Kadancha

கொரோனா - சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைக, சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து

Recommended Posts

சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.

 

ஆங்கில ஒலி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஏதும் பிரச்னை இருந்தாலும், மற்றும் ஆங்கிலம் எவருக்கேனும் புரியாமல் இருந்தாலும் போன்றே காரணங்களினால், ஒலி வடிவத்தின் மொழி பெயர்ப்பு பின்வருமாறு:

 

 

 

1) இந்த வைரை சுவாசக் கால்வாயை தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைகிறது.

2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதத்திற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு எண்ணுக்கணக்கிலான நாட்கள் தேவை.

கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:

1) சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள் - தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓர் முறடு வெந்நீரை உள்கொள்வது வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக்கு கால்வாய் வழியாக கழுவி வயிற்ற்றை அடைந்து சமிபாடு தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise)

2)  இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும்,  உப்பு அல்லது எலுமிச்சம் சாறு  அல்லது வினிகர் தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle)

3) covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தனமாய் உள்ளது. எந்த சவர்க்காரமமும் அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக்  கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்தில் தொடாமலும், இருக்காமலும், நேரடியாக குளியல்  செய்யுங்கள்  அல்லது தோயுங்கள்.

4) நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், சூரிய வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக்  கூடியது.     

5) உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள்.   ஏனெனில், உலோக  தொடுப்பரப்புக்களில் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.

6) கைபிடி  சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கன முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி  சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.

7) புகை பிடிப்பதை தவிருங்கள்.

😎 உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்கரத்தினால் 20 நொடி கழுவுங்கள்.

9)  மரக்கறி மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விற்றமின் C மாத்திரமின்றி, உங்கள் நாக தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய அல்லது கூட்டக்கூடியதாக இருக்கும் வழிமுறைகளை கையாளுங்கள்.

10) மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.

11) இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.

12) எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கன அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறியவற்றின் மூலம்    தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

13)    covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய படிமுறைகள் மூலம்  எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

14) உங்களில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Edited by Kadancha
add info.
  • Like 2
  • Thanks 5

Share this post


Link to post
Share on other sites

ஆங்கில ஒலி வடிவம் இணைக்கப்பட்டும், நான் எதிர்பார்த்தது போன்றே அது தளத்தில் ஏற்றுப்படவில்லை.

Share this post


Link to post
Share on other sites

பதிவுக்கு நன்றி. நல்ல தகவல்கள் 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Kadancha said:

ஆங்கில ஒலி வடிவம் இணைக்கப்பட்டும், நான் எதிர்பார்த்தது போன்றே அது தளத்தில் ஏற்றுப்படவில்லை.

கடஞ்சா.... நீங்கள் எழுதிய அழகிய தமிழ் வடிவம் இருக்கும் போது, 
ஆங்கிலம் இணைக்கப்படவில்லை என்று கவலைப் படாதீர்கள். நன்றி.  

Share this post


Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி கடஞ்சா......!  👍

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு  நன்றி.👍

Share this post


Link to post
Share on other sites

எனக்கென்னவோ நாட்டிற்கு நாடு வித்தியாசப்படுகின்றது என தோன்றுகின்றது.

பொதுவாக குளிரான தேசங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவும் என்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உண்டு, 


இன்றும் குளிரான கனடாவில், அதிக மக்கள் வாழும் ஒன்ராறியோவில், நேற்றும் கோவிட்டால் பாதிக்கப்பட்டோர் குறைய ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களும் நோயால் தாக்கத்திற்கு உள்ளவர்கள் குறைந்தால், ஓரளவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என கருத்தலாமாம்.     

https://www.680news.com/2020/03/22/new-coronavirus-cases/

Share this post


Link to post
Share on other sites

 

 

 

Share this post


Link to post
Share on other sites

கனடாவிற்கு சார்ஸ் ஐ எதிர் கொண்ட அனுபவம் இதில் உதவி இருக்கிறது.

சார்ஸ் வந்தபோது, canada சார்ஸ் அறிகுறி உள்ளவர்களை நகரை அண்டி இருந்த வைத்திய சாலைகள் மற்றும் நிலையங்களில் சோதித்தது மற்றும் சிகிச்சை அளித்தது.

இதுவே விழிப்புணர்வு வரும் வரையில் சார்ஸ் பரவியதற்கான மிக முக்கியமான கரணம் என்பதை கனடா மருத்துவ துறை MODELING ஆல் ஊகித்தது.

இதில் கனடா கற்றது என்னவென்றால், நோய் அறிகுறி உள்ளவர்களை நகரில்  இருந்து அல்லது சனத்தொகை செறிவான மற்றும் புழங்க கூடிய இடங்களில் இருந்து  ஒதுக்கு புறமாக இருக்கும் வைத்திய சாலைகள் மற்றும் நிலையங்களில் சோதித்தது மற்றும் சிகிச்சை அளிப்பது, பரவலை தடுப்பதில் மிகக் கூடிய பங்கு வகிக்கிறது என்பது.

ஓர் விதத்தில் இதுவும் தனிமைப்படுத்துதல் தான்.    

இப்பொது கனடா இதை, மேலும் ஓர் படி சென்று, ஒதுக்கு புறமாக இருக்கும் வைத்திய சாலைகள் மற்றும் நிலையங்களையும் தனிமைப் படுத்தி சோதித்தது மற்றும் சிகிச்சை அளிப்பது நடந்திருக்கிறது என்றே என்ன வேண்டி உள்ளது.

 

11 hours ago, ampanai said:

எனக்கென்னவோ நாட்டிற்கு நாடு வித்தியாசப்படுகின்றது என தோன்றுகின்றது.

பொதுவாக குளிரான தேசங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவும் என்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உண்டு, 


இன்றும் குளிரான கனடாவில், அதிக மக்கள் வாழும் ஒன்ராறியோவில், நேற்றும் கோவிட்டால் பாதிக்கப்பட்டோர் குறைய ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களும் நோயால் தாக்கத்திற்கு உள்ளவர்கள் குறைந்தால், ஓரளவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என கருத்தலாமாம்.     

https://www.680news.com/2020/03/22/new-coronavirus-cases/

 

Share this post


Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி கடன்சா. :100_pray:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.