Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கொரோனா வைரஸ் டிராக்கர் என்ற மைக்ரோசாப்ட் COVID-19 கண்காணிப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.


Recommended Posts

கொரோனா வைரஸ் டிராக்கர் என்ற மைக்ரோசாப்ட் COVID-19 கண்காணிப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், இணையத்தில் ஸ்கீனிரிங், டிராக்கிங்கிற்காக புதிய போர்டலை மைக்ரோசாப்ட் பிங் குழு COVID-19 அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, https://bing.com/covid வலைத்தளத்தின் மூலம், ஒவ்வொரு நாட்டிற்கும் பரவியிருக்க கூடிய தொற்று புள்ளிவிவரங்களை வழங்குகிறது.COVID-19 டிராக்கரில் தற்போது, 1,68,835 பேர் வைரஸ் பாதித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 85,379 பேருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 77,761 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6,517 இறப்புகள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.


இவற்றின் தரவுகள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பு, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், ஐரோப்பிய மையம் மூலம் பெறப்படுகிறது. அமெரிக்க குடிமக்களுக்கு COVID-19 டிராக்கரை கூகுள் அறிவிக்கும் என அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். அதற்குள்ளாக, தற்போது மைக்ரோசாப்ட்டின் பிங் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.

https://www.polimernews.com/dnews/103898/கொரோனா-வைரஸ்-Tracker-From-Bing

 

தளம் https://bing.com/covid

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெரு விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது. இன்னுமொரு படமும் உள்ளது, இணைக்க விரும்பவில்லை. தென்பகுதியில், போர்த்துக்கேயர் வந்த போது இருந்த நிலையை படமாக கீறி ஒரு போர்த்துக்கேயர் போட்டிருந்தார். அங்கே பெண்கள் கூட, மேலாடை இல்லாமல், இருப்பதாக படம் உள்ளது. 
    • மேலாடை என்றால் சால்வை, உத்தரீயம் என்பவையும் அடங்கும். ஏன் மேலாடை அணியக்கூடாது என்பதற்கு போலி ஆன்மீகக் காரணங்களும் உள்ளன. சாம்பிளுக்கு ஒன்று..   “ஆலய விக்கிரகங்கள் கருங்கல்லாலேயே வடிவமைக்கப்படுகிறது. கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால் ஈர்த்து, தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு (🤔🤔🤔). எனவே தான் மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்படுகின்றன. "ஓம்" என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி, பலவகை அபிஷேகங்களை செய்யும்போது, மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன(🧐🧐🧐🧐). அம்மின்னூட்டக் கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும், மனதுக்கு அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர். (🥸🥸🥸🥸) அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும். நாள்தோறும் 4,6 காலங்கள் எனத் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள் தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து தருகின்றன. இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன. இவ் அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும் என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்லவேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்(🤩🤩🤩🤩). பெண்களுக்கு அவர்களின் உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்(☹️☹️☹️☹️). இஃது எல்லா கோயில்களுக்கும் பொருந்தும்.”   படுபாவியள் பெண்களுக்கும் அருட்கதிர்களை பாய விட்டிருந்தால், நான் கோயிலே கதியேன்று கிடந்திருப்பேனே!😜😜🤪🤪
    • நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும் காரணம் அந்தந்த  கிராமங்களில் வாழ்பவர்கள்   ஒவ்வொருவரையும் ஒவ்வொருவரும் அறிந்த காலப்பகுதி  அது அந்த  நேரத்தில் மேலாடையை  களட்டித்தான்  ஆட்களை  அறிய வேண்டும் என்ற நிலை  இருந்திருக்க  வாய்ப்பில்லை  என்றே  நினைக்கின்றேன் உதாரணத்துக்கு எனது  ஊரில்  எல்லோரையம் எல்லோரும் அறிவர் அப்படி  இல்லாது விட்டாலும் வட்டாரத்தை சொன்னாலே போதும்???  
    • சாதியத்தின் அடிப்படையில், கோவிலுக்குள் விடுவதில்லை என்பதனை ஏற்றுக் கொள்கிறேன், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள் மத்தியில் மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் காலத்தின் பின்னர் வந்தது.  அதையே தான், நிழலிக்கு சொன்னேன். 1495ல் வந்த முதல் ஐரோப்பியர் வாஸ்கோட காமாவை சந்தித்த (தமிழ்) சேர சமூரிய மன்னன் அரியணையில் வெறும் மேலுடன் வீற்று இருந்தார் என்றே அவரது குறிப்புகளில் உள்ளன.
    • ஆம். ஒருவரும் மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு சாதியத்தை இறுக்கமாகக் கடைபிடிக்கும் மரபில் இருந்து வந்ததுதான். நீங்கள் யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பல கோயில்களுக்கு சின்ன வயதில் போன அனுபவம் (அப்பா ஒரு சைவபக்தர்), குறிப்பாக சிவா சின்னப்பொடி குறிப்பிட்ட வல்லிபுரக்கோவிலில் எப்படி “பார்த்து” உள்ளே விடுவார்கள் என்பதை நேரடியாகவே கண்டிருக்கின்றேன்.  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.