Jump to content

Recommended Posts

ஊரடங்கு தளர்வால் நோயாளர்கள் வருகை அதிகரிப்பு: பணிப்பாளர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை!

T.Sathyamoorthy-Director-of-Jaffna-Teaching-Hospital.jpg

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் ஆயத்தங்களோடு வரவேண்டும் எனவும் சுகாதார நடைமறைகளைப் பின்பற்ற வேண்டுமென அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வீட்டிலிருந்து பலரைக் கூட்டிக்கொண்டு வருதலைத் தடுக்க வேண்டும். இங்கு ஒருவர் நோயாளியாக இருக்கின்றபோது ஒரு நாளில் ஒரு தடவை வந்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கிச் சென்றால் போதுமானதாக இருக்கும்.

இப்போது, வைத்தியசாலையில் இருக்கின்ற பிரிவுகள், தொலைபேசியூடாகக் கிடைக்கும் கோரிக்கைக்கு அமைவாக மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனைவிட தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி ஊடாக அவர்களுக்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

வடக்கில் காணப்படுகின்ற மிக முக்கியமான நோய்களுக்குச் சிகிச்சையளிக்கின்ற நிறுவனமான இந்த வைத்தியசாலையை இயக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே இந்த நிறுவனமானது, இங்கே வருகின்றவர்களை கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தி அவர்களுக்கான சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றது.

அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சிறப்பு வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகவே இந்தச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவேண்டும். மிக முக்கியமான ஏனைய நோய்களுக்கு எந்தவித இடர்பாடுகள் இன்றி சிகிச்சையளிக்க உதவ வேண்டும்.

இதேவேளை, கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்புகளைப் பேணிய, வைத்தியசாலைகளுக்கு வெளியே உள்ளவர்களிடமிருந்தும் மாதிரிகளைப் பெற்று சோதனை செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஒருவருக்கும் தொற்று அடையாளப்படுத்தப்படவில்லை. இருப்பினும் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து குறிப்பாக வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கும் எதிர்வரும் சில நாட்களில் சோதனை ஆரம்பமாகும்.

அவர்களிடையேயும் காய்ச்சல் அல்லது இந்த தொற்று சம்பந்தமான அறிகுறிகள் தென்படும்போது அவர்கள் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

கொழும்பிலிருந்து இப்போது கொண்டுவரப்பட்டவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அதிகளவில் பதற்றம் அடையத் தேவையில்லை. இருப்பினும் மிக அவதானமாக இருக்கவேண்டும். ஏனெனில் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் இதன் பரவல் கூடிக்கொண்டு செல்கின்றது.

இதனால் நாங்கள் தொற்றுக்குள்ளானவர்களை விரைவாகக் கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பதோடு தொற்றுடையவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்று பற்றி நாங்கள் அதிகளவு கரிசனை கொள்வதோடு, தொற்றைப் பரவலடையச் செய்யாமல் இருப்பதற்கான உதவிகளைச் செய்யவேண்டும். அதேவேளை, தொற்று பற்றி அதிகளவு பதற்றம் இல்லாமல் கட்டுப்படுத்த உதவவேண்டும்” என்றார்.

http://athavannews.com/ஊரடங்கு-தளர்வால்-நோயாளர்/

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply

முகக்கவசம் அணியாத மக்களை எச்சரிக்கும் நடவடிக்கையில் பொலிஸ்

உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்த மாஸ்க், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்கிறார்கள்.

இலங்கையில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணியுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் பொரும்பாலன மக்கள் அரசாங்கத்தின் உத்தரவினை பொருட்படுத்தாது மாஸ்க் அணியாது செல்வதனையடுத்து வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு பொலிஸ் பிரிவினர் இன்று (24) வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாஸ்க் அணியாமல் செல்பவர்களை மறித்து எச்சரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு மாஸ்க் அணியாது செல்பவர்களை எச்சரிப்பது மாத்திரம் அல்லாது அவர்களது வாகனத்தினை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு மாஸ்க் வாங்கி அணிந்து வந்து வாகனத்தினை எடுத்துச் செல்லுமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்தனர்.

https://newuthayan.com/முகக்கவசம்-அணியாத-மக்களை/

Link to comment
Share on other sites

வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை விரைவில் உறவினர்களுடன் சேர்ப்பது கட்டாயம்- வைத்தியர் சத்தியமூர்த்தி

வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை சுகாதார முறைப்படி உறவினர்களுடன் விரைவில் சேர்க்க வேண்டியது கட்டாயமானது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழ்நிலையில் தவறான வழியில் சொந்த இடங்களுக்கு வருவதற்கு அவர்கள் எப்படியும் முயற்சிப்பார்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனைத் தடுக்க முறையான செயன்முறையில் உறவினர்களிடம் அவர்களை சேர்க்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஊடக சந்திப்பை நடத்திய அவர், கொழும்பில் இருந்து யாழிற்கு தப்பித்துவந்தவர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நாட்டில் பல நாட்களாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதனால் வெளி மாவட்டங்களில் சிக்கியிருப்பவர்கள் உறவினர்களுடன் சேர நினைப்பது தடுக்க முடியாத மன நிலையாகும்.

இதனைவிட கொரோனா என்ற அச்ச நிலைமை பரவியிருப்பதனால் அவர்கள் விரைவாக குடும்ப உறுப்பினர்களை சந்திக்க முயற்சிப்பார்கள். ஆகவே அவர்கள் இவ்வாறு அனுமதியின்றி தவறான வழிகளில் வர முயற்சிக்கலாம். அது தடுக்கப்பட வேண்டும்.

அதேசமயம், அவர்களுடைய மனநிலையைப் பொறுத்தவரை அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார்கள். ஏதாவது ஒரு வழியை நாடி அவர்கள் உறவினர்களுடன் ஒன்றிணைய முயற்சிக்கக் கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொருத்தமான வழிமுறையில் விரைவாக இவ்வாறு பிரிந்து இருப்பவர்களை இணைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில், அவர்கள் இந்த கொரோனா வைரஸை ஒரு கொடிய வியாதியாக எண்ணக் கூடும். அவர்களுக்க போதியளவில் இந்த வைரஸ் தொற்று என்ன செய்துவிடும் என்பது முழுமையாகத் தெரிந்திருக்காது. எதிர்காலத்தில் என்ன நடந்துவிடுமோ என்ற பயப்பீதியில் இருக்கின்ற காரணத்தினால் இவர்கள் குடும்பத்தோடு ஒன்றிணையக்கூடிய சகல வழிகளையும் நாடுவார்கள்.

ஆகவே இதனைக் கருத்திற்கொண்டு, இதற்குப் பொறுப்பான சகல அதிகாரிகள் அவர்களுக்கான நடைமுறைகளைத் தெரியப்படுத்தி அவர்களை பாதுகாப்பான முறையில் உறவினர்களடன் ஒப்படைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கையாககும்.

http://athavannews.com/வெளிமாவட்டங்களில்-சிக்க/

Link to comment
Share on other sites

யாழ்..மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

ஊரடங்கு நேரத்தில் சீவல் தொழிலாளர்களினால் சேகரிக்கப்படும் பதநீரை போத்தலில் அடைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் பனை அபிவிருத்தி சபை மற்றும் கலால் திணைக்களம் , சுகாதார பரிசோதகர்களுடன் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கலந்துரையாடலின் முடிவில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன குறிப்பாக சீவல் தொழிலாளர்கள் ஊரடங்கு நேரத்தில் அவர்களால் சேகரிக்கப்படும் பதநீரை விற்பனை செய்ய முடியாதவாறு அரசாங்கத்தினால் சகல தவறணைகளும் மூடப்பட வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.

சீவல் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக இன்றைய தினம் குறித்த கூட்டம் இடம் பெற்றிருந்தது.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் வரை சீவல் தொழிலாளர்களால் சேகரிக்கப்படும் பதநீர் அந்தந்த பிரதேசங்களில் உள்ள சங்கங்கள் பெற்று அவர்கள் அதனை போத்தலில் அடைக்கவுள்ளதோடு அத்தோடு மிகுதி பதநீரை மதுசார தயாரிப்புக்காக கலால் திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பதாகவும் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.

ஊரடங்கு வேளையில் பதநீர் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்குரிய அனுமதிகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனுமதிகள் குறித்த வரையறையுடன் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/141832?ref=imp-news

Link to comment
Share on other sites

சற்று முன் வெளியான யாழ் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 27 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

  • யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்.
  • பொது வைத்தியசாலை வவுனியா - 4 பேர்
  • வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 10 பேர்
  • புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்.
  • இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையம் - 5 பேர்
  • கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையம் - 3 பேர்

https://www.ibctamil.com/srilanka/80/141893?ref=home-imp-parsely

tamil-24.05corona-copy.jpg

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிச்செல்ல 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்!

யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் தங்களுடைய சொந்த மாவட்டத்திற்குத் திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 2 ஆயிரம் பேர்  தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட 2 ஆயிரம் பேர் அத்தியாவசியமாக செல்ல வேண்டியவர்களே என அவர் குறிப்பிட்டார்.

அடுத்தக் கட்டமாக சிலர் அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அதி இடர் வலயமாகக் கருதப்படும் மாவட்டங்களுக்கு செல்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தற்போதய நிலையில் அனுப்பப்படமாட்டார்கள் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/யாழ்ப்பாணத்திலிருந்து-வ/

Link to comment
Share on other sites

வடக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு

In இலங்கை     April 29, 2020 10:08 am GMT     0 Comments     1365     by : Jeyachandran Vithushan

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய 21 மாவடங்களிலும் கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று நண்பகல் வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளாக 622 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 311 பேர் இம்மாதம் 22ஆம் திகதியிலிருந்து இன்றுவரை ஒருவாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 311 பேரில் 235 பேர் கடற்படையினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/வடக்கு-மாகாணத்தில்-மூன்ற/

Link to comment
Share on other sites

ஊரடங்கு இல்லாததால் யாழ் திருநெல்வேலிச் சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்

கொரோனா வைரஸ் மக்களால் மக்களுக்கு பரவிவருகின்றது என்பதை மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர்.

தற்பொழுது யாழ்ப்பாண குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு உள்ளநிலையில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் சந்தைகள் திறக்கப்படுவதற்கு அனுமதிவழங்கப்படவில்லை.

இந் நிலையில் சந்தைக்கு அருகாமையில் உள்ள வீதிகளில் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை தற்பொழுது திறக்கப்படாததன் காரணமாக திருநெல்வேலி சந்தைக்குஅருகாமையில் உள்ள கலாசாலை வீதியில் இயங்கும் திருநெல்வேலி பொதுச் சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியினை பேணாது பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவதை இன்றைய தினம்அவதானிக்க முடிந்தது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரினால் சமூக இடைவெளியினைபின்பற்றாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுருக்கும்நிலையிலும் இன்றைய தினம் யாழ்ப்பாணம் கலாசாலை வீதியில் பொதுமக்கள் சமூகஇடைவெளியினை பேணாது பொருள் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

எனினும் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையினை கண்காணிப்பதற்கு தவறியுள்ளமை சுட்டிக் காட்டப்படுகின்றது.

https://www.tamilwin.com/community/01/244748?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

முழங்காவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒருவருக்கு கொரோனா – வைத்தியர் சத்தியமூர்த்தி

In இலங்கை     April 30, 2020 4:36 pm GMT     0 Comments     1447     by : Benitlas

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர்,

முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்து நேற்று போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி. (மேற்படி பெண் கடந்த 11 ஏப்ரல் முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவர். அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று என 13 ஏப்ரல் உறுதிப்படுத்தபட்டவர்.)

ஏனைய பரிசோதனைக்கு உட்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டது.

…………………….

இன்று 76 பேருக்கான COVID – 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் – 9 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 7 பேர்.

* ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை – ஒருவர்.

* வவுனியா பொது வைத்தியசாலை – 3 பேர்.

* முல்லைத்தீவு பொது வைத்தியசாலை – ஒருவர்.

* முல்லைத்தீவு வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்.

* முல்லைத்தீவு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையம் – 54 பேர்.
(வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு 26 ஏப்ரல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் 21 ஏப்ரல் முல்லைத்தீவு பதவிசிரிபுர நோக்கி பயணித்த ஏனைய படைவீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்)“ என பதிவிட்டுள்ளார்.

http://athavannews.com/முழங்காவில்-பகுதியில்-தன/

tamil-30.04corona-copy.jpg

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலவரம்

In ஆசிரியர் தெரிவு     May 2, 2020 6:17 am GMT     0 Comments     1553     by : Jeyachandran Vithushan

கொரோனோ தொற்று தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்களை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

அதன்படி இதுவரை கொரோனா தொற்றுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 என்றும் 05 பேர் சந்தேகத்தில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என வெளியேறியவர்கள் எண்ணிக்கை 170 என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வெளியே 661 பேர் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பரிசோதனையின் பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதுவரை 09 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-யாழ்ப்பாணத்/

Link to comment
Share on other sites

நெருக்கடியான காலத்தில் கல்வி தொடர்பாகச் சிந்தித்தல்

98-1.jpeg

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது.

கொரொணாத் தொற்றினை அடுத்து நாட்டின் கல்வி மற்றும் உயர்கல்விக் கட்டமைப்புக்கள் முன்னெப்போதும் இல்லாத பல சவால்களினை முகம்கொள்கின்றன‌. பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், ஏனைய உயர் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கின்றன. நோய்த் தொற்று இன்னும் கட்டுப்பாட்டினுள் வராத நிலையிலே, கல்வி நிலையங்கள் எப்போது மீளவும் திறக்கப்படும் என்பது தொடர்பிலே தொடர்ந்தும் நிச்சயமற்ற நிலைமையே அவதானிக்கப்படுகிறது.

மாற்று வழிகளிலே மாணவர்கள் தமது கல்வியினைத் தொடர்வது எவ்வாறு என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவும், கல்வி அதிகாரிகளும், பாடசாலை நிருவாகிகளும், ஆசிரியர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களும் தமது கரிசனைகளையும், எண்ணங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இணையவழியிலான கற்பித்தல் முறையினை ஆரம்பிப்பது குறித்து பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இணைய வழிக் கற்றல், கற்பித்தல் செயன்முறைகள்

பாரம்பரிய வகுப்பறைக் கல்விக்குப் பதிலாக, நெருக்கடியான சூழல்களில் எவ்வாறான மாற்றுக்களை முன்வைக்கலாம் என்பது தொடர்பிலே கல்வி சமூகத்தினர் மத்தியில் போதியளவு உரையாடல்கள் இடம்பெறாத நிலையே அவதானிக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இந்த விடயம் தொடர்பாகப் போதிய அளவுக்கு கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளிலே நேரடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருக்கும் வேறுபட்ட‌ அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகத் தெரியவில்லை.

தொலைக் கல்வியினைத் தபால் மூலம் மேற்கொள்ளுவது பொருத்தமானதா? இணைய வழியிலே மேற்கொள்வது பொருத்தமானதா? தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவைகளை எந்த அளவிலே பயன்படுத்தப்படலாம்? போன்ற கேள்விகள் இங்கு ஆராயப்பட வேண்டியவை. இந்த எல்லா வழிமுறைகளும் இன்று உபயோகத்தில் உள்ளன. ஆனால், இந்தக் கேள்விகளுக்கு மேலும் பொருத்தமான பதில்களை நாம் கண்டறிய வேண்டுமாயின், கூடியளவு ஜனநாயக முறையிலான திட்டமிடல் இன்றியமையாதது.

இணைய வழியான கல்வியாயின், நேரடியான ஆசிரியர் மாணவர் ஊடாட்டங்கள் இடம்பெறக் கூடிய ஸ்கைப், சூம் போன்ற தொழினுட்பங்களைப் பயன்படுத்துவதா அல்லது கல்வி சார் விடயங்களை ஆவண வடிவிலே அல்லது காணொளி வடிவிலே தரவேற்றம் செய்வதா? ஒவ்வொரு பாடத்திற்கும், அல்லது கற்கை அலகுக்கும் எவ்வளவு நேரத்தினை இணையவழிக் கல்விக்காக ஒதுக்குவது? உதாரணத்துக்கு ஒரு கற்கை அலகு பாரம்பரிய வகுப்பறையில் வாராந்தம் மூன்று மணித்தியாலங்களுக்குக் கற்பிக்கப்படுகிறதாயின், இணைய வழியிலும் மூன்று மணித்தியாலங்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டுமா? மாணவர்களின் வரவு மற்றும் பங்குபற்றல் பற்றி எவ்வாறான கொள்கைகள் பொருத்தமானவை? போன்ற கேள்விகள் பற்றி பரந்துபட்ட உரையாடல்கள் கல்விக் கொள்கைகளை வகுப்போரினால் உரிய அளவுக்கு முன்னெடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

சமூக அசமத்துவங்களும் கற்றல், கற்பித்தல் செயன்முறைகளும்

அடுத்து எம்முன் இருக்கும் முக்கியமான கேள்வி, நாட்டின் எல்லாப் பிராந்தியங்களையும், சமூகத்தின் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்கள் இணைய வழிக் கல்வியினை மேற்கொள்ளுவதற்கான வசதிகளைக் கொண்டிருக்கிறார்களா என்பது. இணைய வழிக் கல்விக்கு இணைய இணைப்பு, மடிக்கணணி அல்லது குறைந்த பட்சம் ஒரு ஸ்மார்ட் தொலைபேசியாவது மாணவர்களிடம் இருக்க வேண்டும். இலங்கையில் அமுலிலே இருக்கும் இலவசக் கல்வி, பாடசாலைகளுக்கு இடையில் அவதானிக்கப்படும் உட்கட்டுமாண சமத்துவமின்மைகளுக்கு மத்தியிலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால், ஓரளவுக்காயினும் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான வகுப்பறைச் சூழலில் இருந்து கற்றலினை மேற்கொள்ள வாய்ப்பளித்தது.

ஆனால் இணையவழிக் கல்வி வகுப்பறையினை மாணவர்களின் வீட்டுக்கு மாற்றி விடுகிறது. ஸ்மார்ட் தொலைபேசி, இணைய இணைப்பு அற்ற பல பெற்றோரும், மாணவர்களும் எமது கல்வி சமூகத்தின் அங்கங்களாக‌ இருக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளிலே இன்னமும் கையடக்கத் தொலைபேசி அலைவரிசைகள் சீரான முறையில் செயற்படுவதில்லை. பல குடும்பங்களிலே பிள்ளைகள் சுயாதீனமாக, ஏனைய குடும்ப உறுப்பினர்களின் இடையூறுகள் இல்லாது கல்வி கற்பதற்கான கட்டடச் சூழல் இல்லை.

எனவே இணைய வழிக் கல்வியானது வகுப்பறைக் கல்வியினைக் காட்டிலும் கூடிய‌ அசமத்துவமான சூழலிலேயே இடம்பெற வேண்டி இருக்கிறது. இது சமூகத்தின் வறிய, ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களையும், தொலைத் தொடர்பாடல் வசதிகளில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பிரதேசங்களினைச் சேர்ந்த மாணவர்களையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே பாரம்பரிய வகுப்பறைக் கல்விக்கான மாற்றுக்களை முன்வைக்கும் போது, இணையவழிக் கல்வியில் எதிர்நோக்கப்படும் இவ்வாறான அசமத்துவங்களை எவ்வாறு களைவது என்பது பற்றி சிந்திக்கப்படுவது மிகவும் அவசியம். இணையவழிக் கல்விக்காக பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு சில விசேட கொடுப்பனவுகளை வழங்க அரசு முன்வரவேண்டும்.

இன்று நிலவும் நெருக்கடியான சூழலிலே பொருளாதார ரீதியிலே பின் தங்கிய‌ குடும்பங்களிலே நாளாந்த உணவு மற்றும் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூடப் பண வசதியற்ற சூழல் நிலவுகிறது. மாணவர்கள் பட்டினியால் வாடுவார்களாயின், அதனால் ஏற்படும் தாக்கங்களை இணையவழிக் கல்வியினால் தீர்த்து வைக்க முடியாது. நோய்த் தொற்றும், அதனை அடுத்து ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளும், சமூகத் தனிமைப்படுத்தல் செயன்முறைகளும் உளவியல் ரீதியிலான பிரச்சினைகளையும் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியிலே தொற்றுவித்துள்ளது. கொரொணாத் தொற்றின் பின் ஏற்பட்டிருக்கும் இவ்வாறான மாற்றங்களைக் கவனத்தில் எடுக்காது, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்காது, மாற்றுக் கல்விக்கான மார்க்கங்களைச் சிந்திக்க முடியாது.

கொரொணாத் தொற்றின் தாக்கம் முடிவுற்ற பின்னர் பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மீளத் திறக்கும் போது, மாணவர்கள் தமது கல்வியினைத் தொடருவதிலே பொருளாதார ரீதியிலும், ஆரோக்கிய ரீதியிலும் பல சவால்களை எதிர்கொள்ளக் கூடும். இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் இலவச உணவு வழங்கல், மகாபொல உதவித் தொகையினை அதிகரித்தல் போன்ற செயன்முறைகளிலே இறங்க வேண்டிய நிலை ஏற்படும். கல்விக்காக அரசு செலவிடும் பணத்தினை அதிகரிக்க வேண்டியது எதிர்காலத்தில் மிகவும் அவசியமானது. இதனை ஒரு கோரிக்கையாகக் கல்விச் சமூகத்தினைச் சேர்ந்தோர் இப்போது தொடக்கம் வலியுறுத்துவது முக்கியம்.

எவ்வாறான கல்வியினை நாம் வழங்குவது?

கொரொணாத் தொற்றின் பின்னர் உலகம் முழுவதுமே முன்னெப்போதும் இல்லாத பல சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சவால்களை நாம் கல்விச் சமூகமாக எவ்வாறு விளங்கிக் கொள்ளப் போகிறோம், எவ்வாறான உரையாடல்களை மாணவர்கள், ஆசிரியர்கள் என்ற வகையிலே நாம் மேற்கொள்ளப் போகிறோம்? இந்தச் சவால்களுக்கான பதில்களையும், தீர்வுகளையும் நாம் எவ்வாறு உருவாக்கப் போகிறோம்? போன்ற கேள்விகளும் இன்று எம்முன் எழுந்திருக்கின்றன.

சமூக, அரசியல் விடுதலையினை நோக்கி எம்மை இட்டுச் செல்லக் கூடிய ஒரு கல்வி முறையிலே, எமது சமூகங்களிலும், எமது நாளாந்த வாழ்க்கையிலும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள், நெருக்கடிகள், பிரச்சினைகள், அசமத்துவங்கள் குறித்துச் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்க வேண்டும். இந்த நிலையிலே நாம் ஒரு நெருக்கடியான நிலையில் இருந்து கல்வியினைத் தொடர்கையிலே, தனியே பல வருடங்களுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை மாத்திரம் மையப்படுத்துவது பொருத்தமற்றது. அல்லது பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப் படும் போது எந்த அலகினைக் கற்பித்தோமோ, அந்த அலகில் இருந்து, இந்த இடைப்பட்ட காலத்திலே எதுவுமே நடைபெறவில்லை என்ற தோரணையில், எமது கற்றல், கற்பித்தல் செயன்முறைகளைத் தொடருவது ஒரு செயற்கையான, நாளாந்த வாழ்வுடன் தொடர்பற்ற கல்வி முறையாகவே அமையும். எனவே நாம் மேற்கொள்ளவிருக்கும் மாற்று கல்விச் செயற்பாடுகளிலே, நாம் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க இடம் வழங்கப்படுவது அவசியம்.

ஒரு மாதத்துக்கு மேலாக எமது மாணவர்கள் வீடுகளிலே அடைபட்டுப் போயிருக்கிறார்கள். ஆடல், பாடல், ஓவியம் வரைதல், உடற்பயிற்சி போன்ற பல்வேறு புத்தாக்கச் செயற்பாடுகளிலே தம்மை ஈடுபடுத்தி வந்த மாணவர்கள், இன்று தமது நண்பர்களைக் கூடச் சந்திக்க முடியாத துரதிர்ஷ்ட வசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மாணவர்கள் மத்தியில் இந்த நிலைமை மிகவும் மனச் சோர்வினை ஏற்படுத்தக் கூடும். எனவே மாணவர்களைச் சிந்தனை ரீதியிலும், செயற்பாட்டு ரீதியிலும் எம்மால் முடிந்த வரையில் உற்சாகமாக வைத்திருப்பது அவசியம்.

ஆனால் இதற்கான வழிகளாக ஏற்கனவே இருக்கும் கல்வி முறையின் குறைபாடுகளாக அமையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறைகள், பரீட்சையினை மையமாகக் கொண்ட வினா விடை அடிப்படையிலான கற்றற் செயற்பாடுகள், சமூக நிலைமைகளையும், சமூக நீதியினையும் கருத்திலெடுக்காத பாடத்திட்டம் போன்றன ஒரு போதும் இருக்கப் போவதில்லை.

நெருக்கடியான காலத்திலே மாற்றுக் கல்வி பற்றி நாம் சிந்திக்கையிலே, மாணவர்களிடையே வாசிப்புத் திறமையினையும், விமர்சன ரீதியிலான சிந்திக்கும் திறனையும், புத்தாக்கத் திறன்களையும், சமூகம் பற்றிய விழிப்புணர்வினையும் எவ்வாறு மேம்படுத்தப் போகிறோம் என்பதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாணவர்கள் பிரச்சினைகளை அவை எழுகின்ற சமூகப் பொருளாதாரச் சூழல்களின் பின்னணியில் வைத்து விளங்குவதற்கு வழி செய்கின்ற, அப்பிரச்சினைகளுக்கு மற்றவர்களுடன் இணைந்து தீர்வுகளைத் தேடுவதற்கு முயற்சிப்பதனை ஊக்குவிக்கின்ற ஒரு கல்வி முறையே இன்றைய காலத்தின் தேவை.கல்வித் துறையுடன் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் இந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட வேண்டிய ஒரு காலத்திலே இருக்கிறோம்.

http://thinakkural.lk/article/40060

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை யாழில் ஆரம்பம்

In இலங்கை     May 4, 2020 12:14 pm GMT     0 Comments     1040     by : Jeyachandran Vithushan

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதன்படி இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

குறித்த பரிசோதனைகளின் முடிவுகள் மதியம் வெளியாகும் என்றும் மேலும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படும் மாதிரிகளும் இங்கு உள்ள ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தொடர்பான-பி/

Link to comment
Share on other sites

யாழ்.போதனா வைத்தியசாலையில் சினிமா பாணியில் இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார்.

அவர் வைத்தியசாலைக்கு அண்மையாக உள்ள கூலர் நிறுவனம் ஒன்றில் தரித்து நின்ற படி ரக வாகனம் ஒன்றை எடுத்துத் தப்பிச் சென்றதுடன், அந்த வாகனத்தை கல்வியங்காடு பகுதியில் கைவிட்டு தப்பித்துள்ளார்.

எனினும் சந்தேக நபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றது. படி ரக வாகனத்தை பொலிஸார் இன்று காலை மீட்டனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள சந்தேக நபரே தப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சந்தேக நபர் நேற்று தூக்கிட்டு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். அதனைக் கண்ட சிறை உத்தியோகத்தர்கள் தடுத்துள்ளனர்.

எனினும் சந்தேக நபர் மூச்சடங்கிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சேர்க்கப்பட்டார்.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பை மீறி சந்தேக நபர் தப்பித்துள்ளார். அங்கிருந்து சென்று அண்மையிலுள்ள கூலர் நிறுவனத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாடகை படி வாகனத்தை எடுத்துக் கொண்டு சந்தேக நபர் தப்பித்துள்ளார்.

அந்த வாகனத்தில் உள்ள இலக்கத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வாகன உரிமையாளரால் அறிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அந்த படி வாகனத்தை கல்வியங்காடு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸார் மீட்டெடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்த நிலையில் சந்தேக நபர் மீளவும் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் சந்தேக நபரால் எடுத்துச் செல்லப்பட்ட படி வாகனம் நாளை நீதிமன்றில் ஒப்படைக்ககப்படும் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142532?ref=rightsidebar

Link to comment
Share on other sites

யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாண பொறியியல் பிரிவு அறிவித்துள்ளது.

திருத்த வேலைகள் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் கைதடி , நுணாவில், மட்டுவில் வாகையடி, நாவற்குழி, கோவிலாக்கண்டி, தச்சந்தோப்பு, மறவன்புலவு, அறுகுவெளி, தனங்கிளப்பு, வெற்றிலைக்கேணி , பூதர்மடம் , கோப்பாய், கல்வியங்காடு, கட்டைப்பிராய், இருபாலை, வசந்தபுரம், கிளுவானை, ஜிபிஎஸ் வீதி, இராமலிங்கம் சந்தி, ஆடியபாதம் – நல்லூர் வீதி, கிளிகடை, ஆடியபாதம் வீதி, இராமலிங்கம் – ஆடியபாதம், கோப்பாய் – மானிப்பாய் வீதி , கோப்பாய் – கைதடி வீதி, கோப்பாய் - பருத்தித்துறை வீதி ,

கோவில் வீதி – சங்கிலியன் வீதி, நல்லூர் பிரதேசம், கச்சேரி நல்லூர் வீதி, நாயன்மார்கட்டு பிரதேசம், நாவலர் வீதி, கனகரட்ணம் சந்தியிலிருந்து நல்லூர் செட்டி வீதி வரை, பாரதி வீதி, புறுடி வீதி, நொத்தாரிஸ் லேன், நல்லூர் குறுக்கு வீதி, கண்டி வீதியில் கச்சேரியிலிருந்து கண்டிவீதி செம்மணி வரை,

இலந்தைக்குளம், புங்கன்குளம், முல்லை, பூம்புகார், நாவலடி, அரியாலை கிழக்கு, செல்லர் வீதி, மாகியப்பிட்டி, அளவெட்டி, சண்டிலிப்பாய் வடக்கு, பனை அபிவிருத்தி சபை, சங்கன் தனியார் கட்டடம், சித்த ஆயுர்வேத பல்கலைக்கழகம், நாராயணா சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை,

வடக்கு பிரதம செயலாளர் செயலகம், யாழ் மாநகரசபை அலுவலகம், கல்வி அமைச்சு அலுவலகம், பல்கலைகழக வணிகப்பிரிவு ஆகிய பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார வடமாகாண பொறியியல் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/142727?ref=imp-news

கிளிநொச்சி திங்கள் முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் - மாவட்ட அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டம் வரும் திங்கள் முதல் (11-05-2020) இயல்பு நிலைக்கு திரும்பும் என மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழமை போல் செயற்படும் எனவும், பொது மக்கள் கூடுகின்ற மற்றும் சேவைகளை பெறுகின்ற நோக்கில் வருகின்ற போது முககவசம் அணிந்திருக்க வேண்டும், மேலும் கை கழுவும் ஏற்பாடுகளை நிறுவனங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும், சமூக இடைவெளி பேணப்படல் வேண்டும் போன்ற கொரோனா பாதுகாப்பு ஏற்பாட்டு நடைமுறைகளுக்கு அமைவாகவே அனைத்து தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அரச, மற்றும் தனியார் நிறுவனங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று (07) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் 11ம் திகதி ஊடரங்கு தளர்த்தப்படும் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் சேவை பெறுகின்ற இடங்களில் கைகழுவதற்குரிய வசதியை ஏற்படுத்தல், மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல், வைத்தியசாலை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் அரச திணைக்களத்தலைவர்களின் தலைவர்கள், தனியார் நிறுவங்களின் தலைவர்கள், முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என மாவட்டத்திலுள்ள அனைத்துப்பிரிவினரும் கலந்து கொண்டனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142651

Link to comment
Share on other sites

திங்கட்கிழமை முதல் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்

In இலங்கை     May 9, 2020 8:40 am GMT     0 Comments     1560     by : Jeyachandran Vithushan

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வின்போது பொதுமக்களினால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளைமறுதினம் மே 11ஆம் திகதி முதல் நாட்டின் பொருளாதாரத்தினையும் மக்களின் வாழ்வாதரத்தினையும் மேம்படுத்தும் நோக்குடன் ஊரடங்குசட்டம் உள்ளிட்ட பலகட்டுப்பாடுகளில்  தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆயினும் நாட்டில் கோரோனா பரம்பல் அபாயம் நீங்கிவிடவில்லை என்பதனை பொதுமக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். எனவே மக்களை மிகவும் விழிப்புடனும் அவதானத்துடனும் பின்வரும் நடைமுறைகளினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  • வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய விடயங்கள் மற்றும்    அத்தியாவசிய பொருள்களினை கொள்வனவு செய்ய வெளியே செல்வோர் தவிர்ந்த ஏனையவர்கள்  வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
  • அத்தியாவசிய தேவைகளிற்கு வெளியே செல்பவர்கள்  தாம் செய்ய வேண்டிய வேலைகளுக்காக அடிக்கடி வெளியே செல்லாது ஒரே தடவையில்  பல கருமங்களினை நிறைவேற்றிக் கொள்ள கூடியவகையில் திட்டமிட்டு செயற்படவும்.
  • வெளியே செல்பவர்கள் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் பொதுப்போக்குவரத்தின் போதும்  இரண்டு பேருக்கு இடையில் ஆகக் குறைந்தது 1 மீற்றர்  தூர இடைவெளியில் பேணவும்.
  • வெளியில் செல்லும்போது  இயன்றளவு பிரத்தியேக போக்குவரத்து முறைகளினை பாவிக்கவும்.( உதாரணமாக நடந்து செல்லல், துவிச்சக்கர வண்டியில்  செல்லல்).
  • அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள்   என்பவற்றிற்கு உள்ளே நுழையும் முன்னர் கைகளினை சவர்க்காரமிட்டு முறைப்படி கழுவிக் கொள்ளவும்.
  • வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்பும் கைகளினை சவர்க்காரமிட்டு முறைப்படி கழுவிக்கொள்ளவும்.
  • காய்ச்சல், இருமல், தொண்டைநோய் போன்ற அறிகுறிகள் உடையவர்கள்  பொது இடங்களிற்கு செல்வதனை தவிர்த்தல் வேண்டும்.
  • ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது நிகழ்வுகள் வைபவங்கள்,  கூட்டங்கள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் போன்றவற்றிற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதனை மனதில் கொள்ளவும்.
  • இயன்றளவு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளினையே உண்பதனை பழக்கப்படுத்திக் கொள்வதுடன் உணவகங்களில் இருந்து உணவினை பெறவேண்டி இருப்பின்  உணவினை எடுத்துச் சென்று உள்கொள்ளவும்.
  • மேலும் உணவகங்களில் ஒன்றுகூடி உணவு அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.
  • உங்கள் பிரதேசத்திற்கு யாரவது புதியவர்கள்  வருகை தந்திருந்தால் உங்களது பகுதி சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர் அல்லது கிராம சேவையாளருக்கு அறியத்தரவும்.

அவர்களை தொடர்புகொள்வதில்  சிரமம் இருப்பின் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் அவசரஅழைப்பெண் 021-222-6666 இற்கு தகவல் வழங்கவும்.

http://athavannews.com/திங்கட்கிழமை-முதல்-வடக்க/

Link to comment
Share on other sites

மக்களுக்கு வடக்கு மாகாண பல் வைத்தியசங்கத்தின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

அவசர தேவையுடையவர்கள் மாத்திரமே பல் வைத்தியசேவைகளிற்கு செல்லுமாறு வடக்குமாகாண பல் வைத்தியசங்கத்தின் தலைவர் எம்.உதயகுமார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பற்சிகிச்சைக்கு செல்லும் வடமாகாண மக்களின் பாதுகாப்பு கருதி சில வேண்டுகோளை நாம் முன்வைக்கின்றோம். தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும் கொரோனா தாக்கம் சமூகத்தில் பரவக்கூடிய வாய்ப்புகள் முற்றாக மறைந்து விடவில்லை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே நாளைய தினம் பல், வாய் தொடர்பான சிகிச்சைக்கள் தேவைப்படுபவர்கள், அவசியம் இருந்தால் மாத்திரமே வைத்தியசாலைகளிற்கு செல்லவேண்டும். குறிப்பாக பல் முகங்களில் ஏற்படும் விபத்து, அல்லது காயங்கள் என்பவற்றிற்கு மாத்திரம் சிகிச்சை பெறுவதற்கு செல்வதுடன் ஏனைய செயற்பாடுகளை நிலமை சீரடைந்த பின்னர் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏனெனில் வாயில் இருக்கும் எச்சிலிலிருந்து கிருமி பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. எனவே குறித்த விடயத்தில் கவனம் எடுத்து எம்மையும் சமூகத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். பற்சிகிச்சைக்கு செல்வோர் பொதுப் போக்குவரத்தை தவிர்த்து தனியாக செல்லவேண்டும்.

அத்துடன் வேறுஒருவரை அல்லது குழந்தைகளை உதவிக்கு அழைத்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். வைத்தியசாலைகளிற்கு செல்லும் போது கைகளை சுத்தம் செய்வதுடன் காத்திருப்போர் பகுதியில் அமர்ந்திருக்கும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அத்துடன் வைத்தியரின் மேசைகள் கதவுகள் போன்றவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

அத்துடன் முககவசங்களை களற்றும் போது அதனை பிரத்தியேக இடத்தில் வைத்துவிட்டு சிகிச்சை முடிந்த பின்னர் எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் பல், வாய் போன்றவற்றை தொடுவதையும் தவிர்க்க வேண்டும். பல்பிடுங்கிய பின்னர் வெளியில் வந்து எச்சில் துப்புவதை தவிர்ப்பதுடன் வைரஸ்பரவல் கட்டுப்பாட்டிற்கு வரும் வரைக்கும் அனைத்து பொதுமக்களும் அதனை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அத்துடன் யாழ் வைத்தியசாலைக்கு முன்பாக தகுதியற்ற பல்வைத்தியர்கள் இருக்கிறார்கள் எனவே மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அங்கு செல்லும் போது அந்த வைத்தியர் தொடர்பான உறுதிப்பாட்டையும், கல்வித் தகுதியை அறிந்த பின்னர் செல்லுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஏனைய தகவல்களை இலவசமாக பெற்றுகொள்வதற்கு கீழே குறிப்பிட்ட இலக்கங்களிற்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா:  உதயகுமார்   077199995,

யாழ்பாணம்: விதுசன்  0773090519,   கம்லெத் 0777734100,   சுரேஸ் 0777730416,

மன்னார்:  சிவா 0776682575,

கிளிநொச்சி: தவராஜா 0777445161,  எழில்வேல் 0779789840,

முல்லத்தீவு:  சீலன் 0711234516.

https://www.ibctamil.com/srilanka/80/142863

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.