Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

இணைய உலகில் நூல்களும் நூலகங்களும்

Recommended Posts

இணைய உலகில் நூல்களும் நூலகங்களும்.

tdbsuind.jpg

மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவிதான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் நூல் இலக்கண நூல் ஆகும். நன்னூல் தனது பொதுப்பாயிரத்தில் நூல் என்ற சொல்லுக்கான பொருட்காரணத்தை விளக்கிக் காட்டுகின்றது.

உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு                  (நன்னூல் 25)

ஒரு மரத்தின் வளைவு நெளிவுகளைக் கண்டறிவதற்கு மரவேலை செய்யும் தச்சர்கள் பயன் படுத்தும் கருவி, நூல் ஆகும். மரத்தின் வளைவைக் கண்டறிந்து அதனைச் சீர்செய்வதற்கு நூலைப் பயன்படுத்துவதுபோல மனிதனின் மனதில் உண்டாகும் கோணல்களைக் கண்டறிந்து அவன் மனக்கோளாறுகளை ஒழுங்குபடுத்தும் கருவியாக நூல் செயல்படும் என்கிறது நன்னூல் நூற்பா. நூல் என்பதற்கு நன்னூல் ஆசிரியர் பவனந்தியார் தரும் பொருள் விளக்கம் ஆழ்ந்து நோக்கத்தக்கது.

tamilvuமனிதகுல வரலாறு மற்றும் சிந்தனைகளின் எழுத்துப் பதிவுகளாக அமைந்திருக்கும் நூல்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமித்து வைக்கப்பட்டு ஒருவருக்கோ பலருக்கோ வாசிக்க இடமளிக்கும் போது அவ்விடம் நூலகம் என்றழைக்கப்படுகிறது. இவ்வகை நூலகங்கள் அரசாலோ கல்வி மற்றும் பொது நிறுவனங்களாலோ குழுக்களாலோ, தனி நபர்களாலோ உருவாக்கப்பட்டு நிறுவகிக்கப்படும். இத்தகு சேவைகள் பெரும்பாலும் கட்டணமின்றியும் ஒரோவழி கட்டணச் சேவையாகவும் வழங்கப்படும்.

நூலகங்களின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகின்றது. மெசபடோமியர்கள் என்றழைக்கப்படும் இன்றைய ஈராக்கியர்களே முதன்முதலில் நூலகத்தை உருவாக்கியவர்கள். இவர்கள் களிமண் பலகைகளில் எழுதி அவற்றை நெருப்பில் சுட்டு அரண்மனைகளிலும் கோவில்களிலும் பாதுகாத்து வைத்திருந்தனர். துறைவாரியாகப் பகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மெசபடோமியர்களின் முயற்சியை நூலகங்களுக்கான முன்னோடி முயற்சி எனலாம். பின்னாளில் எகிப்தியர்கள், பாப்பிரஸ் என்ற தாளில் எழுதத் தொடங்கினர். கி.மு. 300-ஆம் ஆண்டு வாக்கில் அலெக்சாண்டிரியாவில் 7 லட்சம் பாப்பிரஸ் உருளைகள் கொண்ட கருவூலம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் இவ்வகைக் கருவூலங்களே தற்போதைய நூலகத்தின் முன்மாதிரி அமைப்பாகவும் கருதப்படுகின்றது. இதற்குப் பிறகு ரோமானியர்கள்தாம் பொது நூலக முறையை முதன் முதலில் ஏற்படுத்தினர். ஜூலியஸ் சீசரின் பங்கு இதில் மிக அதிகமாக இருந்தது. வசதி படைத்தோர் பலரிடமிருந்து உதவி பெற்றுப் பொதுநூலகத்தை அவர் நிறுவினார் என்றும் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு வாக்கில் 28 பொது நூலகங்கள் ரோமானியர்களால் உருவாக்கப்பட்டு நிருவகிக்கப் பட்டது என்றும் வரலாறு தெரிவிக்கின்றது. (நூலகம்: தமிழ் விக்கிபீடியா).

அச்சியந்திரங்கள், காகிதங்கள், அச்சிடும் மை முதலான பொருட்களின் பயன்பாடு பெருகிய கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தான் நூல்களும் பெருகின நூலகங்களும் பெருகின. தற்போதைய நூலகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் நூற்றைம்பது ஆண்டுக்கால வரலாற்றினை மட்டுமே கொண்டுள்ளது. கல்வி மற்றும் மத நிறுவனங்களின் பெருக்கமே நூலகங்களின் பெருக்கத்திற்கு வழிவகுத்தன. உலகம் முழுமைக்கும் இதுவே பொதுவிதி.

அரசு நூலகங்களைப் பொதுவாக தேசிய நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என்று வகைப்படுத்தலாம். இவ்வகை அரசு நூலகங்கள் மட்டுமல்லாமல் பல்கலைக் கழக நூலகங்கள், கல்லூரி, பள்ளி நூலகங்கள், தனியார் நூலகங்கள், வாசகசாலைகள் முதலான பல்வேறு நூலகங்கள் நாட்டில் இயங்குகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிவுத்துறைகள் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் பெரும்புரட்சியை ஏற்படுத்திவருகின்ற, அறிவியல் உச்சம் எனக் கருதப்படுகின்ற கணினியும் இணையமும் நூல்கள் மற்றும் நூலகங்களையும் தமதாக்கிக் கொண்டு விட்டன. இதுநாள்வரை அச்சிட்ட புத்தகங்களைக் கையில் எடுத்துப் புரட்டி வாசித்துப் பழக்கப்பட்ட நமக்கு கணினியும் இணையமும் மின் நூல்களையும் மின்-நூலகங்களையும் புதிதாக அறிமுகம் செய்து வைத்துள்ளன.

மின்-நூல்கள் (e-book)

மின்-நூல் என்பது அச்சிடப்பட்ட /அச்சுக்கேற்ற நூலின் மின்னணுவியல் அல்லது எண்முறைப் பதிப்பாகும். கணினி, பலகைக் கணினி (tablet), திறன்பேசி (smartphone) முதலான கருவிகளின் வாசிக்கத்தக்கதாய் எண்ணிம (Digital) முறையில் உருவாக்கப் பட்டிருக்கும் இவ்வகை மின்-நூல்கள், பொதுவாக மின்-நூல் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட்டாலும் அவை பல்வேறு அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. கோப்பு வடிவம் மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றும் வெவ்வேறு (file format) பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

    1. PDF Book - மின்-நூல்
    2. HTML Book - மீயுரை நூல்
    3. Flip Book - புரட்டும் நூல்
    4. epub - மென்னூல்
    5. mobi      - கிண்டில் நூல்

பொதுவாக நாம் இணையத்தில் காணும் நூல்கள் PDF (Portable Document Format) வடிவத்தில் இருக்கும். பழைய அச்சு நூல்களை அப்படியே ஸ்கேன் செய்து கணினி, பலகைக் கணினி, மற்றும் திறன்பேசிகளில் பயன்படுத்தும்போது அவை PDF வடிவத்தில் இருக்கும். இவ்வகை மின்-நூல்களை உருவாக்குவது எளிது. நாம் அச்சில் உருவாக்கும் நூல்களில் எழுத்து மற்றும் படங்களை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் சிலவகை மின்-நூல்களில் (epub, mobi) அசையும் படங்கள் மற்றும் ஒளி-ஒலிக் கோப்புகளையும் இணைக்க முடியும். மீயுரை நூல்களில் ஒருபக்கத்திலிருந்து வேறு ஒரு பக்கத்திற்கு அதன் மீயுரைகளைச் சுட்டியால் தட்டுவதன் மூலம் செல்ல முடியும். புரட்டும் நூல்களில் அச்சு நூல்களைப் புரட்டுவது போன்ற அனுபவத்தைப் பெறமுடியும். மென்னூல்கள் கணினி வாசிப்புக்கென்றே உருவாக்கப்பட்டவை, இவ்வகை நூல்களில் எழுத்து மற்றும் படங்களைப் பெரிதாக்கவோ சிறியதாக்கவோ முடிவதோடு நூலின் அமைப்பையும் நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளமுடியும். கிண்டில் நூல்கள் அமேசான் கிண்டில் சாதனங்களில் பயன்படுத்து வதற்காக என்றே உருவாக்கப்படுபவை. இவ்வாறு மின்-நூல்களின் ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியான சிறப்பம்சங்கள் உண்டு.

1. மின்-நூலகங்கள் (electronic library)

மின்நூலகம் என்பது எண்ணிம அல்லது மின்னியல் முறையில் சேமித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மின்-நூல்கள், படங்கள், ஆவணங்கள் முதலான தகவல் தொகுப்புகளைக் கணினி மற்றும் இணைய வழி அணுகக்கூடிய நூலகம் ஆகும். இந்நூலகத்தில் சேமித்து, மேலாண்மை செய்து பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும் எண்ணிம உள்ளடக்கங்களை (Digital content) கணினி இணையம் மூலமாக உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தவொரு இணையவழி சாதனத்தின் மூலமும் அணுகிப் பெறமுடியும். மின்-நூலகம் என்பது ஒரு தகவல் மீட்டெடுப்பு ஒருங்கியம் (information retrieval system) ஆகும். மின் நூலகம், மெய்நிகர் நூலகம் (virtual library) எண்ணிம நூலகம் (digital library) போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. மிக விரிவான எண்ணிம உள்ளடக்கங்களைச் சேகரித்து, மேலாண்மை செய்து, பாதுகாத்து அதன் பயனாளர்களுக்கு அத் தகவல்களைத் தேவைப்படும் போது தேவையான அளவில் எழுதப்பட்ட கொள்கை விதிகளின்படி அளிக்கும் அமைப்புக்கு மின்-நூலகம் என்று பெயர்.

இன்றைக்குக் கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில் நுட்பத்தின் வருகையால் ஏற்பட்டுள்ள அறிவுப் புரட்சியின் திறவுகோலாக மின்-நூலகங்கள் இயங்குகின்றன என்றால் என்றால் அது மிகையில்லை. நூல்களைத் தேடி இனி எந்த நூலகங்களுக்கும் பெரும் பொருட்செலவு, காலச்செலவு செய்து அலைந்து திரிந்து சிரமப்படத் தேவையில்லை. நாம் இருந்த இடத்திலிருந்தே கையில் உள்ள திறன்பேசி, பலகைக் கணினி அல்லது பிறவகைக் கணினிகளின் ஊடாக இணையத்தின் வழியாக மின்-நூலகங்கங்களை அணுகி நூல்களை வாசிக்கலாம், பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது அச்சிட்டுக் கொள்ளலாம். மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அறிவியல் மற்றும் சமுதாயவியல் வல்லுநர் களுக்கும் தேவைப்படும் அனைத்து மின்-நூல்களும் இத்தகு மின்-நூலகங்களின் வழியாக இலகுவில் கிட்டும் என்பது கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில் நுட்பத்தின் சாதனையல்லவா?.

இனி இணைய உலகில் சேவை வழங்கிவரும் தமிழ் மின்-நூலகங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

2.தமிழ் இணையக் கல்விக்குழுமம்: (http://tamilvu.org)

உலகெங்கிலுமுள்ள பன்னாட்டு மாணவர்கள் மட்டுல்லாது விரும்பும் எவரும் தமிழ்மொழியைப் பயிலும் நோக்கில் உருவாக்கப்பட்டது தமிழ் இணையப் பல்கலைக் கழகம். இந்நிறுவனம் இப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் இணையக் கல்விக் குழுமம் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் என்று பலவகையான நூல்களும் கிடைக்கின்றன. சங்க இலக்கிய நூல்களுக்கான உரைகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நூலினுள் நமக்குத் தேவையானவற்றை குறிச்சொற்களின் உதவியுடன் தேடும் வசதியும் கிடைக்கிறது.

தமிழ் இணையக் கல்விக் குழுமத்தின் மின் நூலகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து, பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது. இம்மின் நூலகத்தில் நூல்கள், அகராதிகள், பிற பார்வைக் கூறுகள் என்னும் 3 பிரிவுகள் உள்ளன. சங்க கால நூல்களிலிருந்து சமகால இலக்கியம் வரை பல இலக்கிய படைப்புகளின் மின்-நூல்கள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன. வகைப் பிரித்தல், விளக்கவுரைகளுடன் கூடிய தொன்மை இலக்கியங்கள் மற்றும் உரோமன் எழுத்துருவில் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பன இந்நூலகத்தின் சிறப்புகளாக விளங்குகின்றன.

தமிழ் இணையக் கல்விக் கழக மின்-நூலகத்தின் சிறப்புக் கூறுகளாகப் பின்வருவன வற்றைக் குறிப்பிடலாம்.

    இலக்கண, இலக்கிய நூல்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் கிடைக்கின்றன
    சங்க இலக்கியப் பாடுபொருள்கள் எண், சொல், பக்கம், பாடினோர், வள்ளல்கள், மன்னர்கள், திணை, கூற்று, பாடல் முதற்குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், விலங்குகள், மீன்கள் என்னும் தலைப்புகளில் வேண்டிய செய்திகளை உடனடியாகத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.
    அகராதிகளில், தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் தேடிப் பெறும் வசதியுள்ளது.
    தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகத்தார்க்கு எடுத்து விளக்கும் வகையில் அமைந்த சைவ, வைணவ, இசுலாமிய, கிறித்துவக் கோயில்களின் ஒலி, ஒளி காட்சிப் பதிவுகள் மற்றும் நாட்டியம், பொம்மலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம், ஜல்லிக்கட்டு முதலான பண்பாட்டுக் காட்சியகம் வியக்கத்தக்க வகையில் இடம்பெற்றுள்ளது.
    திருத்தலங்கள் என்னும் வரிசையில் 14-சமணத் தலங்கள், 101 சைவத் தலங்கள், 93-வைணவத் தலங்கள், 9-இசுலாமிய தலங்கள், 13-கிறித்துவத் தலங்கள் காட்சியாக்கப் பட்டுள்ளன.
    தேவாரப் பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி உள்ளது.

இவ்வாறு பல வசதிகளைக் கொண்ட இம்மின்நூலகம் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய நூல்களை விரும்பிக் கற்க விழைவார்க்கும் பயன்படும். இதில் 350க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இலக்கிய வரலாற்று அடிப்படையில் நூல்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

3.மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்: (http://www.projectmadurai.org/)

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் தலைவராக சுவிட்சர்லாந்தில் இருக்கும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் என்பவரும் துணைத் தலைவராக அமெரிக்காவிலுள்ள முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் என்பவரும் உள்ளனர். இந்நூலகத்தில் திருக்குறள், ஔவையார் பாடல்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை, திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப் பாடல்கள், பாரதியார், வைரமுத்து கவிதைகள், படைப்புகள், உரைநூல்கள் சுமார் 350லிருந்து 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பு கூறாகக் குறிப்பிடத்தக்கது யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புச் செய்து இவர்களின் அனுமதியோடு அம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். இவையல்லாமல் இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் ஒருங்குறியில் கிடைப்பதால் எழுத்துருச் சிக்கல் இல்லை. மதுரைத் திட்டம் அமெரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றது. தற்போது இம் மின்-நூலகம் தமிழ்.நெட் இணைய தளத்துடன் இணைந்து செயல்படுகிறது. மின்-நூல்களை PDF கோப்புகளாகவும், Unicode, TSCII எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் இத்தளத்தில் கிடைக்கின்றது.

 4.சென்னை நூலகம்: (http://www.chennailibrary.com)

திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம், சென்னை நூலகம் ஆகும். இது வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் (Gowtham Web Services) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும்.

சென்னை நூலகத்தில் சங்க கால இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரையிலான நூல்கள் இடம் பெற்றுள்ளன. அவையும் ஒருங்குறியில் இருக்கின்றன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், ஐஞ்சிறு காப்பியங்கள், யாப்பருங்கலக்காரிகை, நால்வர் நான்மணிமாலை, திருவிசைப்பா, திருவுந்தியார், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி போன்ற நூல்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. இவற்றை எண்கள் அடிப்படையில் தேடிப் பெற்றுக் கொள்ளலாம். இவையேயன்றி கம்பர், திருஞானசம்பந்தர், திரிகூடராசப்பர், குமரகுருபரர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், அண்ணா, மு. வரதராசன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளும் இதில் கிடைக்கின்றன.

இந்நூலகத்தில் உறுப்பினர்களாக இணைவோருக்குத் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை PDF கோப்புகளாகத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை 20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுன்கிறன.

5.நூலகம் திட்டம்: ( http://www.noolaham.org )

நூலகம் திட்டம் என்பது, ஈழத்துத் தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணிப் பாதுகாத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ முயற்சியாகும். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்பும் எவரும், எந்த நூலையும் மின்னூலாக்கம் செய்யலாம். குறிப்பாக, மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும். இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன. இம்மின் நூலகத்தை உருவாக்கியவர்கள் தி. கோபிநாத், மு.மயூரன் ஆகியோர் ஆவர். 2005-ல் தொடங்கி இடையே சில காரணங்களால் தடைப்பட்ட இத்திட்டம் 2006 தை மாதம் மீண்டும் புதுப்பொழிவுடன் பல புதிய மின்நூல்களைக் கொண்டு வெளிவந்தது. வாரம் ஒரு மின்னூல் என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் செயற்பட்டு வருகிறது.

நூலகத் திட்டம் குறித்து நூலகம் வலைத்தளத்தின் முகப்பு வாசகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி.

ஈழத் தமிழ் நூல்களை மின்-நூல்களாக்கிப் பாதுகாத்து வழங்கும் நூலகம் திட்டத்தினை நாம் இணைய ஈழ நூலகம் என்றே குறிப்பிடலாம்.

6.தமிழ் மரபு அறக்கட்டளை: (http://www.tamilheritage.org/)

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2001-ஆம் ஆண்டு உலகு தழுவிய ஓர் இயக்கமாக உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் உலகில் இருக்கும் ஓலைச்சுவடிகள், அரும்பெரும் பழைய நூல்களை நகல் எடுத்து இணையத்தில் மின் பதிப்பாக வெளியிடுவது ஆகும்.

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஓர் அறக்கட்டளையாகும். இன்றையக் கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில்நுட்பங்களின் துணையோடு அழிந்து வரும் தமிழ் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கவும் அவற்றை இலகுவாகப் பகிர்ந்து கொள்ளவும் தமிழ் மரபு அறக்கட்டளை வழிவகுக்கின்றது. கணினித் தொழில்நுட்பங்கள், தமிழ் மரபுச் செல்வங்களை, ஒலி, ஒளி, எழுத்து வடிவம் எனப் பல்வேறு வழிகளில் அவற்றை எண்ணிமப் பதிவாக்க உதவுகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியமாக இப்பணியில் ஈடுபட்டு வருவதோடு தமிழின் மரபைப் பாதுகாக்கும் ஆர்வலர்களை இணைக்கும் பாலமாகவும் செயல்படுகின்றது.

மேலும், தமிழ் மரபு அறக்கட்டளை மின்பதிப்பாக்கம், மின்னூலாக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இணையத்தில் மின் நூல்களுக்கான அட்டவணை ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இவற்றில் அரக்குமாளிகை நாடகம், அமெரிக்க அன்னையான பிள்ளைத் தமிழ், சபரி மோட்சம், சுபத்திரை மாலையிடு போன்ற அரிய நூல்கள் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

7.ஓபன் ரீடிங் ரூம் : (www.openreadingroom.com)

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்களை, மின்னூல் வடிவில் இலவசமாகப் படிக்க உதவும் ஓர் இணையதளம் ஓபன் ரீடிங் ரூம் ஆகும். இதன் முகப்புப் பக்கத்தில் அரசியல், சிறுகதை, நாடகம், நாவல், கவிதை, வரலாறு என வகைவகையான மின்னூல் கோப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பக்தி இலக்கியம் முதலான தமிழிலக்கியங்கள் அங்கே வாசிக்கக் கிடைக்கின்றன. அ.சிதம்பரநாத செட்டியாரில் தொடங்கி அண்ணாதுரை, அசோகமித்திரன், கல்கி, குன்றக்குடி அடிகளார், பரிதிமாற் கலைஞர், புதுமைப்பித்தன் எனப் பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களோடு உடுமலை நாராயணகவி, சுரதா, மீரா, அழ. வள்ளியப்பா எனப் பிரபல தமிழ்க் கவிஞர்களின் பட்டியலும் நீள்கிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், காப்புரிமையுள்ள நூல்கள் எனத் தொடரும் பட்டியல்களில் பிடித்தமான நூலைத் தேர்வு செய்து வாசிக்கலாம்.

குறிப்பிட்ட சில புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம். நூல்கள் சேர்க்கப்பட்ட மாத வரிசையிலும் பட்டியலைப் பார்வையிடலாம். இதற்கென உறுப்பினர் கணக்குத் தொடங்க வேண்டியதில்லை. தனியே எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்யவும் தேவையில்லை. புத்தகத்தின் பக்கங்களை அடுத்தடுத்துத் திருப்பி வாசிப்பதைப்போல, ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி வாசிக்க முடியும். இதனால், புத்தகத்தை நேரடியாகப் படிப்பது போன்றதோர் உணர்வு ஏற்படுகிறது. சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இத்தளத்தில் 2,300 படைப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன. சிங்கப்பூர் வாழ் தமிழரும், மூத்த பத்திரிகையாளருமான ரமேஷ் சக்ரபாணி இத்தளத்தை நடத்தி வருகிறார். ‘இலவச இணைய நூலகம்’ என்றே இதனை அவர் குறிப்பிடுகிறார்.

மேலே குறிப்பிட்டுள்ள மின்-நூலகங்கள் மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் தமிழ் மின்-நூல்களைச் சேகரித்துப் பாதுகாத்து இணையப் பயனாளர்களுக்கு வழங்கி வரும் சேவையால் மின்-நூலகங்களாகச் செயல்படுகின்றன.

மின்-நூல் தொழில்நுட்பம் மற்றும் மின்-நூலகங்களின் வருகையால் வாசிப்புக்கான எல்லைகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் அல்லாத உலகின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் தமிழ் நூல்கள் கிடைப்பது எளிதாகியுள்ளது. அச்சில் கிடைக்காத, மறுஅச்சு காணாத பல பழைய தமிழ் நூல்களை இன்றைய தலைமுறையினருக்கு வழங்கிய பெருமை மின்-நூலகங்களையே சாரும். நூல்களையும் நூலகங்களையும் இனி உடன் சுமந்து செல்ல வேண்டிய தேவையில்லை, நினைத்த இடத்தில் நினைத்த பொழுதில் நூறாயிரத்திற்கும் மேலான தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை உடனடியாக வாசிக்கும் வாய்ப்பு மின்-நூலகங்களால் கிட்டியுள்ளது. நேரடியாகத் தொட்டு வாசிக்கும் அனுபவத்தை மின்-நூல்கள் தரவில்லை என்ற குறை ஒருபக்கம் இருந்தாலும் காலமாற்றத்தால் ஏற்படும் ஊடக மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நம்மை அணியப்படுத்திக் கொள்ளுதலே அறிவுடைமை.

- பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ, தமிழ்த் துறைத் தலைவர், தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி-8

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39843-2020-03-10-04-32-23

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கவுன்சிலர்     சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் உதவிகரம் நீட்டினார். சிவகங்கை அருகே ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் கூலித் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் இலங்கை தமிழர்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே முடங்கினர். மேலும் வேலைக்குச் செல்லாததால் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் இலங்கை தமிழர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். அவர் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை உணவுப் பொருட்கள் வழங்க உள்ளார். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிப்பதற்கான கருவியும் இலவசமாக வழங்கினார். அவரது செயலை இலங்கை தமிழர்கள் மனதார பாராட்டினர். https://www.hindutamil.in/news/tamilnadu/548053-councilor-help-sri-lankan-tamils-who-were-left-without-food-near-sivaganga.html  
    • ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிப்பு:  கலெக்டர் கதிரவன் பேட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரத்தை பார்வையிட்ட கலெக்டர் கதிரவன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:- ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து ஈரோடு கிழக்கு ,கோபி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற எந்திரம் தேவைப்பட்டால் எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க தயாராக இருக்கிறார்கள் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது நேற்று கூட முதலமைச்சர் கடைகளின் நேரங்களை குறைத்து அறிவித்துள்ளார். ஈரோடு பொருத்தவரை மக்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். 28 பேருக்கு கரோனா தொற்றுக் உறுதி செயப்பட்டுள்ளது. நாலு பேர் கோயம்புத்தூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றுவரை 89 பேர் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதில் ஏற்கனவே 28 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேரின் ரத்த, சளி மாதிரிகள் முடிவு இன்னும் வர வேண்டியுள்ளது. 46 பேருக்கு தொற்று இல்லை என உறுதியாகி உள்ளது. இதுபோக கோபி இரண்டு பகுதியில் கோபி டவுன் கரட்டடிபாளையம், நம்பியூர் பவானியில் கவுந்தப்பாடி சத்தியமங்கலம் மற்றும் ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது 29,809 குடும்பங்கள் உள்ளன. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 809 பேர் உள்ளனர் அவர்கள் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர். நேற்று உள்ளாட்சி அமைச்சர் அனைத்து வீடுகளிலும் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் அதற்கான அறிவிப்பு இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம். அறிவிப்பு வந்ததும் எல்லா வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யப்படும். ஈரோடு பொறுத்தவரை மளிகை பொருட்கள் தட்டுப்பாடு இல்லை இதுகுறித்து ஏற்கனவே கூட்டம் நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கரோனா குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. இதுவரை சமூக தொற்றாக அது மாறவில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நாம் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தென்னரசு எம்எல்ஏ மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்பட பலர் உடனிருந்தன   https://www.hindutamil.in/news/tamilnadu/548036-over-1-lakh-people-isolated-and-monitored-in-erode-district-1.html  
    • செந்தில் தேத்தண்ணீர் கடை பகிடி.😊  
    • யாழில் ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு! சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு Report us Vethu 5 hours ago கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்களில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார். முதலில் ஒரு நோயாளியும் பின்னர் தலா மூன்று நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 16 பேரின் இரத்த மாதிரிகள் சோதனையிட்ட போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றுமொரு தொகுதியினரின் மருத்துவ அறிக்கைகள் இன்று வெளியாகும் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/security/01/242722?ref=home-top-trending