Jump to content

கொரோனா கேம்களுக்குத் தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா கேம்களுக்குத் தடை!

16.jpg

 

கொரோனா வைரஸ் தொடர்பான கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்களுக்குத் தடை விதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். உலகத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் அத்தனையையும் கேம்கள் அல்லது அப்ளிகேஷன்களாகக் கொண்டுவந்து அதைப் பணமாக மாற்றுவது கேம் மற்றும் அப்ளிகேஷன் டெவலப்பர்களின் வேலையாக இருந்துவருகிறது. பெரும்பான்மையான அப்ளிகேஷன்களைப் பணத்துக்கு மட்டுமே விற்பனையாக வைக்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் டெவலப்பர்களின் சொர்க்க பூமி. ஆனால், கொரோனா விஷயத்தில் அப்படியொரு போட்டியை உருவாக்க டெவலப்பர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தடை செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய சமயத்திலிருந்தே அதைக் கண்டு மக்கள் உலகெங்கும் ஓடி ஒளிந்துகொண்டிருக்க, இந்தப் பதற்றத்தைப் பயன்படுத்தி பலவிதமான கேளிக்கை அப்ளிகேஷன்களை உருவாக்கி வந்தனர் டெவலப்பர்கள். அதில் முக்கிய இடத்தைப் பிடித்தவை வைரஸ் தொடர்பான கேம்கள்.

 

இனம் தெரியாத வைரஸால் பாதிக்கப்பட்டு ஜாம்பிக்களாக மாறியவர்களிடமிருந்து தப்பித்து, ஓடி ஒளிந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையான கேம்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அதுபோலவே, வைரஸ்களை எப்படி பரப்புவது என்று விளையாடும் கேம்களும் கேமர்களிடையே பிரபலமானவை. புதிய வைரஸ்களை உருவாக்கி உலகம் முழுவதும் வெற்றிகரமாக பரவச் செய்யும் விதமான ஒரு கேம் தான் பிளேக் (PLAGUE.INC.).

கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கிய சமயத்தில், உலகெங்கிலும் உள்ள பல விதமான கேமர்களும் இந்த கேமை விளையாடத் தொடங்கினர். அதில் உருவாக்கப்படும் வைரஸுக்கு கொரோனா அல்லது கோவிட்-19 எனப் பெயர் வைத்து அதை உலகம் முழுவதும் பரவச் செய்து அதை வீடியோவாக வெளியிட்டு மகிழ்ந்தனர். பிளேக் கேமின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான பிளேயர்கள் ஒரே நேரத்தில் இந்த கேமை விளையாட முயற்சி செய்ததால் ஜனவரி மாதத்தின் இறுதியில், பிளேக் சர்வர்கள் ஆஃப் லைனுக்குச் சென்றன. இந்த கேமை விளையாட முடியாத பிளேயர்கள், பிளேக் நிறுவனத்தைக் கேள்விகளால் துளைத்தெடுக்க அந்த நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

 

Our website is currently offline due to very high player numbers. I'm copying our statement on the coronavirus outbreak here so people can still see it.https://www.ndemiccreations.com/en/news/172-statement-on-the-current-coronavirus-outbreak 

View image on Twitter
 
 
 
 

“அளவுக்கதிகமான பிளேயர்கள் விளையாடியதால் சர்வர் ஆஃப்லைனுக்குச் சென்றுவிட்டது. பிளேக் ஒரு கேம்தான். ரியல் உலகத்தில் ஏதாவது ஒரு வைரஸ் தாக்குதல் ஏற்படும்போதெல்லாம், பிளேக் கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அசாதாரணமான அளவுக்கு உயர்கிறது. இது சரியான முறை அல்ல. இது ஒரு சாதாரண கேம். ரியல் உலக வைரஸ்களுக்கான தீர்வு இங்கு கிடைக்காது. ஆராய்ச்சியாளர்களே இந்த வைரஸ் என்னவென்று தெரியாமல் தவிக்கும்போது, டெவலப்பர்களால் உருவாக்கப்பட்ட இந்த கேமில் எந்தத் தீர்வும் கிடைக்காது. அதிகாரபூர்வமான தகவல்களுக்கு WHO வெளியிடும் தகவல்களைப் பாருங்கள்” எனத் தனது அறிவிப்பில் கூறியிருந்தது பிளேக் நிறுவனம்.

சில நாட்களுக்கு ஆஃப் லைனில் இருந்த இந்த ஆன் லைன் வீடியோ கேம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த பிறகும், அதை விளையாடுபவர்களது எண்ணிக்கை குறையவில்லை. முக்கியமாக, சீனாவில் வீட்டுக்குள் முடங்கியிருந்த மக்களிடையே இந்த கேம் பிரபலமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் அதிகம் பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட கேமாக இது ஆப்ஸ்டோரில் இடம்பெற்றது. இந்த எண்ணிக்கை உயர்வினை விரும்பாத சீன அரசாங்கம், பிப்ரவரி மாத இறுதியில் தவறான தகவல்களைப் பரப்புவதாகக் கூறி இந்த கேமினை சீனாவின் ஆப் ஸ்டோர், பிளே ஸ்டோர் மற்றும் இதர அப்ளிகேஷன் டவுண்ட்லோடிங் தளங்களிலிருந்து நீக்கியது. இதை வரவேற்ற ஆப்பிள் நிறுவனம் உடனடியாக தனது சீன ஆப் ஸ்டோரிலிருந்து இந்த கேமினை நீக்கியது.

 

 

மார்ச் தொடக்கத்திலிருந்து உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு சராசரியாக அதிகமாகியிருப்பதால், இப்போது இந்த கேம் உட்பட கொரோனா தகவல்களை எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி வெளியிடும் அனைத்து அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்களை தனது ஆப் ஸ்டோரிலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இதுகுறித்து டெவலப்பர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பில், “அரசாங்கங்கள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் மட்டுமே கொரோனா பற்றிய தகவல்களை வெளியிட அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா பற்றிய தகவல்கள் அல்லது அதன் டிஜிட்டல் உருவாக்கம் என எவ்விதமான செயல்பாடுகளில் ஈடுபடும் அப்ளிகேஷன்களாக இருந்தாலும், அவை ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்படும்” எனக் கூறியிருக்கிறது.

-சிவா
 

https://minnambalam.com/public/2020/03/17/16/how-corona-games-and-applications-panic-the-world

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிக நல்ல விடயம்......!  👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.