஹியத்தகண்டியவிலும் 56 தொற்றுக்கள் உகனைப்பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள அதேசமயம் கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 15தொற்றுக்கள் நிந்தவூர்ப்பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளன.

கிழக்குமாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 25ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றுவரை 25570தொற்றுகளும் , 432மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

இதுவரை அம்பாறை பிராந்தியத்தில் 03 டெல்டா நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் சிகிச்சையில் நலமாகவே தற்சமயம் உள்ளனர் .

கிழக்குமாகாணத்திற்கென கிடைக்கப்பெற்ற 9லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 8லட்சத்து 26ஆயிரத்து 434தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன. அதாவது 80வீதமானோருக்கு முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுவிட்டன.

கடந்தசில நாட்களாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் சடுதியாக ஏற்பட்டுள்ள சடுதியான நோயாளர் மற்றும் மரணங்களின் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டுவருவதைக்காணக்கூடியதாயுள்ளது.,

கடந்தவாரங்களில் கிழக்கில் 200-250நோயாளர்களும் 2-3 மரணங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் தற்போது அத்தொகை மும்மடங்காக மாறிவருகிறது. இது கிழக்கு மாகாணத்திற்கு அபாய அறிவிப்பாக கருதமுடியும்.

இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் ,சமூக இடைவெளிகளை பேணுதல் ,முகக்கவசம் அணிதல் இகைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் சுகாதாரநடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப்பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதாரநடைமுறைகளை இறுக்கமாகக்கடைப்பிடிக்க வேண்டும்.என்றார்.

http://www.battinews.com/2021/08/48-1354-09-25-432.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் 500ஜ அண்மிக்கும் மரணங்கள்:அம்பாறை ஆபத்தில்.

கிழக்குமாகாணத்தில் மரணங்களின் எண்ணிக்கை 500ஜ அண்மிக்கிறது. நேற்றுவரை மரணங்களின் எண்ணிக்கை 447 ஆகியுள்ளது. மூன்றாம் அலையில் மட்டும் 421 மரணங்கள் சம்பவித்துள்ளன என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கில் தொற்றுக்களின் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றுவரை 27201தொற்றுகளும் 421மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கிழக்குமாகாணத்தில் வழமைக்குமாறாக கடந்த 24 மணிநேரத்தில் 618தொற்றுகளும் , 07மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம்கூறிநிற்கிறது .

கிழக்கு மாகாணத்தில் இதுவரைகாலமும் கண்டிராத கொரோனாத் தொற்றுக்களின் பதிவு கடந்த இருதினங்களாக இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் 618 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. இது பாரிய ஆத்துக்கான சமிக்ஞையாகக்கூட எடுக்கலாம் . நேற்றைய தினம் ஏற்பட்ட 618 தொற்றுக்களில் அம்பாறை சுகாதாரப்பிரிவில் 317தொற்றுக்களும் ,கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் 79தொற்றுக்களும் ,திருகோணமலை மாவட்டத்தில் 07தொற்றுக்களும் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் 215தொற்றுக்களும் ஏற்பட்டுள்ளன.

அம்பாறை ஆபத்தில்..

கிழக்கில் அண்மைக்காலமாக அம்பாறைப்பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த இருநாட்களில் 200ஜத்தாண்டிய தொற்றுக்கள் நேற்று அவ்வெண்ணிக்கை 317ஆக உய்ர்ந்துள்ளது.

அம்பாறைப்பிராந்தியத்தில் அதிகூடிய 102 தொற்றுக்கள் தெஹியத்தகண்டியவிலும் ,57 தொற்றுக்கள் உகனைப்பிரதேசத்திலும் 56அம்பாறை நகரப்பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள அதேசமயம் கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 19தொற்றுக்கள் பொத்துவில் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளன.

இதுவரை அம்பாறை பிராந்தியத்தில் 03 டெல்டா நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் சிகிச்சையில் நலமாகவே தற்சமயம் உள்ளனர் .

கிழக்குமாகாணத்திற்கென கிடைக்கப்பெற்ற 9லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 8லட்சத்து 51ஆயிரத்து 664தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன. அதாவது 80வீதமானோருக்கு முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுவிட்டன.
 

 

https://www.meenagam.com/கிழக்கில்-500ஜ-அண்மிக்கும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இருக்கும் கொரோனா நோயாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொரோனாவால்... யாழ். மாவட்டத்தில் 185 பேர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவரும் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185ஆக உயர்வடைந்துள்ளது.-

https://athavannews.com/2021/1234942

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் 171 பேர் உயிரிழப்பு; நாளாந்தம் உச்சம் தொடும் பலியெடுப்பு

August 18, 2021

 

Corona Dead 8 ஒரே நாளில் 171 பேர் உயிரிழப்பு; நாளாந்தம் உச்சம் தொடும் பலியெடுப்பு

 

 

இலங்கையில் மேலும் 171 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளனர். இதுவே இதுவரை ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கையாகும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த மரணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் உயிரிழந்த 171 பேரில் 102 ஆண்களும், 69 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதில் ஆண்கள் இருவர் 30 வயதுக்குட்பட்டவர். 23 ஆண்கள், 12 பெண்கள் என 35 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 134 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 77 ஆண்களும், 57 பெண்களும் அடங்குகின்றனர்.

https://www.ilakku.org/171-deaths-in-a-single-day/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவன் அருள் இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட 26 பேருக்கு தொற்று

August 22, 2021
 

spacer.png

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்ற நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் கடமையாற்றுபவர்கள் 26 பேர் உள்ளடங்களாக மாவட்டத்தில்  நேற்றைய தினம்  சனிக்கிழமை (21) மாலை 46 கொரோனா தொற்றாளர்கள்  புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை  (22) காலை விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை மேலும் 46 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். -இவர்களில் 26 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் கடமையாற்றுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

-ஏனையவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, முருங்கன் வைத்தியசாலை, அடம்பன் வைத்தியசாலை, பேசாலை வைத்தியசாலை, விடத்தல் தீவு வைத்தியசாலை, மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இம் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 399 கொரோனா தொற்றாளர்களும், இவ்வருடம் மாத்திரம் 1423 தொற்றாளர்களும்,மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1440 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது வரை 13 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
 

https://globaltamilnews.net/2021/164945

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 3 இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா – 7 ஆயிரத்து 366 பேர் மரணம்!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 23 ஆயிரத்து 390 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 59 ஆயிரத்து 244 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 183 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

107 ஆண்களும் 76 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்துற 366 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1235614

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுவில் ஒரே நாளில் 10 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு - வைத்தியர் நாகலிங்கம் மயூரன்

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் இதுரை உயிரிழந்தோர் 182 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  2 பேரும், செங்கலடி, ஏறாவூர், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 3 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் உட்பட 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளனர்.

29.jpg

அதேவேளை களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 53 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 52 பேருக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேருக்கும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேருக்கும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர் உட்டபட 250 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.

எனவே நாளாந்தம் கொரோனா தொற்றாளர் வீதம் அதிகரித்து செல்வதுடன் ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே மக்கள் வீட்டை விட்டு வெளியேவரவேண்டாம் தொடர்ந்து சுகாதார வழிமுறைகளை பேணி நடப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என அவர் தெரிவித்தார்.
 

https://www.virakesari.lk/article/111865

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

கொரோனாவால் மேலும் 194 பேர் உயிரிழப்பு – புதிதாக 4 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 94 ஆயிரத்து 355 அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 44 ஆயிரத்து 381 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 42 ஆயிரத்து 608 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை,  இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 194 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

91 ஆண்களும் 103 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 560ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1235801

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா மரணங்கள் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பியவா் கைது

August 24, 2021
 

 

கொரோனா மரணங்கள் தொடர்பில் போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இடம்பெற்ற கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை இலங்கையில் இடம்பெற்றதாக போலியான தகவல்களை அவர் பதிவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. .

களுபோவில வைத்தியசாலையில் கொரோனா மரணங்களினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளதாக நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டு பின்னா் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

 

https://globaltamilnews.net/2021/165000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இறுதியாக மரணித்தவர்களின் முழுமையான விபரம்

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் நா.மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மாவட்டத்தில் நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. முதலாவது தடுப்பூசி 92.41 வீதமானவை ஏற்றப்பட்டுள்ளதுடன் அதில் ஆக குறைந்தளவு தடுப்பூசி 78.84 வீதம் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் நேற்று முன்தினம், இரண்டாவது தடுப்பூசி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றுவரை 27.33 வீதமான தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை இராணுவத்தினரும் வீடு வீடாக சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆகவே மக்கள், தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து, அநாவசியமாக வீடுகளை விட்டு வெளியேறுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1236322

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஒருநாள் உயிரிழப்பு 209ஐ தொட்டது.

August 26, 2021

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பிலான 209 உயிரிழப்புகள் இன்று ஏற்பட்டதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், கொரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து முதற் தடவையாக நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் தொடர்பிலான உயிரிழப்புகள் 200ஐ கடந்துள்ளன.

இதேவேளை, இதனுடன் இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 8,000ஐத் தாண்டி, 8,157ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 108 ஆண்களும், 101 பெண்களும் என்ற நிலையில் 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் எவரும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டோர் 46 பேர் என்பதுடன், ஏனையோர் 60 மற்றும் அதற்கு மேற்பட்டோர் 163 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2021/165081

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.