Jump to content

Recommended Posts

  • Replies 134
  • Created
  • Last Reply
  • 2 weeks later...

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா அச்சம்!
3 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்று வந்த மூவரின் குடும்பங்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இரண்டு குடும்பங்களும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு குடும்பமும் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்றுவரை 252 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பங்களும் இன்றைய தினம் முதல் எதிர் வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.ibctamil.com/srilanka/80/146677?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

வட மாகாணத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவக்கூடிய ஆபத்து - வைத்தியர் எச்சரிக்கை

வடக்கு மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.யமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

வட மாகாணத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவக்கூடிய ஏது நிலை உள்ளது. மக்கள் இது தொடர்பில் விழப்பாக இருக்கவேண்டும்.

சமூக இடைவெளியினை பேணாத காரணத்தால் இதன் தாக்கம் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம். இதனால் பொதுமக்கள் ஒன்று கூடுதல், தேவையற்ற பிரயாணங்களை தவிர்க்க வேண்டும்.

இதனை கட்டுப்படுத்த மருத்துவர்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை.

தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று தொடர்பில் ஆராயும் மூலக்கூற்று பரிசோதனை தினம் தோறும் மேற்கொள்ளப்படுகிறது.

தினமும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 50- 90 வரையானவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

பொது மக்கள் முக கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/146819

Link to comment
Share on other sites

யாழ்பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக இறுதியாண்டு மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள்வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும். எனினும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வர முடியாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் பரீட்சை நடவடிக்கைகள் நாளை வழமைக்குத் திரும்பும் என்று வளாகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அவரது உயிரியல் மாதிரிகளின் பி சிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரது பெற்றோரின் பி சிஆர் பரிசோதனை முடிவிலும் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது.

அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை மீளத் திறந்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சையை நடத்துவது தொடர்பில் புதிய கட்டுப்பாட்டுடன் சுகாதாரத் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள்வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது.

அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும். எனினும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வர முடியாது. அவர்களுக்கான உணவு வழங்கப்படவேண்டும்.

அத்தோடு விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க முடியும். மாணவர்கள் சமுக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதோடு அடிக்கடி கைகளை உரிய தொற்று நீக்கிகொண்டு கழுவுதல்வேண்டும்.

எந்தவொரு வெளிமாவட்ட மாணவரும் வீடு சென்று திரும்பிவர அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/146999

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.