-
Tell a friend
-
Topics
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்விகண்டதை அடுத்து இன்று நடந்த தவிசாளர் தேர்வில் 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த அந்தச் சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கைமாறியது. மாகாண சபைத் தேர்தல் வரலாற்றின் ஆரம்பம் தொட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை ஸ்ரீலலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியதை அடுத்து பிரதேச சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைப் பிரதிநிதித்துவம் செய்துவரும் ஆர்.ஏ.ரி. எஸ்.டீ. ரத்நாயக்க தெரிவானார். இன்று காலையே அவர்கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன.அதில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 07 உறுப்பினர்களுடன் சபையைக் கைப்பற்றியது.இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவுக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் 12 வாக்குகள் பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 10 வாக்குகளே கிடைத்தன. சபையில் கூடுதலான உறுப் பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு விருப்பம் தெரிவித்ததற்கமைய திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் க.தங்கராசாவின் பெயர் முன்னாள் தவிசாளர் டாக்டர் ஞானழிகுணாளனினால் முன்மொழியப்பட்டு தமிழ் தேசியக் கூட்ட மைப்பு உறுப்பினர் திருமதி ஆர். அமுதவல்லியால் வழிமொழியப்பட்டது. பொதுஜன பெரமுன சார்பில் உறுப்பினர் ரத்னாயக்காவின் பெயர் உறுப்பினர் ஏ.ஸி.பைரூஸால் முன்மொழியப்பட்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணனினால் வழிமொழியப்பட்டது. மேலும் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களில் இரு உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு சார்பாகவும் மற்றைய உறுப்பினர் நவ்பர் (உபதலைவர்) தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். அத்துடன் வரதர் அணி உறுப்பினர் சி. விபுசன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸ் உறுப்பினர் இருவர் ஆகியோர் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு சார்பாக வாக்களித்தனர். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலை மையில் 3 உள்ளூராட்சி சபைகள் உள்ள நிலையில் இச்சபையை அது பறிகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Thinakkural.lk -
திரும்பவும் முதலில் இருந்தா சகோ ஒரு செயலை விமர்சிக்கும் போது அதற்கான மறு செயலை கேட்பது இயற்கையே?? பிழை என்றால் சரியான செயலை நீங்கள் எந்தளவுக்கு செயற்படுத்துகிறீர்கள் என்பதில் தான் செய்பவர்கள் தமது தவறை உணரவோ மாற்றவோ வழி. உண்மையில் ஒரு விடயத்தை செய்பவரின் பிழையை கேட்பதற்கு முன்னதாகவே அதை பிழை என்பவர்களிடம் செயலும் விளக்கமும் இருப்பதே உகந்தவழி மாற்றுவழி அதுவும் பொது நலன் சாந்தது தான். திருப்பிக்கேட்டால் தனிநபர் ஆகிவிடமுடியாது இங்கே நீ என்று ஒருவரை விரல் காட்டி நான் பேசியதில்லை நீங்கள் என்பதற்குள் அது சார்ந்த மாற்றுவழியை தொடர்பவர்கள் இருக்கிறார்கள் அந்த மாற்றுவழி என்பது சில வருடங்களுக்கு முன்புவரை புலிகள் விடுகிறார்கள் இல்லை இல்லாது விட்டால் நாம் கிழித்து விடுவோம் என்பதாக இருந்தது இப்பொழுது அவர்கள் இல்லாதபோதும் மேடை சரியில்லை வேசம் பொருந்தலை கலர் பிடிக்கலை என்று தொடர்கிறது. அந்த வருத்தத்தில் வரும் வார்த்தைகளே அன்றி தனிப்பட எவர் மீதும் ஊர்க்குணத்தை பாவிப்பதில்லை அந்த வயதுமில்லை.
-
By மல்லிகை வாசம் · பதியப்பட்டது
* இது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி', 'மாநகரம்' அளவுக்குப் புதுமையான கதையோ, நேர்த்தியான திரைக்கதையோ கொண்ட திரைப்படம் அல்ல. இன்னும், விஜய் சேதுபதி, மாதவனுடன் இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' அளவுக்கு நேர்த்தியான, விறுவிறுப்பான திரைப்படமுமல்ல. * மூன்று மணிநேர நீளமான இத்திரைப்படத்தின் முதல் ஒரு மணிநேரக் காட்சிகளைச் சற்றே இரத்தினச் சுருக்கமாகத் தந்திருந்தால் விறுவிறுப்பாகவும், சுவாரசியமானதுமாகவும் இருந்திருக்கும். எனினும் அடுத்த இரு மணி நேரமும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. * ஒரு சமூகப்பிரச்சினையைத் தெளிவாகவும், அழுத்தம்திருத்தமாகவும் சொல்லியிருக்கும் திரைப்படம் இது. * பல வருடங்களுக்குப் பிறகு விஜய் சற்றே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்; ஆரம்பக் காட்சிகளில் அவரது இப்பாத்திரம் அவருக்குப் பொருத்தமில்லாததாகத் தோன்றினாலும், காட்சிகள் நகர நகர ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் ஓர் நிலையில் வழமையான கதாபாத்திரத்துக்கு அவர் மாறுவது ஒரு விதத்தில் நமக்கு நிம்மதி! எனினும், அவசியமான ஓரிரு இடங்களில் மட்டும் அட்வைஸ் பண்ணுவது போன்ற காட்சிகளைத் தவிர மற்றப்படி பஞ்ச் வசனங்கள், தேவையில்லாத build-up காட்சிகள் இல்லாததும் நிம்மதியே! தவிரவும், உணர்வுபூர்வமான, சோகமான காட்சிகளில் அவருக்குள்ளிருக்கும் அற்புத நடிகர் எட்டிப்பார்க்கிறார். * வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை ஏற்றுக்கொள்ள முடிகிறது. கொடிய வில்லனாக அவர் வாழ்ந்திருக்கும் பல காட்சிகள் மனதை நிறைக்கின்றன. யதார்த்தமான, நேர்த்தியான நடிப்பு! (இது அவரது ஹீரோ இமேஜைப் பாதிக்காது என்பது என் எண்ணம்; எந்தப் பாத்திரமானாலும் நம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பது அவரது சாமர்த்தியம் தான்!) * ரஜினியின் 'பேட்டை' திரைப்படத்தின் சாயல் ஆங்காங்கே தென்படுகிறது. விஜயின் கதாபாத்திரமும், கதைக்களமும், சில காட்சிகளும், வில்லன் விஜய் சேதுபதியும் 'பேட்டை' திரைப்படத்தை அவ்வப்போது நினைவுபடுத்துகின்றன. (அங்கும் விஜய் சேதுபதிக்கு வில்லன் பாத்திரம், கூடவே மாஸ்ரர் கதாநாயகி மாளவிகா மோகனனும் அப்படத்தில் நடித்துள்ளார்!) * சண்டைக் காட்சிகள் புதுமையானதாகவும், நம்மை உறையவும் வைக்கின்றன. எனினும் அதிக சண்டைக் காட்சிகள் பலருக்குத் தலையிடியைத் தரலாம்; சிறுவர், குழந்தைகளுக்கு உகந்ததல்ல. * நிறைவுக் காட்சியும், சண்டையும் அபாரம்; விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதும் காட்சிகள் வியாழனும், சனியும் மோதுவது போன்ற ஒரு effect. ஒரு முன்னணி மாஸ் ஹீரோவும், இன்னொரு முன்னணி class நடிகரும் ஒரே காட்சியில் தோன்றி மோதுவது தமிழ் சினிமாவில் அபூர்வம். இவ்வாறான இரு பிரபலமான முன்னணி நடிகர்களது படங்கள் இன்னும் பல உருவாக வேண்டும். * முழுக்க முழுக்க விஜய் படமாக அமையாமல் விஜய் சேதுபதி மற்றும் பல துணை நடிகர்களுக்கு உரிய இடம் இத்திரைப்படத்தில் வழங்கப்பட்டமை ஆரோக்கியமான போக்கு; இது இன்னும் பல படங்களில் தொடரவேண்டும். *அனிருத்தின் இசையும், சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவும் இந்த விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்திற்குப் பக்கபலமாக இருக்கின்றன. மொத்தத்தில், 'மாஸ்ரர்' திரைப்படம் ஒரு மாஸ்ர-பீஸ் (master-piece) அல்ல; ஆனாலும், இது ஒரு classஆன மாஸ் படம்! 😀 -
டார்ச் லைட் உவருக்கு சரியான சின்னம்...😁
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.