Jump to content

மறு அறிவித்தல் வரை புத்தளம் மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம்!


Recommended Posts

மறு அறிவித்தல் வரும் வரையில், புத்தளம் மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4.30 முதல் மறுஅறிவித்தல் வரை இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/139266

Link to comment
Share on other sites

23 minutes ago, Rajesh said:

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் முதல் தான் இந்த 3 ஊர்களைபத்தி குறிப்பிட்டிருந்தன்.

Link to comment
Share on other sites

பல நாடுகளில் மருத்துவ அவசரகால சட்டமும், மாநில இல்லை தேசிய அவசரகால சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை என்றுமே தனித்துவமானது. இங்கே, ஊரடங்குச்சட்டம் 😗

Link to comment
Share on other sites

பொலிஸ் ஊரடங்கு சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை : அஜித் ரோகன

புத்தளம் , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு முதலான பொலிஸ் எல்லை பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மீண்டும் அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சுற்றுலாக்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் இந்த பிரதேசத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் குழப்ப நிலையின் போது பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் அல்ல மாறாக இது தொற்றுநோய் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டதாகவே அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் இதயபூர்வமாக சிந்தித்து செயற்படவேண்டிய தருணம் இது. இந்த பிரதேசங்களில் ஊரடங்கு சட்ட உத்தரவை மதிக்காது செயற்படுவோர் அதாவது மோட்டார் வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறான வாகனங்கள் பொலிஸாரினால் பொறுப்பேற்க்கப்படும். இருப்பினும் இப் பிரதேசத்திற்கு ஊடாக யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், மன்னார் போன்ற மாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். அவசர சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் இவ்வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவை தவிர இப் பிரதேசத்தில் உள்ளோர் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அதை விடுத்து ஒன்றுகூடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை அனைத்து பொலிஸ் நிலைய எல்லை பகுதிக்குள்ளும் ஆகக் குறைந்தது 2 சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். பொலிஸ்மா அதிபர் இதற்கான உத்தரவை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுலாப்பயணங்கள் போன்றவற்றுக்கான பஸ்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று பயணிகள் போக்குவரத்து பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். இதனை மீறி செயற்படும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பஸ்களுக்கான அனுமதிப்பத்திரங்களையும் சட்ட விதிகளுக்கு அமைவாக நிரந்தரமாக இரத்து செய்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/78172

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

பல நாடுகளில் மருத்துவ அவசரகால சட்டமும், மாநில இல்லை தேசிய அவசரகால சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை என்றுமே தனித்துவமானது. இங்கே, ஊரடங்குச்சட்டம் 😗

அம்பனை  இத்தாலியில் மாலை 6 மணி தொடக்கமும் அமெரிக்காவில் ஒருமாகாணத்தில் மாலை 8மணி தொடக்கமும் ஊரடங்குச்சட்டம் ஏற்கெனவே அமுல் நடத்தபடுகிறது. மிக பெரிய ஜனநாயக நாடான யேர்மனியில்  
So far, no curfews have been announced or implemented in Germany  but all options are on the table.
என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அம்பனை  இத்தாலியில் மாலை 6 மணி தொடக்கமும் அமெரிக்காவில் ஒருமாகாணத்தில் மாலை 8மணி தொடக்கமும் ஊரடங்குச்சட்டம் ஏற்கெனவே அமுல் நடத்தபடுகிறது. மிக பெரிய ஜனநாயக நாடான யேர்மனியில்  
So far, no curfews have been announced or implemented in Germany  but all options are on the table.
என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆம், நீங்கள் கூறுவது சரி. பல நாடுகளும் ஒருசில தமது ஊர்களின் ஊரடங்கை அறிவித்துள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அங்கு சொல்லாமல் ,கொள்ளாமல் பதுங்கி இருக்கலாம்...இங்கே லொக் டவுண் என்பதை அவர்கள் ஊரடங்கு சட்டம் என்கிறார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் உணவு  பொருட்களை கொள்வனவு செய்வது எப்படி? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.