Jump to content

சுவிஸிலிருந்து யாழ் வந்த தலைமை போதகருக்கு கொரோனா! வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை தேடும் பொலிஸார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

ஊரில உள்ளவனை யேசுவிடம் கூப்பிட்டுவிட்டு இப்ப தான் போய் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார்.

அதுவும் கொரோணாவில் இருந்து காக்க தான் கூட்டம் ...கடைசியில் அவரே கொரோணா வந்து படுத்ததும் இல்லாமல் , அங்கே வேற கொடுத்திட்டு வந்திருக்கார்...போகேக்குள்ளையே காய்ச்சல் மட்டும் என்று சொல்லி மருந்து எடுத்துட்டு போயிருக்கார் 😠

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

ம்ம்ம்
பொறுப்பிலல்லாத மனிதர்கள் மதபோதகர்களா இருக்கிறதுல வார கஷ்டம்.

மக்கள் பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்க கூடாது என்கிறது தான் இப்ப எல்லாரோட ஆசையும், பிரார்த்தனையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அப்ப  கொர்னோவை  விட ஆபத்து நிறைந்த கொள்ளைக்காரன் .

இதிலென்ன சந்தேகம் ? மக்களை வைத்து பிழைப்பு நடாத்தும் அனைவரும் கொள்ளைக்காறரே.

Link to comment
Share on other sites

8 hours ago, colomban said:

சபை போதகர்கள் இந்து மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள். இவர்கள் இந்து மத்தின் கொள்கை பிடிக்காமல் அதைவிட்டு விலகி இன்று உலகின் பணக்கார நாட்டில் வாழ்ந்து கொண்டு கிறிஸ்துவுக்கு உழியம் செய்கின்றார்கள்.

 

8 hours ago, கற்பகதரு said:

என்ன அப்படி கேட்டுவிட்டீர்கள்? இவர் அங்கம் வகிக்கும் சேர்ச் இவருக்கே உரிமையான இவரின் தனிப்பட்ட சொத்தாகும். இவருடைய இணையத்தளத்தில் இருந்து:

Philadelphia Missionary Church

This ministry initially started with a name of ‘Tamil Christian Fellowship’ on the 23rd of September 1989 with eleven believers.

https://www.pmcinternational.ch/we-in-lord-jesus

 

 

 

6 hours ago, பெருமாள் said:

அப்ப  கொர்னோவை  விட ஆபத்து நிறைந்த கொள்ளைக்காரன் .

இவர் மிக ஆபத்தான கொள்ளைக்காரன். துன்பப்படும் மக்களை மதத்தின் பெயரால் தம் மேல் நம்பிக்கை கொள்ள வைத்து அவர்களின் மாதாந்த வருமானத்தில் 10ல் ஒரு பங்கை இவர்கள் பிடுங்கிக் கொள்கிறார்கள். 100 பேரை இவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் இவர் பத்து பேரின் வருமானத்துக்கு சமமான இலாபத்தை பெறுவார். 

இவரது தமிழ் கிறிஸ்ரியன் பெலொசிப்புக்கும் இந்த Philadelphia Missionary Church க்கும் என்ன சம்பந்தம்? Philadelphia அமெரிக்காவில் உள்ள பிரபலமான நகரம். அங்கே 17ம் நூற்றாண்டில்  ஆரம்பித்த Philadelphia Missionary Baptist Church உலகில் அறியப்பட்ட கிறீஸ்தவ பிரிவு. தனது தமிழ் கிறீஸ்தவ வியாபாரத்துக்கு Philadelphia Missionary Church என்று கிட்டத்தட்ட Philadelphia Missionary Baptist Church போல தோன்றும் பெயரும் வைத்து, அமெரிக்க கொடியையும் இணையத்தில் போட்டு, இலங்கை, இந்தியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பெரும் பணம் புரட்ட போட்ட திட்டத்தை கொரோனா தின்றுவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

 

 

இவர் மிக ஆபத்தான கொள்ளைக்காரன். துன்பப்படும் மக்களை மதத்தின் பெயரால் தம் மேல் நம்பிக்கை கொள்ள வைத்து அவர்களின் மாதாந்த வருமானத்தில் 10ல் ஒரு பங்கை இவர்கள் பிடுங்கிக் கொள்கிறார்கள். 100 பேரை இவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் இவர் பத்து பேரின் வருமானத்துக்கு சமமான இலாபத்தை பெறுவார். 

இவரது தமிழ் கிறிஸ்ரியன் பெலொசிப்புக்கும் இந்த Philadelphia Missionary Church க்கும் என்ன சம்பந்தம்? Philadelphia அமெரிக்காவில் உள்ள பிரபலமான நகரம். அங்கே 17ம் நூற்றாண்டில்  ஆரம்பித்த Philadelphia Missionary Baptist Church உலகில் அறியப்பட்ட கிறீஸ்தவ பிரிவு. தனது தமிழ் கிறீஸ்தவ வியாபாரத்துக்கு Philadelphia Missionary Church என்று கிட்டத்தட்ட Philadelphia Missionary Baptist Church போல தோன்றும் பெயரும் வைத்து, அமெரிக்க கொடியையும் இணையத்தில் போட்டு, இலங்கை, இந்தியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பெரும் பணம் புரட்ட போட்ட திட்டத்தை கொரோனா தின்றுவிட்டது.

அப்ப  இனி இந்த அல்லு லோயா கூட்டத்தை யாழ் மக்களே கவனித்து கொள்ளுவார்கள் மறந்தும் மதமாற்றம் என்பது இனி இருக்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கற்பகதரு said:

இவர் மிக ஆபத்தான கொள்ளைக்காரன். துன்பப்படும் மக்களை மதத்தின் பெயரால் தம் மேல் நம்பிக்கை கொள்ள வைத்து அவர்களின் மாதாந்த வருமானத்தில் 10ல் ஒரு பங்கை இவர்கள் பிடுங்கிக் கொள்கிறார்கள். 100 பேரை இவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் இவர் பத்து பேரின் வருமானத்துக்கு சமமான இலாபத்தை பெறுவார். 

எல்லாம் வியாபாரக்கூட்டங்கள்.
வலிந்தவர்களின் பலவீனத்தை பயன்படுத்தும் பாதகர்கள்.tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
போதகர் யாரையும் கையெடுத்துக் கும்பிட்டது கிடையாதாம்
( இப்ப கண்டிப்பா கும்பிடுவார்) அதைவிட இந்து மதம் உண்மை இல்லையாம் அதற்குத்தான் உனக்கு இந்த நிலை
எதற்கு அடுத்தவர்களின் மதங்களை கொச்சை படுத்துகிறீர்கள்.
-கொரோனா பாதிப்புக்கு உள்ளான சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போதகர்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனை மாதிரி ஒருவனை பற்றி ஒரு காணொளி பார்த்தேன். சுவிஸ் மொழியில் மொழி பெயர்ப்போடு இருந்தது. மக்களிடம் இருந்து காசு சேர்த்து தனது தேவைக்கு பாவிப்பதாக.  அமெரிக்காவில் அதுதான் நடக்குது. இப்ப இருக்கும் இளைஞர்கள் கொஞ்சம் உசாராகி விட்டார்கள் 

Link to comment
Share on other sites

large.IMG_2510.jpg.c6e6d235c7f8d72462b4d126e700d999.jpg

......கொரோனா வைரஸ் .... நம்ம வியாபாத்தை பாதிக்குமா...?

நீங்க வேற... இந்த மக்களுக்கு அவ்வளவு சீக்கிரம் அறிவு வந்திடுமா...?

ஏதாவது ஒரு மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விடுவார்கள்...

நாம்... நம்மசாமிதான் அந்த விஞ்ஞானிக்கு அந்த அறிவைக் குடுத்துச்சுன்னு ஒட்டு மொத்தமா... ஜெபக்கூட்டத்திலும், துவாவுக்காக ஓதும்போதும்... கோடி அர்ச்சனை செய்யும்போதும்... சொன்னால் நம்பிவிடுவார்கள்... சிந்திக்க மாட்டார்கள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் அரசாங்கத்துக்கு சொல்லி, இவர் எந்த நாட்டு விமானத்திலை போனார், வந்தார்... எண்டு கெதியா விசாரித்து பிடிக்க வேணும். இல்லாட்டி கனபேருக்கு பரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:
போதகர் யாரையும் கையெடுத்துக் கும்பிட்டது கிடையாதாம்
( இப்ப கண்டிப்பா கும்பிடுவார்) அதைவிட இந்து மதம் உண்மை இல்லையாம் அதற்குத்தான் உனக்கு இந்த நிலை
எதற்கு அடுத்தவர்களின் மதங்களை கொச்சை படுத்துகிறீர்கள்.
-கொரோனா பாதிப்புக்கு உள்ளான சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போதகர்.

இவற்ற பேச்சிலேயே இவர் ஒரு முழு அயோக்கியன் என்று தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கள்ள கூட டம் ஒருபோதும் திருந்தாது....

இவர் கட்டாயம் கோயிலிலுக்கு போயிருப்பார் & புக்கை வாங்கி சாப்பிட்டிருப்பார்...

2 hours ago, குமாரசாமி said:
போதகர் யாரையும் கையெடுத்துக் கும்பிட்டது கிடையாதாம்
( இப்ப கண்டிப்பா கும்பிடுவார்) அதைவிட இந்து மதம் உண்மை இல்லையாம் அதற்குத்தான் உனக்கு இந்த நிலை
எதற்கு அடுத்தவர்களின் மதங்களை கொச்சை படுத்துகிறீர்கள்.
-கொரோனா பாதிப்புக்கு உள்ளான சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போதகர்.
 

 

 

https://www.ripbook.com/83226418/notice/107409

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், இவருடைய போதகர் போதித்து cancer முற்றாக குணமாகி விட்டது என்று கதை விட்டு தற்போது கொரோனோவால் கர்த்தருக்குள் நித்திரை அடைந்துவிட்டார்.

Link to comment
Share on other sites

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நபர் தொடர்பில் வெளியான தகவல்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நபருடன் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகானில் உருப்பெற்ற கொரோனா தொற்றானது உலகில் 186 நாடுகளுக்குள் புகுந்திருக்கிறது. இலங்கையிலும் 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர், தனியார் கட்டட மற்றும் நீர்குழாய் பொருத்தும் நிறுனம் ஒன்றின் உரிமையாளர் என்பது அறியப்பட்டுள்ளது.

தேவாலய கட்டட ஒப்பந்தம் தொடர்பு காரணமாகவே அவர் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை கட்டட வேலையின் காரணமாக சந்திப்பதற்கு நேரிட்டதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தின் உள்ள பல்லேறு அரச திணைக்களங்களிலும் ஒப்பந்த வேலைகள் எடுத்து செய்து கொண்டிருப்பது ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளன.

மிக அண்மைக் காலங்களிலும் குறிப்பிட்ட கொரோனாவில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண சுகாதாரத் திணைக்களத்திலும் பல ஒப்பந்த மற்றும் சிறு திருத்த வேலைகளை செய்து வந்துள்ளமை அவரது சக ஒப்பந்தக்கார்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தகவல்கள் யாழ் மக்கள் மத்தியில் அச்சவுணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சுகாதாரத் துறையினரின் நடவடிக்கையில் நம்பிக்கையில் எந்தப் பயமும் இன்றி நடமாடிய யாழ் மக்களுக்கு மாகாண சுகாதாரத் துறையினர் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

குறித்த கட்டட ஒப்பந்தகாரர் சுகாதார திணைக்களத்தில் யார் யாருடன் இணைந்த பணியாற்றியிருந்தார்? அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் எவர்கள் என அனைவரும் தங்களை அடையாளப்படுத்தி மருத்துவமனைக்கு விரைவாக செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் பலருக்கும் கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

எனவே ஏனைய மக்களுக்கான அறிவுரைக்கேற்ப சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு பாதிக்கப்பட்ட நபரினால் ஒப்பந்த வேலைகள் செய்யப்பட்டிருந்தால் தாமாக முன் வந்து தங்களையும் பரிசோதனைக்குட்படுத்துமாறு கேட்டுக் கொள்வதுடன் அரச திணைக்களங்களும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/139600

Link to comment
Share on other sites

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து பலர் தலைமறைவு!

யாழ்ப்பாணம், அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட 11 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மன்னார் சுகாதார அதிகாரிகள் அவர்களை தங்கள் வீடுகளிலேயே தடுத்து வைத்து தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த குடும்பங்கள் மன்னார் மடு நானாட்டன் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் கடந்த 15ஆம் திகதி அரியாலையில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த சுவிஸ் போதகருக்கு கொரோனா தொற்றியமை தொடர்பில் குறித்த 11 குடும்பத்தினரும் தாம் அந்த ஆராதனைகளில் கலந்து கொண்டதனை சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆராதனைக்காக 300 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட போதிலும் அங்கு அரைவாசிப் பேரை மாத்திரமே பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

ஏனையவர்கள் தொடர்பில் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

https://www.tamilwin.com/community/01/241643?ref=home-latest

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் பலருக்கு கொரோனா வாய்ப்பு உண்டு! பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இங்கு பலருக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அவர் சந்தித்த மனிதர்கள் என பலரையும் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தனது முகநூலில் கருத்துப் பதிவு செய்துள்ள பணிப்பாளர் சத்தியமூர்த்தி,

நமது பகுதியில் Corona - Covid - 19 நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதால் தொற்றுக்குள்ளான்வர்கள் பலர் எமது பகுதியில் பலர் இருக்க வாய்ப்புண்டு.

அனைவரும் சுகாதாரத்துறையினரதும் அரசாங்கத்தினதும் செய்திகளை மிக மிக கவனமாக கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/139596?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Pmc-swiss-1.jpg
 
சுவிஸ் பாதிரியாரின் சுத்துமாத்து.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:
Pmc-swiss-1.jpg
 
சுவிஸ் பாதிரியாரின் சுத்துமாத்து.
 

 

இவருக்கு ஆப்பு இருக்கென்று நம்பலாமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இதை பதிவது பொருத்தமாக இருக்கும், watsapp இல் வந்தது, பார்த்தால் உண்மை போலுள்ளது,  இரண்டு சம்பவங்களும் ஒன்றல்ல, ஆனாலும் ஏன் இப்படி பொறுப்புணர்வற்று இருக்கிறார்கள் என்று புரிவதில்லை.

IMG-20200323-WA0006.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

இவருக்கு ஆப்பு இருக்கென்று நம்பலாமா ?

இது ஒரு பழைய காணொளி. இப்போது அதை எம்மவர்கள் தூசு தட்டி வெளியே எடுத்துள்ளார்கள் அவ்வளவுதான். 
பாதிரியார் சுவிசில் பிரபல்யமானவர். எமது யாழ் களத்தில் சுவிஸ் உறவுகளும் இருக்கின்றார்கள். தங்களுக்கு தெரிந்ததை சொல்வார்கள் என நம்புகின்றேன்.

 

https://www.srf.ch/play/tv/rundschau/video/massiver-spendendruck-auf-tamilen?id=2c1ff436-1bfc-4200-aa9b-ed8117514029

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸிலிருந்து சென்று யாழ்ப்பாணத்தில் கொரனா நோயை பரப்பியதாக கூறப்படும் பாஸ்ரர் சற்குணராசா பற்றி 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்தந்தி பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையின் முழு வடிவத்தை இங்கே தருகிறேன். இதை வாசித்து இவர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சுவிஸில் மதமாற்றம் செய்யப்படும் தமிழ் மக்களும்- மதத்தின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்ந்த வசூல்ராசாவும் -

சுவிஸ் தொலைக்காட்சி அம்பலப்படுத்திய தகவல்கள்.

சுவிட்சர்லாந்தில் தமிழ் மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் வசூல்ராசா ஒருவர் பற்றி சுவிஸ் நாட்டின் எஸ்.ஆர்.எவ் என்ற தேசிய தொலைக்காட்சி கடந்த வாரம் விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ஜேர்மன் மொழியிலான இத்தொலைக்காட்சி சுவிஸ் மக்களிடையே பிரபல்யம் வாய்ந்ததாகும்.
அச்செய்தியில் சுவிஸில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்ற தமிழர் ஒருவர் செய்த மோசடிகள் தொடர்பான ஆதரங்கள் வெளியானது,
அந்தத் தமிழருடைய பெயர் சற்குணராசா சிவராசா.

சுவிட்சலாந்தின் தலைநகர் பேர்னில், முனுசிங்கன் என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலையில் சாதாரண வேலையாளாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். திடீரென்று தனது பெயரை டாக்டர் போல் என்று மாற்றிவைத்துக்கொண்டு, கிறிஸ்வ தேவாலயம் ஒன்றை சொந்தமாக வாங்கியதுடன், பல கோடி ருபாய் பெறுமதியான சொத்துக்கு சொந்தக்காரராக மாறியிருந்தார்.

பிலதெல்பியா மிசனறிசபை என்ற பெயரில் பேர்ன்; நகரின் மையப்பகுதியில், பாராளுமன்றத்திற்கு பின்பாக உள்ள சுல்கல் வீதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் 5000 சுவிஸ் பிராங்ஸ் மாதாந்த சம்பளம் பெறுவதாக சுவிஸ் அரசாங்கத்திடம் கணக்கு காட்டிவரும், டாக்டர் போல் என்று தன்னை அழைத்துக்கொள்கின்ற சற்குணராசா சிவராசாவிடம் இருக்கும் அசையா சொத்துக்களின் பெறுமதி 130 கோடி என்று கூறப்படுகின்றது.

இது எப்படி நடந்தது? எங்கிருந்து இவ்வளவு பெருந்தொகையான சொத்து வந்தது? இதுதான் சுவிஸ் ஊடகமான எஸ்.ஆர்.எவ் தொலைக்காட்சி எழுப்பியிருந்த கேள்வியாகும்.

சுவிசைப் பொறுத்தவரை கணவன், மனைவி, மூன்று பிள்ளைகளுடன் வாழும் ஒரு குடும்பத்தின் சராசரிச் செலவு 5000 பிராங்குகள் ஆகும். அப்படியிருக்க எப்படி இவரால் 130 

கோடி ரூபாய்க்குச் சொத்துச் சேர்க்க முடிந்தது.
சுவிஸில் பேர்ன் பாராளுமன்றத்திற்கு பின்னால் 60 கோடி பெறுமதியாக கட்டிடம், போல் என்ற இடத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்ற மிகவும் பிரமாண்டமான மூன்று மாடி மாளிகை (படம் இணைக்கப்பட்டுள்ளது),

யாழ்ப்பாணம் அரியாலை 724 கண்டி வீதியில் உள்ள 20 கோடி ரூபா பெறுமதியான கட்டிடம், அதன் அருகில் உள்ள மூன்று சொகுசு பங்களாக்கள், வயல் மற்றும் பனங்; காணிகள் என்று ஏராளமான சொத்துக்களை எப்படி இவரால் ஒரு குறுகிய காலத்திற்குள் சம்பாதிக்க முடிந்தது என அத்தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது பற்றிய தேடல்களை மேற்கொண்ட போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுமார் ஆயிரம் அங்கத்தவர்களை கொண்டுள்ள இவர் நடாத்தும் தேவாலயத்தில் அனைத்து அங்கத்துவர்களும் அவர்களது மொத்த வருமானத்தில் 10 வீதத்தை டாக்டர் போலுக்கு கண்டிப்பாத் தரவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு கட்டளையாக இருக்கின்றது. அப்படித் தராவிட்டால் உங்களுக்கு கடவுள் எதையுமே தரமாட்டார், தேவாலயத்துக்குக் கொடுக்காவிட்டால் ஏழ்மையை அடைந்துவிடுவீர்கள், ஆசீர்வாதங்கள் இல்லாமல் போய்விடும் என்று ஒரு வகையிலான அச்சுறுத்தலை விடுத்தே, பண வசூலை அவர் நடாத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பைபிளில் இப்படித்தான் சொல்லி இருக்கிறது என்று கூறி, உணர்வு ரீதியிலான அச்சுறுத்தலை விடுத்தே அவர் பண அறவீடு செய்வதாக, அவரது ஆலயத்தில் அங்கத்துவர்களாக இருந்த சிலர் தெரிவிக்கின்றார்கள். உங்கள் சம்பளத்தில் 10வீதம் கடவுளுக்குரிய காசு, அதனை தேவாயலத்திற்கு தரவில்லை என்றால் உங்களை கடவுள் தண்டிப்பார் என்ற அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் இத்தொலைக்காட்சி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இதில் மிகவும் மேசமான விடயம் என்னவென்றால், மக்கள் மத்தியில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்ட போதிலும், அதற்கான பற்றுச் சீட்டு எதையுமே அவர் வழங்குவது இல்லை. உங்களுக்கான பதிலை கடவுள் வழங்குவார் என்று கூறி, கொடுக்கல் வாங்கலை முடித்துவிடுவார் என அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இவரது பேச்சுக்களினால் உணர்ச்சிவசப்பட்டு தாலிக்கொடி உட்பட நகைகளை காணிக்கையாகச் செலுத்திய பலர் இவரது ஆலயத்தில் இருக்கின்றார்கள்.

சுவிட்சர்லாந்திற்கு புதிதாக வருபவர்களை சில காலம் முகாம்களில் வைத்திருப்பார்கள். அக்காலத்தில் முகாம் வாசல்களில் சிலர் நிற்பார்கள். வெளியில் வருபவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து சில உதவிகளையும் செய்வார்கள். முகாம்களில் இருக்கும் மக்களுக்கு இது பெரும் நிறைவாக இருக்கும். இதன் பின்னர் உதவி செய்த அந்நபர்கள் தங்களுடன் தேவாலயத்திற்கு வருமாறு அழைத்து சென்று மதம் மாற்றிக் கொள்வார்கள். இந்த தேவாலயத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் சுமார் ஆயிரம் குடும்பங்களில் 99வீதமானவர்கள் சைவசமயத்தை சேர்ந்தவர்களாகும்.

சுவிட்சர்லாந்தில் இப்படி பல தேவாலயங்களை தமிழர்கள் தொடங்கி உள்ளனர். இது பெரும் இலாபம் தரும் தொழிலாக மாறியிருக்கிறது.
ஒவ்வொரு தடவையும் இவர் சொத்து வாங்கி, அது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுகின்ற பொழுது, உடனடியாகவே ஒரு தேவாலயம் கட்டுவதற்காகவே தான் பணம் சேகரிப்பதான ஒரு பிம்பத்தை உருவாக்க இதுபோன்ற காரியத்தை கச்சிதமாகச் செய்து வருவது இவரது பாணியாக இருக்கின்றது.

சுவிட்சலாந்தில் உள்ள பீல் என்ற இடத்தில் இவர் வீடு கட்டிய 

பொழுது, பேர்னில் தேவாலயம் ஒன்று இவரால் கட்டப்பட்டுக்கொண்டு இருந்தது.
யாழ்ப்பாணத்தில் மூன்று சொகுசு மாளிகைகளை இவர் கட்டிக்கொண்டு இருந்த அதேநேரத்தில், அரியாலையில் இவர் தேவாலயம் ஒன்றைக் கட்டிக்கொண்டு இருந்தார்.

தற்பொழுது போல் என்ற இடத்தில் ஒரு மூன்றுமாடி சொகுசு பங்களாவை இவர் கட்டிக்கொண்டு இருக்கின்ற செய்தி ஆதாரத்துடன் சுவிஸ் தேசிய தொலைக்காட்சியில் வெளியானதும், அதனை மறைப்பதற்கு அல்லது அதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்கு, செய்தி வெளியான மறு தினமே சர்வதேச பாடசாலை தொடர்பான போலிப் படம் ஒன்றை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்கின்றார்.

கிறிஸ்தவ ஆலயம் என்ற பெயரில் இவர் மேற்கொண்டு வருகின்ற செயல்கள் தொடர்பான மேலும் சில குற்றச்சாட்டுக்கள் இவரது ஆலய உறுப்பினர்களாலேயே தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

1. வருடாந்த கணக்கு வழக்குகள் இவர் வெளியிடுவதே இல்லை. எவ்வளவு நிதி அறவிடப்படுகின்றது, எவ்வளவு நிதி செலவு செய்யப்படுகின்றது என்ற விபரங்களை இவர் எப்போதும் வெளியிடுவது இல்லை.
2. இவரது உதவி பாதிரிகளாக இவரது நெருங்கிய உறவினர்களையே வைத்துக்கொண்டு தனது பிழைகளை மறைத்து வருகின்றார்
3. சிறிலங்கா இராணுவத்தில் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் இவரது அண்ணன் மகன் தான், யாழ்குடாவில் உள்ள தேவாலயங்களுக்கு பொறுப்பாகச் செயற்பட்டு வருகின்றார். மிரட்டல்கள், அடாவடித்தனங்கள் எல்லாம் சிறிலங்கா இராணுவத்தைக் கொண்டு அங்கு தாராளமாக செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
4. இவர் தேவாலய கணக்குவழக்குகளை வெளியிடாதது தொடர்பாக இவருடன் முரண்பட்டுக்கொண்டு பலர் இவரின் மிசனரியை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள்.
5. தமிழ் நாட்டில் இவரது தேவாலயத்திற்கு பொறுப்பாளராக இருந்த அன்பழகன் என்ற பாதிரியாருடன் பிரச்சனை ஏற்பட்ட பொழுது, அங்கு செயற்படும் பாதாள உலக கும்பலை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
6. இவருடைய பிழைகளை தட்டிக்கேட்ட மற்றொரு பாதிரியான பாஸ்டர் சங்கர் என்பவரின் வாகனம் இரண்டு தடவைகள் அடியாட்களால் தாக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சமய நிறுவனங்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை, ஆனால் வரவு செலவு மற்றும் அவர்களின் பொதுப்பணிகள் அதற்கான செலவு விபரங்களை அரசாங்கத்திற்கு காட்ட வேண்டும். ஆனால் இந்த விபரங்கள் 

எதுவும் அரசாங்கத்திற்கு காட்டப்படுவதில்லை என எஸ்.ஆர்.எவ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு தெரியாமல் சொத்து சேர்த்திருப்பது பற்றி அத்தொலைக்காட்சி மாகாண அதிகாரிகளை தொடர்பு கேட்டிருந்தது. இது சட்டப்படி குற்றம், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்த அதிகாரிகள் பதிலளித்திருக்கிறார்கள்.

இலங்கையில் இவரின் சொத்துவிபரங்கள், மற்றும் இவர்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பற்றி நேரடியாக அறிந்து கொள்வதற்காக அத்தொலைக்காட்சி குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு சென்று ஒளிப்பதிவு செய்திருந்தனர்.

சுவிட்சர்லாந்திலும் இலங்கையிலும் ஒரு மாதகாலம் இந்த விபரங்களை திரட்டுவதில் அத்தொலைக்காட்சி குழு செலவிட்டிருந்தது.
சுவிட்சர்லாந்தில் இந்த தேவாலயத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக செவ்வி கண்டிருந்தார்கள். தாங்கள் மாதாந்த கொடுப்பனவை வழங்காததால் தமக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் அவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இலங்கையில் இவருக்கு இருக்கும் சொத்துக்களை வாங்குவதற்கு சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பபட்டதா என ஆராய்ந்த அத்தொலைக்காட்சி குழுவினர் சட்டரீதியாக பணம் அனுப்பபடவில்லை என கண்டறிந்துள்ளனர்.
சட்டரீதியற்ற வகையில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் தெரியாமல் இந்த பணம் இலங்கைக்கு அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவனும் மனைவியும் வேலைசெய்யும் சில குடும்பங்கள் மாதாந்தம் 500 பிறாங்குகளை வழங்கி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தலைமை போதகரான போல் சற்குணராஜா கருத்து வெளியிட மறுத்து விட்டார் என அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

எனினும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை அவர் மீதான குற்றச்சாட்டை தெளிவாகியுள்ளதாக அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அன்பளிப்பாக பணம் வசூலிக்கப்படுவதுடன் நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வழக்கமான பணத்தை செலுத்தும் குடும்பத்தின் தம்பதிகள் பணம் செலுத்தியமைக்கான ஆதாரங்களை வைத்துள்ளனர். தாம் மாதாந்தம் பணம் செலுத்தியதற்கான பற்றுசீட்டுக்களையும் அத்தொலைக்காட்சி குழுவினரிடம் வழங்கி உள்ளனர்.

இந்த தேவாலயம் வருடந்தோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பிராங்குகளுக்கும் மேற்பட்ட தொகையை அன்பளிப்பாக வசூலித்து வருவதாக அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் இலங்கையிலிருந்து வரும் சைவ மக்களை மதம் மாற்றும் செயல்களில் தமிழர்களால் நடத்தப்படும் மிசனரிகளால் மேற்கொள்ளப்படுகிறது.

பாரம்பரியமான கத்தோலிக்க அல்லது மெதடிஸ்த சமயங்களை சேர்ந்தவர்களை இவர்கள் அணுகுவதில்லை. அவர்கள் இவர்களின் செயல்களுக்கு உடன்படுவதும் இல்லை. சைவ மக்களையே மதம் மாற்றும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

நோயால் பீடிக்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை தேடி சென்று அவர்களுக்கு சிறுசிறு உதவிகளை செய்வார்கள். தங்கள் மிசனரி பற்றி போதிப்பார்கள். தங்கள் மதத்திற்கு மாற்றிக் கொள்வார்கள்.

அது போன்று பிரச்சினை உள்ள குடும்பங்களை அணுகி அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது போல நடித்து அவர்களுக்கு மூளை சலவை செய்து மதமாற்றம் செய்வார்கள். இவர்களின் தலையீடுகள் மத மாற்றங்களால் சில குடும்பங்கள் விவாகரத்து பெற்ற சம்பவங்களும் உண்டு. ஒற்றுமையாக இருந்த குடும்பங்களில் சண்டைகளும் மோதல்களும் உருவாகி கணவன் வேறு மனைவி வேறாக பிரிந்து பிள்ளைகளின் வாழ்க்கைகள் சீரிழிந்த சம்பவங்களும் உண்டு.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

Image may contain: one or more people

 

மூலம் மு.பு 

 

Link to comment
Share on other sites

ஊரடங்கு  சடடம் அமுலில் இருந்த நிலையில் , கிளிநொச்சி உருத்திரபுரம் பொறிக்கடவை அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் பூசைக்காக கூடிய மக்களை போலீசார் விரட்டியடித்தனர்

Link to comment
Share on other sites

இவ்வாறு  கடவுளை வைத்து பணம் உழைக்கும்  இந்த கேவலமான நபர்களின் அயோக்கியத்தனத்திற்கு  முன்னோடிகள் எமது இந்து மத குருக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அயோக்கியர்கள் தான். புலம் பெயர் நாடுகளில் இவர்கள் மக்களிடம் அடிக்கும. கொள்ளைக்கு அளவே இல்லை. மக்களிடையே சாமி குற்றம், தெயவக்குற்றம், பகவான் தோஷம்  அதற்கு பரிகாரம் என்று எண்ணற்ற மூடப்பழக்கங்களை  மக்கள்  மனதில் விதைத்து   மக்களை மத ரீதியில் பலவீனமானவர்களாக மாற்றியதே இந்த இந்து மத குருக்கள் என்று கூறப்படும் கொள்ளையர்கள்  தான். அவர்களை பின்பற்றி ஏற்கனவே  பலவீனர்களாக்கப்பட்ட மக்களை இந்த போதகர் என்ற பிராடு ஆசாமி  மதம் மாற்றி தனது  வித்தையை காட்டுகிறார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, tulpen said:

இவ்வாறு  கடவுளை வைத்து பணம் உழைக்கும்  இந்த கேவலமான நபர்களின் அயோக்கியத்தனத்திற்கு  முன்னோடிகள் எமது இந்து மத குருக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அயோக்கியர்கள் தான். புலம் பெயர் நாடுகளில் இவர்கள் மக்களிடம் அடிக்கும. கொள்ளைக்கு அளவே இல்லை. மக்களிடையே சாமி குற்றம், தெயவக்குற்றம், பகவான் தோஷம்  அதற்கு பரிகாரம் என்று எண்ணற்ற மூடப்பழக்கங்களை  மக்கள்  மனதில் விதைத்து   மக்களை மத ரீதியில் பலவீனமானவர்களாக மாற்றியதே இந்த இந்து மத குருக்கள் என்று கூறப்படும் கொள்ளையர்கள்  தான். அவர்களை பின்பற்றி ஏற்கனவே  பலவீனர்களாக்கப்பட்ட மக்களை இந்த போதகர் என்ற பிராடு ஆசாமி  மதம் மாற்றி தனது  வித்தையை காட்டுகிறார். 

 

யார் பெரிய அயோக்கியன் என்பதா இப்போது போட்டி 😡

போட்டி இதிலுமா ?😜😏

8 hours ago, நீர்வேலியான் said:

இங்கு இதை பதிவது பொருத்தமாக இருக்கும், watsapp இல் வந்தது, பார்த்தால் உண்மை போலுள்ளது,  இரண்டு சம்பவங்களும் ஒன்றல்ல, ஆனாலும் ஏன் இப்படி பொறுப்புணர்வற்று இருக்கிறார்கள் என்று புரிவதில்லை.

IMG-20200323-WA0006.jpg

திகதியில்லை போன் நம்பறில்லை ?

நம்பக்கூடியதாக இல்லை.☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.