Jump to content

வயதுபோனால் இதுதானோ ???

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image result for முதியவர்கள்

எங்கள் உறவுகள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம் குடும்ப உறவுகளான தாத்தா, பாட்டி அம்மம்மா,அப்பப்பா என எல்லோரும் கூட இருப்பது ஒருவரம் என்று தான் இத்தனை நாட்கள் சொல்லிக்கொண்டு வந்தோம். ஆனால் பெரும்பாலும் புலம்பெயர்த்தோர் தம் பெற்றோரை நன்றாக வைத்ட்டுப் பார்க்கிறார்களா என்றால் பெரும்பாலுமில்லை என்ற பதில் தான் வரும். சாதாரணமாகப் பெண்கள் தம் பெற்ரோரைத் தம்முடன் வைத்திருப்பர். ஏனெனில் அவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுவதுக்குறைவு. ஆனால் மாமனாரைத் தம்முடன் வைத்திருந்தாலும் மாமியாரைத் தம்முடன் வைத்திருப்பதைப் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் பெற்ற பெண்பிள்ளைகள் பலர் தமது பெற்றோரை வயதுபோன காலத்தில் நின்மதியாக இருக்கவிடாது தம் உதவிக்காகப் பெற்றோரை தம்முடன் வைத்திருப்பது ஒன்று. இரு பிள்ளைகளோ அல்லது அதிகமான பிள்ளைகள் அந்தப் பெற்றோர்களுக்கு இருந்தால் மாதம் ஒருவீடு என்று மாறி மாறி வைத்திருப்பதும் தாய் ஒரு வீட்டில் தந்தை இன்னொரு வீட்டில் என்று தம் வசதிக்கு பெற்றோரைப் பிரித்தும் வைத்திருக்கின்றனர்.

பிரித்தானியாவில் அறுபது கடந்தவர்களுக்கு பென்ஷன் என்று கொடுக்கிறார்கள். அதைவிட வீட்டுவாடகைக்கும் ஒரு தொகை கொடுத்து இயலாதவர்கள் எனில் சமையலுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு என்றுகூட உதவித்தொகை அரசினால் வழங்கப்படுகிறது. அப்படியிருக்க உதவித் தொகையையும் அவர்களுக்குரிய பென்ஷன் பணத்தையும்கூட சில பிள்ளைகள் தாமே எடுத்துக்கொள்கின்றனர். பெற்றோர்களை தம் வேலைக்காரர்களாகவும் நடத்துகின்றனர். எனக்குத் தெரிந்த ஒரு பெண் வீட்டில் சும்மாதான் இருக்கிறார். மாமியாருடன் ஏழு வயதுப் பிள்ளையை பள்ளிக்கு அனுப்புகிறார். இத்தனைக்கும் மாமியாருக்கு காது கேட்காது. கடவைவிளக்கில் அந்தப் பெடியன்தான் அவரைக் கையைப்பிடித்து அந்தப்பக்கம் கூட்டிப்போவான். கணவரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்து இயலாது விட்டுவிட்டார்.

இன்னோரு குடும்பத்தில் இருமகள்கள். தாய் ஒரு வீட்டில். தந்தை ஒரு வீட்டில். அவர்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு விடுமுறை செல்லும்போது மட்டும் கணவனைப் பார்க்க அந்தத் தாய் வருவார். எனக்கு என்னகேள்வி என்றால் அந்தப் பெற்றோர் முழுமனதுடன் இதை ஏற்றுக்கொண்டுதான் பிள்ளைகளுடன் இருக்கிறார்களா?? அல்லது வேறுவழியின்றி இருக்கிறார்களா என்பதுதான். அப்படி விரும்பித்தான் இருக்கிறார்கள் எனில் வயது போன காலத்தில் பிரிந்து இருப்பது அவர்களுக்கு நின்மதியைத் தருகிறதா ????  வயதானபின்னும் நின்மதியாக இருக்க முடியாமல் பிள்ளைகளுக்காகத் தம் மகிழ்ச்சியையும் நின்மதியையும் தொலைத்தது வாழாது தனியாக நின்மதியாக வாழ்ந்துவிட்டுப் போகலாமே ???அல்லது ஊர் உலகம் என்ன சொல்லும் என்னும் பயம் தான் அவர்கள் எதுவும்சொல்லாமல் பிள்ளைகளின் விருப்பத்துக்கு இசைந்துபோவதா ???? அல்லது இத்தனை காலமும் சேர்ந்து வாழ்ந்துவிட்டோம். இனியாவது தனியா இருப்போம் என்று அந்தப்  பெற்றோரில் ஒருவர் நினைக்கிறார்களா என்று புரியவே இல்லை.

என் பெற்றோர் தனியாக வசித்தார்கள்.நாம் எல்லாம் அருகில் வசித்தோம். தாம் விரும்பிய இடங்களுக்கு அவர்கள் சென்றார்கள். விரும்பியவற்றை வாங்கி உண்டார்கள். அப்பா இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வரை அம்மா தானே சமைத்து உண்டு நின்மதியாகவே இருந்தார். அதுவே அவவுக்கு மகிழ்சியைத் தந்தது. அதுவரை அம்மாவும் அப்பாவும்  நின்மதியாக வாழ்ந்தார்கள்.  அப்பா இறந்த பின்னர் தான் அவரைச் சமையல் செய்ய விடாது தம்பியின் மனைவி உணவு சமைத்துக் கொடுத்தார். அதுவரை நாங்கள் யாரும் அவர்கள் சுதந்திர வாழ்வில் தலையிடவில்லை.

ஆனால் இங்கு சில பெற்றோர்கள் எழுபது வயதிலும் பிள்ளைகளுக்கும் சேர்த்து சமையல் செய்கின்றனர். பேரப்பிள்ளைகளைக் குளிப்பாட்டுகின்றனர். உடையணிவித்து  பள்ளிக்கு கூட்டிச் சென்று மீண்டும் மாலையில் கூட்டி வருகின்றனர். பார்க்க பாவங்களாய் இருக்கிறது. உங்கள் வேலைகளை ஏன் உங்கள் பெற்றோர்மீது திணிக்கிண்றீர்கள்.

நாம் ஊரில் இருந்தபோது என் அம்மா காலை நாலரைக்கே எழுந்து காலை,மதிய உணவுகளை சமைத்து முடித்து எமக்குத் தேநீர் போட்டு ஐந்து பிள்ளைகளுக்கும் பள்ளிக்கு உணவு பொதி செய்து தானும் எட்டு மணிக்குப் பள்ளிக்கு கிளம்பிவிடுவார். மாலை வந்து இரவுக்கு ஏதும் சமைப்பார். இத்தனைக்கும் எனது அம்மம்மா எம்முடன் தான் இருந்தார். அவர் தன் பாட்டுக்கு எழுந்து குளித்தவிட்டு உள்ள கோவில்கள் எல்லாவற்றுக்கும் போய்விட்டு பதினொரு பன்னிரண்டுக்குவந்து சாப்பிட்டுவிட்டு இருப்பார். அந்த நாட்டில் அது சரி என்றாலும் இங்கு இன்னும் வசதிகளுள்ள நாட்டில் ஏன் முதிய பெற்றோரை வேலை வாங்கவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. இப்படிப்பார்க்கும்போது மற்றைய இனத்து முதியவர்கள் நின்மதியாக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன். இந்தியாபோன்று மாமியார் கொடுமை எல்லாம் எம்மிடம் இல்லை என்று பார்த்தால் இங்கு நடப்பதெல்லாம் அதைவிடக் கொடுமையல்லோ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்ன உதாரணங்கள் எல்லாம், சிறி லங்காவைச் சேர்ந்தவர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தது, இருக்க விரும்புவது:

முதுமையில் கடைசி வரை பொருளிருக்க வேண்டும்.

இருவருக்கும் தேவையான அளவிற்கு பணம் - மருத்துவ செலவு, உணவு, இருக்க வீடு, காப்பீடு, சொத்துக்கள் என அனைத்தும் தம் பெயரிலையே முதியவர்கள் வைத்திருக்க வேண்டும். 'தமக்கு பின்தான் பிள்ளைகளுக்கு' என தயார்படுத்தியிருக்க வேண்டும்.

'தன் பேச்சுக்கு மரியாதை இல்லை, தான் சொல்வதை பிள்ளைகள் கேட்பது இல்லை' என்ற எண்ணத்தை,எதிர்பார்ப்பை அகற்றிக்கொள்ள வேண்டும்.

கூடுமானவரை பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைகளில் தலையிடாமல் 'அது அவர்களின் வாழ்க்கை, அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்' என விலகியிருக்க வேண்டும்.

பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடினால் மனதளவில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வடிகாலாக இருக்கும்.

ஓய்வு பெற கொஞ்ச காலம் இருக்குதானே, பார்க்கலாம்..! tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:

நீங்கள் சொன்ன உதாரணங்கள் எல்லாம், சிறி லங்காவைச் சேர்ந்தவர்களோ?

இல்லை புலம்பெயர்ந்த தமிழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

. உடையணிவித்து  பள்ளிக்கு கூட்டிச் சென்று மீண்டும் மாலையில் கூட்டி வருகின்றனர். பார்க்க பாவங்களாய் இருக்கிறது. உங்கள் வேலைகளை ஏன் உங்கள் பெற்றோர்மீது திணிக்கிண்றீர்கள்.

சுமே இதுவரை நீங்கள் தாயாக மட்டும் இருப்பதனால் பேரன் பேத்திமாரின் கஸ்டங்கள் மட்டுமே தெரிகிறது.
நீங்களும் பேத்தியாகினாலே எவ்வளவு கஸ்டமாக இருந்தாலும் அதிலுள்ள சுகம் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமே இதுவரை நீங்கள் தாயாக மட்டும் இருப்பதனால் பேரன் பேத்திமாரின் கஸ்டங்கள் மட்டுமே தெரிகிறது.
நீங்களும் பேத்தியாகினாலே எவ்வளவு கஸ்டமாக இருந்தாலும் அதிலுள்ள சுகம் புரியும்.

ஐயாவுக்கு பயங்கர அனுபவம் இருக்குமெண்டு நினைக்கிறன்....
இஞ்சாலையும் கொஞ்சத்தை எடுத்து விடுறது😷

Bildergebnis für goundamani gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பெரிய பிரச்சனையாக. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கத்தை குறை சொல்ல முடியாது.
சில வீடுகளில் முதியவர்கள் சும்மா இருக்கச் சொன்னாலும் இருக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். எனக்குத் தொரிந்த சில பிரச்சனைகளை இங்கு தருகிறேன்.
ஒரு ஜயா மகனின் வீட்டு பின் தோட்டத்தில் மரக்கறித் தோட்டம் செய்கிறேன் என்று புல் அனைத்தையும் நாசம் பண்ணி விட்டார்.பின் மகன் பணம் செலவழித்து புதிய புல் பதித்தார்.
ஓர் அம்மா மறதி காரணமாக சமையலறை பேசினிற்குள் துப்புவார்.
இன்னோர் அம்மா கழிவறை கொமட்டிற்குள் இருக்கும் நீரில் கை கழுவுவார்.
பிறிதொரு அம்மா அறையில் இருக்கும் சீமெந்து அலுமாரியை கழிவறை என்று நினைத்து மலங்கழித்தார்
இப்படி இன்னோரன்ன பிரச்சனைகளை பிள்ளைகளும் சந்திக்கின்றனர்.
பிள்ளைகளால் பெற்றவர்களும் துன்பப்படுவது  சில இடங்களில் நடக்காமல் இல்லை.
முதுமை பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகுந்த சவால்தான்.
சில வீடுகளில் பெற்றவரின் உதவிப் பணம்தான் வீட்டிற்கு மோட்கேஜ் கட்டுவதும் நடக்கிறது.
பிள்ளைகளின் உணவை உண்ணமுடியாமல் அவதிப்படும் பெற்றவர்களையும் கண்டிருக்கிறோம்.
முதுமைக்காலத்தில் பிள்ளைகள் பெற்றவரை அன்பாக ஆதரவாக நடத்த வேண்டியது அவசியம். 
முடியாத பட்சத்தில் முதியோர் அப்பாட்மென்ட்கள் முதியோர் காப்பகங்கள் அவர்களை கவனிக்க அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் எம்மில் பலர் முதியோர் காப்பகங்களுக்குச் செல்லத் தயாராகவில்லை.
மறதி நோய் வந்து விட்டால் முதியோர் காப்பகத்துக்கு செல்வதுதான் ஒரே வழி.
அதுவரை பிள்ளைகளுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பாவங்களுக்கு நடக்கும் அநியாயங்களை எழுதியதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

எனக்கு தெரிந்தது, இருக்க விரும்புவது:

முதுமையில் கடைசி வரை பொருளிருக்க வேண்டும்.

இருவருக்கும் தேவையான அளவிற்கு பணம் - மருத்துவ செலவு, உணவு, இருக்க வீடு, காப்பீடு, சொத்துக்கள் என அனைத்தும் தம் பெயரிலையே முதியவர்கள் வைத்திருக்க வேண்டும். 'தமக்கு பின்தான் பிள்ளைகளுக்கு' என தயார்படுத்தியிருக்க வேண்டும்.

'தன் பேச்சுக்கு மரியாதை இல்லை, தான் சொல்வதை பிள்ளைகள் கேட்பது இல்லை' என்ற எண்ணத்தை,எதிர்பார்ப்பை அகற்றிக்கொள்ள வேண்டும்.

கூடுமானவரை பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைகளில் தலையிடாமல் 'அது அவர்களின் வாழ்க்கை, அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்' என விலகியிருக்க வேண்டும்.

பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடினால் மனதளவில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வடிகாலாக இருக்கும்.

ஓய்வு பெற கொஞ்ச காலம் இருக்குதானே, பார்க்கலாம்..! tw_glasses:

அதன் பின் உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள். ஆனாலும் உங்கள் அனுபவம் வேறாகத்தானிருக்கும். ஏனெனில் நீங்கள் இருக்கப்போவதுஉங்கள் சொந்த நாட்டில் சுற்றங்கள் சூழ. அது எம்மவர்க்குப் பொருந்தாது தானே அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

சுமே இதுவரை நீங்கள் தாயாக மட்டும் இருப்பதனால் பேரன் பேத்திமாரின் கஸ்டங்கள் மட்டுமே தெரிகிறது.
நீங்களும் பேத்தியாகினாலே எவ்வளவு கஸ்டமாக இருந்தாலும் அதிலுள்ள சுகம் புரியும்.

அதுவும் சரிதான் அண்ணா.சுகம் இருப்பது உண்மைதான்.  ஆனால் துன்பத்தை ஏன் கொடுக்கிறார்கள் பிள்ளைகள் என்பதுதான் என் கேள்வி ??? பிள்ளைகள் தத்தமது வேலைகளை பொறுப்புடன்செய்து பெற்றவர்களை சும்மா இருக்க விடலாம் தானே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavallur Kanmani said:

இது ஒரு பெரிய பிரச்சனையாக. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கத்தை குறை சொல்ல முடியாது.
சில வீடுகளில் முதியவர்கள் சும்மா இருக்கச் சொன்னாலும் இருக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். எனக்குத் தொரிந்த சில பிரச்சனைகளை இங்கு தருகிறேன்.
ஒரு ஜயா மகனின் வீட்டு பின் தோட்டத்தில் மரக்கறித் தோட்டம் செய்கிறேன் என்று புல் அனைத்தையும் நாசம் பண்ணி விட்டார்.பின் மகன் பணம் செலவழித்து புதிய புல் பதித்தார்.
ஓர் அம்மா மறதி காரணமாக சமையலறை பேசினிற்குள் துப்புவார்.
இன்னோர் அம்மா கழிவறை கொமட்டிற்குள் இருக்கும் நீரில் கை கழுவுவார்.
பிறிதொரு அம்மா அறையில் இருக்கும் சீமெந்து அலுமாரியை கழிவறை என்று நினைத்து மலங்கழித்தார்
இப்படி இன்னோரன்ன பிரச்சனைகளை பிள்ளைகளும் சந்திக்கின்றனர்.
பிள்ளைகளால் பெற்றவர்களும் துன்பப்படுவது  சில இடங்களில் நடக்காமல் இல்லை.
முதுமை பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகுந்த சவால்தான்.
சில வீடுகளில் பெற்றவரின் உதவிப் பணம்தான் வீட்டிற்கு மோட்கேஜ் கட்டுவதும் நடக்கிறது.
பிள்ளைகளின் உணவை உண்ணமுடியாமல் அவதிப்படும் பெற்றவர்களையும் கண்டிருக்கிறோம்.
முதுமைக்காலத்தில் பிள்ளைகள் பெற்றவரை அன்பாக ஆதரவாக நடத்த வேண்டியது அவசியம். 
முடியாத பட்சத்தில் முதியோர் அப்பாட்மென்ட்கள் முதியோர் காப்பகங்கள் அவர்களை கவனிக்க அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் எம்மில் பலர் முதியோர் காப்பகங்களுக்குச் செல்லத் தயாராகவில்லை.
மறதி நோய் வந்து விட்டால் முதியோர் காப்பகத்துக்கு செல்வதுதான் ஒரே வழி.
அதுவரை பிள்ளைகளுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்யலாம்.

மறதி நோய் வந்தால் பெற்றவர்களை வீட்டில் வைத்திருப்பது கடினமானதுதான். ஆனால் நான் கூறுவது அதற்கு முன்பாக ஒரு 60 - 70 வயது வரையாவது அவர்கள் நின்மதியாக மகிழ்வாக இருக்க அனுமதிக்கலாம் தானே அக்கா. ஒரு ஐம்பது கடந்தாலே வீட்டு வேலைகளை யாராவது செய்ய மாட்டார்களா என்றும் சமைத்துத் தந்தால்  இருந்து உண்ணலாம் என்றும் ஆசை எழும்போது அறுபது கடந்த பின்னரும் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சமையல் சாப்பாடு, வீடு சுத்தம் செய்வது, குசினியைச் சுத்தம் செய்வது எல்லாம் எத்தனை பெரிய சுமை அவர்களுக்கு.

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அந்த பாவங்களுக்கு நடக்கும் அநியாயங்களை எழுதியதற்கு நன்றி.

உங்களுக்கும் அந்த அநியாயம் நடக்குதா??? அல்லது ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் அந்த அநியாயம் நடக்குதா???

இல்லை.

அல்லது ???

ஓரளவு தெரிந்தது  பலது நண்பர்கள்  உறவினர்கள் மூலம் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமெக்கா இது என‌க்கு 2004ம் ஆண்டு க‌ன‌டாவில் வ‌சிக்கும் என‌து ம‌ச்சான் சொன்ன‌து , வாசித்து விட்டு சிரிக்காதைங்கோ /

ம‌ச்சானின் ந‌ண்ப‌ன் தாயை சிறில‌ங்காவில் இருந்து பொன்ச‌ர் ப‌ண்ணி க‌ன‌ட‌வுக்கு எடுத்தாராம் , தாயை க‌ன‌ட‌வுக்கு கூப்பிட்டு ம‌க‌ன் வேலைக‌ளில் விசியாய் இருந்தாராம் , 

ந‌ண்ப‌னின் அம்மா தானே வ‌ந்து இருக்கிரா நேரில் போய் பாப்போம் என்று என்ர‌  ம‌ச்சான் போய் இருக்கிறார் ந‌ண்ப‌னின்  வீட்டை ,

அந்த‌ அம்மா க‌ன‌ட‌ வ‌ந்த‌ கால‌ம் க‌டும் குளிராம் , என்ர‌ ம‌ச்சானை பார்த்து கேட்டாவாம் , த‌ம்பி என்ன‌ வெளியால‌ தேங்காப்பு கொட்டுன்டூது என்று , அப்ப‌ ம‌ச்சான் சொன்னாராம் அம்மா இது தான் சினோ இது கொட்டி தான் குளிர் அதிக‌மாகிற‌து என்று , உட‌ன‌ ந‌ண்ப‌னின் அம்மா சொன்னாவாம் உப்ப‌டி என்று தெரிந்து இருந்தா நான் ஊரிலையே இருந்து இருப்பேன் என்னை ஏமாத்தி க‌ன‌டாவுக்கு கூப்பிட்டாங்க‌ள் என்று ஹா ஹா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 11:53 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதன் பின் உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள். ஆனாலும் உங்கள் அனுபவம் வேறாகத்தானிருக்கும். ஏனெனில் நீங்கள் இருக்கப்போவதுஉங்கள் சொந்த நாட்டில் சுற்றங்கள் சூழ. அது எம்மவர்க்குப் பொருந்தாது தானே அண்ணா

சரி, சொல்றேனம்மா.

ஏன் இது மற்ற நாடுகளுக்கு பொருந்தாதா..?

அங்கெல்லாம் பென்சன் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தாலும், வாழ்வது பிள்ளைகளுடன் தானே, இல்லை முதியோர் காப்பிடங்களா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பையன்26 said:

சுமெக்கா இது என‌க்கு 2004ம் ஆண்டு க‌ன‌டாவில் வ‌சிக்கும் என‌து ம‌ச்சான் சொன்ன‌து , வாசித்து விட்டு சிரிக்காதைங்கோ /

ம‌ச்சானின் ந‌ண்ப‌ன் தாயை சிறில‌ங்காவில் இருந்து பொன்ச‌ர் ப‌ண்ணி க‌ன‌ட‌வுக்கு எடுத்தாராம் , தாயை க‌ன‌ட‌வுக்கு கூப்பிட்டு ம‌க‌ன் வேலைக‌ளில் விசியாய் இருந்தாராம் , 

ந‌ண்ப‌னின் அம்மா தானே வ‌ந்து இருக்கிரா நேரில் போய் பாப்போம் என்று என்ர‌  ம‌ச்சான் போய் இருக்கிறார் ந‌ண்ப‌னின்  வீட்டை ,

அந்த‌ அம்மா க‌ன‌ட‌ வ‌ந்த‌ கால‌ம் க‌டும் குளிராம் , என்ர‌ ம‌ச்சானை பார்த்து கேட்டாவாம் , த‌ம்பி என்ன‌ வெளியால‌ தேங்காப்பு கொட்டுன்டூது என்று , அப்ப‌ ம‌ச்சான் சொன்னாராம் அம்மா இது தான் சினோ இது கொட்டி தான் குளிர் அதிக‌மாகிற‌து என்று , உட‌ன‌ ந‌ண்ப‌னின் அம்மா சொன்னாவாம் உப்ப‌டி என்று தெரிந்து இருந்தா நான் ஊரிலையே இருந்து இருப்பேன் என்னை ஏமாத்தி க‌ன‌டாவுக்கு கூப்பிட்டாங்க‌ள் என்று ஹா ஹா 😁

பல இடங்களிலும் உது தான் நடக்குது

1 hour ago, ராசவன்னியன் said:

சரி, சொல்றேனம்மா.

ஏன் இது மற்ற நாடுகளுக்கு பொருந்தாதா..?

அங்கெல்லாம் பென்சன் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தாலும், வாழ்வது பிள்ளைகளுடன் தானே, இல்லை முதியோர் காப்பிடங்களா..?

பிள்ளைகளுடன் தான் வாழ்கிறார்கள் அண்ணா. ஆனால் பலர் நின்மதியாக வாழவில்லை. வயதானபின்னும் அத்தனை வேலைகளையும் பிள்ளைகளுக்குச் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பென்ஷன் பணத்தையும் தாமே வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கைச்செலவுக்குக் கூட விரும்பியதை வாங்குவதற்கு பணம் கொடுப்பதில்லை பல பிள்ளைகள். தற்போது பலரை முதியோர் இல்லங்களிலும் விடுகின்றனர். விடுவது கூடப் பரவாயில்லை. சென்று பார்ப்பது கூட இல்லை என்று அங்கு வேலை செய்யும் பெண் கூறினார். கனடாவில் ஷாப்பிங் மோலில் கொண்டுசென்று விட்டுவிட்டு வேலை முடிந்து வரும்போது திரும்பக் கூட்டிவருவதும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக மீளவும் நான் இந்தப் பகுதிக்குள் வர காரணமான திரியாக இது இருந்திருக்கிறது..நன்றிகள் அக்கா.சுருக்கமாக சொன்னால் நம் தாய்.தந்தயர்கள் வெளிநாடு என்ற ஒன்றுக்கு வராமல் இருப்பதுவே நன்று.வயோதிப காலத்தில் நிறையவே கஸ்ரப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

முக்கியமாக மீளவும் நான் இந்தப் பகுதிக்குள் வர காரணமான திரியாக இது இருந்திருக்கிறது..நன்றிகள் அக்கா.சுருக்கமாக சொன்னால் நம் தாய்.தந்தயர்கள் வெளிநாடு என்ற ஒன்றுக்கு வராமல் இருப்பதுவே நன்று.வயோதிப காலத்தில் நிறையவே கஸ்ரப்படுகிறார்கள்.

யாயினியைக் கண்டது மிக்க மகிழ்ச்சி.
முடியுமானவரை யாழுடன் இணைந்திருங்கள்.
நீங்கள் தொடக்கிய அருமையான திரி தேடுவாரற்றுக் கிடக்கிறது.
மீண்டும் வந்து அதற்கு உயிர் கொடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 6:53 PM, யாயினி said:

முக்கியமாக மீளவும் நான் இந்தப் பகுதிக்குள் வர காரணமான திரியாக இது இருந்திருக்கிறது..நன்றிகள் அக்கா.சுருக்கமாக சொன்னால் நம் தாய்.தந்தயர்கள் வெளிநாடு என்ற ஒன்றுக்கு வராமல் இருப்பதுவே நன்று.வயோதிப காலத்தில் நிறையவே கஸ்ரப்படுகிறார்கள்.

அதற்குப் பிள்ளைகளை மட்டும் காரணமாகச் சொல்லமுடியாது யாயினி. பெற்றவர்களும் பிள்ளைகள் கூறுவதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு இருக்காமல் தமது விருப்புக்களையும் சொல்லப் பழக்கவேண்டும். அத்தோடு பிள்ளைகள் மட்டுமே வாழ்வு என்று இருக்காது தாமும் சிறிதுகாலமாவது நின்மதியாக இருக்கும் ஏற்படுகளைப் பார்க்கவேண்டும்.

பச்சைக்கள் தந்த விசுகு அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா, விளங்க நினைப்பவன் ஆகிய உறவுகளே நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் க‌ருத்து எழுதும் ப‌ல‌ உற‌வுக‌ள் கூட‌ 55 வ‌ய‌தில் இருந்து 65 வ‌ர‌ உள்ள‌வ‌ர்க‌ள் / இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போக‌ 75 வ‌ய‌த‌ தாண்டிடுவின‌ம் / 
யாழ் உற‌வுக‌ள் அறிவான‌ர்வ‌க‌ள் அவ‌ர்க‌ள் க‌ட‌சி வ‌ர‌ த‌ங்க‌ளை தாங்க‌ள் பார்த்து கொள்ளுவின‌ம் /

க‌ள்ளு கொட்டில்ல‌ நினைக்க‌ தான் பாவ‌மாய் இருக்கு / வ‌ய‌து போக‌ போக‌ க‌ண் பார்வை குறைந்திடும் பிற‌க்கு ப‌ரிம‌ள‌த்த‌ நினைச்சு க‌டித‌ம் எழுத‌ ஏலாது ஹா ஹா 😁
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் பையா...... எதுக்கும் பரிமளம் நர்ஸிங் படிச்சுட்டு வரவேண்டும் என்று சொல்லுறீங்களா ......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் பையா...... எதுக்கும் பரிமளம் நர்ஸிங் படிச்சுட்டு வரவேண்டும் என்று சொல்லுறீங்களா ......!  🤔

சும்மா நகைச்சுவைக்கு எழுதினான் /
தாத்தாவ‌ போட்டு வாங்வ‌தில் ஒரு சுக‌ம் இருக்கு சுவி அண்ணா 😁/ நீங்க‌ள் த‌ப்பாக‌ க‌ருத‌ வேண்டாம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

சும்மா நகைச்சுவைக்கு எழுதினான் /
தாத்தாவ‌ போட்டு வாங்வ‌தில் ஒரு சுக‌ம் இருக்கு சுவி அண்ணா 😁/ நீங்க‌ள் த‌ப்பாக‌ க‌ருத‌ வேண்டாம் 😁

இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கு பையா......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கு பையா......!  😁

ம‌ன‌சுக்கு பிடிச்ச‌ உற‌வுக‌ளுட‌ன் தானே அன்பு ச‌ண்டை போட‌ முடியும் சுவி அண்ணா 😁/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2020 at 9:33 AM, பையன்26 said:

யாழில் க‌ருத்து எழுதும் ப‌ல‌ உற‌வுக‌ள் கூட‌ 55 வ‌ய‌தில் இருந்து 65 வ‌ர‌ உள்ள‌வ‌ர்க‌ள் / இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போக‌ 75 வ‌ய‌த‌ தாண்டிடுவின‌ம் / 
யாழ் உற‌வுக‌ள் அறிவான‌ர்வ‌க‌ள் அவ‌ர்க‌ள் க‌ட‌சி வ‌ர‌ த‌ங்க‌ளை தாங்க‌ள் பார்த்து கொள்ளுவின‌ம் /

க‌ள்ளு கொட்டில்ல‌ நினைக்க‌ தான் பாவ‌மாய் இருக்கு / வ‌ய‌து போக‌ போக‌ க‌ண் பார்வை குறைந்திடும் பிற‌க்கு ப‌ரிம‌ள‌த்த‌ நினைச்சு க‌டித‌ம் எழுத‌ ஏலாது ஹா ஹா 😁
 
பழகிய பழக்கத்துக்கு நீங்கள் எழுதிக் குடுக்க மாட்டியளே குமாரசாமிக்கு ???😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.