Sign in to follow this  
Sasi_varnam

அவனவன் கவலை ... கொரோனா கட்டளை

Recommended Posts

இன்று நல்லூரடியில் காலையில் அண்ணனின் மகனுக்கு திருமணம்.
கடந்த 2 மாதங்களாக ஓடி திரிந்து எல்லா அலுவல்களை முடித்து , பட்டு முதல் பாட்டு வரை தெரிவும் செய்து 
முருக்கமரம் நட்டு, பொன்னும் உருக்கி, விரதம் இருந்து, மேக்கப் வரை போன நேரத்தில் வந்தது இந்த கொரோனா ஊரடங்கு.
கல்யாண மண்டபத்தில் தொங்கிய இரண்டு வாழைத்தாரும் இப்போ வீட்டில் தொங்குது..
பெண் வீட்டில் இருந்து 10 பேர், பையன் வீட்டில் இருந்து 10 பேர் ஆகா மொத்தம் 20 பேர் கூட கல்யாணம் நடத்தலாம் என்று உத்தரவு. பெண் வீட்டு அழைப்புக்கு வண்டியோடு செல்ல விசேஷ அனுமதி.
வேலிகளுக்குள்ளாகவும், ஒழுங்கைகளுக்குள்ளாகவும் இன்னும் ஒரு ஐந்தோ, ஆறோ குடும்பங்கள் வந்து சேர வாய்ப்புண்டு. 
வாங்கின நல்ல சாரி, நகைகளை போட முடியவில்லையே என்று பெண்களுக்கு மனஅவஸ்தை.
கொடுத்த காசுகளை மீள மெய்யாக, அன்பளிப்பாக வசூலிக்க முடியவில்லையே என்று சிலருக்கு கவலை,
முறுக்கு, சீனிப்பணியாரம், பருத்தித்துறை வடை, மிக்ஸர், பத்து கறி வகைகளோடு வகையான சாப்பாடு, மோர், பாயசம் இல்லையே என்று சிலருக்கு கவலை. 
முதல் இரவு...நட்சத்திர ஹோட்டல், தனிமை கிடைக்குமா இல்லையா ...இது அவர்கள் சார்பாக எனது கவலை .

Edited by Sasi_varnam

Share this post


Link to post
Share on other sites

விடுங்க தோழர்.. சில நன்மைகளும் உண்டு.👌

hqdefault.jpg

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this