Recommended Posts

கொறோக்குறள்

அதிகாரம்: Toilet paper 

1. செல்வத்துள் செல்வம் Toilet paper - அது
    கொறோணா காலத்துப் பவுண்!

2. எதைப் பதுக்கி வைத்தவனுக்கும் உய்வுண்டாம் - உய்வில்லை Toilet paper பதுக்கிய மகற்கு! (படுபாவிகளா... இப்படிப் பண்ணிட்டீங்களேடா!)

3. கொறோணா காலத்தில் வாங்கிய Toilet rolls ஞாலத்தின் மாணப் பெரிது!

4. Toilet paper பதுக்கி வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம் Newspaper உடன் 'பின்' செல்பவர்! 

5. பதுக்கல் நன்றே, பதுக்கல் நன்றே - பிச்சை புகினும் Toilet rolls பதுக்கல் நன்றே!

6. மிதமிஞ்சி Toilet rolls வைத்திருப்போரை ஒறுத்தல் - அவர் நாண தண்ணீரால் சமாளித்துவிடல்!

7. கேடில் விழுச் செல்வம் Toilet rolls, ஒருவற்கு மாடல்ல மற்றயவை! (ஒருவனுக்கு அழிவில்லாத பெருஞ்செல்வம் என்பது Toilet rolls மட்டுமே; பொன், பணம் போன்றவை அல்ல!)

8. மகன் தந்தைக்காற்றும் உதவி - இவன் தந்தை எப்படி இவ்வளவு Toilet rolls வைத்திருக்கிறான் என அயலார் வியக்கச் செயல்!

9. மிதமிஞ்சி Toilet rollsஐ வாங்கான் - வாங்கினாலும் பிறருக்குப் பகிர்ந்தளிப்பானை எல்லா உயிரும் தொழும்!

10. ஒருமைக்கண் தான் வாங்கிய Toilet rolls - ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து! (பொருள்: ஒரு பிறவியிலே ஒருவன் வாங்கிய Toilet rolls, அவனை ஏழு பிறவிகளுக்குப் பாதுகாக்கும் தன்மை உடையவை; அவ்வளவு வாங்கியிருக்கிறான் பாருங்கோ!)

மேலும் சில கொறோக்குறள்கள்:

தோன்றில் face mask உடன் தோன்றுக - அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று!

கொரோணாவுக்கும் உண்டோ அடைக்கும் தாள், face mask அணிதல் peace-of-mindக்காகும்!

Face mask அணிவதனால் ஆய பயன் என் கொல், கைகளை நன்கு களுவிக்கொள்ளாவிடின்?!

எத்தும்மல் யார்யார் மூக்கிலிருந்து வருகினும், அவ்விடத்தை விட்டு உடனடியாக ஓடுதல் அறிவு

 

(நகைச்சுவைக்காக மட்டும்... 😀😀😀)

  • Like 4
  • Haha 3

Share this post


Link to post
Share on other sites

ஆஹா ....அணுவைத் துளைத்து டாய்லட் பேப்பரைப் புகுத்தி குறுகத்  தறித்த  கொறோக்குறள்.......!

கண்டது சந்தோசம் மல்லிகை வாசம்......!  😁 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

நல்லா இருக்குது மல்லிகை. எல்லாரும் கொறோனோ வைரஸ் இனால் பித்துப் பிடிச்சுக் கொண்டு இருக்கும் போது இப்படியான நகைச்சுவை மிகவும் அவசியம்.

என் முகனூலிலும் வட்ஸப் குழுமங்களிலும் இதன் Link கினை பகிர்ந்துள்ளேன்.

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

எல்லா Toilet Rolls சும்  Rolls அல்ல மல்லிகை வாசம் தரும் Rolls சே Rolls. 

c700x420.jpg

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, suvy said:

ஆஹா ....அணுவைத் துளைத்து டாய்லட் பேப்பரைப் புகுத்தி குறுகத்  தறித்த  கொறோக்குறள்.......!

கண்டது சந்தோசம் மல்லிகை வாசம்......!  😁 

ஆஹா... ஔவையார் பாணியில் பாராட்டிவிட்டீர்களே, சுவி அண்ணா. அருமை... நன்றிகள்... 😀

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, நிழலி said:

நல்லா இருக்குது மல்லிகை. எல்லாரும் கொறோனோ வைரஸ் இனால் பித்துப் பிடிச்சுக் கொண்டு இருக்கும் போது இப்படியான நகைச்சுவை மிகவும் அவசியம்.

என் முகனூலிலும் வட்ஸப் குழுமங்களிலும் இதன் Link கினை பகிர்ந்துள்ளேன்.

உண்மை தான் நிழலி. நோய் எங்களை அண்மிக்கும் முன்னமே உளரீதியாக ஏற்கெனவே எங்களைப் பீடித்துவிட்டது. 

கருத்துக்கும், பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி, நிழலி. மிக்க மகிழ்ச்சி. 😀

 

 

 

13 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், 'Only in Canada, security for toilet paper #coronavirus #ToiletPaperPanic @ POLIE' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

👍😂😂😂

அவுஸிலும் தான் அண்ணை! 😀

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, Paanch said:

எல்லா Toilet Rolls சும்  Rolls அல்ல மல்லிகை வாசம் தரும் Rolls சே Rolls. 

c700x420.jpg

ஆஹா... இதைக் கூட இவங்க விட்டுவைக்கல்லயா?!!! 🤔😂😂😂

ஆமா... இது எங்க கிடைக்கும் பாஞ்ச் அண்ணை? 🤔

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, மல்லிகை வாசம் said:

ஆஹா... இதைக் கூட இவங்க விட்டுவைக்கல்லயா?!!! 🤔😂😂😂

ஆமா... இது எங்க கிடைக்கும் பாஞ்ச் அண்ணை? 🤔

இதனை அவுசில் உருவாக்குகிறார்கள் எனத்தெரிகிறது அது உறுதிபடத் தெரியவில்லை. ஆனாலும் அதற்கு முன்பாக இந்த மென்தாளை எப்படி சிக்கனமாக பாவிப்பது என்பதுபற்றி நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் அவசியம், ஆகவே இதோ........

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, Paanch said:

இதனை அவுசில் உருவாக்குகிறார்கள் எனத்தெரிகிறது அது உறுதிபடத் தெரியவில்லை. ஆனாலும் அதற்கு முன்பாக இந்த மென்தாளை எப்படி சிக்கனமாக பாவிப்பது என்பதுபற்றி நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் அவசியம், ஆகவே இதோ........

 

 

அவுஸில் சாதாரண rollsஏ கிடைப்பது கஷ்டமாக இருக்கு. இதுக்குள்ள மல்லிகை வாசமுள்ள பேப்பர் கேட்டால் உனக்கென்ன கொழுப்பா என்று கேட்பார்கள். 😀

காணொளித் தகவலுக்கு நன்றி பாஞ்ச் அண்ணா. 😀👍

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.