Jump to content

கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அனைவரும் அறிவோம். அதனால் ஒவ்வொருவரும் தாங்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டிய தேவைகளும் உள்ளது. அதற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ அவற்றை நிறுத்தவோ முடியாது. 

Image result for சர்வதேச இந்து இளைஞர் பேரவை

இது பற்றி சர்வதேச இந்து இளைஞர் பேரவையின்  தலைவர் சிவஸ்ரீ. ஜெ.மயூரக்குருக்கள் இன்று ஊடகத்திற்கு  கருத்து தெரிவிக்கின்ற போது,

ஆலயங்கள் ஆகம வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் அவை காலாகாலமாக அவ்வாறே நடந்தும் வருகின்றது. நித்திய பூஜைகள், நைமித்திய பூஜைகள் என்பன தவறாது நடைபெற வேண்டுமென ஆகமங்கள் கூறுகின்றது. 

இதற்கு முன்னரும் கொலறா, மலேரியா போன்ற கொடிய நோய்கள் எம்மைத்தாக்கிய போதும் இவ்வாலய வழிபாடுகளில் எந்த மாற்றங்களும் வரவில்லை. ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பலர் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு கூறிவருகின்றனர். 

அவ்வாறு ஒன்று கூடுவதனால் மக்களிற்கு நோய்த்தாக்கம் ஏற்படவாய்புள்ளது. அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே. ஆனால் அதற்கான பாதுகாப்பினைத் தேடவேண்டியவர்கள் நாங்களே. அதனை விடுத்து ஆலய கிரியை முறைகளில் அவற்றை தடுக்கவோ அல்லது செய்யாது இடைநிறுத்தவோ முடியாது. அவை நியமத்தின் படி நடந்தே ஆக வேண்டும். 

ஆக மொத்தத்தில் நேரகாலங்களை குறுகிய உள்ளடங்கலுடன் ஆலய விழாக்கள் இடம்பெற வேண்டும். காலாகாலமாக செய்துவந்தவை செய்யப்பட வேண்டும். ஆகமங்களையோ ஆகம விதிகளையோ சட்டங்கள் மாற்ற முடியாது.  அனேக ஆலயங்களில் எதிர்வரும் 28ம் திகதிமுதல் விழாக்கள் ஆரம்பிக்கின்றன. அவை நடைபெறும். எனவே ஆலயம் சார்ந்தோரும் ஏனைவர்களும் அவற்றை அமைதி முறையில் செய்வதே உசிதமாகும்.

மகோற்சவ ஆலயங்கள் மகோற்சவம் செய்யாது விடுதல் எப்போது எனின் பாலஸ்தாப காலத்தில் மற்றும் அனர்த்தங்கள் வந்து ஊரோடு அனைவரும் வெளியேறும் காலங்களில் மாத்திரமே. ஏனைய காலங்களில் அதற்கான பிராயச்சித்தங்கள் செய்யப்பட்டு அவ்விழாக்கள் தொடரும். ஆகவே பெரும் எடுப்பிலே அல்லாமல் அமைதியான முறையில் மகோற்சவங்களை செய்யுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78192

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

இந்த வைரஸ் தாக்கம் உலக அளவில் பொருளாதார சரிவை ஏற்படுத்தி உள்ளது. பல மில்லியன் கணக்கான நட்டத்தை உலக வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் உங்கள் கோவில், மத வியாபாரத்திலும் அவ்வாறான சிறிய நட்டத்தை பொறுத்தருள வேண்டும். உங்கள் வியாபரத்தை மீண்டும் வளர்த்தெடுப்பது ஒன்றும் பெரிய கடினமான ஒன்றல்ல. மக்களிடம் மூடத்தனம் என்ற உங்களின் மூலதனத்தை மிக நன்றாக ஏற்கனவே விதைத்துள்ளீர்கள். ஆகவே சிறிய வருமான இழப்பை பொறுத்தளுள்க குருவே.

இந்த வைரஸ் பிரச்சனையால் உலகெங்கும் உள்ள மக்கள் பாரிய அசௌரியங்களை எதிர் நோக்கிலாலும் பொதுவான நன்மை கருதி  அவற்றை சாரதண மனிதர்களே பொறுத்து கொண்டு தமது கடமைகளை செய்யும் நிலையில் எல்லாம் வல்ல பரம் பொருள் என்று உங்களால் வர்ணிக்கப்படும் அவர் அதைப்பொறுக்காத அளவுக்கு கல்லுளி மங்கனாக இருப்பார் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். 

Link to comment
Share on other sites

ஈரானில் முல்லாக்களும் மலேசியாவில் இமாம்களும் தென்கொரியாவில் பாதிரியாரும் இப்படியான கருத்துக்களை வைத்து வழிபாடுகளை செய்ததன் விளைவுகளை அந்த நாடுகள் தற்போது அனுபவிக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு அழிவு தமிழருக்குத் தேவை என்கிறாரோ ? பகுத்து அறியும் உணர்வை அடகு வைத்தால் இப்படித்தான் அறிக்கைகள் வரும்.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நாம் ஒரு போதும் ஐயண்ட பேச்சை ஒரு பொருட்டாயே மதிக்கிறேல்ல மயூரன். 

மூட்டீட்டு உம்மட வேலை எதோ அதை மட்டும் பாரும். 

மணியடிச்சமா, தட்டில விழுறத பொறுக்கி திண்டமா, அத மட்டும் செய்யும். அரசியல் எல்லாம் பேசப்படாது. பேசினாலும் எடுபடாது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளுக்கு அவற்றை பிரச்சனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருக்கள் சொல்ல வந்தது ஒன்று சொன்னது வேறொன்று.

கோவிலை பூட்டி உள்ளே குருக்கள் பூஜைகள், ஆராதனைகள், நைவேத்தியங்கள், நித்திய கிரிகைகள் அனைத்தையும் செய்தால் யார் கேட்கப்போறார். வேண்டுமானால் பூஜை நிகழ்வுகள் அனைத்தையும் இணையம் மூலம் அடியார்களுக்கு ஒளிபரப்பலாம்.

கோவிலுக்கு உள்ளே வழிபாட்டுக்கு என்று மக்களை அனுமதிக்காத வரைக்கும் தொற்று நோய் பரவலை கட்டுபாட்டுக்குள் வைக்கமுடியும். பெரிய உற்சவ காலங்களில் கோவிலுக்கு வெளியே திருவிழாக்கள், நிகழ்வுகள் யாவும் நிறுத்தப்பட்டு மக்கள் தரிசனத்துக்காக திரளாக கூடுவதும் தவிர்க்கபட வேண்டும்.

Link to comment
Share on other sites

29 minutes ago, vanangaamudi said:

தட்டுக்கு பதிலாக e- banking அல்லது credit card உபயோகிகலாம். ஏனென்றால் பூஜையில் முக்கியமான அம்சம்  அது தானே.  அது இல்லை என்றால. குருக்களின் குடுமி ஆடதே. 

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின்  தலைவர் சிவஸ்ரீ. ஜெ.மயூரக்குருக்கள் இன்று ஊடகத்திற்கு  கருத்து தெரிவிக்கின்ற போது,

இந்த முட்டாள் மனுஷனை குறைஞ்சது 6 மாதம் சிறையில அடைக்கோணும்!

இந்தாள் பிளான் பண்ணின வருமானம் அம்பேல் ஆகிறதால ஆகமத்தை கையில எடுத்து குழப்பமான அறிக்கைகளை விட்டு சன்னதம் ஆடுது.

இது போன்ற மூடர்கள் தான் சர்வதேச அமைப்பு என்ட பேர்ல இப்ப குருமாரா திரியினம்.

Link to comment
Share on other sites

large.9021E974-7BF8-4080-B8E4-3CA75F75821D.jpeg.937678c944e8f93ff93a98e747156d73.jpeg

டாக்டர்: மூச்சை கொஞ்சம் இழுத்து விடுங்க.

சிலை: நான் மூச்சு விட்டால் இங்க ஏன்டா உட்கார்ந்து இருக்க போறேன். ஹாஸ்பிடலுக்கு வந்தே அட்மிட் ஆகியிருப்பேனடா மூடனே...

Link to comment
Share on other sites

4 hours ago, vanangaamudi said:

குருக்கள் சொல்ல வந்தது ஒன்று சொன்னது வேறொன்று.

கோவிலை பூட்டி உள்ளே குருக்கள் பூஜைகள், ஆராதனைகள், நைவேத்தியங்கள், நித்திய கிரிகைகள் அனைத்தையும் செய்தால் யார் கேட்கப்போறார். வேண்டுமானால் பூஜை நிகழ்வுகள் அனைத்தையும் இணையம் மூலம் அடியார்களுக்கு ஒளிபரப்பலாம்.

கோவிலுக்கு உள்ளே வழிபாட்டுக்கு என்று மக்களை அனுமதிக்காத வரைக்கும் தொற்று நோய் பரவலை கட்டுபாட்டுக்குள் வைக்கமுடியும். பெரிய உற்சவ காலங்களில் கோவிலுக்கு வெளியே திருவிழாக்கள், நிகழ்வுகள் யாவும் நிறுத்தப்பட்டு மக்கள் தரிசனத்துக்காக திரளாக கூடுவதும் தவிர்க்கபட வேண்டும்.

சரியாக புரிந்துள்ளீர்கள் என தோன்றுகின்றது. 

சிலரோ வழமை போல தமது விளக்கத்தை வைத்து விளாசுகிறார்கள். 

இதை என்ன குருக்களின் மூளைக்கும் வாய்க்கும்
 இடையில் இருந்தா நீங்கள் பார்த்தீர்கள்?
நீங்கள் சொல்ல வருவது சுத்தமா புரியவில்லை 

1 hour ago, tulpen said:

large.9021E974-7BF8-4080-B8E4-3CA75F75821D.jpeg.937678c944e8f93ff93a98e747156d73.jpeg

டாக்டர்: மூச்சை கொஞ்சம் இழுத்து விடுங்க.

சிலை: நான் மூச்சு விட்டால் இங்க ஏன்டா உட்கார்ந்து இருக்க போறேன். ஹாஸ்பிடலுக்கு வந்தே அட்மிட் ஆகியிருப்பேனடா மூடனே...

இதயத்துடிப்பு நல்ல சீராக இருப்பதாகவும் 
பூஜைகளை வழமைபோல தொடரலாம் என்றும் டாக்ட்டர்கள் கூறி இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

large.9021E974-7BF8-4080-B8E4-3CA75F75821D.jpeg.937678c944e8f93ff93a98e747156d73.jpeg

டாக்டர்: மூச்சை கொஞ்சம் இழுத்து விடுங்க.

சிலை: நான் மூச்சு விட்டால் இங்க ஏன்டா உட்கார்ந்து இருக்க போறேன். ஹாஸ்பிடலுக்கு வந்தே அட்மிட் ஆகியிருப்பேனடா மூடனே...

ஒரு சில லூசுத்தனமான செயல்களை காரணம் காட்டி உணர்வுபூர்வமான திரிகளில் வாதாடும் உங்களைப்போன்றவர்களை என்னவென்று நினைப்பது.

அதிலும் கிந்திய கேளிக்கை வழிபாடுகளை தலையில் வைத்து கொண்டாடும்  நீங்களும் வேடிக்கையான மனிதர்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை கிருபன் அண்ணா இணைத்தமைக்கு காரணம் இதுவும் பற்றி எரியவோ?

Link to comment
Share on other sites

3 minutes ago, வாதவூரான் said:

இதை கிருபன் அண்ணா இணைத்தமைக்கு காரணம் இதுவும் பற்றி எரியவோ?

இல்லை கிருபன் இதை இணைத்ததற்கு காரணம் இப்படியான லூசுகள் மக்களை எப்படி முட்டாள. ஆக்குகின்றார்கள் என்பதை எடுத்துக்காட்ட. 

17 minutes ago, குமாரசாமி said:

ஒரு சில லூசுத்தனமான செயல்களை காரணம் காட்டி உணர்வுபூர்வமான திரிகளில் வாதாடும் உங்களைப்போன்றவர்களை என்னவென்று நினைப்பது.

அதிலும் கிந்திய கேளிக்கை வழிபாடுகளை தலையில் வைத்து கொண்டாடும்  நீங்களும் வேடிக்கையான மனிதர்தான்.

இது  உணரவுபூர்மவமான திரி அல்லவே! மயூரக்குருக்கள் என்ற லூசுத்தனபான ஒருவரின் மடைத்தனமான அறிக்கை தொடர்பான திரி தானே. இந்த திரிக்கு இப்படியான வேறொரு லூசுத்தனம் பொருந்தும் தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

ஒரு சில லூசுத்தனமான செயல்களை காரணம் காட்டி உணர்வுபூர்வமான திரிகளில் வாதாடும் உங்களைப்போன்றவர்களை என்னவென்று நினைப்பது.

அதிலும் கிந்திய கேளிக்கை வழிபாடுகளை தலையில் வைத்து கொண்டதும் நீங்களும் வேடிக்கையான மனிதர்தான்.

இது லூசுத்தனம் இல்லை 
மதம் சாமி என்ற பெயரில் நடக்கும் அதி உச்ச ஏமாற்றுவேலை.

இதனால் ஏமாறும் அப்பாவி மக்களை நீங்கள் போய் 
தடுப்பீர்களா? 

குருக்கள் என்று மக்கள் மதிக்கும் குழுவும் 
மருத்துவர்கள் என்று மக்கள் அதி உயர்வாக மதிக்கும் 

இரு பெரும் மதிப்புக்கு உரிய சமூகம் 
பட்ட பகலில் எந்த பய உணர்வும் இன்றி மக்களை ஏமாற்றும் பச்சை துரோகம். 

இன்றைய உலகில் கோவில் எங்கு எல்லாம் இருக்கிறதோ 
இது அங்கு எல்லாம் நடக்கிறது  வீதாசாரம் ஏமாறும் வீதம் வேண்டுமானால் கூடி குறையலாம். 

இந்த துணிவு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?
கல்லிலே பொய் டெஸ்டாட்ஸ்கோப் வைத்து இதய துடிப்பை ஒரு மருத்துவம் படித்தவன் பார்க்கிறானே?

இந்த துணிவுக்கு காரணமே உங்களை போன்றவர்கள்தான் 
எந்த பித்தலாட்டம் வந்தாலும் எங்கள் மதம் என்ற போர்வையில் இழுத்ததுமூட நீங்கள் தயங்குவதில்லை. 

நித்தியானந்தா ஒரு நாளில் வந்தவனில்லை 
அவன் படிப்படியாக வளர்ந்தவன் ஆரம்ப நாட்களில் அவனை வளர்த்தது 
உங்களை போன்றவர்கள்தான் 

இந்த இந்துமதம் என்ற புரளி எங்கள் சைவ மதத்தை அழிக்க வந்தது 
என்பது உங்களுக்கு இன்னமும் தெரியாதா? அல்லது தெரியாததுபோல நடிக்கிறீர்களா? 

கோவில் + ஐயர்= ஏமாற்றுதான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

சரியாக புரிந்துள்ளீர்கள் என தோன்றுகின்றது. 

சிலரோ வழமை போல தமது விளக்கத்தை வைத்து விளாசுகிறார்கள். 

குருக்கள் சொல்லவந்த விடயம் நீங்கள் உணர்ந்தவாறே இருக்கலாம். ஆனால் அறிக்கைவிடும்போது மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் இருக்கவேண்டும்.. தெளிவாக  அறிக்கை இல்லையெனில் ஒவ்வொருவரும் தமது சூழ்னிலைக்கேற்ப புரிந்துகொள்வர். வதந்திகள் இவ்வாறுதான் உருவாகின்றன.

ஆதலால் பிறரை நோவதில் பலனில்லை.

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

குருக்கள் சொல்லவந்த விடயம் நீங்கள் உணர்ந்தவாறே இருக்கலாம். ஆனால் அறிக்கைவிடும்போது மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் இருக்கவேண்டும்.. தெளிவாக  அறிக்கை இல்லையெனில் ஒவ்வொருவரும் தமது சூழ்னிலைக்கேற்ப புரிந்துகொள்வர். வதந்திகள் இவ்வாறுதான் உருவாகின்றன.

ஆதலால் பிறரை நோவதில் பலனில்லை.

உலகத்தில் ஒருவரின் அறிக்கையும் 100000 வீதம் சரியாக ஏற்பாகமாட்டாது . 

பிழை காண  வேண்டும் பார்த்தால் எதிலும் பார்க்கலாம்.  

Link to comment
Share on other sites

4 hours ago, tulpen said:

தட்டுக்கு பதிலாக e- banking அல்லது credit card உபயோகிகலாம். ஏனென்றால் பூஜையில் முக்கியமான அம்சம்  அது தானே.  அது இல்லை என்றால. குருக்களின் குடுமி ஆடதே. 

1. Most pastors are paid an annual salary by their church. According to the Bureau of Labor Statistics, in 2016 the average salary was $45,740 annually, or $21.99 hourly. This is the median. At the low end, members of the clergy earned only $23,830 annually, and the highest earning pastors earned $79,110 (https://careertrend.com/how-do-pastors-get-paid-13656049.html

2.  Even then, the salary is normally in the range of 10-12K per annum and they are at the mercy of perpetually squabbling mosque management committees. It is no wonder that most imams try to supplement their income through other ventures and have little time local pastoral dutiesfor (https://www.theguardian.com/commentisfree/2007/jun/05/vacancyforanimam) )

3. யூத மத தலைவர்களுக்கு ஊதியம் கிடைக்கின்றதா? Yes

https://slate.com/news-and-politics/2012/01/how-much-do-rabbis-priests-pastors-and-imams-earn.html

ஆனால், புத்த பிக்குகளும் சைவ குருமார்களும் மக்களின் அன்றாட காணிக்கையில் வாழ்பவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

உலகத்தில் ஒருவரின் அறிக்கையும் 100000 வீதம் சரியாக ஏற்பாகமாட்டாது . 

பிழை காண  வேண்டும் பார்த்தால் எதிலும் பார்க்கலாம்.  

ஐயா,

உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். இந்த அறிக்கை சரியான தெளிவான தகவலை மக்களுக்குத் தருகிறதா ?

எமது மக்கள் குறிப்பாக வயதில் மூத்தோர் இந்த அறிக்கையினைப் பார்த்து கோவில்களுக்கு போக விழைந்தால் நிலைமை என்னாகும் ? 

கோபப்படுவதற்கான காரணம் தெளிவற்ற அறிக்கையே தவிர சமயமோ சாதியோ அல்லது இனமோ அல்ல. 

குருக்களின்பார்வையில் பூசைகளை காலந் தவறாது நடாத்தவேண்டும் என்பது சரியே. ஆனால் இங்கே பிரச்சனை மக்கள் கூடுவது.

கோவிலைப் பூட்டிக்கொண்டு உள்ளே பூசை செய்தால் ஒருவரும் கேட்கப்போவதில்லை.ஆனால் கோவிலில் பூசை நேரந்தவறாமல் நடைபெறுவதாக மக்களுக்குத் தெரிந்தால் அங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

4 minutes ago, ampanai said:

1. Most pastors are paid an annual salary by their church. According to the Bureau of Labor Statistics, in 2016 the average salary was $45,740 annually, or $21.99 hourly. This is the median. At the low end, members of the clergy earned only $23,830 annually, and the highest earning pastors earned $79,110 (https://careertrend.com/how-do-pastors-get-paid-13656049.html

2.  Even then, the salary is normally in the range of 10-12K per annum and they are at the mercy of perpetually squabbling mosque management committees. It is no wonder that most imams try to supplement their income through other ventures and have little time local pastoral dutiesfor (https://www.theguardian.com/commentisfree/2007/jun/05/vacancyforanimam) )

3. யூத மத தலைவர்களுக்கு ஊதியம் கிடைக்கின்றதா? Yes

https://slate.com/news-and-politics/2012/01/how-much-do-rabbis-priests-pastors-and-imams-earn.html

ஆனால், புத்த பிக்குகளும் சைவ குருமார்களும் மக்களின் அன்றாட காணிக்கையில் வாழ்பவர்கள்

உங்கள் கரிசனை சரியானது. குருக்களின் வருமானத்திற்கு சரியான நீண்ட கால நோக்கிலான திட்டங்கள்தான் சரியான தீர்வாக அமையும்.

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

ஐயா,

உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். இந்த அறிக்கை சரியான தெளிவான தகவலை மக்களுக்குத் தருகிறதா ?

எமது மக்கள் குறிப்பாக வயதில் மூத்தோர் இந்த அறிக்கையினைப் பார்த்து கோவில்களுக்கு போக விழைந்தால் நிலைமை என்னாகும் ? 

கோபப்படுவதற்கான காரணம் தெளிவற்ற அறிக்கையே தவிர சமயமோ சாதியோ அல்லது இனமோ அல்ல. 

குருக்களின்பார்வையில் பூசைகளை காலந் தவறாது நடாத்தவேண்டும் என்பது சரியே. ஆனால் இங்கே பிரச்சனை மக்கள் கூடுவது.

கோவிலைப் பூட்டிக்கொண்டு உள்ளே பூசை செய்தால் ஒருவரும் கேட்கப்போவதில்லை.ஆனால் கோவிலில் பூசை நேரந்தவறாமல் நடைபெறுவதாக மக்களுக்குத் தெரிந்தால் அங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

சகோ,
தெரியாது. ஆனால், மக்களை கோயிலுக்கு வரும்படி அந்த அறிக்கையில் கேட்கவில்லை.
அத்துடன், அரச மற்றும் சுகாதார அறிவித்தல்களை மதிக்க அந்த அறிக்கை கேட்டுள்ளது. 

இது சனநாயக நாடு.  மக்கள் தான் முடிவை செல்லவேண்டும். மகேசன்கள் ஏற்கவேண்டும். 

11 hours ago, கிருபன் said:

அவ்வாறு ஒன்று கூடுவதனால் மக்களிற்கு நோய்த்தாக்கம் ஏற்படவாய்புள்ளது. அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே. ஆனால் அதற்கான பாதுகாப்பினைத் தேடவேண்டியவர்கள் நாங்களே. அதனை விடுத்து ஆலய கிரியை முறைகளில் அவற்றை தடுக்கவோ அல்லது செய்யாது இடைநிறுத்தவோ முடியாது. அவை நியமத்தின் படி நடந்தே ஆக வேண்டும். 

11 hours ago, கிருபன் said:

ஆக மொத்தத்தில் நேரகாலங்களை குறுகிய உள்ளடங்கலுடன் ஆலய விழாக்கள் இடம்பெற வேண்டும். காலாகாலமாக செய்துவந்தவை செய்யப்பட வேண்டும். ஆகமங்களையோ ஆகம விதிகளையோ சட்டங்கள் மாற்ற முடியாது.  அனேக ஆலயங்களில் எதிர்வரும் 28ம் திகதிமுதல் விழாக்கள் ஆரம்பிக்கின்றன. அவை நடைபெறும். எனவே ஆலயம் சார்ந்தோரும் ஏனைவர்களும் அவற்றை அமைதி முறையில் செய்வதே உசிதமாகும்

Link to comment
Share on other sites

59 minutes ago, வாதவூரான் said:

இதை கிருபன் அண்ணா இணைத்தமைக்கு காரணம் இதுவும் பற்றி எரியவோ?

இந்த செய்தியை பார்த்தவுடன் இணைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. கிருபன் இணைத்துவிட்டார்.  

ஆகமத்தை பற்றி கதைக்கும் இந்த ஐயருக்கு சம்பந்தமில்லாத எங்களுக்கு தெரிந்தளவு கூட தெரியாது. ஆகம முறைப்படி ஐயர் காசு வாங்கி, காசைக் கோரி எந்த சமயக் கிரியைகளையும் செய்ய முடியாது என்பதை இன்று எத்தனை ஐயர்மார் கடைபிடிக்கிறார்கள். ஒவ்வொரு கிரியைக்கும் (திருமண சடங்கு, மரணச் சடங்கு, அபிஷேகம், .....) சுளையா காசை புடுங்கிக்கொண்டு தானே இவர்கள் இந்துக்களின் கிரியைகளை செய்கிறார்கள். இந்த இலட்சணத்தில  இந்த வேடதாரிகளுக்கு ஒரு சர்வதேச அமைப்பு ஒரு கேடா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இதை கிருபன் அண்ணா இணைத்தமைக்கு காரணம் இதுவும் பற்றி எரியவோ?

வெளியே போகாமல் வீட்டில் இருப்பதால் எதுவும் இப்ப பத்தி எரியும்🤡

 குருக்களின் கொரோனா பற்றிய அறியாமையை கோத்தா வந்து தீர்த்துவைப்பார்! இலங்கையில் சீனா மாதிரி மக்களை சட்டத்தை மீறாமல் பார்த்துக்கொள்ளும் சர்வாதிகாரியும் முப்படைகளும் இருக்கின்றன. கொரோனாவால் பாதிப்பு அதிகமாகும்போது 5 பேருக்கு மேல் கூடமுடியாது என்று சட்டம் வந்தால், குருக்கள்மார் மட்டும்தான் சாமியை கும்பிடமுடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அனைவரும் அறிவோம். அதனால் ஒவ்வொருவரும் தாங்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டிய தேவைகளும் உள்ளது. அதற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ அவற்றை நிறுத்தவோ முடியாது. 

Image result for சர்வதேச இந்து இளைஞர் பேரவை

இது பற்றி சர்வதேச இந்து இளைஞர் பேரவையின்  தலைவர் சிவஸ்ரீ. ஜெ.மயூரக்குருக்கள் இன்று ஊடகத்திற்கு  கருத்து தெரிவிக்கின்ற போது,

ஆலயங்கள் ஆகம வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் அவை காலாகாலமாக அவ்வாறே நடந்தும் வருகின்றது. நித்திய பூஜைகள், நைமித்திய பூஜைகள் என்பன தவறாது நடைபெற வேண்டுமென ஆகமங்கள் கூறுகின்றது. 

இதற்கு முன்னரும் கொலறா, மலேரியா போன்ற கொடிய நோய்கள் எம்மைத்தாக்கிய போதும் இவ்வாலய வழிபாடுகளில் எந்த மாற்றங்களும் வரவில்லை. ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பலர் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு கூறிவருகின்றனர். 

அவ்வாறு ஒன்று கூடுவதனால் மக்களிற்கு நோய்த்தாக்கம் ஏற்படவாய்புள்ளது. அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே. ஆனால் அதற்கான பாதுகாப்பினைத் தேடவேண்டியவர்கள் நாங்களே. அதனை விடுத்து ஆலய கிரியை முறைகளில் அவற்றை தடுக்கவோ அல்லது செய்யாது இடைநிறுத்தவோ முடியாது. அவை நியமத்தின் படி நடந்தே ஆக வேண்டும். 

ஆக மொத்தத்தில் நேரகாலங்களை குறுகிய உள்ளடங்கலுடன் ஆலய விழாக்கள் இடம்பெற வேண்டும். காலாகாலமாக செய்துவந்தவை செய்யப்பட வேண்டும். ஆகமங்களையோ ஆகம விதிகளையோ சட்டங்கள் மாற்ற முடியாது.  அனேக ஆலயங்களில் எதிர்வரும் 28ம் திகதிமுதல் விழாக்கள் ஆரம்பிக்கின்றன. அவை நடைபெறும். எனவே ஆலயம் சார்ந்தோரும் ஏனைவர்களும் அவற்றை அமைதி முறையில் செய்வதே உசிதமாகும்.

மகோற்சவ ஆலயங்கள் மகோற்சவம் செய்யாது விடுதல் எப்போது எனின் பாலஸ்தாப காலத்தில் மற்றும் அனர்த்தங்கள் வந்து ஊரோடு அனைவரும் வெளியேறும் காலங்களில் மாத்திரமே. ஏனைய காலங்களில் அதற்கான பிராயச்சித்தங்கள் செய்யப்பட்டு அவ்விழாக்கள் தொடரும். ஆகவே பெரும் எடுப்பிலே அல்லாமல் அமைதியான முறையில் மகோற்சவங்களை செய்யுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78192

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு 2010 வரை இவரின் அப்பரோ ஆகம் செய்தவர் என்று கேட்க 
வந்துச்சு? இறுதி பந்தியில் தானே மெதுவாக வழுக்கி கொள்கிறார்.

ஊரே அழியும் நிலையில் இருக்குபோது இந்த ஆகமம் யாருக்கு செய்வது?

இவளவு காலமும் ஆமி ஆட்லறி அடிக்கும்போது இவர்தான் நின்று ஆகம் செய்தவரா? 
இவர் சுத்த பித்தலாட்டம் பேசுவது உங்களுக்கு புரியவில்லையா?

அப்போ செய்யாத ஆகமத்தை இப்போதுதான் செய்யவேண்டுமா?

37 minutes ago, ampanai said:

1. Most pastors are paid an annual salary by their church. According to the Bureau of Labor Statistics, in 2016 the average salary was $45,740 annually, or $21.99 hourly. This is the median. At the low end, members of the clergy earned only $23,830 annually, and the highest earning pastors earned $79,110 (https://careertrend.com/how-do-pastors-get-paid-13656049.html

2.  Even then, the salary is normally in the range of 10-12K per annum and they are at the mercy of perpetually squabbling mosque management committees. It is no wonder that most imams try to supplement their income through other ventures and have little time local pastoral dutiesfor (https://www.theguardian.com/commentisfree/2007/jun/05/vacancyforanimam) )

3. யூத மத தலைவர்களுக்கு ஊதியம் கிடைக்கின்றதா? Yes

https://slate.com/news-and-politics/2012/01/how-much-do-rabbis-priests-pastors-and-imams-earn.html

ஆனால், புத்த பிக்குகளும் சைவ குருமார்களும் மக்களின் அன்றாட காணிக்கையில் வாழ்பவர்கள். 

சைவத்தில் குருமார்கள் இல்லை 
சைவத்தில் நீங்கள்தான் கடவுள் 
கடவுளுக்கு பூஜை செய்வது என்றால் நீங்கள்தான் உங்களுக்கு செய்யவவேண்டும் 

"எள்ளுக்குள் எரிக்கும் வாயுவை பதுக்கிய என்னை 
உன்னுள் காணாமல் கல்லுக்குள் கற்பனை செய்யும்வரை 
பிரச்சனை தீராதடா உன் பிரார்த்தனை பலிக்காதடா"
                                                                         சைவம் 

நீங்கள் பல முறை சைவம் சைவம் என்று சைவம் இல்லாத பலதை 
எழுதுகிறீர்கள் ....... சைவம் என்றால் என்ன என்ற அறிவு சைவர்களுக்கு இல்லாததுதான் 
இங்கு பிரச்சனையே? என்னுடைய கருத்துக்களை பலர் மதங்களுக்கு எதிராக பார்க்கிறார்கள் 
இங்கு மதம் தெரியாதவன் தான் பிரச்சனை மதங்களால் பிரச்சனை இல்லை. 

சைவத்தில் நான் குருக்கள்  என்று ஒருவன் சொன்னாலே அதுவே 
முள்ளமாரிதனம்தான் சைவத்தில் கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் ஒருவன் இருக்க முடியாது 
நீங்களே சிவனாக இருக்கும்போது உங்களுக்கு எதற்கு பூசாரி? 

புத்த துறவிகள் எல்லாவற்றையும் துறந்தவர்கள் 
அவர்களுக்கு உயிர்வாழ உணவுக்காக அட்ஷய தட்டுதான் ஒரே சொத்து 
தங்களின் ஞானத்தை அறிவை ஊரில் சென்று சொல்லுவார்கள் 
பரிகாரமாக மக்கள் கொஞ்சம் சோறு போடுவார்கள் வேண்டி உண்டுவிட்டு போய்விட வேண்டும். 

கத்தோலிக் மதம் இல்லை அது ஒரு நிறுவனம் 
கத்தோலிக் ஓர்கனைசேஷன் ... இன்று இத்தாலியில் நடைபெறும் 
கொரோன அவலத்தில் இருந்து எப்படி? எவ்ளவு இலாபம் பெறமுடியும்?  
என்ற மீட்டிங் இப்போது வத்திக்கானில் நடந்துகொண்டு இருக்கும் 

27 minutes ago, ampanai said:

சகோ,
தெரியாது. ஆனால், மக்களை கோயிலுக்கு வரும்படி அந்த அறிக்கையில் கேட்கவில்லை.
அத்துடன், அரச மற்றும் சுகாதார அறிவித்தல்களை மதிக்க அந்த அறிக்கை கேட்டுள்ளது. 

இது சனநாயக நாடு.  மக்கள் தான் முடிவை செல்லவேண்டும். மகேசன்கள் ஏற்கவேண்டும். 

இந்த இடத்தில் இப்படி ஒரு கோவில் கட்ட முடியுமா?
என்று அங்கிருக்கும் மக்களிடம் கேட்டு விட்டா கட்டினார்கள்? 

Link to comment
Share on other sites

20 minutes ago, Maruthankerny said:

இந்த இடத்தில் இப்படி ஒரு கோவில் கட்ட முடியுமா?
என்று அங்கிருக்கும் மக்களிடம் கேட்டு விட்டா கட்டினார்கள்? 

ஒருவன் விமான நிலையம் அருகே வீடு வேண்டினானாம். பின்னர் அந்த மாநகராட்சி சபைக்கு சென்று கேட்டானாம், " இந்த பறக்கும் விமானங்கள் தனது இயல்பு வாழ்க்கையை பாதிக்கின்றது" என்று 😅

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.