• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

கனடாவில் மார்பில் சுடப்பட்டு ஈழத்தமிழ்ப் பெண் படுகொலை

Recommended Posts

கனடாவின் ஸ்காபரோவில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை ரொரன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து Brimley and Pitfield roads, south of Sheppard Avenue East பகுதிக்கு காலை 10 மணிக்கு முன்னதாக அவசரக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த இரு பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் இறந்திருந்ததுடன், மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தார்.

பலியானவர் ரொரன்ரோவைச் சேர்ந்த தீபா சீவரத்னம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சனிக்கிழமையன்று பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டமை தான் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

deepa.jpeg

 

கொலைச் சந்தேக நபர் ஆறடிக்குள் உயரமான கறுப்பு நிற ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளியை பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

The investigation remains ongoing and officers are urging anyone who was in the area at the time, or has any information about the shooting, to immediately contact police at 416-808-7400, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), online at www.222tips.com

https://www.tamiltwin.com/police-identify-38-year-old-woman-killed-in-scarborough-shooting/

 • Sad 2

Share this post


Link to post
Share on other sites

என்ன கொடுமையப்பா...... 
அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம்... கனடாவிலும் ஆரம்பித்து விட்டதா?
 
ஆழ்ந்த அனுதாபங்கள்.   

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு பக்கம் கோரோனோ கிருமி தாக்குதல். இது வேற; எந்த மண்டை பிழையின் செயலோ. மகிழ்ச்சியாய் வாழ்க்கையை வாழவேண்டிய வயது. கனடாவில் இவ்விளம் பிள்ளைக்கு இப்படி ஒரு முடிவு. ஆழ்ந்த அனுதாபங்கள்! 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

கறுப்பு நிற ஆண்

On 3/15/2020 at 7:53 AM, தமிழ் சிறி said:

என்ன கொடுமையப்பா...... 
அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம்... கனடாவிலும் ஆரம்பித்து விட்டதா?
 
ஆழ்ந்த அனுதாபங்கள்.   

எங்கட ஆக்களிலேயே இருக்கினம்.... கறுவல் மாதிரியே.... 

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி டொரோண்டோவில்.

முன்னணி யாழ்ப்பாண பெண்கள் பாடசாலை அதிபராக இருந்தவர். அவரது மகன் ஒரு மாற்றுத் திறனாளி. ஆனால், நல்ல வேலையில் இருந்தார்.

அவர் ஸ்பொன்சார் பண்ணி  ஒரு பெண்ணை ஊரில் இருந்து அழைப்பித்தார். இவரும், தாயாரும் விமான நிலையத்தில் காத்திருந்து, வரவில்லையே என்று வீடு திரும்பினர்.

தவறான நேரத்தினை கொடுத்து, வேறு நேரத்தில் வந்த பெண்,  விமான நிலையத்திலேயே, தனது ஆண் நணபர் உடன் கிளம்பி போய் விட்டார்.... ஆண் நண்பருக்கு ஸ்பொன்சார் செய்யக்கூடிய வகையில் வேலையோ, நடத்தையோ இல்லாததால், இந்த குறுக்கு வழியினை நாடி உள்ளனர்.

ஊரில் கேட்டால், அவவுக்கு கனடா வர விருப்பமில்லை எண்டு அங்கேயே கலியாணம் செய்து விட்டார் என்று குழம்பினர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர், வேறு பெண்ணை ஸ்பொன்சார் பண்ண முனைந்த போது, உண்மை தெரிந்து துவண்டு போயினர். அந்த பெண்ணை நேரடியாக எதிர்கொண்ட போது, அவரது உடல் வலது குறைவு குறித்து சொல்லி, நான் ஏன் உன்னை கட்டிக்கொண்டு வாழவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

தாயாரும் இந்த கவலையில் மறைய, அவர் வேறு பெண்ணை மணந்து நனறாகவே உள்ளார்.

அந்த பெண்ணின் வேலை வெட்டி இல்லாத  ஆண் நண்பர் வேறு பெண் தொடர்புகளால் குடும்ப வாழ்வு சீரழிந்தது.

இந்த மாற்றுத் திறனாளி நபர் போல் எல்லோரும் இருக்க முடியாது. சிலர் கொலைக்கும் போவார்கள். ஆகவே இந்த பெண்ணின் மறுபக்கம் தெரியாத வரையில்.... நாம் பெரிதாக ஒன்றும் சொல்ல முடியாது.

காரணம் இல்லாமல் கொலை வெறி வந்து இருக்க முடியாது. கொள்ளை நடந்த மாதிரி தெரியவில்லை.

எதுவாகினும் RIP

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?...கனடாக்காரருக்கு தெரியாதோ?...காயப்பட்ட மற்ற பெண் ,இறந்த பெண்ணினுடைய தாய் என்று சொல்லினம் ....ஆத்மா சாந்தியடையட்டும் 

 

 • Confused 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
On 17/3/2020 at 16:57, ரதி said:

உண்மையில் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?...கனடாக்காரருக்கு தெரியாதோ?...காயப்பட்ட மற்ற பெண் ,இறந்த பெண்ணினுடைய தாய் என்று சொல்லினம் ....ஆத்மா சாந்தியடையட்டும் 

 

https://www.thestar.com/news/gta/2020/07/08/three-men-charged-with-first-degree-murder-in-death-of-38-year-old-woman-in-march.html

 

இவரின் கணவர் உட்பட மூவரை கைது செய்து 1st  டிகிரி கொலைக் குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது :(

 

Edited by Sabesh

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கனடாவில் சுட்டுக் கொலை -மேலும் இருவர் கைது

On Jul 9, 2020

625.300.560.350.160.300.053.800.500.160.

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்து மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோ Scarborough-ல் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி யாழ்ப்பாணம் கொற்றாவத்தையைச் சேர்ந்த தீபா சீவரட்ணம் என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி Toronto-வை சேர்ந்த 28 வயதான Steadley Kerr என்பவரை பொலிசார் கைது செய்தனர். அவர் மீது இரண்டாம் நிலை கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Steadley Kerr வரும் 23-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக Oshawa-வை சேர்ந்த ஹரி சாமுவேல்ஸ்(27) ரொறன்ரோவைச் சேர்ந்த விஜேந்திரன் பாலசுப்பிரமணியம்(42) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

https://www.thaarakam.com/news/141206

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இது இவருடைய தேர்தலை மையப்படுத்தி எடுத்திருந்த முடிவாக இருக்குமோ என நினைத்தாலும் கூட இந்த COVID-19ன் பாதிப்பினால் உள்நாட்டு வளங்களில் தங்கியிருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது எனலாம்.. அதேபோல, நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியமோ தெரியாது.. ஆனால் சில offshore வேலைகளை  திரும்பவும் உள்ளூரிற்கே கொண்டு வர இருப்பதாக நான் வேலை பார்க்கும் நிறுவனமும் அறிவித்துள்ளது..ஏனெனில் lockdown சமயத்தில் இந்தியா, பிலீப்பீன்ஸ் teamsற்கு உடனடியாக வீட்டிலிருந்தே வேலைபார்க்க  remote access கொடுக்கமுடியாமல் போனதால், நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியதாயிற்று..       
  • இனரீதியாக இல்லை. ஆனால், பின்தங்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக , தெற்கு லண்டனில் கறுப்பர்கள் கூடுதலாக வாழும் பிரிக்ஸ்ட்ன், கிழக்கு லண்டனில் பங்களாதேஸ் காரர்கள் வாழும் வைட்சேப்பல் போன்ற இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில பிரச்னை என்னவென்றால், வருடந்தோறும், சராசரிக்கும் குறைவாவாக பெறுபேறு எடுக்கும் பாடசாலைகள் உள்ள பகுதிகள் எல்லாம், இம்முறை குய்யோ, முறையோ... என்று அலம்பறை பண்ணுவது. ஆகிலும் அரிக்கண்டம் கொடுத்தால், அரசு... சரி டிசம்பரில் சோதனை வைக்கிறோம் எடுங்கோ எண்டால், எல்லோரும் பம்முவினம். அரசு என்னவும் செய்யலாம். பல்கலைக்கழகங்களை கூட ஜனவரியில் ஆரம்பியுங்கள் என்றும் சொல்ல முடியும்.  
  • முன்பு யுத்த காலங்களில் பலரை துரோகிகள் என்று தவறான தகவல்களை எமது தமிழ் புலம்பெயர் ஊடகங்கள் என்று நாம ் நம்பியவை செய்தபோது அவர ்கள் கூறியவை எல்லாவற்றையும் உண்மை என்றே நான் கூட நம்பியிருந்தேன். இப்போது தான் தெரிகிறது. புலம் பெயர் தேசிய ஊடகங்கள் என்று தமக்கு தாமே பெயர் வைத்த ஊடகங்கள் எத்தனை  அடாவடியும் அயோக்கிதனங்களையும் செய்திருக்கின்றன என்று. 
  • செஞ்சோலையில் உயிரிழந்த ஒவ்வொரு மாணவியின் பெயரிலும் வகுப்பறை: முல்லைத்தீவில் நெகிழ வைத்த தனியார் கல்வி நிலையம்!   கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படையின் போர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்களாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டும் 150 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த இப்படுகொலை நிகழ்வினுடைய 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று தமிழர் தாயகப் பகுதி எங்கும் இடம்பெற்று வருகின்ற நிலையில் முல்லைத்தீவு நகர் பகுதியில் இயங்கி வருகின்ற பிரதான தனியார் கல்வி நிலையம் ஆகிய நெய்தல் கல்வி நிலையத்தின் வகுப்பறைகளுக்கு செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக பெயர்ப்பலகைகள் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டதோடு, குறித்த மாணவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் பெயர் பலகைகள் பொறிக்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தனர்.    https://www.pagetamil.com/140209/