ampanai

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Recommended Posts

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், உரை மற்றும் குளோஸ் அப்

 

 

Share this post


Link to post
Share on other sites

சுயதனிமைப்படுத்தலில் சங்கா
Shanmugan Murugavel   / 2020 மார்ச் 22 , பி.ப. 08:24 - 0      - 45


ஐரோப்பாவிலிருந்து அண்மையில் நாடு திரும்பியவர்களுக்கான அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி கொழும்பில் தான் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார இன்று உறுதிப்படுத்தியுள்ளார். 
image_8615543632.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/சயதனமபபடததலல-சஙக/44-247350

Share this post


Link to post
Share on other sites

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

 

 நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான தகவல்..
அலட்சியமே ஆபத்தை உண்டுபண்ணும்..

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, ampanai said:

 

 நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான தகவல்..
அலட்சியமே ஆபத்தை உண்டுபண்ணும்..

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நல்ல கருத்துமிக்க கருத்தோவியம்। கடந்த வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு போடடபோது சனங்கள் இதேவண்ணமாக நெருக்கடி படடார்கள்।

நாளைக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தும்போது பார்க்கலாம் மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று।

உண்மையாகவே மக்கள் சட்ட்திட்ட்ங்களை கைக்கொண்டால் இலகுவாக இந்த ஆட்க்கொல்லி நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்। இல்லாவிடடாள் இது கட்டுக்கடங்காது போய் விடும்।

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஊரடங்கு காலத்தில் 1754 பேர் அதிரடியாக கைது, 477 வாகனங்கள் பறிமுதல்!

In இலங்கை     March 23, 2020 6:46 am GMT     0 Comments     1031     by : Jeyachandran Vithushan

Jaffna-Police.jpg

ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதற்காக மொத்தம் 1,754 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட 447 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக விளையாட்டு மைதானங்களில், வாகனங்களில் பயணம் செய்தல், வர்த்தகத்தில் ஈடுபடுவது மற்றும் பொது இடங்களில் மது அருந்திய குற்றச்சாட்டுக்களில் சிலர் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பொலிஸார் ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து விதிமுறைகளையும் பின்னற்றவும் வீடுகளுக்குள் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

http://athavannews.com/ஊரடங்கு-காலத்தில்-1754-பேர்-அ/

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை – அலட்சியமாக இருந்த 15 பேர் கைது

In இலங்கை     March 23, 2020 4:50 am GMT     0 Comments     1345     by : Jeyachandran Vithushan

ஊரடங்கு தளர்த்தப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை கடைபிடிக்க தவறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்படும்போது பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை விடயங்களை அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தபோதும் அதனை மீறிய 15 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1589 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 3 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 362 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/பொதுமக்கள்-கட்டாயம்-கடைப/

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 37பேர் வீடுகளில் தனிமை

வி.சுகிர்தகுமார் 

அக்கரைப்பற்று மாவட்ட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களும் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமகன் ஒருவரும் முகக்கவசங்கள் பெற்றுக்கொடுக்கும் பணிகளை அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுத்துள்ளனர்.

image_f330f14edd.jpg

இதற்கமைவாக இந்து இளைஞர் மன்றம் 800 முகக்கவசங்களையும் உதவிக் கல்விப்பணிப்பாளர் சு.சிறிதரனின் ஒத்துழைப்புடன் மு.சுரேஸ் எனும் டெயிலர் மூலமாக 300 இற்கும் மேற்பட்ட முகக்கவசங்களையும் தயாரித்து பொதுமக்களின் பாவனைக்காக இன்று வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாட்டின் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை பாராட்டுவதாகத் தெரிவித்த அக்கரைப்பற்று மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தினர் அதற்கு உறுதுணையாக செயற்படும் அமைச்சரவை, சுகாதாரத்துறையினர், பாதுகாப்புத் துறையினர், செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஊடகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இன்று அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா இல்லத்தில் வைத்து முகக்கவசங்களை சுகாதார துறையிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அம்பாறை மாவட்ட இந்து இளைஞர் மன்ற பேரவை தலைவர் த.கயிலாயபிள்ளை இவ்வாறு கூறினார்.

இந்து இளைஞர் மன்றத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை முகக்கவசங்கள் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.அகிலனிடம் இன்று மக்களின் தேவையின் நிமித்தம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர் நாட்டில் உருவாகியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் பொது அமைப்புகள் வறுமையில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதேநேரம் இங்கு கருத்து தெரிவித்த வைத்தியர் எஸ்.அகிலன் முகக்கவசங்கள் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அதனை அணிவதற்கு முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும் எனவும் பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பிலும் விளக்கினார். இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 37பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இது இவ்வாறிருக்க, ஊரடங்கு சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மயான அமைதி நிலவி வருவதுடன் பொதுமக்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

பாதுகாப்புத் தரப்பினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவருவதுடன் அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் ஒரு சிலர் நடமாடுவதை அவதானிக்க முடிந்தது.

ஊரடங்கினால் அன்றாட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில பொது அமைப்புகள் அவர்களுக்கான உலர் உணவை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/அம்பாறை/ஆலையடிவேம்பு-பிரதேசத்தில்-37பேர்-வீடுகளில்-தனிமை/74-247351

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, ampanai said:

இதற்கமைவாக இந்து இளைஞர் மன்றம் 800 முகக்கவசங்களையும் உதவிக் கல்விப்பணிப்பாளர் சு.சிறிதரனின் ஒத்துழைப்புடன் மு.சுரேஸ் எனும் டெயிலர் மூலமாக 300 இற்கும் மேற்பட்ட முகக்கவசங்களையும் தயாரித்து பொதுமக்களின் பாவனைக்காக இன்று வழங்கியுள்ளார்.

துணியில் மூலமாகத் தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் முழுமையான பாதுகாப்புத் தராவிடினும் இவர்களது முயற்சி பாராட்டத்தக்கது. பொதுமக்களை விட மருத்துவ, பொது சேவையாளர்களுக்கே முகக் கவசங்கள் முதலில் அவசியம். பிரான்சில் முகக்கவசம் தட்டுப்பாடு வந்தவுடன் 50 இலட்சம் முகக்கவசங்களை மருத்துவ சேவை செய்பவர்களுக்காக மட்டும் அரசாங்கம் ஒதுக்கியது. பொதுமக்கள் பாவனைக்காக அவற்றை விற்பது தடுக்கப்பட்டது. முகக் கவசம் தயாரிக்கும் நிறுவனங்களையும் அது கையகப் படுத்தியது.

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, ampanai said:

இதற்கமைவாக இந்து இளைஞர் மன்றம் 800 முகக்கவசங்களையும் உதவிக் கல்விப்பணிப்பாளர் சு.சிறிதரனின் ஒத்துழைப்புடன் மு.சுரேஸ் எனும் டெயிலர் மூலமாக 300 இற்கும் மேற்பட்ட முகக்கவசங்களையும் தயாரித்து பொதுமக்களின் பாவனைக்காக இன்று வழங்கியுள்ளார்

ஆம், இங்கே ஒரு சமாக்க, சுகாதார உதவி மட்டுமல்ல, ஒரு பொருளாதார முகாமைத்துவமும் வளர்க்கப்படுள்ளது என்பது சிறப்பு. அதுவும், இது தென் தமிழீழத்தில் ஆரம்பித்தது, இரட்டிப்பு மகிழ்ச்சி. இதை, வேறு தமிழீழ கிராமங்களுக்கும் விஸ்தரிக்கலாம். குறிப்பாக பெண்கள் பயனடைவார்கள்.  

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

300 இற்கும் மேற்பட்ட முகக்கவசங்களையும் தயாரித்து பொதுமக்களின் பாவனைக்காக இன்று வழங்கியுள்ளார்.

பாராட்டுக்கள்!

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில் வைத்தியருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு! அதே வைத்தியசாலையில் அனுமதி

IDH வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட வைத்தியர் IDH வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதயைடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/139631?ref=imp-news

Share this post


Link to post
Share on other sites

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் வைத்திய நிபுணர்கள் தரும் சிறப்பு ஆலோசனை

 

219799169430116

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு ; இருவர் வைத்தியர்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

அதில் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி குணமடைந்த சீனப் பெண்ணையும், 23 ஆம் திகதி குண்மடைந்து வெளியேறிய சுற்றுலா வழி காட்டியையும் தவிர்த்து தற்போது 95 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவ்வாறு சிகிச்சை பெறும் தொற்றாளர்களில் இருவர் வைத்தியர்கள் என  சுகாதார தரப்பு செய்திகள் தெரிவித்தது.

அதில் மேலும் சிலர் சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் எனவும் நம்பகரமாக தெரியவருகின்றது.

https://www.virakesari.lk/article/78517

Share this post


Link to post
Share on other sites

இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தலுக்குள்ளாகமல் இருக்கும் இவர்களை தெரியுமா?: உடன் அழைக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் வேண்டுகோள்

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தலுக்குள்ளாகாத 12 பேர் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் தலைமையகம் சேகரித்துள்ளது. இந்நிலையில் இந்த 12 பேரையும் உடனடியாக தனிமைபப்டுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த பொலிஸார் தேடிவரும் நிலையில் அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

v4.jpg


இவ்வாறு பொலிஸார் தேடிவரும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள் என பொலிஸார் கூறினர். இவ்வாறு பொலிஸார் தேடுவோரில் 6 பெண்கள் 6 ஆன்கள் உள்ளடங்குகின்றனர். எனினும் அதில் 8 பேர் 3 வயது அல்லது அதற்கும் குறைந்த குழந்தைகளாவர். இருவர் சிறுவர்களாவர்.

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ, அல்லது பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சரின் 071 8591864 அல்லது அவரின் கீழ் உள்ள சிறப்பு மத்திய நிலையத்தின் 011 2444480 அல்லது 011 2444481 எனும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

https://www.virakesari.lk/article/78518

Share this post


Link to post
Share on other sites

சுகாதார பாதுகாப்பின்றி தொழிலில் ஈடுபடும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

மலையக பெருந்தோட்டப்பகுதியில் சில தோட்டங்களில் எவ்வித சுகாதார தற்பாதுகாப்பு நடவடிக்கையுமின்றி தோட்டத் தொழிலாளர்கள் இன்று (24.03.2020)  நாளாந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

virakesari_.jpg


இவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதுடன், கைகளை கழுவுதல் உட்பட தற்பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளைக்கூட பின்பற்றாமல் தொழிலில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு முகக்கவசங்களை வழங்கியிருந்தாலும் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என தலவாக்கலை, அக்கரபத்தனை, டயகம பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தோட்ட நிர்வாகங்களால் எவ்வித வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. பொலிஸ் ஊடரங்குச்சட்டம் அமுலில் இருக்கும் போது கூட நாளாந்த தொழில் நடவடிக்கைகளுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.என தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழுந்து கொய்தல் மற்றும் இதர வேலைகளில் ஈடுபட்டவர்கள், வேலை முடிந்ததும் கைகளை கழுவாமல் உணவு உட்கொள்வதையும் காணமுடிந்தது.

சம்பள முற்பணம் கூட இன்னும் வழங்கப்படவில்லை. ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்கூட பொருட்களை வாங்க முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

கொழும்பு உட்பட வெளியிடங்களில் தொழில் புரிந்தவர்கள் கூட தற்போது வீடுகளுக்கு வந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கிவருகின்றோம். எனவே, அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

https://www.virakesari.lk/article/78549

Share this post


Link to post
Share on other sites

வைத்தியசாலைக்கு செல்லாமல் உங்களுக்கு கோவிட்டின் தாக்கம் இருக்குமா இல்லையா என்பதை  சுய பரிசோதனை செய்யலாம் : இது ஆங்கிலத்தில் இருந்தாலும் பயனுள்ளது. 

https://covid-19.ontario.ca/self-assessment/#q0

Share this post


Link to post
Share on other sites

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.

இன்று பிற்பகல் 2.45 மணி வரையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-நயளரகளன-எணணகக-100ஆக-அதகரபப/150-247405

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஆம், அதை செய்வோம். எம் மண்ணையும் மக்களையும் காப்பற்றுவோம் !
  • பிரதிநிதித்துவப் படம்.   மொரேனா துபாயிலிந்து திரும்பி வந்த நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் அளித்த விருந்தில் பங்கேற்ற 26 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா நகரில் நடந்துள்ளது. இதுகுறித்து மொரேனா மாவட்ட துணை ஆட்சியர் ஆர்.எஸ்.பக்னா நிருபர்களிடம் கூறியதாவது: ''மொரேனா நகரைச் சேர்ந்த நபர் துபாயில் ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவரின் தாய் இறந்ததையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்பினார். அவரின் தாய் இறந்தபின் 13-வது நாளில் அவர் சார்ந்திருக்கும் மத வழக்கத்தின்படி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடந்த மாதம் 20-ம் தேதி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் 2 ஆயிரத்தக்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி அந்த நபருக்கும், அவரின் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அந்த நபருக்கும், அவரின் மனைவிக்கும் கரோனா வைரஸ் பாதித்ததற்கான அறிகுறிகள் இருந்ததால் அவரின் கணவரிடம் சமீபத்தில் வெளிநாடு சென்றீர்களா என மாவட்ட அரசு தலைமை மருத்துவர் ஆர்.சி பந்தில் கேட்டுள்ளார். ஆனால், தான் துபாயிலிருந்து திரும்பியதை அந்த நபர் மறுத்துவிட்டார். இந்நிலையில் வழக்கமான சிகிச்சையளித்த நிலையில் இருவரின் நிலைமையும் மிகவும் மோசமடைந்ததால் தனி வார்டுக்கு மாற்றப்பட்டனர். அப்போது மருத்துவர்கள் அந்த நபரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளால் விசாரித்தபோது அந்த நபர் தான் துபாயிலிருந்து கடந்த மார்ச் 17-ம்தேதி வந்ததாகத் தெரிவித்தார். அதன்பின் கடந்த 3-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 10 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 10 பேரும் அந்த துபாய் நபருடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தவர்கள். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு நிலைமையைக் கூறி அவசரகால நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அந்த நபர் வைத்த விருந்தில் பங்கேற்றவர்களின் பட்டியல் முழுமையாக எடுக்கப்பட்டு 1,200 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் 47-வது வார்டில் இருந்ததால் அந்த வார்டில் இருந்த மக்கள் அனைவருடனும் இந்த 1200 பேரும் பழகியதையும் பேசியதையும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வார்டில் இருந்த 26 ஆயிரம் பேரையும் வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு, அந்த வார்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் துபாய் சென்று வந்த நபர் வைத்த விருந்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்”. இவ்வாறு ஆர்.எஸ்.பக்னா தெரிவித்தார். https://www.hindutamil.in/news/india/548178-26-000-quarantined-after-10-feast-attendees-contract-covid-19-1.html    
  • தார்களை வெட்ட கூலி ஆட்கள் வராததால் மரத்திலேயே வீணாகும் வாழைப்பழங்கள்: விவசாயிகள் கவலை   குளித்தலை: தார்களை வெட்ட கூலி ஆட்கள் வராததால் மரத்திலேயே வாழைப்பழங்கள் பழுத்து தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மாயனூர் கதவனையில் இருந்து தென் கரைவாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் 1.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதில் 75 சதவீதம் வாழை பயிரிடப்படுகிறது அதில் பூவன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, நேந்திரம் உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன் வறட்சியால் தண்ணீரின்றி வாழை விவசாயிகள் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கஜா புயலில் 90 சதவீதம் வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் வாழை மரங்களின் வாழைத்தார்களை வெட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.தமிழக அரசு ஊரடங்கு உத்தரவால் கூலி தொழிலாளிகளும் வரமுடியாத சூழ்நிலையில் வாழைத்தார்களை வெட்ட முடியவில்லை.மேலும் வாழைத்தார்களை வாகனங்களில் வைத்து வேறு இடங்களுக்கு செல்லவே முடியாத சூழ்நிலையில் லட்சக்கணக்கான வாழைத்தார்கள் மரத்திலேயே பழுத்து விடுகின்றன. மேலும் வியாபாரிகள் குறைந்த விலைக்கே கேட்பதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு, ஊரடங்கு உத்தரவால் விவசாய இடுபொருள்கள் கொண்டு செல்வதில் உள்ள சிரமங்களைக் கண்டு அந்த விவசாயிகள் உற்பத்திப் பொருளை வெளி சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து செல்ல உத்தரவிட்டிருந்தது.அதன்படி, கடந்த 2 நாட்களாக குளித்தலை வட்டாரத்திலுள்ள விவசாயிகள் வாழைத்தாரை வெட்டி வெளிசந்தைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளனர். இதனால் வாழைத்தார்கள் வெட்டப்பட்டு சிறிய வாகனம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.இருந்தாலும் வாழை விவசாயிகள் போதிய விலை இல்லாமல் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் இந்த தடை உத்தரவு காலத்தில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ 50ஆயிரம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577109    
  • திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் நடமாடியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஊரடங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.ஆனால் தமிழகத்தில் சில இடங்களில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் வடக்குரத வீதி, கச்சேரி தெருவில் எண்ணெய் விற்பனை கடைகள், காய்கறி, மளிகை கடைகள் இருப்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் பொது மக்கள் அதிகளவில் நடமாடியதாலும் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் எச்சரிக்கையை மீறி கொரோனா வைரஸின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளிலும் நடமாடுவதும், கூட்டமாக சேருவதும் ஊரடங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது   http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577142
  • திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் நடமாடியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஊரடங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.ஆனால் தமிழகத்தில் சில இடங்களில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் வடக்குரத வீதி, கச்சேரி தெருவில் எண்ணெய் விற்பனை கடைகள், காய்கறி, மளிகை கடைகள் இருப்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் பொது மக்கள் அதிகளவில் நடமாடியதாலும் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் எச்சரிக்கையை மீறி கொரோனா வைரஸின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளிலும் நடமாடுவதும், கூட்டமாக சேருவதும் ஊரடங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது   http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577142