Sign in to follow this  
தமிழ் சிறி

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: இஸ்ரேல் விஞ்ஞானிகளின் முயற்சியில் முன்னேற்றம்!

Recommended Posts

Scientists-in-Israel-likely-to-announce-it-developed-coronavirus-vaccine.jpg

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: இஸ்ரேல் விஞ்ஞானிகளின் முயற்சியில் முன்னேற்றம்!

இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும் இது தொடர்பாக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 4,627 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் முதலில் கால் பதித்த சீனாவில் தற்போது வைரஸ் பரவுவது குறைந்துள்ள போதிலும் ஏனைய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல், உடல்வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் விஞ்ஞானிகள் உருவாக்கிய மருந்துகள் பல்வேறு கட்டச் சோதனைகளில் உள்ளன. இதில் சில நிறுவனங்களின் ஆய்வு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவ்வகையில், இஸ்ரேலின் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் சில தினங்களில் தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என விஞ்ஞானிகள் கூறியதாக இஸ்ரேல் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இது அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தடுப்பு-மரு/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • உடையார் கூல் டவுன்😎 இந்திய ஆக்கிரமிப்புப் படைக் காலத்தில் தாயகத்தில்தான் இருந்தேன். அவர்களுடன் கிளித்தட்டு விளையாடித்தான் பாடசாலைக்கும் ரியூசனுக்கும் போய்வந்துகொண்டிருந்தோம். எனவே யதார்த்தம் தெரியும்😀 நீங்களும் தாயகத்தில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.😂  நட்வர்சிங் 15, 000 படைகளை இழந்தோம் என்று சொல்லியது நம்பும்படியாக புலிகள் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை பெரிய ஒபேரசன் எதிலும் கொல்லவில்லை. நட்வர்சிங் சோனியாவுடன் முரண்பட்டு தனது அரசியலுக்காக சொல்லுவைதையெல்லாம் உண்மையாக்க time tunnel இல் போய் ஒரு பத்தாயிரம் இந்திய இராணுவத்தை முடிச்சால்தான் உண்டு!🤪 கடஞ்சா சொல்வதுமாதிரி, கொல்லப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் எல்லோரையும் கூட்டினாலும் 1987 ஒக்டோபரில் இருந்து 1989 நவம்பர்/டிசம்பர் வரை 15,000 பேரை இழந்திருக்கமாட்டார்கள். நான் கிந்தியாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல் நம்பி கிளுகிளுப்பு அடைவது, அதுவும் இந்தப் பேட்டி வந்து ஒரு வருடத்திற்கு மேலாக இருந்தும், நல்லதுக்கில்லை. முடிந்தால் கேணல் ஹரிகரனையோ அல்லது  வேறு இந்திய ஆய்வாளர்களையோ அல்லது புலிகளின் குறிப்புக்களையோ ஆதாரமாகக் காட்டுங்கள்.
    • இந்த ஆளு..... மிளகாய் பஜ்ஜி மாதிரி இருந்தாரு.... இப்ப போண்டா மாதிரி ஆகிட்டாரு
    • மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை: இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில்   லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயார் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார். இதுபற்றி வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கருத்து கேட்ட பாது, அவர் நேரடியாக பதில் அளிக்காமல், "பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்" என்று மட்டும் கூறினார். இதன்மூலம் டிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில்,  சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா- சீனா எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் முறையாக தீர்க்கும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது. மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை. எல்லைப் பகுதியில் தற்போதைய நிலைமை சீனா மற்றும் இந்தியா பொதுவாக இயல்பானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது. சீனா மற்றும் இந்தியா சரியான எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு சேனல்களைக் கொண்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில் அளித்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29165337/No-thirdparty-intervention-is-requir-chinese-Foreign.vpf
    • அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா?  இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?   சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????
    • பலத்த மழையால் கீழடி அகழாய்வுப் பணி நிறுத்தம்: திருப்புவனத்தில் 108.4 மி.மீ., மழைப்பதிவு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கீழடியில் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டது. திருப்புவனத்தில் அதிகபட்சம் 108.4 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. மேலும் ஊரடங்கால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கியது. தொடர்ந்து மே 23-ம் தேதி மணலூரிலும் பணிகள் தொடங்கின. மே 27-ம் தேதி கொந்தகையில் பணி தொடங்கியது. ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை அகழாய்வு நடந்த இடங்களில் தண்ணீர் புகுந்தது. கீழடியில் தார்பாய் மூடியும் குழிகள் நிரம்பின. இதையடுத்து 4 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. ‘மழைநீர் வற்றி, மண் காய்ந்த பிறகே மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கும்,’ என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் அதிகபட்சமாக 108.4 மி.மீ., மழை பதிவானது. சிவகங்கையில் 43 மி.மீ., மானாமதுரையில் 19, இளையான்குடியில் 31, தேவகோட்டையில் 16.6, காரைக்குடியில் 18.4, திருப்பத்தூரில் 18, காளையார்கோவிலில் 78.8, சிங்கம்புணரியில் 5.2 மி.மீ., மொத்தம் 254.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/556932-keeladi-excavation-stopped-due-to-heavy-rains-1.html