Sign in to follow this  
ampanai

கொரோனாவிற்காக Google's Verily வெப்சைட்

Recommended Posts

கூகுளின் துணை நிறுவனமான, வெரிலி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக தனி வெப்சைட்டை அமெரிக்காவில் துவங்கியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. அதனடிப்படையில், அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து, அறிவிப்பை வெளியிட்டுருந்தார். அதில், ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய கூகுள் புதிய வெப்சைட் துவங்குவதாக குறிப்பிட்டார்.

அந்த வகையில், தற்போது, கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியுள்ளது.

தற்போது அமெரிக்கா கலிபோர்னியாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டை பயன்படுத்த, அமெரிக்க குடிமக்களாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை கொண்டுள்ளதாகவும், இந்த விபரங்கள் அரசு துறைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுசுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள பயோடெக்னாலஜி நிறுவனம், கலிபோர்னியா கவர்னர் அலுவலகம், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வெப்சைட் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/103893/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-Google's-Verily%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D

 

இணையத்தளம் :  https://verily.com/

 

Share this post


Link to post
Share on other sites

 

கொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகுள்..!

 

கொரோனா தொற்றுநோய் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான அடிப்படை சோதனைகளை ஆன்லைனில் முன்னெடுக்கும் வகையிலான இணையதளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த இணையதளத்தை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் கூகுள் வடிவமைத்திருக்கிறது.

https://www.projectbaseline.com/study/covid-19/

என்ற இணையதளத்திற்குள் நுழைந்தால், முதலில், தீவிர இருமல், சளி தொந்தராவால் அவதிப்படுகிறீர்களா? அல்லது, முச்சுவிடுதல் சிரமம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதில், கொரோனா அறிகுறி இருப்பவர்கள், உடனடியாக, கலிபோர்னியா மாகாணத்தில், குறிப்பிட்ட 2 மாவட்டங்களில், நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தின் மூலம், தொற்றுநோயை உறுதி செய்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள கூகுள் இணையதளம் வழிகாட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/103916/கொரோனா-தொற்றுநோய்-பாதிப்பைகண்டறிய-உதவும்-கூகுள்..!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this