Jump to content

Recommended Posts

சுமந்திரனால் யாழ் வேட்பாளர் பட்டியலில் களமிறக்கப்பட்ட ஒரு பெண் வேட்பாளர் சிங்களத் தரப்பால் களமிறக்கப்பட்டவரா என்ற சந்தேகத்தை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி எழுப்பியுள்ளது.

அதேவேளை, சிங்களக் கட்சி ஒன்றின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் சுமந்திரன் செயற்பட்டுவருவதான கூற்றை பிரபல அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் எழுப்பியுள்ளார்.

சுமந்திரனின் இரகசிய நிகழ்ச்சிநிரல் பற்றி சிரேஸ்ட ஊடகவிலாளரும், சுமந்திரனின் நெருங்கிய நன்பரும், த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான இரா.துரைரெத்தினம் எழுப்பியிருந்த நிலையில், தமிழரசுக் கட்சிக்குள் வெடித்துள்ள ஒரு 'பூகம்பம்' பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

https://www.tamilwin.com/srilanka/01/241153?ref=home-top-trending

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு 2009க்கு பின்னர் தங்களை தமிழினத்தின் பேசு பொருளாக காட்டிக்கொள்கிறார்களே தவிர இதுவரை சொல்லும் படியாக எதுவுமே சாதித்ததில்லை.மாறாக சிங்களத்தின் எடுபிடிகளாகவே மாறியுள்ளனர்.
அந்த கட்சியை கலைத்துவிடுவதன் மூலமாவது ஈழத்தமிழினத்திற்கு ஏதாவது ஒரு விடியலை தரலாம்.

Link to comment
Share on other sites

இங்கு ஒவொருவருக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு। அப்படி இல்லாவிடடாள் யாருமே எதையுமே செய்ய முடியாது। சுமந்திரன் அவரது நிகழ்ச்சி நிரலின்படி செய்கிறார்। அதை அங்குள்ள பெரும்பாலானோர் ஆதரிக்கிறார்கள்।

அதே வண்ணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சிலர் தங்களது நிகழ்ச்சி நிரலின்படி செயட்படுகிறார்கள்।

*******

Link to comment
Share on other sites

On 3/17/2020 at 7:16 PM, போல் said:

சுமந்திரனால் யாழ் வேட்பாளர் பட்டியலில் களமிறக்கப்பட்ட ஒரு பெண் வேட்பாளர் சிங்களத் தரப்பால் களமிறக்கப்பட்டவரா என்ற சந்தேகத்தை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி எழுப்பியுள்ளது.

அந்த பெண் வேட்பாளர் தன்ர சகோதரியை பாக்க அவுஸ் போறதால தான் தேர்தல்ல போட்டி போடேல்ல என்டு சொல்லிட்டு எஸ்கேப்பாம்

Link to comment
Share on other sites

தமிழினத்துக்கு எதிராகவும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தினை காப்பாற்ற இயங்கிய சுமந்திரன் கூட்டம் ஒருவாறாக போலி மனித உரிமைச் செயற்பாட்டாளரான அம்பிகாவை தேசியப்பட்டியலில் முதலாவதாக இணைத்துள்ளார்களாம்.

இதன் மூலம் இந்த சுமந்திரன்-சம்மந்தன்-மாவை கூட்டத்தினர் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுப்பதில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

தேர்தலில் போட்டியிட நேரமில்லை என்றவருக்கு தேசிய பட்டியல் மூலம் அரசியல் செய்ய எப்படி நேரம் கிடைக்கும் என்று பலர் கேட்கின்றனர்.

ஒற்றையாட்சியை சமஸ்டி ஆட்சி என்று ஏமாற்றிய சுமந்திரன்-சம்மந்தன்-மாவை கூட்டத்தினரின் ஏமாற்று அரசியலுக்கு இதுவும் இன்னொரு உதாரணமாகிறது. 

 

Link to comment
Share on other sites

சுமந்திரன் எப்பவுமே சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே நடக்கிறார்.

எப்பதான் அவர் தமிழினத்தின் உரிமைகளுக்காக உளப்பூர்வமாக குரல் கொடுத்திருக்கிறார்?
சர்வதேச விசாரணைகளை குழப்ப சுமந்திரன் ஓடி ஊளைச்சதை யார் தான் மறக்க முடியும்?

இப்ப சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடக்கிற ஆக்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி தமிழ் மக்களை  அழிக்க நாய்படாதபாடா துடிக்கிறார்.

Link to comment
Share on other sites

On 3/17/2020 at 7:16 PM, போல் said:

சுமந்திரனால் யாழ் வேட்பாளர் பட்டியலில் களமிறக்கப்பட்ட ஒரு பெண் வேட்பாளர் சிங்களத் தரப்பால் களமிறக்கப்பட்டவரா என்ற சந்தேகத்தை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி எழுப்பியுள்ளது.

அதேவேளை, சிங்களக் கட்சி ஒன்றின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் சுமந்திரன் செயற்பட்டுவருவதான கூற்றை பிரபல அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் எழுப்பியுள்ளார்.

சுமந்திரன் தமிழ்மக்களை படுமுட்டாள்களாக நினைப்பதை இது காட்டுது.

தமிழரசுக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட சில கோடிகளை சுமந்திரன் கேட்டதாக ஏற்கனவே செய்திகள் வந்து அடங்கியிருந்தது.

இந்தப் பெண்ணிடமும் எக்கச்சக்கமா எதையோ வாங்கி மாட்டிட்டாரோ என்டு தெரியல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.