Jump to content

சுவிஸிலிருந்து யாழ் வந்த தலைமை போதகருக்கு கொரோனா! வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை தேடும் பொலிஸார்


Recommended Posts

 

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அவர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார்.

விமான நிலையத்திலும் எவ்வித பரிசோதனைகளும் இவருக்கு இடம்பெறவில்லை.

வழிபாடு இடம்பெற்ற போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது என்பதுடன் ஒலிவாங்கியை கையில் பிடித்திருக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் சுவிஸ் நாட்டிற்கு மீள சென்றுவிட்டார்.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சுவிஸ் நாட்டில் சிகிச்சை பெறுகிறார்.

இந்த தகவல் பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

எனவே தயவு செய்து அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் யாராக இருப்பினும் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். தனிமை படுத்தபட வேண்டும். அவர்கள் அனைவரையும் இனங்கண்டு மக்களும் அவர்களிடமிருந்து விலகி நடக்கவும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

https://www.ibctamil.com/srilanka/80/139455?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

சுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல்! வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை

யாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பரிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்த கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர்.

கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆராத னையில் கலந்து கொண்ட இருவர் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவர்கள், மாவட்டங்களை சோ்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இவா்கள் உடனடியாக தமது பெயா் மற்றும் இருப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக அறியத்தரவும் என அவர் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

இந்த போதனை நிகழ்வை நடாத்திய போதகர் திரும்பி சுவிஸ் சென்ற நிலையில் அங்கு அவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இந்நிலையில் இந்த மதபோதனையில் கலந்து கொண்டிருந்தவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறும், சந்தேகங்கள் இருப்பின்

உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்டுள்ளனர். இதேவேளை குறித்த மதபோதகருடன் நெருக்கமாக பழகிய ஒருவர்கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த விடயம் அரியாலை பகுதியில் உள்ள மருத்தவர் ஒருவர் ஊடாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், நல்லுாா் பிரதேச மருத்துவ அதிகாரி ஜெயக்குமார் , பிராந்திய தொற்றுநோய் தடுப்பு அதிகாரி மருத்துவர் மோகனகுமார் மற்றும் சுகாதார பாிசோதகர், பொலிஸார் என அதிகாரிகள் குழாம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.

இதன் பின்னர் முதல்கட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கின்றனர். மேலும் குறித்த நபர் அவருடைய வீட்டிலேயே 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

மேலும் அவருடைய குடும்பத்தாரும் கண்காணிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/139468?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

அனைத்து மத வியாதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் மத வியாதிகள் தம் பாட்டிற்கு இவ்வாறான செயல்களை செய்வதுடன் போலிச்செய்திகளை பரப்பி வருகின்றனர். 

Link to comment
Share on other sites

யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் விசேட அறிவிப்பு!

kanapathipillai-Mahesan.jpg

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் விசேட அறிவிப்பொன்று இன்று (சனிக்கிழமை) விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “யாழ். மாவட்டத்தில் கோரோனா தொடர்பான பலதரப்பட்ட செய்திகளை சில ஊடகங்கள் தெரிவித்துவருவது மக்கள் மத்தியில் குழப்பத்தினையும் தேவையற்ற பீதிகளையும் ஏற்படுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் தொற்றினை மாவட்டத்தில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மத வழிபாட்டுத் தலம் ஒன்றில் பங்குகொண்ட மத போதகருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் இருந்தமையால் அந்த வழிபாட்டு நிகழ்வில் பங்குகொண்ட ஏனையோருக்கும் கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த மத வழிபாட்டில் பங்குகொண்ட இருவர் கோரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் இன்று பிற்பகல் ஒரு மணிவரை குறித்த இருவருக்கும் கோரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அந்த மத வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் அவர்களது முற்பாதுகாப்பினையும் மற்றும் சமூகப் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக அந்தப் பிரதேசத்துக்குரிய சுகாதாரப் பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது 021 2217278 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இதன் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மாவட்ட இடர்முகாமைத்துவப் பிரிவினரால் உடனுக்குடன் வழங்கப்படும் என்பதுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் பொது நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் என்பவற்றை சமூகப் பொறுப்புக் கருதி கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என்றுள்ளது.

http://athavannews.com/யாழ்-மாவட்ட-அரசாங்க-அதிப/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

அனைத்து மத வியாதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் மத வியாதிகள் தம் பாட்டிற்கு இவ்வாறான செயல்களை செய்வதுடன் போலிச்செய்திகளை பரப்பி வருகின்றனர். 

இவர்கள் மீது தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு மிகக் கடுமையாகத்  தண்டிக்கப்படல் வேண்டும். 

யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளிலும் இவ்வாறான திருடர்களின்  சுவிசேசக் கூட்டங்கள் 😡 இடம்பெறுவதாக அறிவிப்புக்களை விளம்பரங்களை சுவரொட்டிகளை சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது. உதயன் செய்தித் தாளிலும் முழுப் பக்க விளம்பரங்களை பிரசுரித்துள்ளனர்.☹️

குறோனா நோய்த்தாக்கத்திலிருந்து பாதுகாக்க விசேட பிரார்த்தனைகளாம். 

(கோட்தாபய இப்படி ஒரு கிருமியும் முட்டாள் தமிழர்களும்  இருப்பதை அறியாததற்காக வருத்தப்படுவார் என நினைக்கிறேன்)

 

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

அந்த மத வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் அவர்களது முற்பாதுகாப்பினையும் மற்றும் சமூகப் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக அந்தப் பிரதேசத்துக்குரிய சுகாதாரப் பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது 021 2217278 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பொதுமக்கள் தாங்களா முன்வந்து பரிசோதனைகளை செய்றது இப்ப உள்ள முக்கிய விஷயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துகளின் மயூரன் போன்ற கயவர்களை போலவே இந்த திருட்டு பாதிரிகளும்.

தருணம் பாத்து தமது சமயத்துக்கு ஆள் கூட்டும் மாமா வேலையை “கொரோனா பிராத்தனை” என முடுக்கி விட்டு மக்களை பலி எடுக்கிறார்கள்.

கொரோனா தொற்று முடியும் வரை 5 பேருக்கு மேல் எந்த மத கூட்டமும் கூடாது என சட்டம் போடல் வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் உலகம் முழுக்க ஒன்று கூடல்களை  ஒத்தி வைக்குமாறு கேட்க்கப்படுகின்ற நேரம் ஏன் வைத்தார்களாம் இந்த எருமை கூட்டம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

இந்த நேரத்தில் உலகம் முழுக்க ஒன்று கூடல்களை  ஒத்தி வைக்குமாறு கேட்க்கப்படுகின்ற நேரம் ஏன் வைத்தார்களாம் இந்த எருமை கூட்டம் ?

ஏனென்றால் அவர்கள் நீங்கள் கூறியபடி எருமைக் கூட்டம். எருமைகளுக்குச் சிந்திக்கத் தெரியாதுதானே.😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கொரோனா தொற்று முடியும் வரை 5 பேருக்கு மேல் எந்த மத கூட்டமும் கூடாது என சட்டம் போடல் வேண்டும்.

 

அப்படித்தான் இங்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சனம் கேட்டால்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

ஏனென்றால் அவர்கள் நீங்கள் கூறியபடி எருமைக் கூட்டம். எருமைகளுக்குச் சிந்திக்கத் தெரியாதுதானே.😀

 

இல்லை இவர்களுக்கு வயிறு வளர்க்கணும் என்றால் இந்த நேரமா கிடைத்தது ?

பஸ்களில் வேறு கிழக்கில் இருந்தெல்லாம் வந்து  போயுள்ளார்கள் .

இனி கதையை மாற்றுவதுக்கு  முயல்வார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் உறவுகளின் கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டியவை.

Link to comment
Share on other sites

யாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட 8 பேர் வவுனியாவில் கண்டு பிடிப்பு

யாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை வயது குழந்தை உட்பட 8 பேர் வவுனியாவில் இன்று (21.03) இணங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பணம், செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற மத போதனையை நடத்திய போதகர் சுவிஸ் திரும்பி சென்ற நிலையில் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

அவருடன் நெருங்கிப் பழகிய இருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த ஆராதனையில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைவாக குறித்த போதனையில் கலந்து கொண்ட வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இந்நிலையில் ஊரடங்கு சட்ட நேரத்திலும் விரைந்து செயற்பட்ட வவுனியா வடக்கு பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் மேஜெயா, புளியங்குளம் பொது சுகாதார பரிசோதகர் நிசாந்தன் உள்ளிட்ட குழுவினர் புளியங்குளம் வடக்கு, முத்துமாரி நகர் பகுதியில் வசித்து வந்த நிலையில் குறித்த போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட 6 பேரையும், நெளுக்குளம், காத்தான் கோட்டம் பகுதியில் வசிக்கும் இருவரும் என 8 பேர் இணங்காணப்பட்டு அவர்களை கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைக்காக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இதேவளை, குறித்த போதனையில் கலந்து கொண்டோர் மருத்து பரிசோதனைக்காக தமது பெயர் இருப்பிட விலாசத்தை 0212217278 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/139513?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ariyalai-Church-Issue-Corona-alert-News.jpg

அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை!

யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட வவுனியாவைச் சேர்ந்த 8 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “கடந்த 15ஆம் திகதி செம்மணி, இளையதம்பி வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் சுவிட்சர்லாந்தில் இருந்துவந்த மதபோதனர் ஆராதனை நிகழ்த்தியிருந்தார். இவர் மீண்டும் சுவிட்ஸர்லாந்துக்கு திரும்பிச்சென்றுள்ள நிலையில் அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவருடன் தொடர்பினைப் பேணியவர்கள் மற்றும் தேவாலய ஆராதனையில் கலந்துகொண்டவர்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்ட வவுனியா காத்தான்கோட்டம் மற்றும் புளியங்குளம் பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் பொதுசுகாதாரப் பரிசோதர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 8 பேரில் கைக்குழந்தை மற்றும் 6 பெண்களும் ஒரு ஆணும் உள்ளடங்குகின்றனர். இதுவரை அவர்களுக்கு எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாத நிலையில் அவர்களை வீட்டிலேயே 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதுதொடர்பாக, பல்வேறு ஆலோசனைகள் எம்மால் வழங்கப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வருகிறோம்” என சுகாதார பரிசோதகர் மேஜெயா குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/அரியாலை-ஆராதனையில்-கலந்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில உள்ளவனை யேசுவிடம் கூப்பிட்டுவிட்டு இப்ப தான் போய் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - அரியாலை பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் ஆராதனை நடத்திய சுவிட்சர்லாந்து போதகர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக நேற்று செய்தி வெளியாகியது.

இந்நிலையில் குறித்த போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட மக்கள் நேற்று முதல் தேடப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் அந்த போதகருடன் நெருங்கிய செயற்பட்ட 10 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டமையினால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதியாக கூற முடியாத நிலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவம், பொலிஸார், கிராம சேவகர் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் அந்த ஆராதனையில் கலந்து கொண்ட 40 பேரை அடையாளம் கண்டுள்ளனர்.

ஏனையவர்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://www.tamilwin.com/security/01/241553?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போதகருக்கு எதிராக சுவிஸ் சட்டப்படி ஏதாவது செய்ய முடியாதா இவர் அங்கம் வகிக்கும் சேர்ச் க்கு அறிவிக்க முடியாதா ?

அப்பாவி  மக்களை கொறோனோ  வருத்தம் மாத்துகிறன் என்று கூப்பிட்டு வைரஸ் பரப்பின கதையை  உலகில் எவனுமே ஜீரணிக்க மாட்டான் .

Link to comment
Share on other sites

14 minutes ago, பெருமாள் said:

இந்த போதகருக்கு எதிராக சுவிஸ் சட்டப்படி ஏதாவது செய்ய முடியாதா இவர் அங்கம் வகிக்கும் சேர்ச் க்கு அறிவிக்க முடியாதா ?

என்ன அப்படி கேட்டுவிட்டீர்கள்? இவர் அங்கம் வகிக்கும் சேர்ச் இவருக்கே உரிமையான இவரின் தனிப்பட்ட சொத்தாகும். இவருடைய இணையத்தளத்தில் இருந்து:

Philadelphia Missionary Church

This ministry initially started with a name of ‘Tamil Christian Fellowship’ on the 23rd of September 1989 with eleven believers.

https://www.pmcinternational.ch/we-in-lord-jesus

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபை போதகர்கள் இந்து மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள். இவர்கள் இந்து மத்தின் கொள்கை பிடிக்காமல் அதைவிட்டு விலகி இன்று உலகின் பணக்கார நாட்டில் வாழ்ந்து கொண்டு கிறிஸ்துவுக்கு உழியம் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ஊரில உள்ளவனை யேசுவிடம் கூப்பிட்டுவிட்டு இப்ப தான் போய் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார்.

சிறு திருத்தம்: ஊரில் உள்ளவனை எல்லாம் கூண்டோடு   யேசுசுவோடு சேர்த்து மேல அனுப்பிவிட்டு தான் மட்டும் ஆசுப்பத்திரியில் படுக்க முயற்சித்திருக்கிறது இந்த அடி முட்டாள். 

இந்த முட்டாள் கூட்டங்கள் உயிரோடு இருப்பதைவிட மேல போறதுதான் நாட்டுக்கு நல்லது.😡

1 hour ago, பெருமாள் said:

இந்த போதகருக்கு எதிராக சுவிஸ் சட்டப்படி ஏதாவது செய்ய முடியாதா இவர் அங்கம் வகிக்கும் சேர்ச் க்கு அறிவிக்க முடியாதா ?

அப்பாவி  மக்களை கொறோனோ  வருத்தம் மாத்துகிறன் என்று கூப்பிட்டு வைரஸ் பரப்பின கதையை  உலகில் எவனுமே ஜீரணிக்க மாட்டான் .

போதகரை ISIS கட்டுப்பட்டு பகுதிக்கு அனுப்பிறது நல்லம். அவங்கள் தங்கள் தொழில நேர்த்தியாகச் செய்து முடிப்பதில் விண்ணர்.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

சபை போதகர்கள் இந்து மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள். இவர்கள் இந்து மத்தின் கொள்கை பிடிக்காமல் அதைவிட்டு விலகி இன்று உலகின் பணக்கார நாட்டில் வாழ்ந்து கொண்டு கிறிஸ்துவுக்கு உழியம் செய்கின்றார்கள்.

கிறீத்துவுக்கு ஊழியம் செய்யவில்லை கிறீத்துவின் பெயரால் அட்டூழியம் செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

என்ன அப்படி கேட்டுவிட்டீர்கள்? இவர் அங்கம் வகிக்கும் சேர்ச் இவருக்கே உரிமையான இவரின் தனிப்பட்ட சொத்தாகும். இவருடைய இணையத்தளத்தில் இருந்து:

Philadelphia Missionary Church

This ministry initially started with a name of ‘Tamil Christian Fellowship’ on the 23rd of September 1989 with eleven believers.

https://www.pmcinternational.ch/we-in-lord-jesus

அப்ப  கொர்னோவை  விட ஆபத்து நிறைந்த கொள்ளைக்காரன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளி (40 வயது) இனங்காணப்பட்டார்.

 

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளி இனங்காணப்பட்டுள்ளார்.


40 வயதான ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் T.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். அரியாலை பகுதியில் கடந்த 15 ஆம் திகதி ஆராதனை நடத்திய சுவிட்சர்லாந்து நாட்டு போதகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நபரை தேசிய தொற்றுநோயியல் பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் T.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் மற்றுமொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.madawalaenews.com/2020/03/40_22.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகருக்கு கொரோனா உறுதி! தற்போது வெளியான தகவல்

யாழ்ப்பாணம்- செம்மணி பிலதெனியா தேவாலயத்தில் ஆராதனைக்காக சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த மதபோதகா் கொரோனா நோயாளி என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தத் தகவலை அவரது உதவிப் போதகர் யோசுவா ராஜாநேசன் உறுதிப்படுத்தியுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.,

யாழ்ப்பாணத்தில் போதகர் பங்கேற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொரோனா தொற்றை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

போதகருக்கு கொரோனா ரைவஸ் தொற்றுள்ளமை தொடர்பான பரிசோதனை நேர்மறை (Positive) என வந்துள்ளது.

ஆனால் அவர் சுகமாக உள்ளார். நாம் அவர் சுகமடைவதற்காக விசுவாசிக்கின்றோம். போதகருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பொலிஸார் உள்ளிட்டவர்களுக்கு வழங்கமுடியும் என்று அவரது உதவிப் போதகர் யோசுவா ராஜாநேசன் தெரிவித்தார்.

இந்த தகவலை யாழ்ப்பாணப் போதகரிடமிருந்து

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் பெற்றுக்கொண்டார்.

இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,யாழ்ப்பாணம் போதனா வைத்தி்யசாலைப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிடோருக்கு விடயத்தைத் தெரியப்படுத்திய அங்கஜன் இராமநாதன்,

உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். சுவிட்சர்லாந்துப் போதகர் யாழ்ப்பாணத்தில் பங்கேற்ற நிகழ்வுகள், அவர் சென்று வந்த இடங்கள் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் அச்சநிலையைப் போக்குமாறும்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/139556

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.