Jump to content

இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு அதிகரித்ததையடுத்து இராணுவம் களமிறக்கியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு அதிகரித்ததையடுத்து இராணுவம் களமிறக்கியது

இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு அதிகரித்ததையடுத்து இராணுவம்  களமிறக்கியது

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகரித்துள்ளது.இத்தாலியில் கொரோனா வைரஸின் கோரத் தண்டவத்தினால் ஒரே நாளில் 627 உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளன. இதனையடுத்து பல நகரங்களை முடக்குவதற்கு உடனடியாக இராணுவம் களமிறக்க ப்பட்டுள்ளது.இராணுவத்தை பயன்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன,114 படையினர் லொம்பாடியில் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் இது தாமதமான நடவடிக்கை ஆனால் அவசியமானது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினால் வடபகுதியில் பெரும் குழப்ப நிலை காணப்படுகின்றது, மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் தடுமாறுகின்றன, இறந்தவர்கைள புதைப்பது கூட சாத்தியமற்றதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, இத்தாலிக்கு ஆலோசனை வழங்கிவரும் சீன நிபுணர்கள் இத்தாலி விதித்துள்ள கட்டுப்பாடுகள் போதாது என குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையிலேயே இத்தாலியின் வைரஸினால் பாதிக்கப்பட்ட நகரங்களை முடக்கும் நடவடிக்கைக்காக படையினரை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.(15)625.0.560.350.160.300.053.800.668.160.91 (1)625.0.560.350.160.300.053.800.668.160.91 (2)625.0.560.350.160.300.053.800.668.160.91
 

http://www.samakalam.com/செய்திகள்/இத்தாலியில்-கொரோனா-வைரஸி/

Link to comment
Share on other sites

"இது தாமதமான நடவடிக்கை ஆனால் அவசியமானது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது" 

அவசரகால நிலையை,  விட்ட தவறை கச்சிதமாக கையாளும் அரசு. 

மற்றைய மக்களாட்சி அரசுகளுக்கும் ஒரு பாடமாக இத்தாலி உள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் - இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 4825 ஆக அதிகரிப்பு

 

இத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.

 
 
 
கொரோனா வைரஸ் தாக்குதல் - இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 4825 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ்
 
ரோம்:
 
சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்பட உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 
 
கொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
 
இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் கியுஸ்பி காண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் செயல்படும் முக்கியத்துவம் இல்லாத கம்பெனிகளை மூடும்படி உத்தரவிட்டுள்ளார்.  
 
மேலும், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி இன்று கொரோனா வைரஸில் சிக்கிபோய்  ,

கொரோனா ஆரம்பிச்ச சீனாவைவிட அதிக உயிர்  இழைப்பை சந்திப்பதற்கு ஒன்றே ஒன்றுதான் காரணம்...

பல நாட்டுக்காரர்களுக்கு இலகுவா ஐரோப்பாவுக்குள் நுழையும் வசதியை அவர்கள் ஏற்படுத்தி கொடுத்துவிட்டார்கள்.

அது  எதுவென்றால்...,

எவரையும் வரவேற்கும் அவர்கள் இளகிய மனசு.!!!

இலங்கை தமிழர்களை  பல ஐரோப்பியநாடுகள்   அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு கை கழுவிவிடும்போதெல்லாம்..

அவர்கள் எஸ்கேப் ஆகி ஓடுவதெல்லாம் இத்தாலிக்குத்தான், 

வேலை அனுமதி பத்திரம் தந்து இனம், மதம், மொழி, நிறம்... எதுவுமே பார்க்காம எங்கள ஏற்றுக்கொள்வார்வார்கள்...

நானும் அங்கேதான் ஒருகாலம்  வாழ்ந்திருக்கிறேன் அவர்கள் கருணை மனசு எனக்கும்     புரியும்.

அதேபோல சிரிய துருக்கி, அல்ஜீரிய அகதிகள்  எல்லைகள் கடந்து இத்தாலி வரும்போதும்  அவர்களை லட்சகணக்கில் ஏற்றுக்கொள்வதும் இத்தாலிதான்...

இத்தாலி .... வீட்டு வேலைக்காரர்களாக பல தேசத்தவர்களுக்கு குறுகிய கால அடிப்படையில் வேலை கொடுத்திருக்கிறது ....விசா கொடுத்திருக்கிறது 

பல தேச காரர்களை  வேலைக்கு அமர்த்தியதன்மூலம்    அவர்கள் வாழும் தேசத்தில் , சொந்த  வீட்டுக்கு சொந்தக்காரர்களாக்கும்     வசதியை கொடுத்திருக்கிறது.

இத்தனைபேரை கருணை மனசுடன் ஏத்துக்கிட்ட இந்த தேசத்திலிருந்து ...

பலதரப்பட்ட மக்கள் அவர்கள் தாயகம் போய் திரும்பி திரும்பி இத்தாலி  வருவதால், அவர்கள் மூலமா கொரோனா இத்தாலியை பதம் பார்த்துவிட்டது.

இன்று பேரழிவின் வசலில் நிற்கிறது,

நல்லது செய்யும் எவருக்குமே கெட்டகாலம்தான் மிஞ்சும் என்ற பழமொழி உண்மையாய் போச்சே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.