Jump to content

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு


Recommended Posts

நாளை இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்

In இலங்கை     April 29, 2020 4:16 pm GMT     0 Comments     1818     by : Benitlas

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் நான்காம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை இரவு முதல் திங்கள்வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

http://athavannews.com/நாளை-இரவு-8-மணி-முதல்-நாடளா/

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

எதிர்வரும் 4ஆம் திகதி வரை அமுலானது ஊரடங்கு!

In இலங்கை     April 30, 2020 4:01 pm GMT     0 Comments     1201     by : Benitlas

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 8 மணி முதல் மே மாதம் 4ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அதி அபாய வலயங்களாக இனங்காணப்பட்ட 4 மாவட்டங்கள் தவிர ஏனைய 21 மாவட்டங்களுக்குமான ஊரடங்கு உத்தரவு கடந்த 27 ஆம் திகதி முதல் தினமும் அதிகாலை 05 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 08 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், நாளை வெள்ளிக்கிழமை வரை இந்த நடைமுறை தொடரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நேற்றைய அறிவிப்பின் படி இன்று இரவு 08 மணி முதல் எதிர்வரும் மே 04 ஆம் திகதி அதிகாலை 05 மணி வரை இந்த ஊடரங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அதி அபாய வலங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு கடந்த மார்ச் 24ஆம் திகதி முதல் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மே 04ஆம் திகதி அதிகாலை வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த இடர்வலயங்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படுமா? என்பது குறித்த எந்தவித அறிவித்தலும் இன்னமும் ஜனாதிபதி ஊடகப்பிரிவால் வழங்கப்படவில்லை.
ஒரு மாத காலத்திற்கும் மேலான முடக்கத்தில் சிக்கித் தவிக்கும் குறித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தொடர்ச்சியாக முறையிட்டு வருகின்றனர்.

ஆனாலும், அதிக தொற்றாளர்கள் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிகளுக்கு ஊடரங்கை உடனடியாக தளர்த்துவது உசிதமல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பரிந்துரைத்துள்ளனர்.

http://athavannews.com/எதிர்வரும்-4ஆம்-திகதி-வரை/

Link to comment
Share on other sites

மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீடிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் இல்லை- அஜித் ரோஹன

In இலங்கை     May 1, 2020 6:07 am GMT     0 Comments     1828     by : Benitlas

எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கினை நீடிப்பது குறித்து இதுவரை தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை அடிப்படையாக வைத்தே இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளிற்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஊரடங்கும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கான அனுமதிப்பத்திரத்தை நீடித்திருப்பதை அடிப்படையாக வைத்து ஊரடங்கு எதிர்வரும் 31 வரை நீடிக்கப்படும் என்ற முடிவிற்கு வரமுடியாது என அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/மேலும்-ஒரு-மாதம்-ஊரடங்கை/

Link to comment
Share on other sites

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட அறிவித்தல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகள் மே மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் திங்கட்கிழமை காலை ஐந்து மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பின்னர் 6 ஆம் திகதிவரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

இந்த மாவட்டங்களில் அதன் பின்னர் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் 11 ஆம் திகதி காலை 5 மணிவரை நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும்.

அத்துடன் அத்தியாவசிய சேவைகள் உட்பட நாட்டின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க அரச மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

நிறுவனங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் நிறுவனங்களின் தலைவர்கள் கொவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் அதிகாரிகள் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/142302?ref=rightsidebar

Link to comment
Share on other sites

ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது

Arrest.jpg

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்றுவரையான கலப்பகுதிகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்தோடு அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 699 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/ஊரடங்கு-உத்தரவை-மீறிய-45-ஆய/

Link to comment
Share on other sites

11 ஆம் திகதி முதல் போக்குவரத்து சேவை ஆரம்பம்

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் ஆலோசனைகளுக்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எனினும், அலுவலகம் செல்வோர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக பயணிப்போர் மாத்திரமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியுமென அவர் தெரிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/11-ஆம-தகத-மதல-பககவரதத-சவ-ஆரமபம/175-249686

Link to comment
Share on other sites

தளர்கிறது ஊரடங்கு; அடையாள அட்டை இலக்கம் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தும் திட்டம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில் மாத்திரமே நடைமுறையில் இருக்குமென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் இந்த நடைமுறை செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் விரிவான தகவல்களை தருகிறது இந்த செய்தித் தொகுப்பு...

https://www.ibctamil.com/srilanka/80/142433

 

தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம்; வெளியான விஷேட அறிவித்தல்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவந்தது.

தற்போதுவரை 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்குச் சட்டம் படிப்படியாக தளர்த்தப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், இரவு 8 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 6 ஆம் திகதிவரை முன்னர் போன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலாக்கப்படவுள்ளது.

அந்த மாவட்டங்களில் எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/142428?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது

In இலங்கை     May 4, 2020 5:48 am GMT     0 Comments     1018     by : Benitlas

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்றுவரையான கலப்பகுதிகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்தோடு அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 699 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்ப வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி, ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டுமே ஏற்புடையதாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு இது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது கிராமம் இடர் வலயமாக குறிப்பிடப்பட்டிருந்தால் அத்தகைய வலயங்களுக்குள் பிரவேசிக்கவோ அல்லது அங்கிருந்து வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடு-முழுவதும்-ஊரடங்கு-உ/

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் இன்று அமுலாகவுள்ள ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுவந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.

தற்போது கொரோனா அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுலாகும் என்பபோது தொடர்ந்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/142558?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுலானது ஊரடங்கு!

In இலங்கை     May 6, 2020 3:23 pm GMT     0 Comments     1012     by : Benitlas

நாடளாவிய ரீதியில் இன்று(புதன்கிழமை) இரவு எட்டு மணி முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எதிர்வருகின்ற நாட்களில் வெசாக் மற்றும் வார இறுதி விடுமுறை தினங்கள் வருவதினால், மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் வகையில் மீண்டும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 11ஆம் திகதி முதல், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலேயே, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில், தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் நடைமுறை எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்தே அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில், தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் நடைமுறை இந்த வாரம் முதல் அமுலாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, 11ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் பகுதிகளில் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடளாவிய-ரீதியில்-எதிர்வ/

Link to comment
Share on other sites

தொடக்கத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட அரசு தேர்தலுக்கு ஆசைபட்டு இப்ப புலி வாலை பிடித்த கதையாக என்ன செய்வதென்று தடுமாறுகீனம். கோத்தாவின் ஆட்சிக்கு நற்சான்றிதழை வழங்கி இருக்க கூடிய கொரோனா இப்ப இவர்களது தோல்விக்கு வழி வகுக்க போகின்றது. 

Link to comment
Share on other sites

முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!

In இலங்கை     May 7, 2020 7:22 am GMT     0 Comments     1466     by : Benitlas

கொரோனா முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முடக்க நிலை தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையிலேயே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் நவீன் டி சொய்சா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முடக்க நிலை தளர்த்தப்பட்ட பின்னர் ஏதேனும் ஓர் பகுதியில் வைரஸ் தொற்று பரவினால் உடனடியாக அந்த பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நீங்காத நிலையிலேயே அரசாங்கம் நாட்டை திறப்பதாகவும், இதனால் மிகுந்த அவதானத்துடன் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது நாள் ஒன்றுக்கு சுமார் 1600 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் இது நாள்தோறும் 2500 பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை சற்றே ஆரோக்கியமானது என்ற போதிலும் முடக்க நிலை தவிர்ப்பு அபாயத்தை உருவாக்கக் கூடிய நிலை உண்டு என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/முடக்க-நிலை-தளர்த்தப்பட்/

Link to comment
Share on other sites

முடக்கப்பட்ட ஸ்ரீலங்காவை வழமைக்கு திருப்புவது குறித்து விசேட வர்த்தமானி

நாட்டில் நிலவி வரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக முடக்கப்பட்ட பொது மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

மேல் மாகாணத்தின் பங்களிப்பின்றி எமது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது அதனால் மேல் மாகாணம் திறக்கப்பட வேண்டும். அங்கு தற்போதைய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டாலும் மேல் மாகாணத்தில் முக்கிய பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.

உரிய சட்ட கட்டமைப்புக்குள் தனியார் நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்கப்பட்டு அங்கு பணியாற்ற வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து நிறுவன தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து தொடர்பான புதிய சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராகவும், சட்டங்களுக்கு அமைய செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக விசேட பேச்சு வார்த்தைகளை எதிர்வரும் தினங்களில் நடத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142734?ref=imp-news

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபாலகங்களும் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபாலகங்களும் திறக்கப்படவுள்ளன.

 தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தபாலகங்களில் பணியாற்றும் ஊழயர்களில்  மூன்றில் ஒரு பகுதியினர்  மாத்திரம் பணிகளை முன்னெடுப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கடமைகளுக்கு   சமூகமளிக்கும்  பணியாளர்களுக்கான  பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://athavannews.com/நாடளாவிய-ரீதியிலுள்ள-அன-2/

Link to comment
Share on other sites

திட்டமிடலொன்று இல்லாமல் ஊரடங்களை தளர்த்துவதானது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் – அஜித் பி. பெரேரா

In இலங்கை     May 9, 2020 3:34 am GMT     0 Comments     1086     by : Jeyachandran Vithushan

முறையான திட்டமிடலொன்று இல்லாமல் எதிர்வரும் 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக ஊரடங்களை தளர்த்துவதானது, மக்களுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஊரடங்கைத் தளர்த்தும்போது சரியான திட்டமிடல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், நாட்டை இவ்வாறான நிலைமையில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஊரடங்கைத் தளர்த்தும்போது சரியான திட்டமிடலொன்று அவசியமாகும்.

உலக நாடுகள் சில சரியான திட்டமிடலுடன்தான் ஊரடங்கை தளர்த்தியது. கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்தே முடிவுகளை எடுத்தது. ஆனால், துரதிஷ்டவசமாக எமது அரசாங்கம் அவ்வாறான திட்டமிடல்களை மேற்கொள்ளவில்லை.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் தேர்தல் இலக்குத்தான் காணப்படுகிறது.
இலங்கையின் பொருளாதாரம் கடந்தாண்டு நவம்பரில் இருந்து வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், அரசாங்கம் அரசியல் நோக்கங்களை விடுத்து, நேர்மையான மக்கள் சேவைக்கு முன்வர வேண்டும்.

இதனைத் தான் நாட்டு மக்களும் விரும்புகிறார்கள். அரசாங்கத்தின் திட்டங்கள் நாளுக்கு நாள் மாற்றமடைகின்றன. முதலில் ஒரு வர்த்தமாணி வெளிவருகிறது. பின்னர் அந்த வர்த்தமாணிக்கு எதிரான ஒரு முடிவு எடுக்கப்படுகிறது.

இங்கு ஒரு தீர்க்கமான கொள்கையொன்றும் கிடையாது. அரச- தனியார் தரப்பினர் என அனைவரும் இன்று இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை அரசாங்கம் கைவிட வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அப்படி அரசாங்கம் மக்களுக்காக பணியாற்ற முன்வருமாக இருந்தால், நிச்சயமாக நாம் எமது ஆதரவினை அரசாங்கத்துக்கு வழங்குவோம்.” என கூறினார்.

http://athavannews.com/திட்டமிடலொன்று-இல்லாமல்/

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மதுபான சாலைகள் திறக்கப்படாது

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளன.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற மற்றும் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் எக்காரணம் கொண்டும் மதுபானசாலைகளை திறக்க அனுமதிக்க முடியாது எனவும், சட்டவிரோதமான மது உற்பத்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மதுவரித் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் கபில குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/142821

Link to comment
Share on other sites

2 மாவட்டங்களில் ஊரடங்கை தொடர்ந்து நீடிப்பதற்கு தீவிர ஆலோசனை?

திங்கட்கிழமை நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதற்கான சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்காவில் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் அபாயகரமான வலயமாக அறிவிக்கப்பட்டு அவற்றுக்கான ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் அதிலிருந்து யாழப்பாணம் மாவட்டம் விடுபட்டு ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

எனினும் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை தளர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

களுத்துறை, கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய 4 மாவட்டங்களில் புத்தளம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நிலைமை சற்று சீராகியிருக்கின்றது.

ஆகவே இந்த மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கை நீடிப்பதற்கு தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/142849?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

பல நாட்களுக்குப் பின்னர் புத்தளத்தில் பொலிஸ் ஊரடங்கு தளர்வு

In இலங்கை     May 11, 2020 6:19 am GMT     0 Comments     1283     by : Dhackshala

புத்தளம் மாவட்டத்தில் பல நாட்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், மாவட்டத்தின் பல நகரங்களில் குறைந்தளவிலான பொதுமக்களே வெளியிடங்களுக்கு வருகை தந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் வங்கிகள் மற்றும் மருந்தகங்களுக்கு முன்பாக பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றியதோடு, முக கவசம் அணிந்து வருகை தந்திருந்தனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் மார்ச் 23ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையைத் தொடர்ந்து மீண்டும் 24ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் பல மாவட்டங்களில் இடைக்கிடையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. எனினும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கொரோனோ வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இனங்கானப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை புத்தளம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Puttalam-3-428x285.jpg

Puttalam-2-428x285.jpg

Link to comment
Share on other sites

இன்றைய கொழும்பு நகரின் நிலைமை என்ன? வெளியான புகைப்படங்கள்

கொழும்பு,கம்பகா உள்ளிட்ட மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் 23 மாவட்டங்களில் இன்றையதினம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

எனினும் கொழும்பில் அரச அலுவலகங்கள் வழமைபோன்று செயற்பட்டன. அந்தவகையில் இன்றையதினம் கொழும்பின் நிலை தொடர்பில் வெளியான புகைப்படங்கள்

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/142973
Link to comment
Share on other sites

மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு; சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

ஸ்ரீலங்காவில் மே 16 ஆம் திகதி சனிக்கிழமை இரவு முதல் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுலுக்கு வரும் ஊடரங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது கொழும்பு கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் கடந்த 11 ஆம் திகதி தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி இரவு 8 மணிக்கு மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்கு தளரும்.

ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/143222?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது

Arrest.jpg

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்போது 245 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து கடந்த 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 53,547 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு இந்த காலகட்டத்தில் 14,333 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொழும்பு-மற்றும்-கம்பஹா/

Link to comment
Share on other sites

நாளை மறுதினம் கடுமையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்! பொலிஸார் எச்சரிக்கை

நாடு முழுவதும் நாளை மறுதினம் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நாளை மறுதினம் ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்று சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஊரடங்கு உத்தரவை மீறும் எவரையும் கைது செய்ய நாளை மறுதினம் நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

கொழும்பு மற்றும் கம்பாஹாவில் ஊரடங்கு உத்தரவு இன்னும் நடைமுறையில் இருப்பதால், அடுத்த வாரத்திலும் இந்த பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

பொலிஸார் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் சில இடங்களில் திடீர் சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த அதிகாரிகளுக்கு ஆதரவளிக்க மறுக்கும் எவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/special/01/246151?ref=home-imp-parsely

 

Link to comment
Share on other sites

ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிமுதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக கடந்த 11ஆம் திகதி திங்கள் ஆரம்பிக்கப்பட்ட நடைமுறைத் திட்டம் இன்று சனிக்கிழமை 8 வரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு பின்னர் 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும்.

முன்னர், வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.

http://athavannews.com/ஊரடங்கு-குறித்த-அறிவிப்ப/

Link to comment
Share on other sites

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தற்போது வெளியான தகவல்

ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் தற்போது கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த மாவட்டங்களில் தளரத்தப்பட்டுள்ளது.

எனினும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை நாடு தழுவிய ரீதியில் தினமும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143716?ref=rightsidebar

Link to comment
Share on other sites

நாடளாவிய ரீதியில் தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு - சற்றுமுன் வெளியான தகவல்

எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய் கிழமை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/143853

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.