Jump to content

தொழுகையில் பங்கேற்றவர்களுக்கு அதிக பாதிப்பு

Recommended Posts

கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அங்குள்ள மசூதி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 3ல் 2 பகுதியிலானோர் தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 7900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் இதுவரை 673 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெடாலிங் மசூதியில் கடந்த பிப்.,27ம் முதல் மார்ச் 1 வரையிலான 4 நாள் தொழுகை நடைபெற்றது. இதில் கனடா, நைஜீரியா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 1500 பேர் உட்பட 16 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கொரோனா தொற்று அதிகளவு பரவிய நாடுகளான சீனா, தென் கொரியாவை சேர்ந்தவர்களும் இருந்தனர்.

இந்நிலையில், மலேசிய சுகாதார அமைச்சகம் சார்பில் கூறுகையில், மலேசியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 673 பேரில் மூன்றில் இரண்டு பகுதியிலானோர், இந்த தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், என கூறப்பட்டுள்ளது. தொழுகையை நடத்திய தப்லிகி ஜமாத் என்ற முஸ்லிம் இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் உருவானதாகவும், பின்னர் சில காரணங்களால் இயக்கத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மசூதி மூடப்பட்டது. இந்த தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்ற மலேசியாவை 34 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

தொழுகையில் பங்கேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொழுகை பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், வழிபாடு நடத்தியவர்கள் தோளோடு தோள் உரசும்படி நெருங்கி பிரார்த்தனை செய்வதையும், சிலர் கைகுலுக்குவது, ஒன்றாக சாப்பாட்டை பரிமாறி உண்பது போன்றும் புகைப்படங்கள் வெளியாகின.

சிகிச்சையில் உள்ள கம்போடியாவை சேர்ந்தவர் கூறுகையில், மசூதியில் அனைவரும் நெருக்கமாக தான் அமர்ந்திருந்தோம். வழிப்பாட்டின் போது பல்வேறு நாட்டில் இருந்து வந்தவர்களுடன் கைக்கோர்த்து கொண்டோம். இது வழக்கமான ஒன்று தான். ஆனால், எனக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை, என்றார்.

கோலாலம்பூரை சேர்ந்த மதபோதகர் கமஸ்லான் (34) கூறுகையில், பிப்.,28 வரையில் மலேசியாவில் 25 பேருக்கு மட்டும் தான் கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் நாங்கள் அது குறித்து கவலைப்படவில்லை என்றார்.

தொற்றால் பாதிக்கப்பட்ட கரீம் என்பவர் கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் இருந்த நிலையில், அரசு தொழுகை நிகழ்ச்சியை ரத்து செய்திருக்க வேண்டும். எனக்கு கொரோனா உறுதியான பின்னர் தான் இதனை உணர்ந்தேன். எனக்காக பிரார்த்தியுங்கள் என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2504463

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

தொழுகையில் பங்கேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொழுகை பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், வழிபாடு நடத்தியவர்கள் தோளோடு தோள் உரசும்படி நெருங்கி பிரார்த்தனை செய்வதையும், சிலர் கைகுலுக்குவது, ஒன்றாக சாப்பாட்டை பரிமாறி உண்பது போன்றும் புகைப்படங்கள் வெளியாகின.

அவர்களின் முறைகள் மனிதநேயத்தை உரக்க சொல்வது என்று சொன்னவங்களை தேடுகிறேன் .

Link to comment
Share on other sites

14 minutes ago, ampanai said:

தொற்றால் பாதிக்கப்பட்ட கரீம் என்பவர் கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் இருந்த நிலையில், அரசு தொழுகை நிகழ்ச்சியை ரத்து செய்திருக்க வேண்டும். எனக்கு கொரோனா உறுதியான பின்னர் தான் இதனை உணர்ந்தேன். எனக்காக பிரார்த்தியுங்கள் என்றார்.

ஈரானில் அதிக உயிர் இழப்பிற்கு கூட இந்த சமயவழிபாடு அணுகுமுறை ஒரு காரணமாக இருக்கலாம்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.