Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • Replies 728
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: எச்சரிக்கும் மருத்துவர் கேதீஸ்வரன்

இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப் படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்தியாவில் தற்பொழுது கொரோனா நோயின் பரம்பல் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் இறப்புக்களும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப் படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

இவ்வாறு எமது நாட்டிற்குள் வருகை தருபவர்களை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் எமது நாட்டில் இந்த நோய் பரவுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும்.

எனவே இவ்வாறு யாராவது இரகசியமான முறையில் இந்தியாவிலிருந்து உங்கள் பிரதேசத்திற்கு புதிதாக வருகை தந்திருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக உங்கள் பிரதேசத்திற்குரிய கிராம சேவையாளர், சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறியத்தரவும்.

அல்லது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் 021 222 6666 என்ற இலக்கத்திற்கு அறியத்தரவும் என கூறினார்.

https://newuthayan.com/மீண்டும்-கொரோனா-பரவும்-அ/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றுக்குள்ளான 25 பேர் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 25 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 446 ஆக காணப்படுகின்றது.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் 756 கடற்படை அதிகாரிகள் உள்ளடங்குவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து தொள்ளாயிரத்து 47 ஆக காணப்படுகின்றது.

https://newuthayan.com/கொரோனா-தொற்றுக்குள்ளான-25/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1946 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 514 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், 1421 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-18-கரன-தறறளரகள-அடயளம/150-252119

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குணமடைந்தோர் எண்ணிக்கை 1500ஐ நெருங்கியது!

இலங்கையில் இதுவரை 1,472 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி இப்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 467 ஆக குறைந்துள்ளது.

இன்று (20) வெளியிடப்பட்ட தகவலின்படி புதிதாக 26 பேர் குணமடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/குணமடைந்தோர்-எண்ணிக்கை-1500/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

48 மணிநேரத்தில் தொற்றாளர் எவருமில்லை

கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை.

இதனை, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 1950 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனதுடன், அவர்களில் 1498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 441 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/48-மணநரததல-தறறளர-எவரமலல/150-252190

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சற்றுமுன் அறிவிப்பு; புதிதாக 40 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (23) இதுவரை 40 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 29 பேர் இந்தியாவிலிருந்தும், 11 பேர் அமெரிக்காவிலிருந்தும் அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 422 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,559 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/சற்றுமுன்-அறிவிப்பு-புத/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2020 at 13:46, உடையார் said:

இதனை, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

என்ன கொடுமைடா சரவணா ....
எல்லா நாட்டிலும் உயர் நிலை மருத்துவ வல்லுனர்களும் ,சுகாதார அமைச்சர்களும் தான் இந்த கருத்தை தெரிவிப்பார்கள் 
இந்த தரித்திரம் புடிச்ச நாட்டில் .....?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன கொடுமைடா சரவணா ....
எல்லா நாட்டிலும் உயர் நிலை மருத்துவ வல்லுனர்களும் ,சுகாதார அமைச்சர்களும் தான் இந்த கருத்தை தெரிவிப்பார்கள் 
இந்த தரித்திரம் புடிச்ச நாட்டில் .....?

😀இராணுவ மயமாக்கல்

ஸ்ரீலங்காவில் சமூகத்திலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட கொரோனா - சுகாதார அமைச்சர்

தற்போது கொவிட் 19 வைரஸ் இந்நாட்டு சமூகத்திலிருந்து முற்றாக அகற்றக்கூடியதாக உள்ளதாக சுகாதர அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் இதுவரை ஒரு லட்சம் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு ஆயத்தமாதல் மற்றும் பிரதிபலிப்பு நடவடிக்கைகளின் கீழ் தேசிய சுகாதார தொகுதியில் நோய் பரிசோதனை அளவை அதிகரிக்கும் நோக்கில் சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனைக்கமையவும் சுகாதார மற்றும் தேசிய வைத்திய சேவைகள் அமைச்சின் வேண்டுகோளின்படி திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அதி தொழில்நுட்ப மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், உபகரணங்களுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

corona-ws.png

விசேட நோய்களை கண்டறியும் மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் நேற்று(24) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

எம்மிடமுள்ள ஆய்வுகூடங்கள் மூலம் நாளொன்றுக்கு 300 பரிசோதனைகள் மாத்திரமே செய்யக்கூடியதாக இருந்தது. தேவையேற்படின் இந்த ஆய்வுகூடத்தில் நாளொன்றுக்கு 1000 பரிசோதனைகளையும் செய்ய முடியும்.

இச் சந்தர்ப்பத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுகொண்டமைக்காக முல்லேரியா வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது ஒரு இலட்சம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடையலாம். PCR பரிசோதனையை மேற்கொள்ள பல உபகரணங்களும், திரவங்களும் தேவையாகும்.

இந்த ஒரு உபகரணங்கள் கூட இல்லாமல் இப்பரிசோதனையை மேற்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தட்டுப்பாடின்றி PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் நோயாளிகளை அடையாளம் கண்டு சமூகத்திலிருந்து வேறுபடுத்தி இன்று கொவிட்-19 நோயை சமூகத்திலிருந்து முற்றாக அழிக்கக் கூடியதாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.ibctamil.com/srilanka/80/145802

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 2001 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (24) 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஏனைய மூவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறளர-எணணகக-2001-ஆக-உயரவ/150-252363

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தறறளரகளன-எணணகக-மலம-உயரவ/150-252398

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (27) இதுவரை 19 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,033 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட 19 பேரும் பங்களாதேஷில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 383 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,639 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இலங்கையில்-மேலும்-19-பேருக/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஜிந்துப்பிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தல்

கொழும்பு – ஜிந்துப்பிட்டி செல்லும் வீதி முடக்கப்பட்டு, 29 குடும்பங்களை சேர்நத 143 பேர் சுய தனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, கொழும்பு – ஜிந்துபிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையிலேயே அவர் இதை தெரிவித்துள்ளார்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மீண்டும் கொரோனா! மூடப்பட்டது ஜிந்துபிட்டி வீதி..!

625.300.560.350.160.300.053.800.450.160.90-2.jpg?189db0&189db0

 

கொழும்பு − ஜிந்துபிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில், வீட்டில் 14 நாள் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.

இங்கு 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

https://newuthayan.com/கொழும்பில்-மீண்டும்-கொரோ/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிறை கைதியுடன் பழகிய 174 பேருக்கு பிசிஆர் சோதனை!

pcr-exame.jpg?189db0&189db0

 

வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளியான கைதியுடன் பழகிய 174 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி இன்று (07) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இவர்களது முடிவுகள் இன்று மாலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://newuthayan.com/சிறை-கைதியுடன்-பழகிய-174-பேர/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

PicsArt_06-27-04.30.13.jpg?189db0&189db0

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் இன்று (08)அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 1967 பேர் குணமடைந்துள்ள நிலையில், 106 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2020-07-08_1.png?189db0&189db0
 
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மேலும் 56பேருக்கு கொரோனா

கந்தக்காடு பிரசேதத்தில் அமைந்துள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையத்தில்  56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் 450 பேரிருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இன்று (09) காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயல-மலம-56பரகக-கரன/150-252980

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றாளி பஸ்களில் பயணித்தார்!

1587360172-CTB-Bus-2.jpg?189db0&189db0

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆலோசகர் பஸ்களில் பயணித்துள்ளார் என்று தொற்று நோய் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

பஸ்களில் பயணித்த குறித்த ஆலோசகருடன் தொடர்புடையோரை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/கொரோனா-தொற்றாளி-பஸ்களில்/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா!

breakingcorona2-960x540.jpg?189db0&189db0

 

பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (10) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மையத்தில் இதுவரை 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

https://newuthayan.com/கந்தக்காடு-புனர்வாழ்வு-2/

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காற்றிலும் பரவுதாமே?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

காற்றிலும் பரவுதாமே?

ஆமா கவனமாக இருங்கள்

 

கந்தக்காடு மையத்தில் உள்ளவர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தல்

kandhakadu.jpg?189db0&189db0

பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களின் உறவினர்கள் 119 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த மையத்தில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக கடந்த மார்ச் முதல் ஜுலை மாதம் வரை வருகைதந்த உறவினர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

 

https://newuthayan.com/கந்தக்காடு-மையத்தில்-உள்/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காட்டில் சற்றுமுன் மேலும் 87 பேருக்கு கொரோன உறுதி!

பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (10) மாலை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மையத்தில் இன்று மட்டும் 283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை மாெத்தமாக 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/கந்தக்காட்டில்-சற்றுமுன/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மேலும் 7 பேர் தனிமைப்படுத்தல்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வந்த ஒருவருடன் பழகியோரே இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

முன்னதாக மாநகர சபை பகுதி மற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/யாழில்-மேலும்-7-பேர்-தனிமை/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்; இராணுவத் தளபதி

July 11, 2020

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 6000 இற்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதியளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/53655

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் கனடாவின் மிகப் பெரிய தொழில் எது? கோதுமை, கனோலா எண்ணெய் ஏற்றுமதி மரங்கள் மற்றும் காட்டுப் பொருட்கள் (forestry products) கனிமப் பொருளகள் (minerals) மாட்டிறைச்சி (beef) திராட்சை மது (wine) எஃகு (steel) இதில் எதுவுமே கனடாவின் மிகப் பெரிய தொழில் அன்று. இவை யாவும் பெரிய தொழில்கள்தான். ஆனால், கனடாவின் மிகப் பெரிய தொழில், வட ஆல்பர்டாவில் காடுகளை அழித்துத் தார் மண்ணிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்வது. கனடா, உலகின் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காம் இடம் வகிக்கிறது. வளைகுடா நாடுகளைப்போல, எண்ணெய்யை நம்பியே காலம் தள்ளும் நாடு இல்லை கனடா. ஆனால், அதன் பொருளாதாரத்தின் மிக முக்கிய அங்கம் எண்ணெய் ஏற்றுமதி – குறிப்பாக அதனுடைய அண்டை நாடான அமெரிக்காவிற்கு. இது என்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். முதலில், வளைகுடா நாடுகளைப் போல நிலம் மற்றும் கடலோரப் பகுதிகளில் கிணறுகள் மூலம் எண்ணெய் உற்பத்தி செய்த நாடு கனடா. வளைகுடா நாடுகள் போலல்லாமல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடான கனடா, தார் மண்ணிலிருந்து (tar sands or bitumen sands) கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. கனடாவிடம் சவுதி அரேபியாவைவிட அதிக எண்ணெய் வளம் இருப்பதை இந்தத் தார் மண் கண்டுபிடிப்பு நிலைநாட்டியது. அட, இது நல்ல விஷயமாச்சே, இதைப் பற்றி இந்த விஞ்ஞானத் திரித்தல் கட்டுரைத் தொடரில் ஏன் எழுத வேண்டும்? இதில் என்ன திரித்தல் இருக்கப் போகிறது?  இந்தக் கேள்விகளுக்கு விடையை எப்பொழுதும்போல, விஞ்ஞானத்திலிருந்து ஆரம்பிப்போம். முதல் கேள்வி, தார் மண் எப்படி உருவாகிறது? தொல்லெச்சப் பொருட்கள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்த மரங்கள், செடிகள், நீர் உயிர்கள் போன்றவை. இவை மடிந்தபின், நிலத்தில் கலந்து பல மில்லியன் ஆண்டுகள் சூடேறி நிலத்தடி அழுத்தம் சேர்ந்து இவ்வகை ஹைட்ரோகார்பன்களை இயற்கை பூமியடியில் உருவாக்குகிறது. மேலே சொன்ன விஷயம், கச்சா எண்ணெய்க்கும் பொருந்தும். வளைகுடா / டெக்ஸாஸ் பகுதி போலல்லாமல் ஏராளமான நீர்வளம் கொண்ட கனடாவிற்கும் உள்ள முக்கிய வித்தியாசம், நீர். இதனால், கனடாவின் கச்சா எண்ணெய் சொஞ்சம் சன்னமானது. (light crude.)   இந்த ஹைட்ரோகார்பன்கள், நீர் மூலம் ஆல்பர்டா மாநிலத்தின் நதி / ஏரி நீர் மூலம் கலந்து அதில் வாழும் நுண்ணுயிர்களுக்குத் தீனியாகிறது. மீதம் இருக்கும் கனமான ஹைட்ரோகார்பன்கள் மண்ணுடன் கலந்து, நதி / ஏரிக்கரை ஓரம், பல கோடி ஆண்டுகளாகக் கலந்துவிட்டன. இதுதான் தார் மண் என்று சொல்லப்படுகிறது. இந்த மண்மீது, மிகப் பெரிய காடுகள் வளர்ந்துவிட்டன. ஆல்பர்டா (Alberta) மாநிலத்தில், உலகின் 10% கச்சா எண்ணெய் உள்ளது. தார் மண் வளம், உலகிலேயே கனடாவில்தான் அதுவும் அல்பர்டாவில்தான் அதிகமாக உள்ளது இந்தத் தார் மண், பச்சை பசேலென அடர்த்தியான போரியல் (boreal) காடுகளுக்கு அடியில் (பெரும்பாலும் 200 முதல் 300 அடி) உள்ளது. ஏறக்குறைய 142,000 சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு இந்த வளம் உள்ளது. இந்தப் பரப்பளவு இங்கிலாந்து நாட்டைவிட அதிகமானது! அதபாஸ்கா, கோல்ட் லேக் மற்றும் பீஸ் ரிவர் (Athabasca, Cold Lake, Peace River) என்ற மூன்று மிகப் பெரிய தார் மண் பகுதிகள் வட ஆல்பர்டாவில் உள்ளது அடுத்து, இந்தத் தார் மண்ணை எண்ணெய் ஆக்குவதைப் பற்றிய சில கொடூர உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்: முதலில் மண்ணை வெளியே எடுக்க, மண்ணின் மேலே உள்ள பச்சைப் பசேல் காடுகள் அழிக்கப்பட வேண்டும். சுற்றியுள்ள நீர் நிலைகள், காலி செய்யப்பட வேண்டும். நதிகளைக் கூட திசை திருப்ப வேண்டும் – அப்பொழுதுதான் பெரிய பரப்பளவு மண்ணெடுக்கக் கிடைக்கும். இதனால் காட்டு மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் என்று பலவும் பாதிக்கப்படும். இந்த அமைப்பு சூழ்ந்துள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்படும். ஒரு நாளைக்குத் தார் மண்ணிலிருந்து எண்ணெய் எடுக்கத் தேவையான நீர், எட்மண்டன் (கனடாவின் 6 வது பெரிய நகரம்) மற்றும் கால்கரி (கனடாவின் 5 வது பெரிய நகரம்) நகரங்களின் அன்றாட நீர்த் தேவையைவிட அதிகம். உலகின் அதிக நீர்வளம் மிகுந்த நாடான கனடாவில் இது பிரச்சினை இல்லை. ஆனால், இது வேறு எந்த நாட்டில் சாத்தியம் என்று யோசித்துப் பாருங்கள்! நாளொன்றுக்கு 16,000 லிட்டர் டீசல் உறிஞ்சும் ராட்சச நீராவி  மண்வெட்டிகள் மண்ணை வெட்டி, போயிங் 747 விமானத்தைவிடப் பெரிய ராட்சச லாரிகளில் (இந்த லாரியின் விலை பல மில்லியன் டாலர்கள்) இந்த மண், எண்ணெயைப் பிரிக்கும் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த மண், மிக அதிக வெப்பத்தில் இயற்கை வாயு மற்றும் நீராவி கொண்டு வேகவைக்கப்படுகிறது. இப்படி வெப்பத்தைக்கொண்டு மண்ணிலிருந்து தார் பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்பட்ட தார், இதற்கென்ற பிரத்யேகமான சுத்திகரிப்பு ஆலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அடடா, வெங்கடேஷ் பட்டின் சமையல் குறிப்புபோல இருக்கிறதே என்று தோன்றும்! ஒரு நாட்டின் எண்ணெய்ச் சமையல் குறிப்பு இது! ஏறக்குறைய 20% எண்ணெயை மட்டுமே இவ்வாறு மேல்வாரியாக எடுக்க முடியும். மீதம் 80% பூமியின் 300 அடிக்குள் இருப்பதால், 538 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உயரழுத்த நீராவி பூமிக்குள் பாய்ச்சப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இளகிய தார், ராட்சச பம்புகள் மூலம் வெளியே எடுக்கப்படுகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தாரை வெளியே எடுத்த பின்பு பாக்கி இருக்கும் மண் சகதியில் ஏராளமான தீங்கு  விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்திருக்கும். இவற்றை என்ன செய்வது? இந்தப் பகுதியில் (மனிதனால் உருவாக்கப்பட்ட) மிகப் பெரிய செயற்கை குளங்களில் இறைக்கப்படுகிறது. (tail ponds.)  இந்த விஷ செயற்கைக் குளங்களால் இரண்டு ஆபத்துகள் உள்ளன. முதலாவது, இந்த குளங்களிலிருந்து நிலத்தடி நீருக்குள் விஷ ரசாயனங்கள் கலக்கின்றன. இரண்டாவது, மிருகங்கள் இந்த நீரைக்  குடித்தால் இறந்துவிடும். அவற்றைக் காப்பாற்றும் கனேடிய முறை அலாதியானது. ஒவ்வொரு மணி நேரமும் இரவில் ராட்சச பீரங்கி மூலம் குண்டுகள் வானில் வெடிக்கப்படும். சத்தத்தைக் கேட்டு விலங்குகள் ஓடிவிடுமாம்! காற்று மாசுபடுவது என்பது இவ்விஷயத்தில் ஒரு பங்கு என்றாலும், ரசாயனக் கழிவு மற்றும் இயற்கையை மனித பேராசைக்காக அழிப்பது மிகவும் பெரிய அநீதி. செயற்கை கோளிலிருந்து தெரியும் அளவிற்கு இங்கு பூமி அழிக்கப்பட்டுள்ளது. நாம் இங்கு சொல்வது பன்னாட்டு விண்வெளி நிலையம். (ISS)  இது ஆல்பர்டாவின் பொருளாதார பிரச்சினை மட்டுமல்லாமல் கனடாவின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் அவலமும் ஆகும். அரசியல்வாதிகள், 2019 தேர்தலில் பலவாறும் பேசி ஓட்டு வாங்கப் பார்த்தார்கள். சில கட்சிகள் 2030 –ல் தார் மண் தொழிலை மூடிவிடுவோம் என்று சும்மா பூச்சி காட்டுகிறார்கள். கூடவே, பசிபிக் பெருங்கடலுக்கு ஆல்பர்டாவிலிருந்து எண்ணெய்க் குழாய்த் திட்டம் என்று குழப்பி வருகிறார்கள். தார் எண்ணெய்த் தொழிற்சாலைகள்  ஆண்டொன்றிற்கு, 60 மெகா டன் காற்றை மாசுபடுத்தும் வாயுக்களை உமிழ்கிறது – இது கனடாவின் பங்கில் 8.5% ஆகும். கார்களைத் தவிர எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட தொழில் இப்படி மாசுபடுத்துவது இல்லை. ஒவ்வொரு பீப்பாய் தார் எண்ணெய்க்கும் மூன்று பீப்பாய் நல்ல தண்ணீர் தேவைப்படுகிறது. https://www.npr.org/2012/08/16/158907708/infographic-how-tar-sands-oil-is-produced விஞ்ஞானிகள் இந்த வகைச் சுரங்க வேலைகள் சுற்றுச்சூழலுக்கு நல்லதில்லை; அதனால், உடனே இவ்வகை தொழில்கள் மூட வழி வகுக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு அளித்து வந்துள்ளார்கள். ஆனால், சில சிக்கல்களால் விஞ்ஞானப் பரிந்துரையை அமுல்படுத்த முடியாமல் எல்லா தரப்பினரும் குட்டையைக் குழப்பி வருகிறார்கள். (உண்மையில் இவர்கள் குட்டையை குழப்பித்தான் லாபம் பார்ப்பவர்கள்.) இது ஒரு மிகப் பெரிய தொழில். இதில், வருடத்திற்கு கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படுகிறது. ஆல்பர்டாவின் பொருளாதாரம், எண்ணெய்யை நம்பிப் பழகிவிட்டது. இது ஒரு மிகப் பெரிய கனேடிய அரசியல் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துவிட்டது. க்ரீன் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் இந்த விஷயத்தில் பலவிதக் குழப்பங்களை வளர்ப்பதில் குறியாக இருக்கின்றன. கனேடிய உற்பத்திப் பொருளாதாரம், உலகமயமாக்கலால் மிகவும் அடிபட்டுள்ளதால் இருக்கும் ஒரே பெரிய தொழிலான தார் மண் தொழிலை மூடுவது ஒரு மிகப் பெரிய அரசியல் தர்மசங்கடமான விஷயம். ஒரு வேளை, 2040 –க்குள் இந்தத் தொழிலை மூடினாலும் கடந்த 25 ஆண்டுகளாக இயற்கையை அழித்தது அழித்ததுதான். மீண்டும் புதுப்பிப்பது என்பது காதில் பூ சுற்றும் விஷயம். சமீபத்தில் நிகழ்ந்த 2019 தேர்தலில் இது ஒரு மிகப் பெரிய பிரச்னையாக உருவாகியுள்ளது. லிபரல் கட்சிக்கு ஒரு இடம்கூட ஆல்பர்டாவில் கிடைக்கவில்லை. மிகவும் சரிந்துள்ள ஆல்பர்டா மாநிலம் கனடாவிலிருந்து பிரிந்து செல்லுவோம் என்று பயம் காட்டியுள்ளது. அரசியல் ரீதியாக இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி, தார் மண் எண்ணையை கூடிய சீக்கிரம் எண்ணெய் குழாய்கள் மூலம் பசிபிக் கடலுக்கு இணைத்தால் இந்த மாநிலத்தைத் தலை நிமிரச் செய்ய முடியும். அத்துடன், புதிய தார் மண் எண்ணெய் வயல்களை தடை செய்ய வேண்டும். இருக்கும் எண்ணெயை விற்பதே இன்று கடினமாக உள்ளது. இதில் சோகக் கதை என்னவென்றால் தார் மண் எண்ணெய், குறைந்தது இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு இயற்கையை அழித்து வெளியெடுக்கப்படும் என்பது. அத்துடன், எண்ணெய் விலை பீப்பாய்  ஒன்றுக்கு $70 –க்கு மேல் இருந்தால்தான் தார் மண் எண்ணெயில் லாபம் பார்க்க முடியும். ஆனால், இன்று விலை $55 –ஐ தாண்டாமல் இந்த முறையைக் கேள்விக்குறி ஆக்குகிறது. நல்ல வேளையாக, வளரும் நாடுகளில் கனடாவைப்போல நீர் வளத்தை வீணடிக்கும் வாய்ப்பு இல்லை. அதனால், இது ஒரு கனேடிய விஞ்ஞானத் திரித்தலாகவே இன்று வரை இருக்கிறது. ஆனாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. சமீப காலமாக, இதே தொழில்நுட்பம் வேறு விதமாக இயற்கை வாயுவை நிலத்தின் அடியிலிருந்து விடுவித்து  வெற்றி பெற்றுள்ளார்கள். கிணறு வெட்டப் புது பூதம் ஒன்று இன்று தலையைத் தூக்குகிறது. இதற்கு hydraulic fracturing அல்லது fracking என்று பெயர் வைத்துள்ளார்கள். அமெரிக்கர்கள், இயற்கையை அழிப்பதில் கனேடியர்களுக்குக் கிஞ்சித்தும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பதைப்போல, இந்த hydraulic fracturing –ல் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். நம்முடைய அடுத்த பகுதி, இந்தப் புதிய பூதத்தை ஆராயும். https://solvanam.com/2020/10/11/விஞ்ஞானத்-திரித்தல்-தா/  
    • Vocal - பவனுஜா கஜாகரன் Music - சிந்துஜன் வெற்றிவேல் Song – ஆதிலட்சுமி தேவிக்கு Original song by P. Susheela - பி.சுசீலா   தந்ததுக்கும் நீர்  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.