Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அமைதியாக வாழ்ந்துவரும் எமது உயிருக்கு உலை வைக்காதீர்கள்- கோப்பாய் மக்கள் கோரிக்கை

 
1-87-696x338.jpg
 29 Views

யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்,

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரியில் தற்போது கொரோனா  தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து  பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம்.

கடந்த முறை இதே போன்று தனிமைப்படுத்தல் முகாமினை அமைப்பதற்கு கிராம மக்களாகிய நாம் எமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். ஆனால் இம்முறை நாடுமுழுவதும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுவரும் காரணத்தினால் மனிதாபிமான அடிப்படையில் எமது எதிர்பினை காட்டாமல் அமைதியாக இருந்தோம். குறித்த பகுதியை சுற்றியுள்ள  அயல் கிராமங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் வராது என நாம் நம்பியிருந்தோம்.

ஆனால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களால் நம்பிக்கை இழந்துள்ளோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாகவும், அயலில் உள்ளவர்களுடன் சட்டவிரோத மதுபான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம்.

இது எமக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது எமது பிரதேசத்துக்கு வருவதற்கும்  ஏனையவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளடைவில்  ஒதுக்கப்பட்டவர்களாக ஆக்கப்படுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நின்மதியாக வீதிகளில் நடமா முடியலவில்லை பெரும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளோம்.

மனிதபிமான ரீதியில் நாம் ஒத்துழைப்பு வழங்கியதற்கு  எமக்கு தொற்று நோயையா பரிசாக வழங்கப்போகிறீர்கள். அமைதியாக வாழ்ந்த வாழ்வை  சீரழித்துவிட்டதாகவே எண்ணுகிறோம். எனவே உடனடிhக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அந்தவகையில்

1.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பினை பேனாதவாறு சுற்றுவட்டாரத்தில்  பாதுகாப்பை பலப்படுத்தல் மற்றும் தொடர்பினை பேணுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல்

2.தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணுபவர்கள் உரிய பாதுகாப்புகள் மற்றும்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வெளியில் நடமாடுவதை தடுத்தல்

3.மேலும் சுகாதாரத்துறையினர் தொற்று நீக்கல் செயற்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுற்றுவட்டாரத்தில் முன்னெடுக்க வேண்டும்.

4.மேற்குறித்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பின் இப்பகுதியில்  இருந்து உடனடியாக இந்த தனிமைப்படுத்தல் நிலையத்ததை அகற்ற வேண்டும்  என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது.

https://www.ilakku.org/அமைதியாக-வாழ்ந்துவரும்-எ/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேலும் 351 பேருக்கு கொரோனா

திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத் தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 398 உயர்ந்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொ த்த எண்ணிக்கை 7ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது, தற் போது நாட்டின் 30 வைத்தியசாலைகளில் 4 ஆயிரத்து 054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona.12.jpg

நாட்டில் கொரோனா தொற்றால் 3ஆயிரத்து 803 நேற்று குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

 

https://thinakkural.lk/article/83084

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீதுவை ஹோட்டலில் தங்கியிருந்த உக்ரைன் பிரஜை மூலமே கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பமானது- சிங்கள செய்தித்தாள் தகவல்

உக்ரைனிலிருந்து வந்த விமானபணியாளர்கள் குழுவை சேர்ந்த ஒருவரே இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா பரவலிற்கு காரணம் என அருண செய்த்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கியிலிருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்த உக்ரைன் பிரஜைகள் சீதுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என அருண தெரிவித்துள்ளது.

corona-virus-logo-1-300x205.jpg
ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அறிக்கையில் புலனாய்வு அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.
துருக்கியிலிருந்து வந்த இலங்கை விமானத்தில் உக்ரைனை சேர்ந்த 11 விமானபணியாளர்கள் இலங்கை வந்தனர் அவர்கள் சீதுவையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர் என அருண தெரிவித்துள்ளது.
இவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியானதை தொடர்ந்து அவர் கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அருண தெரிவித்துள்ளது.

corona-virus-logo-new.jpg
ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவர் பாதிக்கப்பட்டதால் அவருடன் ஹோட்டல் பணியாளர்களையும் தனிமைப்படுத்தவேண்டும் ஆனால் ஹோட்டல் நிர்வாகம் இதனை பின்பற்றவில்லை என சிங்கள செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ஹோட்டலின் 60 பணியாளர்களில் 18 பேர் தங்கள் வீடுகளுக்கு சென்றுவருபவர்கள், அவர்களில் ஐவர் இதுவரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அருண தெரிவித்துள்ளது.
ஹோட்டல் பணியாளர்களிடம் பிரன்டிக்ஸ் தொழிலாளர்களிடம் காணப்பட்ட வைரஸ்கள் ஒரே மாதிரியானவையாக காணப்படுகின்றன இது இரண்டாவது அலை சீதுவ ஹோட்டலில் இருந்தே ஆரம்பமானது என்பதை இது புலப்படுத்தியுள்ளது என அருண குறிப்பிட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/83191

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம்- தபால் சேவைகள் இடைநிறுத்தம்

 
1-89-696x435.jpg
 35 Views

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல பகுதிகளுக்கான தபால் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு  தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன் படி மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள், காலியில் உள்ள பிரதான மற்றும் துணை தபால் நிலையங்கள், குளியாபிட்டிய தபால் நிலையம்,மற்றும் குருணாகல் மாவட்டத்தின் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கும் தபால் நிலையங்கள் மற்றும் பல முக்கிய துணை தபால் நிலைய சேவைகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவுள்ளன.

அது மாத்திரமின்றி மத்திய தபால் பரிமாற்றம் தபால் திணைக்களத்தின் பொது மக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் சேவை திணைக்களம் அறிவித்துள்ளது.

https://www.ilakku.org/கொரோனா-அச்சம்-தபால்-சேவை/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

IMG_1189-696x392.jpg
 3 Views

மட்டக்களப்பில் மேலும் 16பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில் மேலும் 16பேர்  கொரோனா தாக்கத்திற்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்ததாக தெரிவிக்கப்படும் 65பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 11பேர் இனங்காணப்பட்டதுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனை மூலம் 16பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.

அனைவரையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அநாவசியமாக வெளியில் செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது

 

https://www.ilakku.org/மட்டக்களப்பில்-அதிகரிக்/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழைச்சேனையில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்

 
01-12-1-696x465.jpg ????????????????????????????????????
 25 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முக்கிய தேவை ஏதும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வோருக்கு  எதிராக இராணுவத்தினரும், பொலிஸாரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்து வருகின்றனர்.

01-6-1.jpg 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதினொரு பேருக்கான கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் நேற்றுன் காலை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

01-5-1.jpg  

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகல பிரதான வீதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும், அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களும் காணப்படுகின்றது.

01-8.jpg  

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காணப்படும் வியாபார நிலையங்கள், தனியார் அலுவலகம் உட்பட்டவை அனைத்தும் மூடப்பட்டு காணப்படுவதுடன், மீன் விற்பனை நிலையங்கள் முற்றாக மூடப்பட்டு காணப்படுகின்றது. அத்தோடு அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்களை பொலிஸார் மூடுமாறு பணிப்புரை விடுத்து வருகின்றனர்.

01-15-1.jpg  

அத்தோடு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இருந்து எவரும் வெளி இடங்களுக்கு செல்ல முடியாத வகையிலும், வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் உள்ளே வர முடியாத வகையிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

https://www.ilakku.org/வாழைச்சேனையில்-ஊரடங்கு/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்!

20201026_095157-960x540.jpg?189db0&189db0

 

நாட்டில் கொரோனா தொற்று வலுவடைந்துள்ள நிலையில் வட மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை சுகாதார நடைமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்குமாகாண ஆளுநர் சாள்ஸ் தலைமையில் வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

குறித்த கூட்டத்திற்கு வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதிகள் மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் பிராந்திய சுகாதார பணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த கூட்டம் ஆரம்பமாகியது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோவிட் 19 – சமூகத்தொற்றாக மாறும் அபாயத்தில் இலங்கை!

October 26, 2020
 
 
Share
 
 
1-92-696x387.jpg
 31 Views

கொரோனா தொற்று, சமூகத்தொற்றாக மாறும் அபாயத்தில் இலங்கை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் ஒரு வயதான நோயாளி அல்லது ஒரு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகினால் அவரின் நிலைமை தீவிரமாக இருக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டில் ஒரு கடுமையான நிலைமை உருவாகியுள்ளது என்றும் எனவே சமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை இருப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொற்று நோய் பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர, நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அளவு முன்னரைவிட அதிகளவில் இருப்பதாகவும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாது விட்டால் உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/கோவிட்-19-சமூகத்தொற்றாக-ம/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம் – பொதுச் சந்தைகளை இடம் மாற்றத் தீர்மானம்

 
DSC_0050-696x465.jpg
 45 Views

பொதுமக்கள் ஒன்று கூடும் பொதுச் சந்தைகள், வியாபார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இறுக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையானது சடுதியாக உயர்வடைந்துள்ளதோடு, இதுவரை தொற்றாளர்களின் எண்ணிக்கை 7872 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாநகருக்குள் கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று  இன்று  மாலை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

DSC_0002.jpg

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாரசிறி, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல்,  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக பேலியகொடை மீன்சந்தைக்கு சென்று வந்தவர்கள் தொடர்பில் கண்டறிந்து அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை தொடர்பிலும், பரவல் நிலைமைகள் குறித்தும் சுகாதார வைத்திய அதிகாரி இதன் போது தெளிவுறுத்தியிருந்தார்.

இதன்படி பேலியகொடை மீன்சந்தை தொடர்பில் சம்மந்தப்பட்ட தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பினை பேணியவர்கள் மட்டக்களப்பு மாநகருக்குள் இல்லை என்றாலும் முன்கூட்டியே இறுக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், மிக முக்கியமாக பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களான பொதுச் சந்தைகள், வியாபார நிலையங்கள், ஆலயங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாநகருக்குள் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சுகாதார திணைக்களம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றோடு இணைந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் கள விஜயங்களை மேற்கொண்டு சுகாதார வழிமுறைகள் தொடர்பில் ஆராய வேண்டும் என தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர், வெளி மாவட்டங்களில் இருந்து மாநகருக்குள் வரும் வியாபாரிகளின் தகவல்களை சேகரித்து அவர்களை அவதானிக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் தமது பிரதேசங்களுக்கு வருகை தரும் நபர்கள் தொடர்பிலான தகவல்களை உரிய நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் நாளை முதல் பொதுச் சந்தையை திறந்தவெளியில் நடாத்துவதென்றும், விரத நாட்களில் ஆலயங்களில் பொது மக்கள் கூடுவதனை கட்டுப்படுத்துவதோடு, திருமண நிகழ்வுகளுக்கும் நிபந்தனைகளுடனான அனுமதிகளை வழங்குவதென்றும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

https://www.ilakku.org/கொரோனா-அச்சம்-பொதுச்-சந்/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் சுகாதார அறிவுறுத்தல்கள் அனைத்தும் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் – யாழ் அரச அதிபர்!!!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றாளருடன் கொழும்பிலிருந்து மன்னார் பயணித்தவர்கள் யார்? உடன் தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை

DR.Vinothan.jpgகொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் பயணித்த மக்களையும், 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணித்த மக்களையும் உடனடியாக தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில் தப்பி வந்த நபர் ஒருவர் மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் வருகை தந்து 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணத்தை மேற்கொண்டு மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு உரிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பேரூந்துகளில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/83421

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் களமிறங்கியது அதிரடிப்படை

 
81-3-3.png
 3 Views

மட்டக்குளி – கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு குழுவினர், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என கொவிட் 19 தொடர்பான செயலணி தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதியின் உத்தரவின்பேரில், மட்டக்குளி – சமித்புர பகுதிகளில் விசேட பாதுகாப்பு பிரிவினரை, கண்காணிப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுத்தியுள்ளனர்.

மேலும், கொட்டாஞ்சேனை கிழக்கு புளுமெண்டல், லங்காபுர பகுதிகளிலும் விசேட பிரிவொன்றை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://www.ilakku.org/கொரோனா-தடுப்பு-நடவடிக்கை/

சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும் – யாழ் அரசாங்க அதிபர்

 
1-96-696x387.jpg
 26 Views

தற்போதைய காலகட்டத்தில் சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கொரோனா  ஒழிப்பு செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“வடமாகாணத்தின் covid 19 தொடர்பான மாகாணமட்ட கூட்டம்,  ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலே பொதுவாக மாவட்டங்களுடைய நிலைமைகள் ஆராயப்பட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்து அறியப்பட்டதோடு அங்குள்ள தொற்று நிலைமைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டது.

மேலும் பொதுவான நடைமுறைகளை எமது சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள covid 19 தொடர்பான சட்டரீதியான ஏற்பாடுகளை பொருத்தமான வகையில் அமுல்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டது. அதே போன்று அந்த சட்டரீதியான ஏற்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை உரிய தரப்பினர் எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. பொதுவாக ஊடகங்கள் பொறுப்புமிக்க வகையிலே covid 19 தொடர்பான செய்திகளை வெளிப்படுத்த வேண்டும் என கோரப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 226 குடும்பங்களைச் சேர்ந்த 424 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அத்தோடு 14 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள் .

மேலும் யாழ் மாவட்டத்தில் மருதங்கேணி சிகிச்சை நிலையம் தற்போது இயங்கி வருகின்றது. இதனைவிட விடத்தல் பளை மற்றும் கோப்பாய் கல்வியல் கல்லூரி போன்ற இடங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் covid 19 தொற்று உறுதிப் படுத்தப் பட்டவர்கள் யாழ் மாவட்டத்தில் நான்காக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இரண்டு பேர் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏனையோர் சாவகச்சேரி மற்றும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் போக்குவரத்து நிலைமைகள் மற்றும் ஏனைய இயல்பு நிலைமைகள் பாதிக்காத வண்ணம் சுகாதார நடைமுறை வர்த்தமானி அறிவுறுத்தலை பின்பற்றி சகலரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது ஒரு தீர்மானமாக இன்றைய தினம் எடுக்கப்பட்டது.

வர்த்தகமானி தீர்மானங்களை மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும். மேலும் பொதுவாக அரசாங்கம் அலுவலகங்களில் கடமையாற்றுபவர்களுடைய விபரங்களை அவர்களுடைய முகவரிகள் அவர்களின் தொடர்பு இலக்கங்கள் போன்றவற்றை தொகுத்து வைத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் எந்த பிரதேசத்திலாவது தொற்று ஏற்படும் போது அவர்களை இலகுவாக தனிமைப் படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இந்த சுகாதார நடைமுறைகள் அனைத்தும் மக்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன இவை மக்களை அசௌகரிய படுத்துவதற்கான நடைமுறைகள் அல்ல. எனவே இதனுடைய விளைவுகளை உணர்ந்த வகையிலே எங்களுடைய மக்கள் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தற்பொழுது கூடுமானவரையில் அவசியமற்ற தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து அத்தோடு அவ்வாறு செல்பவர்கள் கூட எங்கெங்கு செல்கின்றார்கள் போன்ற விடயங்களை தரவுகளாக சேர்த்து வைப்பதன் மூலம் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். அத்தோடு வெளி மாவட்டத்திலிருந்து வந்து இங்கே கடமையாற்றுவோர் தொடர்பில் இங்கே பிரதேச செயலாளர் ஊடாக தரவுகள் சேகரிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அவ்வாறு கோரப்பட்டவர்களின் விபரங்கள் தேவைப்படும் போது உரிய சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக வெளியிடங்களிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு வந்து கடமையாற்றுபவர்கள் தமது பதிவுகளை மேற்கொள்வது கட்டாயமான ஒரு விடயமாகும். எனவே இவ்வாறான முன்னேற்பாடு நடவடிக்கைகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்படுத்துவதன் மூலம் தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ள முடியும்.

எனினும் யாழ்ப்பாண குடாநாடு ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது ஒரு முன்னேற்றகரமான மாவட்டமாக காணப்படுகின்றது. எனினும் இந்த தொற்றினை தடுப்பதற்கு கூடுமானவரை அனைவரும் ஒத்துழைத்து செயற்படுவதன் மூலம் நமது மாவட்டத்தில் தொடர்ச்சியாக தொற்று அற்ற இந்த நிலைமையினை பேணமுடியும்” என்றார்.

 

https://www.ilakku.org/சுகாதார-வர்த்தமானி-அறிவு/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழில் இரு கிராமசேவகர் பிரிவுகளை முடக்க கோரிக்கை

 
1-65-696x387.jpg
 35 Views

யாழ்.நகர் ஜே-65, ஜே-67 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யுமாறு மாகாண சுகாதார திணைக்களம் கொரோரோனா செயலணியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனங்களில் மீன் கொண்டு சென்றிருந்த நிலையில் குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவரும், பருத்துறையை சேர்ந்த ஒருவரும் பாசையூர் பகுதியில் உள்ள கடலுணவு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிலையிலேயே குறித்த இரு கிராமசேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யுமாறு சுகாதார திணைக்களம் கொரோனா தடுப்பு செயலணியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.ilakku.org/யாழில்-இரு-கிராமசேவகர்-ப/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – சில முக்கிய செய்திகள்

 
1-98-696x435.jpg
 30 Views

மத்திய கலாசார நிதித்திட்டத்திற்கு கீழ் பராமரிக்கப்படும் அனைத்து அருங்காட்சியகங்களும் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலன்னறுவை, சீகிரியா, கதிர்காமம், காலி மற்றும் கண்டி உள்ளிட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது.

01-5-1.jpg 

இந்நிலையில்,மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இன்று வரை 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

81-3-3.png

அதே நேரம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 10 பேர், பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 400 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்: இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட 11842 பேர் - விரிவான தகவல்கள் Corona Sri Lanka Updates - BBC News தமிழ் முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமெனவும் சுகாதார மேம்பாடு அலுவலகத்தின் சமூக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

தொழில் நிமித்தம் வெளியில் செல்வோர் அல்லது வேறு தேவைகளுக்காக வெளியே செல்வோர் ஒரு முகக்கவசத்தை 4 மணித்தியாலமே பயன்படுத்த வேண்டும். எனவே, வெளியே செல்லும் போது, மேலதிகமாக 2 முகக்கவசங்களை கொண்டு செல்லுவது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகக்கவசங்களை ஆங்காங்கே வீசி விடுவதாலும் கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து 1000 உடல் உறைகள் வேண்டும் – சுகாதார அமைச்சு கடிதம் « Lanka Views

இந்நிலையில்,புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிக் கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு  அறிவித்துள்ளது.

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசோல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இடர் வலையங்களில் நிறுவன நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம் – பிரதி பொலிஸ் மா அதிபர் | Athavan News

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் பொதுப் போக்குவரத்தில் உரிய முறை மையில் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் பின் பற்றப் படவில்லை என அவர் கூறியுள்ளார்.

 

https://www.ilakku.org/இலங்கையில்-வேகமாக-பரவும்/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம்- வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

 
1-78-696x387.jpg
 10 Views

கொரோனாப் பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு சற்று முன்னர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) மூன்றாம் வருட, இரண்டாம் அரையாண்டுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான அனுமதி அட்டைகள் வழங்கும் பணியும் இடம்பெற்றது.

இந்த நிலையில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தேர்வெழுதுவோர் பலர், மாவட்டங்களைக் கடந்து வர முடியாத நிலை காணப்படுகின்றமை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை துணைவேந்தர்  சி.சிறிசற்குணராஜாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து  கொரோனா அச்சம் காரணமாக எழுந்துள்ள நெருக்கடிகள் சீராகும் வரை பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையப் பணிப்பாளருக்குத் துணைவேந்தர் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்.

இதே நேரம், பரீட்சை ஒத்திவைப்பு, மறு திகதியிடல் பற்றிய விபரங்கள் பகிரங்க அறிவித்தல் மூலமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணைய வழித் தகவல்களுக்கூடாகவும் வெளியிடப்படும்.

இணையவழி வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறிக்குரிய புதிய மாணவர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாள்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்படும் என்றும், பரீட்சைகள் பற்றிய மேலதிக தகவல்களை 021 222 3612 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/கொரோனா-அச்சம்-வெளிவாரிப/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா – இன்று மட்டும் மூன்று பேர் மரணம்

 
Deaths-600.png
 39 Views

இலங்கையில் ஒரே நாளில் மூவர் கொரோனா வைரஸ் பலியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா மாவட்டம், ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயது ஆண் ஒருவர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று பகல் உயிரிழந்துள்ளனர். கொழும்பு – வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரும், கொழும்பு – கொம்பனித்தெருவைச் 65 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனாத் தொற்றால் இன்று மட்டும் மூவர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

https://www.ilakku.org/இலங்கையில்-வேகமாகப்-பரவு/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் பாஷையூர், திருநகர் பகுதிகள் முடக்கப்பட்டன; இராணுவக் காவலரண்களும் அமைப்பு

 
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%88%E0%
 

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவின் கிராமசேவகர் பிரிவுகளான பாசையூர் மேற்கு, திருநகர் ஆகிய கிராமசேவையாளர்கள் பகுதிகள் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளன.

சுகாதார திணைக்களத்தின் கோரிக்கையின் பெயரில் இராணுவத்தால் இப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது. பாஷையூரிலுள்ள தனியார் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தைக்குச் சென்ற இவர்கள் கடந்த வெள்ளியன்று அங்கிருந்து குருநகர் வந்திருந்தனர். ஞாயிறன்று அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையை அடுத்து சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் – பாஷையூர் பகுதியில் ஏனையவர்களுக்கும் கொரோனாத் தொற்றுப்பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதிகளைச் சாராதவர்கள் மற்றும் வெளியாள்கள் உட்செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டு படையினர் வீதிகளில் கடமை புரிகின்றனர். பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் முடக்கப்பட்ட இப்பகுதிக்கு இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாளையதினம் பொதுமக்கள் போய்வர அனுமதிக்கப்படலாம் என சுகாதாரப் பகுதியினர் இன்று மாலையில் தெரிவித்தனர்.

https://www.ilakku.org/யாழ்-பாஷையூர்-திருநகர்-ப/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

மட்டக்குளி – கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு குழுவினர், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என கொவிட் 19 தொடர்பான செயலணி தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதியின் உத்தரவின்பேரில், மட்டக்குளி – சமித்புர பகுதிகளில் விசேட பாதுகாப்பு பிரிவினரை, கண்காணிப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுத்தியுள்ளனர்.

மேலும், கொட்டாஞ்சேனை கிழக்கு புளுமெண்டல், லங்காபுர பகுதிகளிலும் விசேட பிரிவொன்றை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

16 hours ago, உடையார் said:

அதே நேரம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 10 பேர், பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 400 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகத்தை மூடிக்கொண்டு அப்பாச்சி 200 இல் MP5 வை தூக்கிக்கொண்டு சீன் போட்டால் 
பயந்து ஓட இது என்னா உள்ளூர் வாள்வெட்டு கேங்கா ...? இது தி கிரேட் கொரோனா 
உங்களை விட அதி விசேட ஆயுதங்களுடன் இராணுவத்தை வைத்திருக்கும் சிங்கப்பூர் ஒரு தடவை கூட இராணுவத்தை இறக்கி சீன் காட்டவில்லை, பாதுகாப்பான இடைவெளி பேணலை அவதானிக்கும் , வலியுறுத்தும்  அதிகாரிகளாக கூட சாதாரண சிங்கப்பூரார்களை தான் தகுந்த பயிற்சிக்கு பின் நியமித்தது. 
முட்டாள் பீசுகளா ... இப்போ விளங்குதா எந்த சர்வதேச நிறுவனமும் உங்களை கோரானவை முற்று முழுதாக வெற்றி கொண்ட நாடாக ஏன் அறிவிக்கவில்லை என்று 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்து 870 ஆக உயர்வு

திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத்த ணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 396 உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் 457 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய- பேலியகொட கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 447 பேர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மத்திய நிலை யத்தில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PELIYAGODA-PCR-TEST-CORONA-2.png

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாட்டின் 32 வைத்தியசாலைகளில் 4 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் 4ஆயிரத்து 043 பேர் குண மடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

https://thinakkural.lk/article/83777

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான அறிவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் உள்ள வீடுகளில், மற்றுமொரு அறிவித்தலையும் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, இந்த அறிவித்தலையும் காட்சிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவித்தலுக்கு அமைய, குறித்த வீடுகளில் தங்கியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாது என்பதுடன், வெளி நபர்கள் அந்த வீடுகளுக்குச் செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிவித்தலில், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பிரதேசத்தின் பிரதேச செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராம சேவகர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களும் குறித்த பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் இருப்பராயாயின் அவரின் தொடர்பு இலக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தங்களுக்கு அவசிய தேவை ஏற்படும் நபர்கள் இந்த இலக்கங்களைத் தொடர்புகொண்டு, தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு செல்வது தவிர்ந்த, ஏனைய எந்தவொரு அவசர சந்தர்ப்பம் ஏற்படும் சமயத்திலும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என்றும் எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர், இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/வீடுகளில்-தனிமைப்படுத்த/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா – நேற்று மட்டும் 500 பேருக்கு தொற்று உறுதி

 
coronavirus.600.png
 31 Views

நாட்டில் நேற்று மட்டும் 500 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மட்டும் நாட்டில் 164 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 156 பேரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி நேற்று மாத்திரம் 500 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என்றார்.

https://www.ilakku.org/இலங்கையில்-வேகமாகப்-பரவ-2/

பி.சி.ஆர். முடிவுகள் வெளிவருவதில் தாமதம் – தொற்றாளர் தொகையை வெளியிடுவதில் சிரமம்

 
PCR-test.600.png
 31 Views

இலங்கையில் கடந்த சில நாட்களாகத் தினந்தோறும் ஒன்பதாயிரம் வரையில் சராசரியாக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்தளவு தொகையைக் கையாள முடியாது ஆய்வுகூடங்கள் திணறுவதால் முடிவுகள் வெளிவருவதில் தாமதங்கள் நிலவுகின்றன என்று அறியமுடிகின்றது.

ஆய்வுகூடங்களில் ஒரு நாளில் இத்தனை பி.சி.ஆர். பரிசோதனைதான் செய்யமுடியும் என்ற வரையறை இருப்பதால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிகள் வெளிவருவதில் தாமதம் காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவர் வைத்தியர் ரட்ணசிங்கம் தணிகைவாசன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/பி-சி-ஆர்-முடிவுகள்-வெளிவ/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில்லை – பொலிஸ் மா அதிபர்

 
IMG-20201028-WA0023-696x522.jpg
 25 Views

யாழில் சுகாதார நடைமுறையினை  பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரட்ன குற்றம்சுமத்தியுள்ளார்.

IMG-20201028-WA0020.jpg

இந்நிலையில், மக்களுக்கு கொரோனா விழிப்புனர்வை ஏற்படுத்தும் வகையில்,யாழ்ப்பாண பொலிசாரின் ஏற்பாட்டில் இளைஞர் சேவை மன்றத்தினர் மற்றும் யாழ்ப்பாணம்   சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் பங்குபற்றுதலோடு  “மீட்டரான வாழ்க்கை”எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் covid 19விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

IMG-20201028-WA0007.jpg

அதே நேரம், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்குப் பொருட்களைப் பொதி மூலமாக விநியோகிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பஷில் ராஜபக்ஷ ஆஜர் | Virakesari.lk

வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் உலர் உணவுப் பொருட்களை பொதி மூலமாக வழங்குவது தொடர்பாகப் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு கவனம் செலுத்துகிறது.

கடன் தவணைகளுக்குச் சலுகை காலம் வழங்குவது தொடர்பாக நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதன்போது ஒரு வார காலம் முழுமையாக மூடப்பட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் வழங்கத் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/யாழ்-மக்கள்-சுகாதார-நடைம/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேல்மாகாணம் முழுவதிலும் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு

 
curfew.600.png
 36 Views

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணம் முழுதிலும் நாளை வியாழக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நவம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/மேல்மாகாணம்-முழுவதிலும்/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்ட பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.