Jump to content

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு


Recommended Posts

Curfew-2.jpg

கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதேபோல் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், பின்னர் திங்கள் மாலை 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://athavannews.com/ஊரடங்குச்-சட்டம்-நீடிப்ப/

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

ஊரடங்கு சட்டம் நீடிப்பு;   தளர்த்தப்படும் நேரம் தொடர்பான விவரம்

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

24ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.

அத்துடன், ஏனைய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 23 திகதி காலை 6 மணிக்கு நீக்கப்படும்.

மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுக்கப்படவுள்ளது.

அப்பகுதிகளில் இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் நாட்டில் உள்ள மதுபான சாலைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஊரடஙக-சடடம-நடபப-தளரததபபடம-நரம-தடரபன-வவரம/150-247314

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு சட்டத்தை மீறினவையை பொலிஸ் கூட்டி அள்ளும் காட்சி....

 

Link to comment
Share on other sites

ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் நுகர்வோர் வர்த்தக நிலையங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும் - அரசாங்கம் அறிவிப்பு

அனைத்து பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் வர்த்தக நிலையங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் முடிவுக்கு வந்தவுடன் உடனடியாக நுகர்வோருக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக திறக்குமாறு அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்காக கூட்டுறவு வர்த்தக நிலையங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் தட்டுப்பாடு காணப்படுமாயின் தமது பிரதேச கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மூலம் வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு விற்பனை சங்கத்துடன் தொடர்பு கொண்டு மொத்த பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு விற்பனை சங்கம் கொண்டுள்ள கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மொத்தமாக பெருமளவில் கையிருப்பில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78357

Link to comment
Share on other sites

3 hours ago, போல் said:

இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் நாட்டில் உள்ள மதுபான சாலைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

6 hours ago, ampanai said:

யாழ்ப்பாணம் அாியாலை, நாவலடி பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கள்ளு தவறணையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஊரடங்கு நேரத்தில் வாழைச்சேனை பகுதியில் 9 பேர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய கடந்த 24 மணித்தியாலங்களில் (இன்று சனிக்கிழமை மாலை வரை) ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் மது போதையில் பயணம் செய்த வேளையில் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் பிரிவில் பொதுமக்கள் நடமாடுவதை தவிர்த்து கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் தமது பிரதேசத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதேவேளை நாடு பூராகவும் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பாட்ட 130க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/community/01/241534

Link to comment
Share on other sites

வடக்கு மாகாணத்தில் ஊரடங்குச்சட்டம் நீடிப்பு

வடக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் அன்றைய தினம் (24ஆம் திகதி) இரண்டு மணிக்கு அமுல்படுத்தப்படும்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டநிலையிலும் மற்றுமொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதனாலுமே இந்த ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139561

Link to comment
Share on other sites

வடக்கு மாகாணம் கொழும்பில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெள்ளிவரை நீடிப்பு!

In இலங்கை     March 23, 2020 6:52 am GMT     0 Comments     1045     by : Jeyachandran Vithushan

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு மீளவும் மதியம் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாளை நண்பகல் 12 மணிக்கு நடைமுறைத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஏனைய 17 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விதிக்கப்பட்டு வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும். மேலதிக அறிவிப்பு வரும்வரை வியாழக்கிழமை நண்பகலில் அந்த 17 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/வடக்கு-மாகாணம்-கொழும்பில/

Link to comment
Share on other sites

வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு

வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலயகம் அறிவித்துள்ளது.

எனினும் இந்தப் பகுதியில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்படும் என செயலகம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்த ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 26ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்படும். பின்னர் அன்றைய தினம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இந்த காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான பயணங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இடங்களுக்கு இடம் கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டமாக இருந்தாலும் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/security/01/241653?ref=imp-news

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா – இலங்கையில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – புதிய அட்டவனை வெளியாகியது…

March 23, 2020

curfew-2.jpg

இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஆறு மணி வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 26ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை ஆறு மணிக்கு நீக்கப்படவுள்ளது.

குறித்த எட்டு மாவட்டங்களிலும் நாளை பகல் 12 மணியிலிருந்து 27ஆம் திகதி வௌ்ளிக்கிழமை காலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 27ஆம் திகதி நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் வர்த்தக துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த விடயங்களை முறையாக நிருவகிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2020/138989/

Link to comment
Share on other sites

நாளை வெளியே செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை! மீறினால் சட்ட நடவடிக்கை

ஶ்ரீலங்காவில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பல விடயங்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டுவருகின்றன.

ஶ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

கொழும்பு கம்பஹா புத்தளம் வடமாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டு இன்று 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு கம்பஹா புத்தளம் வடமாகாணம் போன்ற இடங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை 12 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் மக்கள் அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்வதற்காக 6 மணித்தியாலங்கள் நாளை வழங்கப்படவுள்ளது.

இதனால் நாளை மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக பரபரப்புடன் செயற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே கொரோனா தொற்று அதிகாமாவதற்கு காரணமாக அமையக்கூடாது என அரசாங்கத்தால் மக்களுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

அதில் நாளை மக்கள் வெளியில் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவையாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்...

  • தேவையான விடயத்தின் அடிப்படையில் மாத்திரம் பொதுப்போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல்
  • எல்லா சந்தர்ப்பத்திலும் இரண்டு நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை கடைப்பிடித்தல்.
  • அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நீங்கள் வீட்டிலிருந்து வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம் செல்ல வேண்டும்.
  • வீட்டில் ஒரு நபர் மாத்திரம் வர்த்தக நிலையத்திற்கு செல்வதை வரையறுக்கவும்.
  • தனியார் வைத்திய ஆலோசனைகளை கடைப்பிடிக்கவும்
  • வயோதிப நபர்களை வீட்டிலேயே தங்க வைக்கவும்.
  • பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தில் நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை பேணுங்கள்.
  • பொருட்களை கொள்வனவு செய்யும் பொளுது வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தை வரையறை செய்யுங்கள்.
  • இந்த வர்த்தக நிலையங்களுள் கூடுதலானோர் உட்பிரவேசிப்பதில் கட்டுப்படுத்துவதில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முகாமையாளர் பாதுகாப்பு பிரிவினர் கவனம் செலுத்த வேண்டும்.
  • வெளியிடங்களுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும்போது வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை மாத்திரம் கடைப்பிடித்து வீடுகளுள் பிரவேசிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியாமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நாளைய தினம் காலை 6 மணிக்கே வர்த்தக நிலையங்களை திறக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139648

Link to comment
Share on other sites

இன்றைய ஊரடங்குச் சட்டம் தளர்வு பொருட்களை வாங்க மக்களுக்கு போதிய அவகாசத்தை கொடுக்கேல்லையாம்.

Link to comment
Share on other sites

ஊரடங்குச் சட்டத்தின்போது மருந்தகங்கள் திறந்திருக்கும் - சுகாதார அமைச்சு அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் பெருந்திரளான நோயாளர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நோயாளர்களின் பதிவேடு மற்றும் மருந்துகளுக்கான பற்றுச்சீட்டுக்களை, ஊரடங்கின்போது பயன்படுத்தக்கூடிய அனுமதிப் பத்திரங்களாகக் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல், மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஔடதங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார் எனவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139737

Link to comment
Share on other sites

ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வீடு தேடி வரவுள்ள குழு

நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் செயற்பாடுகளுக்காக பசில் ராஜபக்ச தலைமையில் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தால் நாட்டு மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் செயற்பாடுகளுக்காக பசில் ராஜபக்ச தலைமையில் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வது, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது உட்பட பல விடயங்களை இந்த செயலணி கையாளும்.

அரச அதிபர்மார், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்த செயலணியில் அங்கம் வகிப்பார்கள்.

நாளை முதல் இந்த செயலணி வேலைகளை ஆரம்பிக்கவுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139742

Link to comment
Share on other sites

வடக்கு தவிர்ந்த 16 மாவட்டங்களில் நாளை தளர்கிறது 'ஊரடங்கு'

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் நாளைமறுதினம் வௌ்ளிக்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வௌ்ளிக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3 ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இன்று புதன்கிழமை காலை 6 மணி வரை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 715 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139807

Link to comment
Share on other sites

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்!

In இலங்கை     March 26, 2020 1:52 am GMT     0 Comments     1533     by : Benitlas

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வரும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தமது பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள், மரக்கறி, மீன், இறைச்சி மற்றும் மருந்து வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் இந்த விடயத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

http://athavannews.com/நாட்டின்-சில-பகுதிகளில்-10/

 

யாழில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது – அரசாங்கம்

In இலங்கை     March 26, 2020 5:52 am GMT     0 Comments     1013     by : Jeyachandran Vithushan

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படாது என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டே குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவிப்பு வரும்வரை தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/யாழில்-ஊரடங்கு-உத்தரவு-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீள அறிவிக்கும் வரை யாழில் ஊடரங்கு

Lயாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (27) காலை 6 மணிக்கு நீக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை மாலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வரும்.

பின்னர், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா நோய்க்கிருமி தொற்று பரவும் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.
 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மள-அறவககம-வர-யழல-ஊடரஙக/150-247470

Link to comment
Share on other sites

யாழ். மாவட்டத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டது ஏன்? அரசாங்க அதிபர் விடுத்துள்ள விசேட கோரிக்கை

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை ஆறு மணிக்கு சில மாவட்டங்களில் நீக்கப்படுகிறது.

எனினும் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் பொது மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் யாழ். அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை கணேசன் விளக்கியுள்ளதுடன், யாழ். மக்களிடம் விசேட கோரிக்கையினையும் விடுத்துள்ளார்,

இது தொடர்பில் எமது இணையத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில்,

https://www.ibctamil.com/srilanka/80/139892?ref=ibctamil-recommendation

யாழ். தீவகப் பகுதி மக்களுக்கு அவசர அறிவித்தல்!

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்ற தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் அவசர அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் நோயாளர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்றவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பையடுத்து யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய நாளை 27 ஆம் திகதி தீவகத்தைச் சேர்ந்த மருத்துவ கிளினிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 மணிமுதல் 1 மணிவரையிலான நேரத்திற்குள் 021-2222268 என்ற தொலை பேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு பணிப்பாளர் கேட்டுள்ளார்.

அவ்வாறு தெரிவிக்குமிடத்தே உங்களுக்கு தேவையான மருந்துகள் உங்களது பிரதேசத்திற்கு அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு பொதி செய்து அனுப்பி வைக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நாளை தீவகப் பிரதேசத்திற்காக முதலில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த நடவடிக்கை தொடர்ந்தும் ஏனைய பிரதேசங்களுக்கும் ஆரம்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பான அறிவித்தல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/india/80/139893

Link to comment
Share on other sites

ஊரடங்கு நேரத்தில் செய்ய வேண்டியது என்ன? அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளையும் உடனடியாக சந்தித்தார் பசில்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழந்நிலையில் மக்களின் தேவைகளை எவ்வாறு முழுமையான செய்து கொடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மருந்துத் துறை சார்ந்த அதிகாரிகளின் பங்கேற்புடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதேபோன்று, ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இலங்கையின் வங்கித் துறையின் செயல்பாட்டை திறன்பட வைத்திருப்பதில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் இன்று கூடியது.

இதன்போது பேசிய அவர்,

சர்வதேச மட்டத்தில் நிதி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் வணிக வங்கிகள் தொடர்ந்து சேவையில் ஈடுப்பட வேண்டும். அத்துடன் கசோலை ஊடான கொடுக்கல் வாங்கலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

எ.டி.ம் இயந்திரம் ஊடான சேவைகள் தொலைபேசி ஊடாக அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டாவது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் பிரதேச செயலக பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு வங்கியாவது வழமையான நேரத்திற்கு அதிகமான நேரம் ஈடுப்பட வேண்டும் .

இதன்போது, இலங்கையின் அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/139954

Link to comment
Share on other sites

ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மஹிந்த விளக்கம்!

In இலங்கை     March 28, 2020 7:34 am GMT     0 Comments     1159     by : Benitlas

ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பரவலை அலட்சியமாக எண்ண முடியாது. குறுகிய காலத்தில் உலகளாவிய ரீதியில் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல காரணிகளை கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை இனி கடுமையாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் உற்பத்தி, மரகறிகள், பழங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் பொருள் விநியோகிக்க போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் எந்நிலையிலும் தடைகள் ஏற்பட கூடாது.

அத்துடன் மக்களும் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஊரடங்கு-சட்டம்-கடுமையாக்/

Link to comment
Share on other sites

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!

In இலங்கை     March 29, 2020 4:07 am GMT     0 Comments     1174     by : Benitlas

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை(திங்கட்கிழமை) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொழும்பு-யாழ்ப்பாணம்-உள/

Link to comment
Share on other sites

கொரோனா ஒழிப்பு கடமைகளில் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள்!

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா வைரஸ் ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதினால் இவர்களுக்கு சேவைக்கு சமூகமளிப்பதற்கு சிரமம் என்பதினால் நாளைய (30.03.2020) தினத்தில் சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியமல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுதொடர்பில் குறிப்பிட்ட காலத்தில் அறிவிக்கப்படும் என அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140132

Link to comment
Share on other sites

ஊரடங்கிற்கு முழு ஆதரவு வழங்கும் முல்லைத்தீவு மக்கள்!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடுதழுவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது வீட்டிற்குள் முடங்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு.

இந்நிலையில்நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்கு உத்தரவின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மக்களும் அதற்கு ஆதரவு வழங்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.

அந்த வகையிலே பொதுவாக வீதிகள் நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதோடு மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140130

Link to comment
Share on other sites

ஊரடங்கு மூலம், அரசு கட்டுப்படுத்துவது கொரானவை மட்டுமல்ல, மக்களையும் 

அதுவே நாளை இராணுவ அரசிற்கு வழி கோலலாம் 😞 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.