Jump to content

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு


Recommended Posts

மக்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் யாருக்கு உண்டு? ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையில், மக்களின் வாழ்க்கைக்கு பாதகத்தை ஏற்படுத்த கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள பிரதேசங்களுக்கு அனுமதியில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டளைகள், ஊடரங்கு சட்டத்தினை அமுல் படுத்துவதற்கான பிதேசத்தை தெரிவு செய்தல் மற்றும் தனிமைப்படுத்துவதற்குரிய பிரதேசங்களின் பெயர்களை வெளியிடுதல் ஆகிய தீர்மானங்களை அரசாங்கத்தின் உயர்பீடமே தீர்மானிக்கும்.

அமுலில் காணப்படுகின்ற ஊரடங்கு உத்தரவின் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படவேண்டிய தேவைகள் காணப்படுமாயின் அதனை கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பணிக்குழுவின் வாயிலாகவே அறிவிக்கபடும்.

தவிர, பொது மக்களின் இயல்பான வாழக்கைக்கும் அவர்களுக்கான பாதகத் தன்மையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்வதற்கு வேறு எவருக்கும் அனுமதியில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140154?ref=imp-news

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

ஊரடங்கு உத்தரவு முதலாம் திகதி வரை நீடிக்கப்படும்

In இலங்கை     March 30, 2020 1:06 pm GMT     0 Comments     2014     by : Jeyachandran Vithushan

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிரந்தஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 01 ஆம் திகதி காலை 06 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவிப்பு வரும்வரை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இவை தவிர்ந்த 16 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டு மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஊரடங்கு-முதலாம்-திகதி-வர/

Link to comment
Share on other sites

உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் அழையுங்கள்…!

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் பிரதம அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • 0113456200
  • 0113456201
  • 0113456202
  • 0113456203
  • 0113456204

http://athavannews.com/உணவு-மற்றும்-மருத்துவம்/

Link to comment
Share on other sites

அசாதாரண சூழ்நிலையில் ஏற்படும் அசௌகரியங்கள்! வழங்கப்படவுள்ள விசேட பாஸ் நடைமுறை!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில், கடற்றொழில்சார் போக்குவரத்துக்களை மேற்கொள்வோரும் கடல்சார் உற்பத்திகளின் வியாபாரிகளும் தங்கள் பிரதேசங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரயல் வளத் திணைகளத்தின் உதவிப் பணிப்பாளரை அணுகி அவர்களின் சிபாரிசு கடிதத்தினைப் பெற்று அதனை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து போக்குவரத்து அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக கடற்றொழில் சமூகத்தினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று அமைச்சில் சம்ந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தீர்மானம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளரை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91

https://www.ibctamil.com/srilanka/80/140248

 

Link to comment
Share on other sites

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா -விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடைக்கிடையே தளர்த்துவதைத் தவிர்க்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் கொரோனாவின் ஆபத்து அதிகரிப்பதால் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஒழிப்பு தொடர்பில் சமூக இடைவௌி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.

"தற்போதைய நிலைமையில் வீடுகளுக்குள் மக்கள் இருப்பதே நூறு வீதம் நல்லது. அப்போதுதான் கொரோனா வைரஸை இந்த நாட்டிலிருந்து விரட்டலாம். மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்றடைவதை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நூறு வீதம் உறுதிப்படுத்த வேண்டும்" எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140268

Link to comment
Share on other sites

நாட்டில் இன்று தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதன்கிழமை(01.04.2020) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து ஏனைய எந்தவொரு தேவைக்காகவும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த சட்ட விரோதமானமுறையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

களுத்துறை மாவட்டத்தில் அட்டலுகம கிராமம் மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரணை கிராமம் என்பன முழுமையாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எந்த சந்தர்ப்பத்திலும் இவ்விரு கிராமங்களுக்கும் செல்வதோ அல்லது அந்த கிராமத்திலிருந்து வெளியேறுவதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140283?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதன்கிழமை(01.04.2020) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

 Bildergebnis für april+foolsஇன்று நான் செய்தி கேட்கா, வாசிக்கா விரதமிருக்க முடிவுசெய்தேன் ஆனாலும் யாழ்களம் காலை உதயமாகி, ஒரு நொடி என்னைப் பார்க்கவைத்துவிட்டது. 

Link to comment
Share on other sites

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!

In இலங்கை     April 2, 2020 7:18 am GMT     0 Comments     1283     by : Benitlas

வணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில்பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழியில் விடங்களை கையாள்வதற்காக பிரத்தியேகமாக பிரதிபொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பிலக்கங்களும் அவர்கள் கையாளும் விடயதானங்களும் வருமாறு,

மருந்தகங்கள் மற்றும் ஆய்வக சேவைகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர குமார – 0718592648

 

துறைமுகம், விமான நிலையம், கப்பற்போக்குவரத்து முகவர்கள்

பிரதி பொலிஸ்மா அதிபர் முடித்த புஸ்செல்ல – 0718592649

 

முதலீட்டு மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரசிறி – 0718592650

 

தமிழ் மொழி மூலம்

பிரதி பொலிஸ்மா அதிபர் நவாஸ் -071 859 18 62

http://athavannews.com/அவசர-தேவைகளை-தீர்ப்பதற்க/

Link to comment
Share on other sites

போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

In இலங்கை     April 3, 2020 4:06 am GMT     0 Comments     1453     by : Benitlas

அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அவசர நோய் நிலமை ஏற்பட்டால் எத்தகைய வாகனங்களிலும் செல்ல முடியும். இதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை.

பொலிஸாரினால் வழங்கப்படும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதுடன் இது தொடர்பாக புலனாய்வு பிரிவை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்படும்.

இதே போன்று அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும்“ எனத் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/போலி-ஆவணம்-சமர்ப்பிப்போர/

Link to comment
Share on other sites

வடகிழக்கு மக்களைப் புறக்கணித்த போர்குற்றவாளிகளின் சொறிலங்கா அரசின் புதிய நாடகம்?

வெளிவந்தது விசேட வர்த்தமானி

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி வெளியாகி உள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ள செயலணி குறித்து வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழித்துக்கட்டும்போது அதிக நெருக்கடியான நிலையில் உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அப்பிரதேசங்களுக்கு கிராமியப் பிரதேச மற்றும் உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் உணவு விநியோகம் உடனடியாக நுகர்வோருக்குப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் வாழ்க்கையை உரியவாறு நடாத்திச் செல்வதற்குத் தேவையான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதை வழிநடத்துதல், கூட்டிணைத்தல் மற்றும் தொடராய்வு செய்வதற்காக இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் முழு வடிவத்தை காண இங்கே அழுத்தவும்...

https://www.ibctamil.com/srilanka/80/140501?ref=imp-news

Link to comment
Share on other sites

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விசேட நடைமுறைகள்! தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்

பொலிஸ் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்து செல்லும் நோக்கில் தற்போது வாகனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுவொருபுறமிருக்க, கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 11 ஆயிரத்து 607 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் இரண்டாயிரத்து 878 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/140497?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார்.இல்லையென்றால், நிலைமை ஆபத்தாகலாம் எனத் தெரிவித்த அவர், இன்னும் இரண்டு வாரங்களுக்குள், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகலாமென்றும் எச்சரித்துள்ளார்.இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றானது குறிப்பிடத்தக்களவு மேலும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும்.மூன்று மாதங்களுக்கு நாடு முடக்கப்படுவது கடினம் எனில், குறைந்ததது ஒரு மாதத்திற்காவது ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இல்லை எனில் நிலைமை மோசமாகிவிடும் என மேலும் தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/நாடு-முழுவதும்-மூன்று-மா/

Link to comment
Share on other sites

54 minutes ago, கிருபன் said:

குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார்

 நேரத்துக்கு நேரம் ஆளுக்காள் ஒவ்வொன்றை சொல்லி பயப்படுத்துறாங்கள்!

Link to comment
Share on other sites

நாடு முழுவதுமாக முடக்கப்படாது அவ்வாறு வெளியான செய்திகள் வதந்தி

 

police-jaffna.jpg

நாடு முழுவதுமாக முடக்கப்படும் என்று வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தவறான தகவல்களை பரப்பியவர்கள் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/நாடு-முழுவதுமாக-முடக்கப்/

Link to comment
Share on other sites

19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு!

In இலங்கை     April 5, 2020 5:17 am GMT     0 Comments     3346     by : Benitlas

நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

http://athavannews.com/19-மாவட்டங்களில்-நாளை-தற்க/

Link to comment
Share on other sites

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

In இலங்கை     April 5, 2020 7:12 am GMT     0 Comments     1015     by : Benitlas

ஓய்வூதியம் பெறுவோருக்கான மருந்து கொள்வனவிற்காக மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.

நாளை(திங்கட்கிழமை) இவ்வாறு மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டாம் திகதியும், மூன்றாம் திகதியும் இதே காரணத்திற்காக மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாளை-மீண்டும்-திறக்கப்பட/

Link to comment
Share on other sites

19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது..!

In இலங்கை     April 6, 2020 2:35 am GMT     0 Comments     1239     by : Jeyachandran Vithushan

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி  மற்றும் யாழ்ப்பாணம்  உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை தளர்த்தப்பட்டது.

அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்ள வழங்கப்படும் காலத்தில் சுகாதார ஆலோசனைகளை  பின்பற்றி மக்கள் செயற்படுங்கள் என அரசாங்கம் அறிவுறுத்துகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுகொள்ள வேண்டும் என்பதற்காக ஊரடங்கு உத்தரவு 08 மணி நேரங்களுக்கு தளர்த்தப்படுகின்றது.

இதில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் தவிர்ந்து ஏனையே 19 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்க்கப்பட்டாலும் கூட ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்க முடியாது எனவும் அத்தியாவசிய தேவை தவிர்ந்து ஏனைய எந்தவொரு தேவைக்காகவும் எவரும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

அதனையும் மீறி எவரேனும் சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி அனுமதியையும் வழங்கியுள்ளார்.

http://athavannews.com/19-மாவட்டங்களில்-ஊரடங்கு-த/

Link to comment
Share on other sites

வவுனியாவில் ஊரடங்கு நீக்கப்பட்டவேளை நகரில் திரண்ட மக்கள்!

In இலங்கை     April 6, 2020 12:21 pm GMT     0 Comments     1094     by : Litharsan

Curfew-Released-Time-Vavuniya-Situation-Coronavirus-Alert-Situation-06042020.jpg

கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை வவுனியாவில் 6 மணிமுதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் நகர சபையினால் நகரை அண்டிய பகுதிகளில் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிகளவான மக்கள் இன்று (திங்கட்கிழமை) நகரை நோக்கி வருகைதந்திருந்தனர்.

இதேவேளை, பொலிஸாரினால் கொரோனா தொற்று நோய் தொடர்பாக துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டதோடு விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன் பல்பொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அத்துடன் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

மலையகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரங்களில் குவிந்த மக்கள்!

In இலங்கை     April 6, 2020 11:56 am GMT     0 Comments     1143     by : Litharsan

Curfew-Released-Time-Upcountry-Situation-Coronavirus-Alert-Situation-06042020-4-720x450.jpg

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று தற்காலிகமாகத் தளர்த்தப்பட்ட நேரத்தில் மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

ஏப்ரல் முதலாம் திகதி பிற்பகல் 2 மணி முதல் இன்று காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்ததால் அண்மைய நாட்களை விடவும் இன்று (திங்கட்கிழமை) சனக் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

சதொச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தியாவசியப் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்தனர்.

ஹற்றன், தலவாக்கலை, கொட்டகலை, பொகவந்தலாவ ஆகிய நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்ததுடன் பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதை காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தலவாக்கலை நகரில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பேணும் வகையில் மக்கள் நிற்கவேண்டிய இடங்கள் குறித்தொகுக்கப்பட்டிருந்ததுடன் வெள்ளை நிறத்தில் அடையாளம் இட்டுக்காட்டப்பட்டிருந்தது.

அதேவேளை, ஒரு சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விடவும் கூடுதல் தொகைக்கு பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

Curfew-Released-Time-Upcountry-Situation-Coronavirus-Alert-Situation-06042020.jpg

Curfew-Released-Time-Upcountry-Situation

Curfew-Released-Time-Upcountry-Situation

Curfew-Released-Time-Upcountry-Situation-Coronavirus-Alert-Situation-06042020-2.jpg

Curfew-Released-Time-Upcountry-Situation

Curfew-Released-Time-Upcountry-Situation

 

http://athavannews.com/மலையகத்தில்-ஊரடங்கு-தளர்/

Link to comment
Share on other sites

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு இதோ!

In இலங்கை     April 6, 2020 10:50 am GMT     0 Comments     2367     by : Jeyachandran Vithushan

19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 9 வியாழக்கிழமை மீண்டும் தளர்த்தப்பட்டு மீண்டும் அதே நாளில் மாலை 4 மணிக்கு  அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று பரவலைக் கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

இன்று ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கள் முதல் 10 ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியச் சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்கலை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலைத் தோட்டங்கள், ஏற்றுமதிப் பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்நுழைவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஊரடங்கு-தொடர்பான-அறிவிப-2/

Link to comment
Share on other sites

கிளிநொச்சி நகரில் அதிகளவில் ஒன்று கூடிய மக்கள்

இன்று(06) ஊரடங்கு 2 மணிவரை   தளர்த்தப்பட்ட போது கிளிநொச்சி நகரில் அதிகளவில் ஒன்று கூடிய மக்கள்.

படங்களை பார்த்தால் யுத்தம் வந்து இடம்பெயர்ந்து போவது போல உள்ளது.

படங்கள் - மு.தமிழ்செல்வன் 
FB_IMG_1586191761055.jpg
FB_IMG_1586191765222.jpg
FB_IMG_1586191769734.jpg
Link to comment
Share on other sites

ஊரடங்கு நேரத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் வங்கித்துறையினர் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஊரடங்கு சட்ட காலப் பகுதியில் பயணங்களை மேற்கொள்வதற்கு, உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பயன்படுத்த முடியும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாடாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்காவின் 25 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவக் கூடிய அபாயமுள்ள வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட கொழும்பு, களுத்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வடக்கிலுள்ள கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கிழக்கிலுள்ள மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டமானது குறித்த 19 மாவட்டங்களிலும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 6மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்குச் சட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டம் வெறிச்சோடி காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் திருகோணமலை நகர், மூதூர், சேருவில, கிண்ணியா, கந்தளாய், புல்மேட்டை உள்ளிட்ட நகரங்களிலுள்ள பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீதிகளில் நடமாடுவது மிகவும் குறைவாக காணப்படுகின்ற போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதி பெற்று வெளியில் செல்லக் கூடய சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

வைத்தியசாலைகள் இயங்குகின்ற போதிலும் ஒரு சிலர் மாத்திரம் சென்று மருந்துகளை பெற்றுக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

அரச அதிகாரிகள் மக்களுக்குரிய நிவாரண சேவைகளையும் சமூர்த்தி கொடுப்பனவுகளையும் நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றனர்.

இவற்றைவிட மாவட்டத்திலுள்ள பிரதான வீதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவும் எமது பிராந்தியச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

பொலிஸாரினால் வீதியால் செல்லுகின்ற வாகனங்கள் மற்றும் நபர்கள் நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் ஊடகத் துறையினர், வங்கித்துறையினர் உள்ளிட்டவர்கள் தமது பயணங்களை மேற்கொள்வதற்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முக்கியமான சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140740

Link to comment
Share on other sites

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி

கொரோனா அபாய வலயங்களாக குறிப்பிடப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல்வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு நாளை பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த மாவட்டங்களில், எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140816

Link to comment
Share on other sites

கிளிநொச்சியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டவேளை அதிரடி நடவடிக்கை! கையும் களவுமாக சிக்கிய வர்த்தகர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்றையதினம் (09-04-2020) விலைக் கட்டுப்பாட்டு பகுதியினர், பொலிஸ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக சில வர்த்தகர்கள் கையும் மெய்யுமாக பிடிப்பட்டுள்ளனர்.

இன்று காலை கிளிநொச்சி மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பகுதியினர், பொலிஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில மொத்த வியாபார நிலையங்களுக்கு தீடிரென சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இதன் போது பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களான பருப்பு, ரின் மீன், அரிசி போன்ற பொருட்கள் அடையாளம் காணப்பட்டதோடு, அதிகரித்த விலையில் பொருட்கள் விற்பனை செய்தமையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர். காலாவதியான பொருட்களும் பிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த வியாபாரி நிலையங்களின் உரிமையாளர்களிடம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை நியாய விலையில் விற்பனை செய்து தங்களது விற்பனைச் சிட்டை காண்பிக்கப்பட வேண்டும் என எழுத்து மூலம் உத்தரவாத கடிதம் பெறப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற நடவடிக்கையும் உட்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ச்சியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/140871

Link to comment
Share on other sites

மக்களே அவதானம் -நாளைமுதல் வருகிறது புதிய நடைமுறை

"ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளை மீறி மாவட்ட எல்லைகளைக் கடந்து செல்வோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்."

இவ்வாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாளை (10) முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளைக் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140893

Link to comment
Share on other sites

பொது மக்களின் நலன்கருதி ஊரடங்குச் சட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது.

அந்த வகையில், நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் நாளை முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் வேண்டுகளை அடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, முற்பகல் 9 மணி முதல் மாலை 5 மணி அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரத்தினை முறைகேடாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.