Nathamuni

தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்

Recommended Posts

ஒரு நண்பர் Hays, Uxbridge பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மளிகை கடைக்கு போனார். பாலுக்கு பக்கத்தில் முட்டை. expiry date 11/03/20. பக்கத்திலேயே சிறிய எழுத்துகளில் 'Note for customers' - these items here for our suppliers to take away' - please don't take it'.

Return items உள்ளே தானே இருக்க வேண்டும். எப்படி இங்கே பாலுக்கு பக்கத்தில் இருக்கிறது என்று அவருக்கு தெரிந்த அங்கிருந்த shelf filler இடம் கேட்ட்டபோது, அந்த எழுதி வைத்திருக்கிற துண்டை பார்க்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள் என்று, வீசுவதற்காக வைத்திருந்ததை வித்து காசு பார்க்கிறார்கள், இந்த பரதேசிகள் என்றாராம்.

பாசுமதி அரிசி, மொட்டைக் கறுப்பன் அரிசி தீடீரெண்டு தமிழ் கடைகளில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் முன்னே காணாமல் போய் விட்டது. 

சனம் அள்ளிக் கொண்டு போய் விட்டது. இரண்டு, மூண்டு நாளில் வந்து பாருங்கள் என்று சொல்லி, இப்போது பதுக்கி வைக்கப்பட்டன புதிய கூடிய விலை ஸ்டிக்கர் உடன் தினமும் கொஞ்சமாக வியாபாரத்துக்கு வருகின்றன.

உங்கள் அனுபவங்கள் எப்படி?

Edited by Nathamuni
 • Thanks 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

இது ஊரிலேயே வழமையாக நடப்பது.பெற்றோலில் இருந்து பனடோல் வரை பதுக்கி பின்னர் கூடிய விலைக்கு விற்பார்கள்.
அங்கேயிருந்து வந்தவர்கள் இதைத் தானே செய்வார்கள்.

Share this post

Link to post
Share on other sites

நம்மவர்கள் மாத்திரம் அல்ல மிச்சம் பக்கம் உள்ள elbrook cash and carry இதே வேலை பழைய முட்டைகளை றீ சேலரான  நம்மவர்களுக்கு வித்தானம் பொதுவாகவே அவனின் முக்கிய வியபாரம் ஒப் லைசன்ஸ் பொருள்களை விற்பது நம்மவர்தான் அந்த பாக்கியின் வாடிக்கையாளர் .

Share this post

Link to post
Share on other sites

கொரோனா பீதியில்... சனம் அதிகமாக கொள்வனவு செய்வதை பார்த்த...  
இங்குள்ள சில  தமிழ்க்கடைகள்... கிலோ நான்கு ஐரோ விற்ற மரக்கறி வகைகளை,
கிலோ  7 ஐரோவிற்கு விற்க ஆரம்பித்துள்ளார்கள்.

அப்படியே... அரிசி, ஆட்டா மா,  உளுந்து, மைசூர் பருப்பு போன்றவையும்  விலை ஏறியுள்ளது.
அப்படி இருந்தும், மக்கள் வாங்கிக் கொண்டு போகின்றார்கள்.

Share this post

Link to post
Share on other sites

images?q=tbn:ANd9GcRnpNELHqmqbK-gSQAALAaI8FNviPEpMHSA8B2ddhXHcQFktBh13g&s

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

large.Untitled.jpg.57ecbb74f35ede060a8bb4a4a144fdfb.jpg

Original Expiry Date: 31 Dec 2018

New Expiry Date: 31 Dec 2021

🙄

 • Sad 1

Share this post

Link to post
Share on other sites

புலிக்குள்ளேயே வண்டி ஒட்டினவன் இங்க எப்பிடியெல்லாம் ஓட்டுவான்

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

large.Untitled.jpg.57ecbb74f35ede060a8bb4a4a144fdfb.jpg

Original Expiry Date: 31 Dec 2018

New Expiry Date: 31 Dec 2021

🙄

இவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் அந்தந்த நாட்டு உணவுக் கட்டுப்பாட்டு அல்லது சுகாரதர துறைக்கு தெரிவியுங்கள். ரொறன்ரோவில்  காலவதியான பால்மா பெட்டிகளில் திகதி மாற்றி விற்ற சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளேன் .  இவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஒருவர் உடல் நிலை மோசமாவதற்கு காரணமாக அமையும்.  இந்த காலவதியான அப்பளத்தில் இருந்து எவ்வளவு லாபத்தை பெறமுடியும் ?  இருந்தும்  இதை செய்கின்றார்கள் என்றால்  விலை உயர்நத பொருட்கள் காலாவதியானால் இவர்கள் விற்பனையில் இருந்து அகற்ற மாட்டார்கள். 

Share this post

Link to post
Share on other sites

இந்த கொரோனா நெருக்கடியில் பதுக்கிவைத்த பொருட்களை விற்றே பலர் பெரும் பணக்காரர்களாகிவிடுவார்கள். இரக்கம் பார்க்காமல் trading standard க்கு அடித்துச் சொல்லவேண்டும். முடிந்தால் படங்களையும் அனுப்பவேண்டும்

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, சண்டமாருதன் said:

2 hours ago, கிருபன் said:

இந்த கொரோனா நெருக்கடியில் பதுக்கிவைத்த பொருட்களை விற்றே பலர் பெரும் பணக்காரர்களாகிவிடுவார்கள். இரக்கம் பார்க்காமல் trading standard க்கு அடித்துச் சொல்லவேண்டும். முடிந்தால் படங்களையும் அனுப்பவேண்டும்

அடிக்கிற காத்தில அம்மிக்கல்லே பறக்குது, அரசமரத்திலை எம்மாத்திரம்? அவனவன், முக்கியமாக வந்தபின் காப்பவர்கள், பயத்தில, கிடைத்ததை கொண்டோவடுதால், கடைக்காரர்கள், இதை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் நீண்டகால பாதகம் தரும் நம்பிக்கையீனத்தினை சம்பாதிக்கின்றனர்.

Share this post

Link to post
Share on other sites

கேடு கெட்ட தென்னாசிய சமூகத்திடம் இருந்து இதை விட வேற எதை எதிர்பார்கிறீர்கள்?

கொரோனாவை விட மோசமான கிருமிகள்.

கேட்டால் தாம் entrepreneurs என்பார்கள்.

Share this post

Link to post
Share on other sites

நான் வழமையாக  ஷொப்பிங் போவதில்லை! ஆனால் இன்று எட்டரை மணிக்கு பாலும் பாணும் வாங்க அருகில் இருக்கும் பெரிய Sainsbury’s supermarket க்குப் போனேன். கார் பார்க் full. உள்ளே போகாமல் அருகில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் கடை (வெறிச்சோடியுள்ளது) கார் பார்க்கில் காரை விட்டு சுபெர்மார்க்கெற்றுக்குள் போனால் உள்ளே ஒரு மைலுக்கு சனம் pay பண்ண கியூவில் நிற்கின்றது🥺

அவர்கள் வயதுபோனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7-8 மணி நேரத்திற்குப் பின்னர் போய் 45 நிமிடத்தில் இருந்ததையெல்லாம் அள்ளிக்கொண்டு (ஒரு அயிட்டம் மூன்றுக்கு மேல் வாங்கேலாது) கியூவில் நிற்கின்றார்கள்! இதற்குள் நின்று ஒன்றும் வாங்கேலாது என்று திரும்பி வந்துவிட்டேன்.

அருகில் இருக்கும் corner shops இல் பாண், பால் வாங்கலாம். ஆனால் தமிழர்கள் கொள்ளைலாபம் அடிக்க விலையைக் கூட்டி வைத்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். போனால்தான் தெரியும்.

Share this post

Link to post
Share on other sites

'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, ராசவன்னியன் said:

'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

Running with hares and hunting with hounds!!

நீங்களும் என்னுடன் சேர்ந்தே பயத்தில் ஓடுகிறீர்கள். இடையே எனது பாக்கெட்டினுள்ளும் கையை போட்டு உருவிக்கொள்கிறீர்கள் - நியாயமில்லாமல்..

டைட்டானிக் கப்பலில் வருவது மாதிரி... பணம் வைரஸினைக் தடுக்காது. 🙄

Edited by Nathamuni
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ராசவன்னியன் said:

'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

கோடை காலத்தில் குளங்கள் எல்லாம் வற்றி வெறுந்தரையாய் கிடக்கும். அப்போது முயல் போன்ற பிராணிகள் நீர் தேடி நடு வெட்டைக்கு வரும்.அப்போது அம் முயலை திரத்தி அடிப்பது சுலபமாய் இருக்கும். அதுபோல்தான் மக்களின் அவசிய தேவையை கடைக்காரர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்....!   😁

 • Like 4
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

திரு.நாதமுனி, திரு.சுவி இருவரின் விளக்கத்திற்கும் நன்றி.

ஈழத்தில் பயன்பாட்டிலிருக்கும் உவமைகள், சுவாரசியமாக உள்ளன.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
51 minutes ago, ராசவன்னியன் said:

திரு.நாதமுனி, திரு.சுவி இருவரின் விளக்கத்திற்கும் நன்றி.

ஈழத்தில் பயன்பாட்டிலிருக்கும் உவமைகள், சுவாரசியமாக உள்ளன.

ஹீ... ஹீ...

இது ஈழ மொழி அல்ல வன்னியர். தமிழ் மொழி. நான் சொன்ன உவமானம் தமிழகத்தில் பாவிக்கின்றனரே. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான்,  வேட்டை நாயால் திருத்தப்பட்டு தவிக்கும் முயல், உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

நம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.

உங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.

சரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.

ஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.

Edited by Nathamuni
 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, Nathamuni said:

ஹீ... ஹீ...

இது ஈழ மொழி அல்ல வன்னியர். தமிழ் மொழி. நான் சொன்ன உவமானம் தமிழகத்தில் பாவிக்கின்றனரே. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

நம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.

உங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.

சரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.

ஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.

ஆத்திரத்தில் புத்தி ஒழுங்கா வேலை செய்யாது நாதம்ஸ்.....இதுக்கு நீங்கள் சரவணன் பாலசுப்பிரமணியனின் அப்பாவிடம்தான் பேசாமல் இருந்திருக்க வேண்டும்,  அப்பாவியிடம் கோபம் கூடாது....!   😁

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

...

நாதமுனி, நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான்.

ஆங்கிலத்தில் பேசினால்தான் படித்தவன், அறிவாளி என மாயை இன்னமும் உள்ளது. நகரங்களில், குறிப்பாக சென்னையில் பல தமிழர்கள் ஆங்கிலத்தில்தான் 'பீட்டர்' விடுவதுண்டு.

இந்தியர்களென்றால் இந்தியில் பேசவேண்டுமென எதிர்பார்ப்பும், இந்தி தெரியாது என சொன்னால் ஏற இறங்க விநோதமாக பார்ப்பவர்களையும் வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

அந்த மனநிலையில் இருப்பவர்களை ஒன்னும் செய்ய இயலாது.

1 hour ago, suvy said:

ஆத்திரத்தில் புத்தி ஒழுங்கா வேலை செய்யாது நாதம்ஸ்.....இதுக்கு நீங்கள் சரவணன் பாலசுப்பிரமணியனின் அப்பாவிடம்தான் பேசாமல் இருந்திருக்க வேண்டும்,  அப்பாவியிடம் கோபம் கூடாது....!   😁

சாரோடா லொள்ளுகளை, வீட்டில் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ..! :)

Share this post

Link to post
Share on other sites

நான் இன்றைக்கு பாக்கின்ட  கடைக்கு இறைச்சி வாங்க போனேன் ... சரியான சனம் ...£15 என்னவோ  இறைச்சி , 2 ரின் தக்காளியும் வாங்கினேன் ...£27  எடுத்து இருந்தார்கள் ...முதலில் யோசிக்காமல் காட்டில் டப் பண்ணிப் போட்டு  பில்லை பார்த்தால் £10 கூட எடுத்திருக்கிறான்...போய் கேட்டவுடன்  சொறி என்று போட்டு தூக்கி தந்தான் ...அவசரத்தில் பார்க்காமல் வாங்கிற எத்தனை பேருட்டை ஆட்டையைப் போட்டானோ ?

தமிழ் கடைக்கு போனால் பெரும்பாலான சாமான்கள் இல்லை ...இருக்கின்ற மரக்கறிகளுக்கு விலையை கூட்டி வைக்கிறார்கள் ...6 மாசத்தில்  கிடைக்கிற லாபத்தை ஒரு மாசத்தில் எடுத்து விடுவார்கள்.🙂
கொரோனாவை விட சனங்கள் பொருட்கள் வேண்டிக் குவிப்பதை பார்க்க பயமாயிருக்கு🤔 ...6,7 மாசத்திற்கு வெளியால வெளிக்கிடேலாது என்ட மாதிரி வேண்டிக் கொட்டினம் ...எனக்கு இன்னமும் பருப்பு கிடைக்கேல் 😟.

இப்படியான நேரத்தில் ஊரில் இருந்திருந்தால் பெட்டரோ என்று படுது😀 

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, Nathamuni said:

Running with hares and hunting with hounds!!

நீங்களும் என்னுடன் சேர்ந்தே பயத்தில் ஓடுகிறீர்கள். இடையே எனது பாக்கெட்டினுள்ளும் கையை போட்டு உருவிக்கொள்கிறீர்கள் - நியாயமில்லாமல்..

டைட்டானிக் கப்பலில் வருவது மாதிரி... பணம் வைரஸினைக் தடுக்காது. 🙄

மன்னிக்கவும்,
நானறிந்த மட்டில்

Running with the hares and hunting with the hounds என்பதன் அர்த்தம் தவிச்ச முயல் அடிப்பதல்ல.

Hounds என்றால் வேட்டை நாய்கள். Hares என்றால் முயல்.

ஊரில் “அங்காலையும் பாடி இங்காலையும் பாடி” என்பார்கள் அதை ஒத்ததுதான் இதன் அர்த்தம்.

அதாவது முயலோடும் ஓடும் அதே ஆள், முயலை வேட்டை ஆடும் நாயோடும் ஓடுவது அல்லது ஓடுவதைப் போல் காட்டுவது.

தமிழில் இதற்கு அருகான பழமொழிகள்

“பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” அல்லது

”தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடல்”.

எனது கருத்தில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டினால் திருத்தி கொள்வேன்.

பிகு: இதில் தனிமனித bullying ஏதுமில்லை.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

இந்த phrase ஆங்கில மொழி உருவாகிய மத்திய காலப்பகுதியில் இருந்து பாவிக்கப்பட்டு வருகின்றது. பல வித கருத்துக்களை பலர் சொல்கிறார்கள். 

2. To act duplicitously or hypocritically; to speak or act out against something while engaging or taking part in it.How can you be taken seriousy as a reformer when you have continued to accept gifts? You can't run with the hare and hunt 
with the hounds, Senator.

இதுவே எனக்கு சரியாக பட்டாலும், தெளிவில்லை என உணர்ந்ததால் பின்னர் மேலதிக விளக்கம் வன்னியருக்கு கொடுத்துளேன்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

இன்னும் சிலர், வேடடைக்கு துரத்தும் மிருகங்களிடம் தப்பி  ஓடும் முயல்கள் உடன், பயந்தது போலவே சேர்ந்து ஓடி, குறித்த முயல் ஒன்று சிதறி ஓடி தனிமையில் மாட்டும் போது லபக் என்று கவ்விக் கொள்வது என்ற பொருளும் உள்ளது என்கின்றனர்.

Edited by Nathamuni
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
49 minutes ago, Nathamuni said:

நீங்கள் கொடுத்த “கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும்” உவமானத்தை பற்றியோ நீங்கள் கொடுத்த மேலைதிக விளக்கத்தை பற்றியோ நான் எதுவும் கூறவில்லை. 

நான் கூறியதெல்லாம் running with the hares and hunting with the hounds என்பதன் அர்த்தம் “தவிச்ச முயல் அடிப்பது” அல்ல என்பது மட்டுமே.

தவிரவும் நீங்கள் கூறுவது போல் ஆங்கிலம் கூறு நல்லுலகில் இந்த சொலவாடையின் அர்த்தம் பற்றிய மாறுபட்ட கருத்துகள் ஏதுமில்லை (சகல நம்பதகு அமைபுக்களும் இதயே சொல்கிறன).

நீங்கள் தந்த ஆங்கில உதாரணத்தில் கூட ஒரு செனேட்டரின் duplicity ஐ அதாவது “அங்காலும் பாடி இங்காலும் பாடி” தனத்தை குறிக்கவே இந்த சொலவாடை பயன்படுத்தப் பட்டுள்ளது.

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, goshan_che said:

சரிங்க dean of yarl மெத்தபடிச்சனியள்... சொல்லுறது சரியாய் இருக்கும்.

பின்ன வரட்டே போட்டு....  😁

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.