Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

விக்கியின் கட்சியில் திருமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் தேர்தல் களத்தில்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

விக்கியின் கட்சியில் திருமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் தேர்தல் களத்தில்

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களம் இறங்குகிறார். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.  இறுதி யுத்தம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி  பின்னர் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக்கொண்ட ரூபன் 24 வருடங்கள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார். இவரது சகோதரர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளிகளாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தேர்தல் களத்தில் ரூபன் களம் இறங்கியுள்ளமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ரூபனின் மனைவி வைத்தியராக திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றுகிறார்.

ரூபன் தொடர்பாக ‘தமிழ் பக்கம்’ இணைய தளம் மேலதிக சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் படி, விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் ரூபனும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.

இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்து கொண்டார் . குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச் சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வடமாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிக்கேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தேசியத் தலைவர்.

இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது.

35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கத்திற்க்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என இரு வருட தடுப்பின் பின் விடுதலையானார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் சண்டையில் தனது அவயவம்  ஒன்றை இழந்த முன்னாள் போராளி ஒருவர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களம் இறங்குகிறார். இவருக்கான ஆசனமும் தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான விக்ரரின் சகோதரி மாலினி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். வன்னியின் பல்வேறு பகுதிகளில் வலய கல்வி பணிப்பாளராக பணியாற்றிய இவர் ஓய்வுபெற்றபின்னர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகின்றார்.

இதேவேளை, வன்னி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முன்னாள் பெண் போராளி ஒருவரையும் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேசிய பட்டியலில் உள்ளடக்கியுளார். சிறந்த சமூக சேவையாளரான இவர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் பொருளியல் துறை பேராசிரியர் சிவநாதன் மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்த மிக நீண்ட காலமாக தமிழ் தேசியத்துக்காக பணியாற்றி வருபவரும் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் ஆங்கிலத்தில் பல வெளியீடுகளை செய்திருப்பவருமான செல்வேந்திரா ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Ruban 1
 
http://www.samakalam.com/செய்திகள்/விக்கியின்-கட்சியில்-திர/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திருகோணமையில் இப்போது தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகின்றது। எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றாக கேடடால் இரண்டு உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு। எல்லோருக்கும் போட்டியிட உரிமை இருந்தாலும், இங்கு இப்போது நிறைய தமிழ் கட்சிகள் போட்டியிடுவதால் தமிழ் வாக்குகள் பிரிய சந்தர்ப்பம் உண்டு। ஒரு உறுப்பினர் வென்றாலும் பெரிய காரியம்தான்। 

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களம் இறங்குகிறார்.

D5-B79850-4103-4102-94-FB-65848-CCEB9-D0

Link to comment
Share on other sites

50 வருடங்களுக்கு மேலாக எதையும் சாதிக்க வக்கில்லாமல், சுயலாபங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு திட்டமிட்ட தமிழினப் படுகொலைகாரர்களுக்கு  காலங்காலமாக முண்டுகொடுக்கும் சம்மந்தனின் கும்பல் விலகி இந்த மிகச் சிறந்த போராளியின் வெற்றிக்கு உதவுவது தமிழினத்துக்கு நடக்கக்கூடிய நன்மையாக அமையும்.

Link to comment
Share on other sites

போரின் தொடற்ச்சியாக சர்வதெசத்தின் ஈடுபாட்டை திசைதிருப்ப திருகோணமலையில்  தமிழரின் 2 பிரதி நிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் சதுரங்கம் மகிந்த குழுவினரால் முன்னெடுக்கபட்டது. சம்பந்தர் மயிரிளையில் தப்பியதும் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்ததும் வரலாறு.  

 பணி சென்றமுறை கஜேந்திரன் பொன்னம்பலத்துக்கு. இம்முறை உறவுக்காரர் விக்கிக்கு. இதுதான் தமிழன் விதி. 

இம்முறை திருகோணமலையில் மட்டுமல்ல வன்னியிலும் வாக்குகளைப் பிரிக்கிற பணி எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக இடம்பெறுகிறது. தமிழருக்குள் தங்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை காட்டி  தமிழர் இனமல்ல சிறுபாண்மையினர் என நிரூபிக்கிறது மகிந்த அரசின் தந்திரோபாயம், சென்றமுறை சம்பந்தர் தோற்றிருந்தால் அவர்கள் நோக்கம் நிறைவேறியிருக்கும்.  

தமிழ் வாக்குகளை பிழவுபடுத்தி மாஜி சிங்கள வாக்குகளையும் அமைச்சருக்கு விழும் வாக்குகளையும் ஓருசில முன்னைநாள் போராளிகள்  வாக்க்குகளையும் இராணுவத்தின் வாக்குகளையும்  சேர்த்து ஒரு சிங்கள வேட்ப்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது.  கவலை அந்த சிங்கள வேட்பாளர் சிவிலியன் அல்ல போரை நடத்தி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதாகும்.

திருகோண மலையிலோ வன்னியிலோ முன்னைநாள் போராளிகள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களித்து பிரதி நிதித்துவத்தை இழப்பதா அல்லது சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் வடகிழக்கில் பிரதி நிதித்த்வத்தை உச்சப்படுத்துவதா என்கிற கேழ்வி நம் இனத்தின் முன்னுள்ளது .

Link to comment
Share on other sites

சிங்கள அரசுகளுக்கு முண்டு குடுக்கிறதையே பிரதான தொழிலா செய்ற சம்பந்தனுக்கு ஏன் சிங்கள மக்கள் வாக்களிக்க மாட்டினம்? சம்பந்தனுக்கு ஏன் தமிழ் மக்களிட வாக்குகள் வேணும்?  
இப்பேர்ப்பட்ட சம்பந்தனுக்கு பஞ்சப்பாட்டு பாடுற ஆட்கள் லொஜிக் எங்கயோ கடுமையா இடிக்குது.  

சம்பந்தனை வெல்ல வைக்கிறதால தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன பிரயோசனம் கிடைச்சிச்சு? கடைசில சம்பந்தன் ரணிலுக்கு விழுந்து விழுந்து முண்டு கொடுத்தும் கன்னியா வெந்நீர் கிணறுகளையும் அந்த பிள்ளையார் கோயிலையும் கூட காப்பாத்த முதிகெலும்பில்லா மனுஷன் ஆகிட்டார். சம்பந்தன் இனியும் ஏன் வெல்லோனும்?
இப்பேர்ப்பட்ட சம்பந்தனுக்கு பஞ்சப்பாட்டு பாடுற ஆட்கள் லொஜிக் எங்கயோ கடுமையா இடிக்குது.  

நிஜமா தமிழ் மக்கள் மேல அக்கறை இருக்கிறவங்க கூட்டமைப்பை தேர்தல்ல போட்டியிடாம வைச்சு தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாத்துற வேலையை தான் செய்வாங்கள். அதால சம்பந்தனையும் குகதாசனையும் அப்புறப்படுத்தி தமிழ் மக்களுக்கு உதவுற வழியைப் பாப்பாங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2020 at 10:36 AM, Rajesh said:

சம்பந்தனும் தேவையில்லை, தமிழர்களுக்கு என்று எந்த பிரதிநிதி வென்றும் பயனேதும் இல்லை. தமிழ் வாக்குகள் பிளவுபட தெரிவாகும் சிங்கள வேட்பாளர் அங்குள்ள சிங்கள மக்களுக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யும் போது தமிழ் மக்களும் சில பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே, தமிழ் வாக்குகளை பிரித்து சிங்கள வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்போம். புத்தியுள்ள தமிழ்மக்கள் மொட்டு கட்சியில் நேரடியாகவே இணைந்து பிரச்சாரம் செய்து மேலும் பயன்பெற வாழ்த்துகள். தமிழர் - சிங்களவர் என்று பிரித்து இதுவரை செய்து வந்த இனவாத அரசியல் வியாபாரம் முடிவுக்கு வருவது மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

On 3/21/2020 at 12:43 PM, poet said:

போரின் தொடற்ச்சியாக சர்வதெசத்தின் ஈடுபாட்டை திசைதிருப்ப திருகோணமலையில்  தமிழரின் 2 பிரதி நிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் சதுரங்கம் மகிந்த குழுவினரால் முன்னெடுக்கபட்டது. சம்பந்தர் மயிரிளையில் தப்பியதும் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்ததும் வரலாறு.  

 பணி சென்றமுறை கஜேந்திரன் பொன்னம்பலத்துக்கு. இம்முறை உறவுக்காரர் விக்கிக்கு. இதுதான் தமிழன் விதி. 

இம்முறை திருகோணமலையில் மட்டுமல்ல வன்னியிலும் வாக்குகளைப் பிரிக்கிற பணி எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக இடம்பெறுகிறது. தமிழருக்குள் தங்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை காட்டி  தமிழர் இனமல்ல சிறுபாண்மையினர் என நிரூபிக்கிறது மகிந்த அரசின் தந்திரோபாயம், சென்றமுறை சம்பந்தர் தோற்றிருந்தால் அவர்கள் நோக்கம் நிறைவேறியிருக்கும்.  

தமிழ் வாக்குகளை பிழவுபடுத்தி மாஜி சிங்கள வாக்குகளையும் அமைச்சருக்கு விழும் வாக்குகளையும் ஓருசில முன்னைநாள் போராளிகள்  வாக்க்குகளையும் இராணுவத்தின் வாக்குகளையும்  சேர்த்து ஒரு சிங்கள வேட்ப்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது.  கவலை அந்த சிங்கள வேட்பாளர் சிவிலியன் அல்ல போரை நடத்தி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதாகும்.

திருகோண மலையிலோ வன்னியிலோ முன்னைநாள் போராளிகள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களித்து பிரதி நிதித்துவத்தை இழப்பதா அல்லது சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் வடகிழக்கில் பிரதி நிதித்த்வத்தை உச்சப்படுத்துவதா என்கிற கேழ்வி நம் இனத்தின் முன்னுள்ளது .

ஏன் வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் வாக்குகள் பிரிக்கப்படாது. கொடுத்த சந்தர்ப்பத்தை பாவிக்காமல் விட்டவர்களுக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்??

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nunavilan said:

ஏன் வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் வாக்குகள் பிரிக்கப்படாது. கொடுத்த சந்தர்ப்பத்தை பாவிக்காமல் விட்டவர்களுக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்??

மக்கள் உண்மையில் எதற்காக ஒருவருக்கு வாக்களிக்கிறார்கள்?

 • அந்த வேட்பாளர் தனிப்பட்ட முறையில் வாக்களிப்பவருக்கு தனது பதவியின் சக்தியை பயன்படுத்தி வேலைவாய்ப்பு, அரச உதவிகள் மற்றும் தனிப்பட்ட உதவிகள் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் வாக்களிக்கிறார்கள்.
 • பொலிஸ் மற்றும் சட்ட தேவைகள் வரும் போது வேட்பாளர் உதவக்கூடியவர் என்ற எதிர்பார்ப்புடன் வாக்களிக்கிறார்கள்.
 • தாம் பரம்பரை பரம்பரையாக ஆதரித்த கட்சியை சேர்ந்தவருக்கு வாக்களிக்கிறார்கள்.
 • உறவினர், தெரிந்தவர், ஊரவர் என்று வாக்களிக்கிறார்கள்.
 • கொள்கை அடிப்படையில், தேசியவாதி, முன்னாள் போராளி என்று வாக்களிக்கிறார்கள்.

இப்படி பல காரணங்களுக்காக மக்கள் வாக்களிப்பதால் வாக்குகள் நிச்சயமாக தமிழ் வேட்பாளர்களுக்கிடையே பிளவுபடும். மக்களை இப்படியான காரணங்களுக்காக வாக்களிக்காமல் நீங்கள் மேலே சொன்ன ஒரே காரணத்துக்காக நீங்கள் வாக்களிக்குமாறு கேட்கலாம், ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வதை கேட்டு அப்படியே செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது உண்மையாகாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மக்களே தீர்மானியுங்கள்। இங்கு இணையதள போராளிகள் தங்கள் கருத்தை தெரிவித்து விடடார்கள்। தெரிவிப்பது நாங்கள்। தீர்மானிப்பது நீங்கள்।

Link to comment
Share on other sites

9 hours ago, கற்பகதரு said:

தமிழ் வாக்குகளை பிரித்து சிங்கள வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்போம்.

வினைத்திறனற்ற சம்பந்தனுக்கு கஷ்டகாலம் என நினைச்சு கவலையோட உங்க நோக்கங்களை தெளிவா புரியவைச்சு இருக்கீங்க. நல்லதே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

வினைத்திறனற்ற சம்பந்தனுக்கு கஷ்டகாலம் என நினைச்சு கவலையோட உங்க நோக்கங்களை தெளிவா புரியவைச்சு இருக்கீங்க. நல்லதே.

சம்பந்தனின் வினைத்திறன் உங்களுடைய பிரச்சுனை. சிங்கள வேட்பாளரை வெல்ல வைப்பது எங்களுடைய தேவை. எங்களுடைய நோக்கம் உங்களுக்கு உண்மையிலேயே புரிந்திருந்தால் ஆதரவளியுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையின் நிலமை,  

சிங்களவன் வந்து தமிழனுக்கு தீமை செய்யவதிலும் பார்க்க தமிழன் வந்து சும்மா இருப்பது மேல்.

Link to comment
Share on other sites

ஏன் வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் வாக்குகள் பிரிக்கப்படாது. கொடுத்த சந்தர்ப்பத்தை பாவிக்காமல் விட்டவர்களுக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்?? - nunavilan   

------------------------------------------------------------------------

30 வருட ஆயுதப்போராட்டம் இனக்கொலையில் முடிந்த சூழலில் இனவாத அடக்குமுறை ஆட்ச்சி தொடர்ந்ததல்லா? நொந்து நூலாகிப்போயிருந்த ஈழத் தமிழர்களை ஒருங்கிணத்தது யார்? தமிழர் தேசிய கட்சிகளின் பின்னே சென்று சர்வதேச நாடுகளின் முன் தேசிய இன அடையாளத்தை இழந்து சிறுபாண்மையினராக குறுகாமல் வெறுங்கையுடன் தமிழரை இனமாக ஒன்றுபடுத்தியது யார்? களநிலமை புரியாமல் கொடி தூக்கி தீவிரவாதம் பேசிய புலம்பெயர்ந்த தமிழருக்கு தங்கள் அழுத்தங்களின் ஆதாயம் போவதை அனுமதியோம் என சர்வதேச சமூகம் ஒதுங்கியபோது அவர்களை ஓரளவாவது அழுத்தம் கொடுக்க வைத்து ஓரளவாவது நிலம் மீட்ப்பு, அமைதி போன்ற அடிப்படை பிரச்சினைகளை அணுகிய சூழல் எப்படி உருவானது? அரசை நோக்கி இழுக்கும்  கொழும்புத்தமிழ தலைவர்கள் ஒருபுறமும் களநிலமை தெரியாமலும் ஒருங்கிணையாமலும் தீவிரம் பேசும் புலம்பெயர்ந்த தமிழர் மறுபுறமுமாக நசித்த சூழலில்  இனத்துவத்தைக் காப்பாற்றி சர்வதேச ஆதரவௌ தக்க வைத்திருக்கும் சம்பந்தர்மீது விமர்சனமில்லை என சொல்லவில்லை, ஆனாலு விமர்சனங்களோடு நீங்கள் ஆதரித்திருந்தால் நிலமை இன்னும் மேம்பட்டிருக்கும். 

Edited by poet
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

திருகோணமலையின் நிலமை,  

சிங்களவன் வந்து தமிழனுக்கு தீமை செய்யவதிலும் பார்க்க தமிழன் வந்து சும்மா இருப்பது மேல்.

திரும்பவும் சம்பந்தர் என்கிறீர்கள்! 😜 தமிழன் தமிழருக்கு செய்யும் தீமையா அல்லது சிங்களவன் தமிழருக்கு செய்யும் தீமையா இன்றைய நாட்களில் மோசமானது? 😇

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

திரும்பவும் சம்பந்தர் என்கிறீர்கள்! 😜 தமிழன் தமிழருக்கு செய்யும் தீமையா அல்லது சிங்களவன் தமிழருக்கு செய்யும் தீமையா இன்றைய நாட்களில் மோசமானது? 😇

யார் ஜயா சம்பந்தன் என்டது......? 😇

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

திரும்பவும் சம்பந்தர் என்கிறீர்கள்! 😜 தமிழன் தமிழருக்கு செய்யும் தீமையா அல்லது சிங்களவன் தமிழருக்கு செய்யும் தீமையா இன்றைய நாட்களில் மோசமானது? 😇

இன்றைய நாட்களில் அல்ல அன்றைய நாட்களிலும் எனது அனுபவம்,

அரச அலுவலங்களில் எங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளச் சென்று ஒரு சிங்கள அலுவலரை அணுகக் கிடைத்தால்... அவரது ஓரிரு கேள்விகளுடனும், அவரே சொல்லித்தரும் திருத்தங்களுடனும் தேவைகள் நிறைவேறிவிடும். ஒரு தமிழரை அணுகக் கிடைத்தால் அவரது ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும், திருத்தங்களை செய்வதற்கு அலைவதிலும் ஏன்டா வந்தோமென்று ஆகிவிடும்   

Link to comment
Share on other sites

யார் தோற்றாலும் வென்றாலும் கவலையில்லை 
சம்மந்தன் தோற்றால் மிக்க மகிழ்ச்சி.

கண்ணுக்கு தெரிந்த எதிரியுடன் போராடலாம் 
கண்ணுக்கு தெரியாத கொரோனா போன்ற கிருமிகளுடன் போராடுவது கடினம் 
என்பதே தற்போதைய உலக அனுபவம். 
 
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.