Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

அட நீங்களும் இருக்கிறீங்களே? நேர பேசலாமே? முள்ளந்தண்டென்ன Teflon ஆ😂?

நான் குசா அண்ணாவிற்கு எழுதிய பதில் உங்களுக்கு ஏன் சுடுகிறது? மடியில் கனமா??😜 சும்மா பகிடிக்கு!!

சரி உங்கள் துறை சார்ந்த கேள்வி ஒன்று!  D Dimmer value > 0.5 ஆக இருந்தால் தடுப்பூசி போடுவதில் ஏதாவது பிரச்சனை வருமா??

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல பெருமாள் , உங்களால் மட்டும் எப்படி முடியுது☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Eppothum Thamizhan said:

நான் குசா அண்ணாவிற்கு எழுதிய பதில் உங்களுக்கு ஏன் சுடுகிறது? மடியில் கனமா??😜 சும்மா பகிடிக்கு!!

சரி உங்கள் துறை சார்ந்த கேள்வி ஒன்று!  D Dimmer value > 0.5 ஆக இருந்தால் தடுப்பூசி போடுவதில் ஏதாவது பிரச்சனை வருமா??

டி டைமர் 0.5 ug/ml இற்கு மேலாக இருந்தால் உடலில் இரத்தக் கட்டி உருவாகி உடைக்கப் பட்டிருக்கிறது என்று அர்த்தம். சில காரணங்களால் டி டைமர் இரத்தக் கட்டியில்லாமலே அதிகரிக்கலாம் (கர்ப்பம், சில பாரிய சத்திர சிகிச்சைகளின் பின்னான நிலை, அதிக புகைப் பழக்கம் என்பன அவற்றுள் சில!).

உங்கள் கேள்விக்கு பதில்: குடும்ப வைத்தியர் இருந்தால் அல்லது அணுகத் தகுந்த வேறு வைத்தியர்கள் யாரும் இருந்தால் டி டைமர் அளவோடு நபருக்குள்ள வேறு மருத்துவப் பிரச்சினைகளையும் சொல்ல வேண்டும். இத்தகவல்களை வைத்து வைத்தியர் ஏதாவது ஆபத்து இருக்கிறதா என எதிர்வு கூர முடியும் அல்லது உகந்த கோவிட் தடுப்பூசியைப் பரிந்துரைக்க முடியும்.

உதாரணமாக, இரத்தக் கட்டி அரிதாக ஏற்படுத்தும் தடுப்பூசிகளைத் தவிர்த்து அந்த பக்க விளைவில்லாத ஊசியைப் பரிந்துரைப்பர்.   

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் கொரோனா தடுப்பூசியை வழங்க இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரை

18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் கொரோனா தடுப்பூசியை வழங்க இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பைசர், மொடர்னா, அல்லது அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 வது மருந்தாக வழங்க பரிந்துரைத்தது.இதேவேளை மத்திய கிழக்கில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சினோபோர்ம் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறைவான செயற்திறன் அளிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

இந்நிலையில் 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு எந்த தீவிர நோய்களாலும் பாதிக்கப்படாதவர்களுக்கு செலுத்த சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்தப்படலாம் என்றும் இந்த வயது பிரிவில் இருப்பவர்களுக்கு தீவிர நோய்கள் இருந்தால், அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பைசர், மொடர்னா அல்லது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பரிந்துரைக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்தார் (15)
 

http://www.samakalam.com/18-முதல்-60-வயதிற்குட்பட்டவர/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளால் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்

இலங்கையில் 10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையில் இதுவரை 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அதன்படி இதுவரை இலங்கையில் மொத்தமாக 1 கோடியே 2 இலட்சத்து 11 ஆயிரத்து 537 பேருக்கு தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதிற்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 87 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம் இலங்கையில் இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு குறைந்தது தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் சுமார் 100 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.

நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 20-30 வயதிற்குட்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குறைந்தது தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.

https://athavannews.com/2021/1238609

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார்.எமது வைத்திய சாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனோ நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 பேர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 21 பேர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பிரேத அறையில் 6 சடலங்களையே குளிரூட்டியில் வைத்து பாதுகாக்க கூடிய வசதிகள் உள்ள நிலையில் இன்றைய நிலவரப்படி 11 சடலங்கள் காணப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் மரணங்கள் ஏற்பட்டால் சடலங்களை பாதுகாப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.யாழில் ஒரு மின் தகன மயானம் உள்ளது. அதிலையே யாழ். மாவட்டத்தில் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருவதனாலையே சடலங்களை எரியூட்டுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. தாமதங்களை கருத்தில் கொண்டு வெளி மாகாணத்தில் உள்ள மின் தகன மயானங்களுக்கு சடலங்களை கொண்டு சென்று எரியூட்டுவதற்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

20 பேர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்துள்ளனர். கொரோனோ தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மின் தகனம் செய்வதற்கு உள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக வைத்தியசாலை பிரேத அறையில் சடலங்கள் தேங்கி காணப்பட்டுகின்றன.பிரேத அறையில் 6 சடலங்களையே குளிரூட்டியில் வைத்து பாதுகாக்க கூடிய வசதிகள் உள்ள நிலையில் இன்றைய நிலவரப்படி 11 சடலங்கள் காணப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் மரணங்கள் ஏற்பட்டால் சடலங்களை பாதுகாப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

இதேவேளை தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகர் , வெளிமாகாணங்களில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தால் , அதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றை தாம் பொறுப்பேற்பதாக முன் வந்துள்ளார். அதேவேளை , உயிரிழந்தவர் வறுமை கோட்டிற்கு உட்பட்டவர் எனில் மின் தகன செலவு உள்ளடங்கலாக அனைத்து செலவுகளையும் தாம் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவற்றை நாம் நோயாளர் நலம்புரி சங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதேவேளை வீட்டில் உயிரிழந்தவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியானால் உறவினர்கள் வைத்தியசாலைக்கு அறிவித்தால் , அது தொடர்பிலான நடவடிக்கைகளையும் வைத்தியசாலை பொறுப்பெடுக்கும்.

அவர்கள் வசதி குறைந்தவர்கள் எனில் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஊடாக , தியாகி அறக்கொடையை தொடர்பு கொள்ள முடியும் அவர்கள் அனைத்து செலவீனங்களை பொறுப்பேற்றுக்கொள்வார்கள். எனவே மக்கள் தமக்கு சளி , தடிமன் , காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பயமின்றி வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.அத்துடன் வைத்திய தேவைகள் உள்ளிட்ட தேவைகளுக்கு வைத்தியசாலையின் பொது தொலைபேசி இலக்கங்களான 0212263261 மற்றும் 0212263262 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என தெரிவித்தார்.(15)
 

http://www.samakalam.com/பருத்தித்துறை-ஆதார-வைத்-4/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து திருமணம் – 13 சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று

யாழ். காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூற்றுக்கும் அதிகமானோர் பங்கு கொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை களில் குறித்த தொற்றாளர்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதாரத் தரப்பினர் உறுதிப்படுத்தினர்.

காரைநகரைச் சேர்ந்த 81 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 05, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15வயதுடைய 13 சிறார்களும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தி அவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த முற்பட்டவேளை வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர் உட்பட்டவர்களை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் 03 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)

http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-காரைநகரில்-ஊ/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இறுதியாக மரணித்தவர்களின் முழுமையான விபரம்

யாழ்ப்பாணத்தில் கடந்த 10 நாளில் 62 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால்  மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 62 பேர்  கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இணுவிலைச் சேர்ந்த (25 வயது) பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த (60 வயது) பெண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த (78 வயது) ஆண் ஒருவரும் போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.

மேலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த (83 வயது) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த (81 வயது) பெண் ஒருவரும்  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (82 வயது) பெண் ஒருவரும் வீட்டில் உயிரிழந்த நிலையில்  கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 322ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1238769

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 3 கட்டங்களாக தடுப்பூசி வழங்க திட்டம்!

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனத்தின் உறுப்பினர் வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா இதனை தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக நாற்பட்ட நோய்கள் கொண்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறுவர்களுக்காக பைசர் தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2021/1238845

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் வாரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என எதிர்பார்ப்பு -அமைச்சர் ரமேஷ் பத்திரண

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் கொரோனா பணிக்குழு பரிசீலனை செய்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது எதிர்வரும்வாரம் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.(15)
 

http://www.samakalam.com/எதிர்வரும்-வாரம்-தனிமைப்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்

September 15, 2021

spacer.png

நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இந்த மாதம் 21ஆம் திகதி அதிகாலை வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண தொிவித்துள்ளாா்.

இந்த உத்தரவால் நாட்டில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ரடங்கு உத்தரவு தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் உரிய முறையில் அறிவிக்கப்படும் எனவும் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது குறித்து, கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணியின் தீர்மானத்துக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

நேற்றையதினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பெயரளவில்
இருப்பதுடன், இதனால் சிறிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர் என,ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

https://globaltamilnews.net/2021/166021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் நேற்று 159 பேருக்கு தொற்று கண்டறிவு – 7 பேர் உயிரிழப்பு

September 17, 2021

 

வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் நேற்று வியாழக்கிழமை  தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளமை சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை மாகாணத்தில் 159 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

செப்ரெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்த நிலையில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் வியாழக்கிழமை  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 61 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 39 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 18 தொற்றாளர்களும் மன்னாரில் 5 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 33 ஆயிரத்து 953 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 649 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 711 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 366 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

https://globaltamilnews.net/2021/166132

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 – 30 வயதிற்கு உட்பட்டோருக்கு செவ்வாய்க்கிழமை முதல் தடுப்பூசி

September 19, 2021
spacer.png

 

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட்-19 தடுப்பூசி மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் 20 தொடக்கம் 30 வயதிற்கு உள்பட்ட அனைவருக்கும், நாளைமறுதினம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி செவ்வாய் கிழமை முதல் வழங்கப்பட உள்ளது என  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விவரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியினால் வெளியிடப்படும். அவ்வாறு அறிவிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும்.

20 தொடக்கம் 30 வயதிற்கு உள்பட்டவர்கள் அனைவரும் தமது அடையாள அட்டை போன்ற உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைகளிலும் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 2ஆம் ஆம் திகதி சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.

 

https://globaltamilnews.net/2021/166208

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசிகள் ஆண்மைக்குறைவு கருவள பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற கட்டுக்கதைகள் காரணமாக கொழும்பில் 20-30 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகின்றனர்- பேராசிரியர் நீலிகா

 

vaction11.png

தடுப்பூசிகள் ஆண்மைக்குறைவு கருவள பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற கட்டுக்கதைகள் காரணமாக கொழும்பில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகின்றனர் போல தெரிகின்றது இது முற்றிலும் தவறான கருத்து என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் காரணமாக ஆண்மைக்குறைவு ஏற்படலாம் என சிறிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் தடுப்பூசிகளால் இத்தகைய ஆபத்துக்கள் உள்ளன என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய சிலர் வெளிநாட்டில் குடியேறும் திட்டம் காரணமாகவும் வெளிநாட்டிற்கு செல்லும் திட்டம் காரணமாகவும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வில்லை அவர்கள் சில மருந்துகளிற்காக காத்திருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்ள்ளார்.

வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது உறுதியாகிவிட்டால் மாத்திரமே அவ்வாறு காத்திருப்பது உகந்தவிடயம் வெளிநாட்டு பயணம் உறுதியாகாவிட்டால் தடுப்பூசிகளை தவிர்த்துக்கொள்வது புத்திசாலித்தனமான விடயமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.battinews.com/2021/09/20-30_19.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் கொண்டாட்டம் – யாழில் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

September 20, 2021
 

 

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அவற்றை மீறி யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்

திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரும், ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார பிரிவினரும் , யாழ்ப்பாண காவற்துறையினரும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

https://globaltamilnews.net/2021/166246

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

இலங்கையில் மேலும் 93 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

இலங்கையில் மேலும் 93 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு குறைவான 24 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 68 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 6 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 518 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 93 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 60 ஆயிரத்து 698 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

https://athavannews.com/2021/1240286

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

, தொற்றுக்கு உள்ளான 60 ஆயிரத்து 698 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

60 ஆயிரம் மக்கள் என்பது இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு மிக மிக அதிகமே??

பேராபத்தான நிலை இது 😭

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர மாணவர்களுக்கு விரைவில் பைஷர் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: கல்வியமைச்சு

 
Dinesh-Gunawardena-scaled-1-300x206.jpg
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பைஷர் தடுப்பூசியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து கல்வி அமைச்சுக்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் இது தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடல்கள் தொடங்கியுள்ளன என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பாடலி சம்பிக்க ரணவக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முதல் கட்டமாக உயர்தர மாணவர்களுக்கு பைஷர் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 

https://thinakkural.lk/article/138670

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

உயர்தர மாணவர்களுக்கு விரைவில் பைஷர் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: கல்வியமைச்சு

 
Dinesh-Gunawardena-scaled-1-300x206.jpg
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பைஷர் தடுப்பூசியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதற்காக இவர் தடுப்பூசியின்  பெயரை குறிப்பிடுகிறார்???
உசத்தி என்று  சொல்லவாறாரா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக  மன்னார், எருக்கலம்பிட்டி பெண்கள் பாடசாலையில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சினோபாம் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சினோபாம் தடுப்பூசியானது 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை எவ்வித தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் குறித்த சினோபாம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, வவுனியாவிலும் 20 தொடக்கம் 30 வரையானவர்களிற்கான கொரானா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐந்து தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மரைக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவில் உள்ளவர்களிற்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு, கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதற்கிடையில், யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 வயது  தொடக்கம் 29 வயதிற்கு உட்பட்டவர்களிற்க்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள், இன்று காலை 8 மணிமுதல் அம்பன் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1240449

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது

September 28, 2021

Sri Lanka extends Covid-19 lockdown till September 6 amid spike in death  rate | Travel - Hindustan Times

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,  இது வரையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 513,609 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 455,344 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் எனினும் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம்   மக்கள் தொகையில் 52.3 சதவீதமானோருக்கு தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு   தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக  அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 

https://www.ilakku.org/the-number-of-corona-deaths-in-sri-lanka-has-increased-to-12731/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

October 1, 2021

spacer.png

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்  பிரிவில் பரிந்துரைக்கு அமைய 12 வயது தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  12 வயது  தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட நீண்ட கால நோய் உடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பைசர்  தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் வைத்தியர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில் குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

https://globaltamilnews.net/2021/166678

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் 12 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 59ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 22 ஆண்களும் 18 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2021/1242700

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவு

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.போலியான அட்டையை தயாரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் முழுமையான பாதுகாப்புடன் குறித்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைவாக, முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, வௌிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்காக குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.(15)

 

http://www.samakalam.com/முழுமையாக-தடுப்பூசி-ஏற்ற/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு மிக முக்கிய தகவல்!

ShanaOctober 19, 2021
 

AVvXsEjL5Vy3VsZVDRoeFLEYafxBbSOcGRxGNVhZ8OcLyy9ilxMMNlhtU6XRSQuztMenhCN8xiTNIqgytjJ19i4se1FPHRqj_LqP6A6bkS8fJ5NQwu56BoqFxVIIqZw9RvaGjHp1doHDf5ESEBxoAv4uoAmtWDH87hLNLnbbT2fC8hS5yA4kUAvOf_9Sn0vCMA=s16000

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கல ரன்தெனிய தெரிவித்தார்.

இதேவேளை, குவைட், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்காக மூன்றாவது தடுப்பூசியாகவும் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

சீனாவின் தடுப்பூசிகளான சினோபார்ம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் மூன்றாவதாக பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்டு தமது நாட்டுக்குள் வருமாறு ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

http://www.battinews.com/2021/10/blog-post_559.html

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.