Jump to content

மகளின் வீட்டுக் கோடிக்குள் கொரோனா பயணிகள் கப்பல்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

   சிவனே என்று சுற்றித் திரிந்த இந்தக் கப்பல் கொரோனா தொற்று காரணமாக எங்கு கொண்டு போவது என்று கலிபோர்ணியா மாநிலமே விவாதித்துக் கொண்டிருந்தது.இந்த கப்பல் சன்பிரான்ஸ்சிஸ்கோவுக்கு அண்மையில் மிதப்பதால் அங்கேயே கட்டலாம் என்று ஒரு பகுதியினர்.இல்லை இல்லை விடமாட்டோம் என்று வேறு பலத்த குரல்கள்.

கடைசியில் சன்பிரான்ஸ்சிஸ்கோவில் கட்டாமல் ஓக்லண்ட் துறைமுகத்தில் கட்டலாம் என்று முடிவெடுத்தனர்.சரி இந்தத் துறைமுகம் எங்கே என்று பார்த்தால் மகளின் வீட்டு பின்பக்கம்.

இந்த துறைமுகம் தனியே கொள்கலன்கள் இறக்கி ஏற்றுமிடம்.தனித்தனியே இரண்டு மூன்று இடங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் இந்த துறைமுகத்துக்கு இரண்டே இரண்டு பாதைகள் தான் உள்ளன.ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் பாதையை மூடி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிகவும் சுலபம்.இந்த இடத்தை தெரிவு செய்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.தனியான பகுதி என்றபடியால் அங்கு வேலை செய்பவர்களையும் கொள்கலன்கள் ஏற்றி இறக்கும் பாரிய வாகனங்களையும் தவிர தேவையில்லாமல் வெளியார் யாருமே இந்த பகுதிக்குள் போகமாட்டார்கள்.

                             இந்த பகுதியை காபர்பார்க் என்று அழைப்பார்கள்.இந்த துறைமுகத்துக்கு நடுவில் சிறிய பூங்காவும்(பெயர் தான் ஆனால் அங்கு எதுவுமில்லை)விரிகுடா கரையோரமாக நடைபாதையும் இருக்கிறது.

                            நான் இங்கு நிற்கும் காலங்களில் 3 நிமிடம் கார் ஓட்டத்தில் போய் நிம்மதியாக சுத்தமான காற்று (ஆனால் குளிரும்)கப்பல்களில் சாமானுகள் ஏற்றி இறக்குவதை பார்த்துக் கொண்டே நடக்கப் போவேன்.வழமையில் மனைவியுடனே வருவேன்.எனவே இருவருமே இயற்கையை ரசித்தபடி நடப்போம்.இந்த தடவை தனியே நிற்பதனால் தனியே நடைதான்.

                           இந்த கப்பல் இங்கு கொண்டுவரப் போகிறார்கள் என்றதும் மகள் உடனே அப்பா காபர்பார்க்குக்கு தான் கொரோனா கப்பல் கொண்டு வாறாங்கள் இனிமேல் அந்தப் பக்கம் போகவேண்டாம் என்று உத்தரவும் போட்டுவிட்டா.அத்துடன் இப்ப தான் அப்பாவைக் கூப்பிட்டு வைத்திருக்க கொரோனா கப்பலைக் கொண்டு வந்து வீட்டுக்கு பக்கத்தில் கட்டப் போகிறார்கள் என்று அம்மாவுக்கு சொல்லி கவலைப்பட்டாவாம்.

                           3500 பேருடன் வந்த கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கொண்டு போய்விட்டனர்.இன்னமும் அந்தப் பக்கம் போகவில்லை.இன்று போகலாம் என்று எண்ணியுள்ளேன்.
                           கப்பல் வந்த நேரங்களிலேயே இதை எழுதுவோம் என்றால் பேரனால் முடியாமல் போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

கடைசியில் சன்பிரான்ஸ்சிஸ்கோவில் கட்டாமல் ஓக்லண்ட் துறைமுகத்தில் கட்டலாம் என்று முடிவெடுத்தனர்.சரி இந்தத் துறைமுகம் எங்கே என்று பார்த்தால் மகளின் வீட்டு பின்பக்கம்.

ஓக்லாண்ட் காரர் என்ன கொக்கா எண்டு ஒரு போராட்டத்தை தொடங்குங்கோ...

நடுகடடில கொண்டுபோய் மிதக்க விடலாம் தானே.

கப்பல் பார்க்கப் போறன் எண்டு கிளம்பி விடாதீங்கோ😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிய போகாமல் வீட்டுக்க இருங்கோ. என்னையும் பிள்ளைகள் வெளிய போக விடாமல் பத்திரமா வீட்டுக்குள்ள இருங்கோ என்று இருத்தி வைத்திருக்கினம். வீட்டுக்க சும்மா இருக்க ஏலுமா? தினமும் விதவிதமா சமையல் நடக்குது. இடைப்பட்ட நேரத்தில பிள்ளைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சியும் செய்யிறம். யாழையும் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்குது.எதற்கும் தேவையில்லாமல் வெளியே போகாமல் இருப்பது எமக்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோணா வாரண்டால் துறைமுகத்தில் இருக்கும் கப்பலால் மட்டும் வராது ...சுப்ப மார்கெட்  போனாலும் வரும் ...வீட்டுக்குள்ள இருங்கோ ...வீட்டை சுத்தி நடவுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ளதை எழுதியதன் பின் முதல்முறையாக அந்த இடத்துக்கு நடந்து போனேன்.கூட தூரம் வரும் என்று நினைத்து நடந்தால் சரியாக 2 மைல் தான்.போகவர 4 மைல் தூரம்.இது சாதாரணமாக நடக்கிறபடியால் பெரிய தூரமாக இல்லை.

E9-FCC8-B4-8264-4-AFD-BDB5-AB47469052-DC

நடந்த தூரம்

4-B434-AC2-8-E8-A-48-EF-BE2-D-CCFC809-B1

ஓக்லண்ட் கரையில் இருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோ கரை.

767-BFC01-1-C52-40-B0-8549-9-AC030-EEB00

6176-A758-D1-A3-4-B57-8-FC1-5478-C9916-C

9-ECDD55-B-835-D-4-ADC-A041-E76-B4-F6-F2

C11-F1638-1-D31-4-E9-C-B1-A6-736793-BF02

துறைமுகங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஓக்லாண்ட் காரர் என்ன கொக்கா எண்டு ஒரு போராட்டத்தை தொடங்குங்கோ...

நடுகடடில கொண்டுபோய் மிதக்க விடலாம் தானே.

கப்பல் பார்க்கப் போறன் எண்டு கிளம்பி விடாதீங்கோ😁

ஆளைஆளை கண்டா தூர ஓடும் நேரத்தில் போராட்டமா?

நாதம் இது நடந்து 10 நாளாகி விட்டது.
வெறும் கப்பலும் புறப்பட்டு 2 நாளாகி விட்டது.
எனக்கு இப்போ தான் நேரம் கிடைத்தபடியால் பதிகிறேன்.

1 hour ago, Kavallur Kanmani said:

வெளிய போகாமல் வீட்டுக்க இருங்கோ. என்னையும் பிள்ளைகள் வெளிய போக விடாமல் பத்திரமா வீட்டுக்குள்ள இருங்கோ என்று இருத்தி வைத்திருக்கினம். வீட்டுக்க சும்மா இருக்க ஏலுமா? தினமும் விதவிதமா சமையல் நடக்குது. இடைப்பட்ட நேரத்தில பிள்ளைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சியும் செய்யிறம். யாழையும் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்குது.எதற்கும் தேவையில்லாமல் வெளியே போகாமல் இருப்பது எமக்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு.

உண்மை தான் வயது போனநேரம் கவனம் தேவை.நடையைத் தவிர வேறு தேவைகளுக்காக வெளியே போவது கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

கொரோணா வாரண்டால் துறைமுகத்தில் இருக்கும் கப்பலால் மட்டும் வராது ...சுப்ப மார்கெட்  போனாலும் வரும் ...வீட்டுக்குள்ள இருங்கோ ...வீட்டை சுத்தி நடவுங்கோ 

இப்போ அனேகமா வீட்டைச் சுற்றி தான் நடக்கிறது.
ஆனாலும் எனக்கு அதில் திருப்தி இல்லை ஏனென்றால் நீட்டுக்கு 2-3 மைல் நடந்தால் திரும்பவும் அதே தூரத்தை நடந்தே ஆக வேண்டும்.
வீட்டைச் சுற்றி நடந்தால் 3-4 தரம் நடக்க களவு வந்திடும்.இதை எத்தனையோ தடவை முயற்சி செய்தும் முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

..உண்மை தான் வயது போனநேரம் கவனம் தேவை.நடையைத் தவிர வேறு தேவைகளுக்காக வெளியே போவது கிடையாது.

வயசுப் போச்சா..? மெய்யாலுமா..??

பேச்சைப் பார்த்தால் அப்படி தெரியலையே..?  vil-happy.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

வயசுப் போச்சா..? மெய்யாலுமா..??

பேச்சைப் பார்த்தால் அப்படி தெரியலையே..?  vil-happy.gif

எனக்கு ஒரு அடி இரண்டு அடி பின்னால் நீங்க இருக்கிறீங்க அந்த தைரியம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் வீட்டிலேயே இருங்கள் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு ஒரு அடி இரண்டு அடி பின்னால் நீங்க இருக்கிறீங்க அந்த தைரியம் தான்.

கொரோனா வந்தால் தாக்குப்பிடிக்கமாட்டியள்.வீட்டுக்குள்ளேயே இருங்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வீட்டுக்கு வெளியில கடிதம் எடுக்கவும் போக விடுறாங்கள் இல்லை. யூரோப் முழுக்க இருந்து கொண்ட்ரோல் பண்ணுறாங்கள்......!  😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4-B434-AC2-8-E8-A-48-EF-BE2-D-CCFC809-B1

வீட்டிலிருந்து துறைமுகத்துக்கு நடந்து போய்வந்த படம்.

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதற்கும் வீட்டிலேயே இருங்கள் அண்ணா.

சகோதரி
நான் தனியே வெளியே போகாமல் இருப்தால் மட்டும் கொரோனாவிலிருந்து தப்ப முடியாது.

ஒவ்வொரு நாளும் கொஞ்சமாக நடப்பது.அவ்வளவு தான் வெளியுலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

கொரோனா வந்தால் தாக்குப்பிடிக்கமாட்டியள்.வீட்டுக்குள்ளேயே இருங்க....

6 hours ago, suvy said:

என்னை வீட்டுக்கு வெளியில கடிதம் எடுக்கவும் போக விடுறாங்கள் இல்லை. யூரோப் முழுக்க இருந்து கொண்ட்ரோல் பண்ணுறாங்கள்......!  😐

நானும் கவனமாக இருக்கிறேன்.

நீங்களிருவரும் கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி.இன்னும் கவனமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

   3500 பேருடன் வந்த கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கொண்டு போய்விட்டனர்.இன்னமும் அந்தப் பக்கம் போகவில்லை.இன்று போகலாம் என்று எண்ணியுள்ளேன்.
                        கவனமாய் இருங்கள் அண்ணா. அந்தக் கப்பல் ஆட்களுடனேயே சென்றுவிட்டதா? அல்லது கொரானா வந்த  ஆட்களை இறக்கி விட்டுள்ளார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜெகதா துரை said:

3500 பேருடன் வந்த கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கொண்டு போய்விட்டனர்.இன்னமும் அந்தப் பக்கம் போகவில்லை.இன்று போகலாம் என்று எண்ணியுள்ளேன்.
                        கவனமாய் இருங்கள் அண்ணா. அந்தக் கப்பல் ஆட்களுடனேயே சென்றுவிட்டதா? அல்லது கொரானா வந்த  ஆட்களை இறக்கி விட்டுள்ளார்களா?

வணக்கம் சகோதரி
3500 பேருடன்(வேலையாட்களும் சேர்த்து 1200)சன்பிரான்ஸ்சிஸ்கோவை நோக்கி வரும் போது ஏற்கனவே 10-20 பேர்வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மிகுதி பேரையும் உடனே அப்புறப்படுத்த தொடங்கினார்கள்.
    ஆனால் நடுக்கடலில் வைத்து செய்ய முடியாதென்பதால் சன்பிரான்ஸ்சிஸ்கோ துறைமுகங்களில் வைத்து செய்ய யோசித்தார்கள்.பாதுகாப்பு குறைபாடுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் என்பதால் இந்த பகுதி தவிர்க்கப்பட்டு ஓக்லண் குடா தெரிவாகியது.
     கப்பல் நின்ற இடத்திலிருந்து ஓக்லண்ட் பகுதிக்கு வர இரண்டு நாள் எடுத்தது.

அதற்கிடையில் யார்யாரை எப்படி இறக்கி எங்கு கொண்டு போவது என்று திட்டங்கள் வகுத்து பாதுகாப்பு படைகளின் முகாம்களுக்குள் 5 நாட்களாக ஏற்றி இறக்கிவிட்டனர்.
 3 நாட்களுக்கு முன் வெறும் கப்பலை எங்கோ நகர்த்திவிட்டனர்.
       மகளின் வீட்டிலிருந்து நடந்து போய்வந்த பாதையை போட்டிருந்தேன் பார்க்கலாம்.

Dropped pin
Near San Francisco Bay, California
https://goo.gl/maps/X2pvoFx4XZyNNtnM6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி அண்ணா
உங்கள் பாதுகாப்புதான் முதலிடத்தில் இருக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

பதிவிற்கு நன்றி அண்ணா
உங்கள் பாதுகாப்புதான் முதலிடத்தில் இருக்கவேண்டும்

நன்றி வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாத்தியார் said:

பதிவிற்கு நன்றி அண்ணா
உங்கள் பாதுகாப்புதான் முதலிடத்தில் இருக்கவேண்டும்

உண்மை. கள உறவுகள் சொல்வதுபோல் பாதுகாப்பாக இருங்கள். உடலையும் நகர்த்தாது இருப்பதும் கூடாது. கூடியவரை வெளியாட்களின் தொடர்பின்றி இருப்பதே இன்றறைய  சூழலுக்குச் சரியானனது.

Link to comment
Share on other sites

On 3/22/2020 at 4:55 AM, ஈழப்பிரியன் said:

 3500 பேருடன் வந்த கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கொண்டு போய்விட்டனர்.இன்னமும் அந்தப் பக்கம் போகவில்லை.இன்று போகலாம் என்று எண்ணியுள்ளேன்.

ஈழப்பிரியன் அண்ணை, உடனே அந்த இடத்துக்குப் போய்ப் பார்த்துவிடவேணும் என்ற ஆர்வக்கோளாறு வருவது யாருக்கும் இயல்பே. அங்கே போய்க் கொரோனாவையா பார்க்கப்போறீங்கள்! அதிக அபாயம் நிறைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

உண்மை. கள உறவுகள் சொல்வதுபோல் பாதுகாப்பாக இருங்கள். உடலையும் நகர்த்தாது இருப்பதும் கூடாது. கூடியவரை வெளியாட்களின் தொடர்பின்றி இருப்பதே இன்றறைய  சூழலுக்குச் சரியானனது.

7 minutes ago, மல்லிகை வாசம் said:

ஈழப்பிரியன் அண்ணை, உடனே அந்த இடத்துக்குப் போய்ப் பார்த்துவிடவேணும் என்ற ஆர்வக்கோளாறு வருவது யாருக்கும் இயல்பே. அங்கே போய்க் கொரோனாவையா பார்க்கப்போறீங்கள்! அதிக அபாயம் நிறைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்.

நொச்சி மல்லிகைவாசம் மிகவும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அதற்கிடையில் யார்யாரை எப்படி இறக்கி எங்கு கொண்டு போவது என்று திட்டங்கள் வகுத்து பாதுகாப்பு படைகளின் முகாம்களுக்குள் 5 நாட்களாக ஏற்றி இறக்கிவிட்டனர்.
 3 நாட்களுக்கு முன் வெறும் கப்பலை எங்கோ நகர்த்திவிட்டனர்.

ஈழப்பிரியன்,  தலைக்கு வந்தது.... தலைப்  பாகையுடன் போச்சுது  என நினையுங்கள்.
அந்தக் கப்பலை அங்கு நிறுத்தி  வைத்து... வைத்தியம் பார்க்காமல், 
இருந்தார்களே... என சந்தோசப் படுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்,  தலைக்கு வந்தது.... தலைப்  பாகையுடன் போச்சுது  என நினையுங்கள்.
அந்தக் கப்பலை அங்கு நிறுத்தி  வைத்து... வைத்தியம் பார்க்காமல், 
இருந்தார்களே... என சந்தோசப் படுங்கள்.

அதே கப்பலில் வைத்து வைத்தியம் செய்திருந்தால் கூண்டோடு காலி.

என்னடா இந்தத்திரியை காணவில்லையே என்று தேடினால்

அகவை 22 இல் இருந்து

வாழும் புலத்துக்கு மாற்றி கிடக்கு.

யார் செய்த வேலையா இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2020 at 3:49 AM, ஈழப்பிரியன் said:

அதே கப்பலில் வைத்து வைத்தியம் செய்திருந்தால் கூண்டோடு காலி.

என்னடா இந்தத்திரியை காணவில்லையே என்று தேடினால்

அகவை 22 இல் இருந்து

வாழும் புலத்துக்கு மாற்றி கிடக்கு.

யார் செய்த வேலையா இருக்கும்?

அதை ஏன் பேசுவான் எல்லையள் கோடுகள் இடங்கள் மாத்தினதாலை வெட்டுகொத்து எல்லாமே நடந்து முடிஞ்சிருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.