Jump to content

Recommended Posts

கொறோக்குறள்

அதிகாரம்: Toilet paper 

1. செல்வத்துள் செல்வம் Toilet paper - அது
    கொறோணா காலத்துப் பவுண்!

2. எதைப் பதுக்கி வைத்தவனுக்கும் உய்வுண்டாம் - உய்வில்லை Toilet paper பதுக்கிய மகற்கு! (படுபாவிகளா... இப்படிப் பண்ணிட்டீங்களேடா!)

3. கொறோணா காலத்தில் வாங்கிய Toilet rolls ஞாலத்தின் மாணப் பெரிது!

4. Toilet paper பதுக்கி வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம் Newspaper உடன் 'பின்' செல்பவர்! 

5. பதுக்கல் நன்றே, பதுக்கல் நன்றே - பிச்சை புகினும் Toilet rolls பதுக்கல் நன்றே!

6. மிதமிஞ்சி Toilet rolls வைத்திருப்போரை ஒறுத்தல் - அவர் நாண தண்ணீரால் சமாளித்துவிடல்!

7. கேடில் விழுச் செல்வம் Toilet rolls, ஒருவற்கு மாடல்ல மற்றயவை! (ஒருவனுக்கு அழிவில்லாத பெருஞ்செல்வம் என்பது Toilet rolls மட்டுமே; பொன், பணம் போன்றவை அல்ல!)

8. மகன் தந்தைக்காற்றும் உதவி - இவன் தந்தை எப்படி இவ்வளவு Toilet rolls வைத்திருக்கிறான் என அயலார் வியக்கச் செயல்!

9. மிதமிஞ்சி Toilet rollsஐ வாங்கான் - வாங்கினாலும் பிறருக்குப் பகிர்ந்தளிப்பானை எல்லா உயிரும் தொழும்!

10. ஒருமைக்கண் தான் வாங்கிய Toilet rolls - ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து! (பொருள்: ஒரு பிறவியிலே ஒருவன் வாங்கிய Toilet rolls, அவனை ஏழு பிறவிகளுக்குப் பாதுகாக்கும் தன்மை உடையவை; அவ்வளவு வாங்கியிருக்கிறான் பாருங்கோ!)

மேலும் சில கொறோக்குறள்கள்:

தோன்றில் face mask உடன் தோன்றுக - அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று!

கொரோணாவுக்கும் உண்டோ அடைக்கும் தாள், face mask அணிதல் peace-of-mindக்காகும்!

Face mask அணிவதனால் ஆய பயன் என் கொல், கைகளை நன்கு களுவிக்கொள்ளாவிடின்?!

எத்தும்மல் யார்யார் மூக்கிலிருந்து வருகினும், அவ்விடத்தை விட்டு உடனடியாக ஓடுதல் அறிவு

 

(நகைச்சுவைக்காக மட்டும்... 😀😀😀)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ....அணுவைத் துளைத்து டாய்லட் பேப்பரைப் புகுத்தி குறுகத்  தறித்த  கொறோக்குறள்.......!

கண்டது சந்தோசம் மல்லிகை வாசம்......!  😁 

Link to comment
Share on other sites

நல்லா இருக்குது மல்லிகை. எல்லாரும் கொறோனோ வைரஸ் இனால் பித்துப் பிடிச்சுக் கொண்டு இருக்கும் போது இப்படியான நகைச்சுவை மிகவும் அவசியம்.

என் முகனூலிலும் வட்ஸப் குழுமங்களிலும் இதன் Link கினை பகிர்ந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

எல்லா Toilet Rolls சும்  Rolls அல்ல மல்லிகை வாசம் தரும் Rolls சே Rolls. 

c700x420.jpg

Link to comment
Share on other sites

18 hours ago, suvy said:

ஆஹா ....அணுவைத் துளைத்து டாய்லட் பேப்பரைப் புகுத்தி குறுகத்  தறித்த  கொறோக்குறள்.......!

கண்டது சந்தோசம் மல்லிகை வாசம்......!  😁 

ஆஹா... ஔவையார் பாணியில் பாராட்டிவிட்டீர்களே, சுவி அண்ணா. அருமை... நன்றிகள்... 😀

Link to comment
Share on other sites

13 hours ago, நிழலி said:

நல்லா இருக்குது மல்லிகை. எல்லாரும் கொறோனோ வைரஸ் இனால் பித்துப் பிடிச்சுக் கொண்டு இருக்கும் போது இப்படியான நகைச்சுவை மிகவும் அவசியம்.

என் முகனூலிலும் வட்ஸப் குழுமங்களிலும் இதன் Link கினை பகிர்ந்துள்ளேன்.

உண்மை தான் நிழலி. நோய் எங்களை அண்மிக்கும் முன்னமே உளரீதியாக ஏற்கெனவே எங்களைப் பீடித்துவிட்டது. 

கருத்துக்கும், பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி, நிழலி. மிக்க மகிழ்ச்சி. 😀

 

 

 

13 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், 'Only in Canada, security for toilet paper #coronavirus #ToiletPaperPanic @ POLIE' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

👍😂😂😂

அவுஸிலும் தான் அண்ணை! 😀

Link to comment
Share on other sites

11 hours ago, Paanch said:

எல்லா Toilet Rolls சும்  Rolls அல்ல மல்லிகை வாசம் தரும் Rolls சே Rolls. 

c700x420.jpg

ஆஹா... இதைக் கூட இவங்க விட்டுவைக்கல்லயா?!!! 🤔😂😂😂

ஆமா... இது எங்க கிடைக்கும் பாஞ்ச் அண்ணை? 🤔

Link to comment
Share on other sites

3 hours ago, மல்லிகை வாசம் said:

ஆஹா... இதைக் கூட இவங்க விட்டுவைக்கல்லயா?!!! 🤔😂😂😂

ஆமா... இது எங்க கிடைக்கும் பாஞ்ச் அண்ணை? 🤔

இதனை அவுசில் உருவாக்குகிறார்கள் எனத்தெரிகிறது அது உறுதிபடத் தெரியவில்லை. ஆனாலும் அதற்கு முன்பாக இந்த மென்தாளை எப்படி சிக்கனமாக பாவிப்பது என்பதுபற்றி நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் அவசியம், ஆகவே இதோ........

 

 

Link to comment
Share on other sites

21 hours ago, Paanch said:

இதனை அவுசில் உருவாக்குகிறார்கள் எனத்தெரிகிறது அது உறுதிபடத் தெரியவில்லை. ஆனாலும் அதற்கு முன்பாக இந்த மென்தாளை எப்படி சிக்கனமாக பாவிப்பது என்பதுபற்றி நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் அவசியம், ஆகவே இதோ........

 

 

அவுஸில் சாதாரண rollsஏ கிடைப்பது கஷ்டமாக இருக்கு. இதுக்குள்ள மல்லிகை வாசமுள்ள பேப்பர் கேட்டால் உனக்கென்ன கொழுப்பா என்று கேட்பார்கள். 😀

காணொளித் தகவலுக்கு நன்றி பாஞ்ச் அண்ணா. 😀👍

 

Link to comment
Share on other sites

  • 8 months later...

கொறோக்குறள், அதிகாரம்: புட்டு

1) குழற்புட்டுக்கும் உண்டோ அடைக்கும் தாழ் - அதன் மணம் வீணீர் தரும்!
2) புட்டுண்டு வாழ்வாரே வாழ்வர் - மற்றெல்லாம் பீட்ஸா தின்று பீப்பாய் ஆவர்!
3) குழலினிது, யாழினிது என்பர், குழற்புட்டை யாழ் நகரில் முழுங்காதார்!
4) தோன்றில் புட்டுப் பார்சலுடன் தோன்றுக - அஃதிலார் வீட்டிலிருந்து புட்டவித்தல் நன்று!
5) அரிசிமா, நீர், தேங்காய்ப்பூ, உப்பு இவை நான்கும் அளவுடனே சேர்த்து அவித்தது புட்டு. 
6) இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் - விருந்தோம்பிப் புட்டைப் பரிமாறுதற் பொருட்டு!
7) வயிறுள்ளோர் என்போர் புட்டுண்டோர் - உடம்பிலொரு குப்பைவாளி உடையோர் பீட்ஸா உண்போர். 
8. புட்டின் வழியது உடல்நிலை - அதை அறியார்க்குப் பீட்ஸாவினால் ஆன உடம்பு!
9) உண்டபொழுதில் பெரிதுவக்கும் - தான் உண்டது புட்டு என உணர்ந்த வாய்!
10) காலையிலே உண்ட புட்டு சிறிதெனினும் - பீட்ஸாவை விட வயிற்றுக்கு நிறைவாகும்.

Link to comment
Share on other sites

கொறோக்குறள் - அதிகாரம்: கொசிப் (Gossip)

1) எச்செய்தி யார் யார் வாய்க் கேட்பினும் அதற்குப் பொய் கலந்து திரித்தல் பேரறிவு
2) குழலினிது யாழினிது என்பர் - கொடுங்
கொசிப்பினைக் கேட்டுக் கிறங்காதார்
3) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - அது செல்லாக் காசாம் கொசிப் கேளாவிடின்
4) சேற்றில் மலர்ந்து நாறும் மலரனையர், சேதிகளைக் கொசிப்பாய்ப் பரப்புபவர்
5) வாய்மை எனப்படுவது யாதெனின் - கொசிப்பை ஐயமுறா வண்ணம் பேசிக் கவர்தல்
6) கொசிப் கேட்டதனால் ஆய பயன் என் கொல், அதனை நூறு பேருக்குப் பரப்பாவிடின்? (பிழைக்கத் தெரியாத மனுசனையா நீர்!)
7) கொசிப்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ், அதைப் பேசா வாயும், கேட்காக் காதும் பாழ்
8 ) கொசிப்பின் வழியது நல்லுரையாடல் - அதை உணரார்க்கு mask இனால் மூடிய வாய்
9) தீயினாற் சுட்ட வடு உள்ளாறும் - ஆறாதே கொசிப்பைப் பேசாது அடக்கிய நாவின் வலி
10) நீரின்றி அமையாது உலகெனின் - பலருக்கு கொசிப்பின்றி அமையாது பேச்சு

கொசிப்பில் ஆர்வமுள்ளோர் கடுமையாக வெறுக்கும் குறள்: 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.