Jump to content

கொரோனாவால் விளைந்த எதிர்பாராத நல்ல விடயங்கள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் விளைந்த எதிர்பாராத நல்ல விடயங்கள் !

கண்ணுக்குத் தெரியா கொரோனா எம்மை கஷ்டப்படுத்தினாலும் பூமிக்கு சில நன்மையையும் செய்தே இருக்கிறது.

உலகெங்கும் வாகன ஓட்டம் குறைந்து வாகனப்புகை, CO2  மற்றும் CO வெளியேற்றம் குறைந்து வருகிறது. உலகளாவிய ரீதியில் வாகன விபத்தும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது. தொழிற்சாலை இயக்கம் குறைந்து அதனால் ஏற்படும் சூழல் மாசும் குறைந்து வருகிறது. 

பல இடங்களில் நீர்நிலைகள், நதிகள், ஓடைகள் சுத்தமாகி வருகின்றன, காற்றின் தரமும் அதிகரிக்கிறது. இனிவரும் நாட்களில் நீரிலும் நிலத்திலும் வாழும் ஏனைய உயிரினங்களின் வாழிடங்களும் மேம்பட இடமுண்டு.  

மனித உருவில் திரியும் சில மிருகங்களின் நடமாட்டம், வேட்டையாடல் குறைந்து காட்டுவிலங்குகளின் தொகைகளும் அதிகரிக்கக் கூடும். 

மனித நடமாட்டம், வாகனப் பாவனை, மனிதச் செயற்பாடுகள் மற்றும் தொழிற்சாலை இயக்கங்கள் குறைந்துவிட்ட இந்த நிலையில் இவ்வாறான சாதகமான மாற்றங்கள் ஏற்படுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. 

அதேநேரம் இத்தனை நாட்கள் மனிதர்களாகிய எம் செயற்பாடுகள்தான் எமது சூழலை நாசம் பண்ணியிருக்கிறோம் என்ற உண்மையும் எங்கள் முகத்தில் அறைகிறது.

இப்படியே இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் போனால் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு சூழல் வெப்பமாதலும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம். காற்று மாசினால் பாதிக்கப்பட்ட நகரங்கள் கொஞ்ச நாளைக்கு நிம்மதிப் பெருமூச்சு விடமுடியும். 

இன்னொரு விதத்தில் சொன்னால் பூமி தன்னைத் தானே புதிப்பித்துக் கொள்ளப்போகிறது. ஆனால் மனிதனின் பேராசை மறுபடியும் இதை நாசம் செய்யாதிருக்க வேண்டுமே.

மறுபுறத்தில் நிறுவனங்கள் தற்போது தமது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்ததன் மூலம் எதிர்காலத்தில் ஊழியர்களின் கடமைகளைப் பொறுத்து பலரை வாரத்தில் ஓரிரு நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிப்பதைப்பற்றி தீவிரமாக ஆராயப் போகின்றன. சில நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தவும் போகின்றன.

சில நிறுவனங்கள் தாம் இதுவரை onlineஇல் வழங்காத சேவைகளையும் onlineஇலும் தொலைபேசி மூலமும் வழங்கப் பழகுகின்றன. அவை இனிவரும் நாட்களில் நிரந்தரமுறையாகவும் மாறலாம்.

மக்கள் தங்களைத் தனிமைப்படுத்துவதன் காரணமாக தேவையற்ற பயணங்கள் அடிக்கடி அனாவசியமாக கடைகளுக்குப் போதல் போன்றவற்றைத் தவிர்த்து வருவதால் இனிவரும் நாட்களில் இதுவே மக்களிடையே நல்ல செலவும் பழக்கம் (Consumption Behaviour) ஏற்பட்டு தேவையற்று பொருள் வாங்குவதும் குறைந்து போகலாம்.

அனைத்து பொருள்களுக்கும் சீனாவில் தங்கியிருந்தது போய் சில நாடுகள் தமக்கு தேவையான பல பொருட்களைத் தாமே உற்பத்தி செய்யலாமா என்ற எண்ணம் தீவிரமடைகிறது.

இவ்வாறான தொற்றுநோய் ஏற்படின் அதைச் சமாளிக்க உள்ள தமது நாட்டின் உட்கட்டமைப்பின் பலம் பலவீனங்களை ஒவ்வொரு நாடும் சுயமதிப்பீடு செய்ய முடிந்துள்ளது. 

இதனால் இனிவரும் நாட்களில் பலநாடுகள் தமது பலவீனங்களைக் களைந்து தமது உட்கட்டமைப்பை வலுப்படுத்த சந்தர்ப்பமுள்ளது. 

சமூகத்தில் திருட்டு கத்திக்குத்து போன்ற குற்றங்களும் கணிசமாகக் குறைந்துள்ளது. 

இவ்வளவும் ஏன்? தொட்டால் நோய் வருமோ என்ற பயத்திலேயே பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும் சேட்டைகளும் கொஞ்சம் குறையலாம்.. அரசும் சட்டமும் செய்யமுடியாததை இப்போது ஒரு வைரஸ் செய்கிறது. 

எவர் குற்றியும் அரிசி கிடைத்தால் மகிழ்ச்சிதான்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.........
வானத்தில் விமானங்களை காணவில்லை.
வீதியில் வாகன  இரைச்சல்கள் கேட்கவில்லை.
மக்கள் நெரிசல்களை காணவில்லை. 
விலங்கு பறவைகளின் அலறல்கள் கேட்கவில்லை.
நீரோடைகள் தெளிந்த நீரோடைகளாக தெரிகின்றது.
இயற்கை தன்னை சுதாகரித்து கொள்ளட்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2020 at 8:49 PM, கிருபன் said:

எவர் குற்றியும் அரிசி கிடைத்தால் மகிழ்ச்சிதான்!

பக்கத்து வீட்டுக்காரனுக்கு தானே பாடை கட்டுகிறான் நாம் மாத்திரம் நல்ல பூமியில் வாழ்ந்து விட்டுப் போவேம் அடடா என்ன சிந்தனை என்ன சிந்தனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, uthayakumar said:

பக்கத்து வீட்டுக்காரனுக்கு தானே பாடை கட்டுகிறான் நாம் மாத்திரம் நல்ல பூமியில் வாழ்ந்து விட்டுப் போவேம் அடடா என்ன சிந்தனை என்ன சிந்தனை.

கொரோனா நம்மை அண்டாது என்றுதானே பலர் நினைக்கின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

கொரோனா நம்மை அண்டாது என்றுதானே பலர் நினைக்கின்றார்கள்!

அந்தத் துணிவில் தானே அரசு போடும் சட்டம்களையும் உதறித்தள்ளிவிட்டு 
எந்த சமூகப் பொறுப்பும் இன்றி பலர் நடக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரை எழுதியது யார் கிருபனா? சொல்லபட்டவை உண்மை.
ஆடம்பர சாமத்தியசடங்கு கொண்டாட்டங்கள் பிறந்ததின கொண்டாட்டங்களும் நிறுத்தபட்டுவிட்டன 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்த கட்டுரை எழுதியது யார் கிருபனா? சொல்லபட்டவை உண்மை.

இல்லை. எனது நண்பர் ஒருவர் அக்கம்-பக்கம் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.  அதில் நானும் எழுதுவதுண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்புடியே போனா இன்னும் கொஞ்ச நாளையில மரக்கறி இறச்சி அரிசிக்கு சிங்கி அடிக்கவேண்டித்தான் வரும்போல..

 

விவசாயத்தை இறக்குமதி செய்யலாம் காரையும் பிளைட்டையும் ஆய்தங்களையும் இயந்திரங்களையும் உற்பத்திசெய்து பெருஞ்செல்வந்த நாடுகளாக இருப்பம் எண்டு சொன்ன ஜரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகள் விவசாயத்துக்கு மக்களை அழைக்கின்றன

 

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி போல மேக் இன் இந்தியா எண்டு குறுகியகாலத்தில பொருளாதாரத்தை அதிகரிக்க இந்தியா விவசாயிகளை சாகவிட்டிச்சு..

 

இனிமேல் சீமான் சொன்னதுதான்..!

 

3ஜீ 4ஜீ 5ஜீ என்ன 7ஜீயே வரட்டும் கஞ்சிக்கு என்ன செய்வாய் ராஜா..?

 

24 மணித்தியாலமும் கோட்டப்போட்டுக்கொண்டு நீ மேல விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் கொட்டிக்க சோறு கீழ பூமியில இருந்துதான் ராஜா வரணும்..

 

ஆடுமாடு விவசாயத்தை அரச தொழிலாக்கணும்னு நான் சொன்னப்ப கவட்டுக்க சிரிச்சியே.. இப்ப பாரு நிலமையை.. வாய்ப்பில்லை ராஜா..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உண்மைதான்.........
வானத்தில் விமானங்களை காணவில்லை.
வீதியில் வாகன  இரைச்சல்கள் கேட்கவில்லை.
மக்கள் நெரிசல்களை காணவில்லை. 
விலங்கு பறவைகளின் அலறல்கள் கேட்கவில்லை.
நீரோடைகள் தெளிந்த நீரோடைகளாக தெரிகின்றது.
இயற்கை தன்னை சுதாகரித்து கொள்ளட்டும்.
 

எங்கட பக்கம் இன்னும் வாகன நெரிசலாயத் தான் இருக்கு ...அடங்குதுகளே இல்லை ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

எங்கட பக்கம் இன்னும் வாகன நெரிசலாயத் தான் இருக்கு ...அடங்குதுகளே இல்லை ..

 

இத்தாலி போல் றோட்டிலை கொர்னோ  கடிச்ச்சு நாலைன்சு  விழ  எல்லாம் அடங்குங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்புடியே போனா இன்னும் கொஞ்ச நாளையில மரக்கறி இறச்சி அரிசிக்கு சிங்கி அடிக்கவேண்டித்தான் வரும்போல..

ஆடுமாடு விவசாயத்தை அரச தொழிலாக்கணும்னு நான் சொன்னப்ப கவட்டுக்க சிரிச்சியே.. இப்ப பாரு நிலமையை.. வாய்ப்பில்லை ராஜா..

 

நல்லவிடயங்கள் நடக்கின்றன. சிறு வீட்டுத் தோட்டம் நல்லதொரு வழி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.