Jump to content

விலைகளை உயர்த்தும் எம்மவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சனம் அணுகுண்டு வெடிச்சாலும் திருந்தாதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானா வந்தவுடன்..கூட்டிச் சம்பாதித்த காசுமில்லை சொந்தமும் இல்லை ..அனாதையாய் மஞ்சள்  பையில் போட்டபடி போய்ச் சேரவேண்டியதுதான்...

Link to comment
Share on other sites

நோய்த் தொற்றுக்கு பயந்து சனம் அவதிப் படும் நேரத்தில் இப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமில்லை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.  ஒரே அளவு அரிசியின் விலையை இரண்டு மடங்காக்கியிருக்கிறாங்கள். 

Link to comment
Share on other sites

விலைகளை உயர்த்த கடை உரிமையாளருக்கு உரிமை உண்டு. ( முதலாளித்துவம் முதல் , மனிதாபினம் பின்னர்). அதேவேளை, அந்த கடைகளை தவிர்த்து வேறு கடைகளை நாடும் வசதிகளும் இங்கு உண்டு.  

மறுபக்கம், விலையை கூட்டாமல் வைத்தால், நுகர்வோர்களோ எல்லாவற்றையும் வழித்து துடைக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு வீடியோ வந்தது. ஒரு கருப்பு இனத்தவர்... ஒரு சிறிய அங்காடியில் டாய்லட் ரோல் 4 கொண்ட பாக்கெட்டினைக் கொண்டு போய் டில்லில் வைக்கிறார். £9.99 என்கிறார். காசாளர். 

என்னது... கொதித்துப் போகிறார் அவர்... விலை நிர்ணயித்தது நீ இல்லை என்று தெரியும்.... நாளைக்கு உனது பாஸ்சுக்கு கொரோன வந்தா.... இப்படி அநியாயமா அடிச்சிக்கிற காசை அவரது புதைகுழிக்கு கொண்டு போக முடியாது என்று சொல்லு என்று கத்துகிறார். அதனை படம் பிடித்து போட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

விலைகளை உயர்த்த கடை உரிமையாளருக்கு உரிமை உண்டு. ( முதலாளித்துவம் முதல் , மனிதாபினம் பின்னர்). அதேவேளை, அந்த கடைகளை தவிர்த்து வேறு கடைகளை நாடும் வசதிகளும் இங்கு உண்டு.  

மறுபக்கம், விலையை கூட்டாமல் வைத்தால், நுகர்வோர்களோ எல்லாவற்றையும் வழித்து துடைக்கின்றனர்.

அப்படி இல்லை. moral & ethics என்றால் என்ன விலை என்று கேட்பது ஆசியர்கள் வழக்கம். ஆங்கில (இறைச்சி) கடைகளில் விலை இம்மியளவும் மாறவில்லை.

முதலாம், உலகப் போரில், ஆண்கள் யுத்த முனைக்கு சென்றுவிட, அரசாங்கம் உணவுக்கு ஏதாவது செய்யும் என்று வீட்டில் குந்திக் கொண்டிராமல் பெண்கள் திரண்டு, விவசாயங்களையும், கால்நடை பராமரிப்பு, யுத்த தளபாட, குண்டுகள் தயாரிப்பு என்று தம்மை ஈடுபடுத்தினார்.

Image result for wwi women in factory

Image result for wwi women in factory

Image result for wwi women in farmland

awww_nfuonline_com_assets_28939_.jpg

awww_nfuonline_com_assets_28940_.jpg

அந்த பங்களிப்பு காரணமாகவே பெண்களுக்கு (1918) வாக்களிப்பு வழங்கப்பட்டது.

இதுவே இரண்டாம் உலகப்போரில் தொடர்ந்தது. இதுவே இப்பொது நடக்கபோகின்றது. country First. அதனால் தான் உலகத்தினையே கட்டி ஆண்டனர். கட்டியாண்ட நாம், அடிமைகளாக உள்ளோம்.

இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்.

இந்த அர்ப்பணிப்பு எமது விடுதலைப் போராட்டத்தில் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

16 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லை. moral & ethics என்றால் என்ன விலை என்று கேட்பது ஆசியர்கள் வழக்கம். ஆங்கில (இறைச்சி) கடைகளில் விலை இம்மியளவும் மாறவில்லை.

சிறிய கடைகளில், அதாவது ஒருவரின் தனிப்பட்ட கடையில் விலைகள் உயர்ந்து தான் இருக்கின்றன.சிறிய  கடைக்காரர்கள் விலைகளை கூட்டுவதில் தவறில்லை.  
 
பெரிய, சங்கிலி கட்டமைப்பு கடைகளில் விலை கூட வில்லை. அவர்களால் இந்த சுனாமியை தாங்கலாம் 

20 minutes ago, Nathamuni said:

இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்.

சுகாதார துறை கட்டாய வேலை செய்ப்பவர்கள். அவர்கள், வேலைக்கு அமர்த்தப்பட்ட பொழுதே அதை தெரிந்தே சேர்ந்தார்கள். 

பல சூப்பர் மார்கெட்டுகள் நேரத்தை குறைத்துள்ளன, சம்பளத்தை கூட்டி உள்ளன. 

22 minutes ago, Nathamuni said:

இதுவே இரண்டாம் உலகப்போரில் தொடர்ந்தது. இதுவே இப்பொது நடக்கபோகின்றது. country First. அதனால் தான் உலகத்தினையே கட்டி ஆண்டனர். கட்டியாண்ட நாம், அடிமைகளாக உள்ளோம்.

2ஆம் உலகப்போரின் எதிரி கண்ணுக்கு தெரிந்தவன். கோவிட் 19 தெரியாதவன். 


2ஆம் உலகப்போரின் போது எதிரி மக்களை ஒற்றுமைப்படுத்தியனான். தற்பொழுது, கோவிட் 19 ஒரு குறிப்பிட்ட பொருளாதாரா, ஆரோக்கிய வல்லமைக்கு உட்பட்டோரை அழிக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

சிறிய கடைகளில், அதாவது ஒருவரின் தனிப்பட்ட கடையில் விலைகள் உயர்ந்து தான் இருக்கின்றன.சிறிய  கடைக்காரர்கள் விலைகளை கூட்டுவதில் தவறில்லை.  
 
பெரிய, சங்கிலி கட்டமைப்பு கடைகளில் விலை கூட வில்லை. அவர்களால் இந்த சுனாமியை தாங்கலாம் 

 

சிறிய கடைக்காரர் விலைகளை உயர்த்துவது பழைய, வீசி எறிய வைத்திருந்த பொருட்களின் காலாவதி தேதியினை மாத்திய பொருட்களை கூடஎன்பது அறியாமல் எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்?

large.Untitled.jpg.57ecbb74f35ede060a8bb4a4a144fdfb.jpgOld Expiry Date 31 Dec 2019 New Expiry date 31 Dec 2021

 

14 minutes ago, ampanai said:

சுகாதார துறை கட்டாய வேலை செய்ப்பவர்கள். அவர்கள், வேலைக்கு அமர்த்தப்பட்ட பொழுதே அதை தெரிந்தே சேர்ந்தார்கள். 

பல சூப்பர் மார்கெட்டுகள் நேரத்தை குறைத்துள்ளன, சம்பளத்தை கூட்டி உள்ளன. 

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

எதிரி குறித்து பேசவில்லை ஐயா.

இக்கட்டான காலங்களில் மக்களின் தேசிய கடமை செய்யும் உணர்வு குறித்தே சொன்னேன். 

14 minutes ago, ampanai said:

2ஆம் உலகப்போரின் எதிரி கண்ணுக்கு தெரிந்தவன். கோவிட் 19 தெரியாதவன். 


2ஆம் உலகப்போரின் போது எதிரி மக்களை ஒற்றுமைப்படுத்தியனான். தற்பொழுது, கோவிட் 19 ஒரு குறிப்பிட்ட பொருளாதாரா, ஆரோக்கிய வல்லமைக்கு உட்பட்டோரை அழிக்கின்றது. 

எதிரி குறித்து பேசவில்லை ஐயா.

இக்கட்டான காலங்களில் மக்களின் தேசிய கடமை செய்யும் உணர்வு குறித்தே சொன்னேன். 

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

சிறிய கடைக்காரர் விலைகளை உயர்த்துவது பழைய, வீசி எறிய வைத்திருந்த பொருட்களின் காலாவதி தேதியினை மாத்திய பொருட்களை கூடஎன்பது அறியாமல் எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்?

சகோ, நான் மேலே காலாவதியான பொருட்களை விற்பது பற்றி எதுவுமே கூறவில்லை. 

காலாவதியான பொருட்களை விற்பது சட்டத்திற்கு எதிரானது, அதை திருவாளர் பொதுமகன் இல்லை பொதுமகள் அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் முறையிட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பண தண்டனை விதிக்கப்படும்.  

7 minutes ago, Nathamuni said:

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

நீங்கள் எழுதியதற்கான பதில் : "இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்." 

9 minutes ago, Nathamuni said:

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

சமூக சிந்தனை எல்லோருக்கும் இருக்காது. ஒருவரின் வேலை 'அத்தியாவசியம்' என முத்திரை குத்தப்படாத இடத்தில் அவரால் அந்த வேலையை நிராகரிக்கும் உரிமை உள்ளது. அதனால் தான் பலரும் அதிக சம்பளம், பாதுகாப்பு கொடுத்து வேலைக்கு வர வைக்கிறார்கள், அங்காடிகளில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

விலைகளை உயர்த்தும் எம்மவர்கள்

90633407_117952596491181_804561543361462

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

மேற்குலக பொருளாதாரம் என்பது கேள்வியும் சந்தையும். 

சந்தையில் கேள்வி அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கும். 

போனமாதம் விற்ற விலைக்கு முகமூடியும் இல்லை கைகளை கழுவும் கிருமி நாசினியும் இல்லை. 

முடிந்தால் யாரும் தயாரித்து இல்லை இறக்குமதி செய்தும் உதவலாம் / உழைக்கலாம். 

மேற்குலக பொருளாதாரம் என்பது 'ரிஸ்க்; எடுப்பதும் பணம் சம்பாதிப்பதும் 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

மேற்குலக பொருளாதாரம் என்பது கேள்வியும் சந்தையும். 

சந்தையில் கேள்வி அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கும். 

போனமாதம் விற்ற விலைக்கு முகமூடியும் இல்லை கைகளை கழுவும் கிருமி நாசினியும் இல்லை. 

முடிந்தால் யாரும் தயாரித்து இல்லை இறக்குமதி செய்தும் உதவலாம் / உழைக்கலாம். 

மேற்குலக பொருளாதாரம் என்பது 'ரிஸ்க்; எடுப்பதும் பணம் சம்பாதிப்பதும் 

 

உங்கள் கருத்து  குழப்பமாகவே இருக்கின்றது.  Walmart , superstore, Safeway , no frills  என எந்த கனேடிய கடைகளி விலைகளை நெருக்கடிகளை பயன்படுத்தி  ஏற்றவிலலை.  பொருட்கள் தீர்ந்து போகின்றது ஆனால் மறுபடி அவை  கடைகளுக்கு கொண்டுவரப்பட்டு அடுக்கப்படுகின்றது ஆனால் விலையில் மாற்றம் இல்லை. மேலும்  அவர்கள் காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்துகின்றார்களே தவிர திகதியை மாற்றி விற்பதும் இல்லை   மேலும் அவர்கள் தங்களுக்கெனறு சாப்பாட்டுக்கடைகள்  வைத்து தங்கள் கடைகளில் வாடிப்போகும் காய்கறிகளை சாம்பாராக்குவதையும்  பழுதான மீன்களை பொரிப்பதும் எஞ்சும் இறச்சியை  கறிவைப்பதையும் கேள்விப்படவும்  இல்லை. 

உற்பத்தி மறறும இறக்குமதி தடைப்படும் போது இவைகளில் மாற்றம் வரலாம். அவை ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் நெருக்கடி நிலை ஏற்பட்ட  உடனேயே  இருப்பில் இருக்கும் பொருட்களை இரட்டிப்பாக்குவது கேவலமானது. 

நம்பிக்கை .  நாணயம்  . பொருளின் தரம் .  வியாபாரத்தில் அறம்  என எந்த தகுதியும் இல்லாத கடைகள் அவை எம்மவர் கடைகளாக இருந்தாலும்  அவற்றை தவர்ப்பதுதான் ஆரோக்கியமானது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

அக்கோய்.... அதுதானக்கா வியாபார தந்திரம்.. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை....

என்ன விலை கூடிப்போச்சு எண்டு கேட்ட்டால்.... நீங்கள் சொன்ன பதில் தான் கிடைக்கும்..

அது சரி.... நீங்களும் கடை வைத்திருந்த படியால், பாம்பின் கால் பாம்பறியும்... சரியோ?

Link to comment
Share on other sites

3 minutes ago, சண்டமாருதன் said:

உங்கள் கருத்து  குழப்பமாகவே இருக்கின்றது

சொல்லுங்கள், இதில் குழப்பம் என்று. என் கருத்தை பின்வைக்கின்றேன்.

குறிப்பு : ஒரு விடயத்தை மற்றும் முன்வைத்தால் கருத்தாட இலகுவாக இருக்கும். பல கருத்துக்களை ஒரே நேரத்தில் வைப்பது குழப்பம் தரலாம். 

Link to comment
Share on other sites

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

 

13 minutes ago, Nathamuni said:

அக்கோய்.... அதுதானக்கா வியாபார தந்திரம்.. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை....

என்ன விலை கூடிப்போச்சு எண்டு கேட்ட்டால்.... நீங்கள் சொன்ன பதில் தான் கிடைக்கும்..

அது சரி.... நீங்களும் கடை வைத்திருந்த படியால், பாம்பின் கால் பாம்பறியும்... சரியோ?

நாதம்,

இங்கு தமிழ் கடைகள் பலவற்றில் இந்த இரண்டு வகை அரிசிகளையும் தனிதனியாகத்தான் விற்பார்கள். புரியாணி  அரிசி (இது பாஸ்மதி அல்ல)  எப்பவும் மிகவும் தரம் குறைவாகவும் விலை குறைவாகவுமே இருக்கும். மற்றது தரமானதாகவும் 10 டொலர் அல்லது அதற்கும் மேலாகவே விற்பார்கள் (ரில்டா என்றால் 18 இல் இருந்து 21 வரைக்கும்). கடைக்கு கடை இந்த விலைகள் மாறுபடும். பெரும் வணிக நிலையங்களுக்கிடையில் கூட விலை வித்தியாசம் பெருமளவுக்கு காணப்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் இரா சுப்பர் மார்க்கெட், தமிழ் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற ஒரு கடை. ஸ்பைஸ்லாண்ட் போன்ற போராட்டத்துக்கு சேர்த்த பணத்தில் வியாபாரத்தை பெருக்காமல் குடும்பமாக உழைத்து முன்னேறியவர்கள் என பரவலாக நம்பப்படுவதால் மதிக்கத்தக்க கடைகளில் ஒன்று.

நேற்று இக் கடையை (இரா சுப்பர்மார்கெட்) தம் போட்டியாளர்களாக நினைக்கும் இன்னொரு தமிழ் கடைக்காரர்கள் இரா சுப்பர் மார்க்கெட்டில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் என்று கதை கட்டி அதனை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுக் கொண்டு இருந்தார்கள். விசாரித்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை, வேண்டும் என்றே பரப்பப்பட்டது என அறிய முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நேற்று இக் கடையை (இரா சுப்பர்மார்கெட்) தம் போட்டியாளர்களாக நினைக்கும் இன்னொரு தமிழ் கடைக்காரர்கள் இரா சுப்பர் மார்க்கெட்டில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் என்று கதை கட்டி அதனை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுக் கொண்டு இருந்தார்கள். விசாரித்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை, வேண்டும் என்றே பரப்பப்பட்டது என அறிய முடிந்தது.

போலீசில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

இன்று இங்கு வீதியால் போன வயதான தம்பதிகளை கலாயப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் போய் வேண்டுமென்றே இருமி விளையாடிய 15, 16, 17 வயது பொடியள், உள்ளுக்கு இருக்கினம்.

Link to comment
Share on other sites

7 minutes ago, Nathamuni said:

போலீசில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

இன்று இங்கு வீதியால் போன வயதான தம்பதிகளை கலாயப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் போய் வேண்டுமென்றே இருமி விளையாடிய 15, 16, 17 வயது பொடியள், உள்ளுக்கு இருக்கினம்.

இதை முறையிட்டு, பொலிஸ் நடவடிக்கை எடுக்க அலைவதை விட அவர்கள் இதனை அலட்சியம் செய்யவே முனைவர்.

மற்றது, அனேகமாக இன்றுடனோ இன்னும் சில நாட்களிலோ பல தமிழ் கடைகள் தற்காலிகமாக பூட்டப்படும் என நம்புகின்றேன்.  அரசு விதிகளை மீறி கூட்டமாக கூட செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விருப்பதாலும், விற்பதற்கான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதாலும் தற்காலிகமாக பூட்ட போகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வளர்ந்த நாட்டில் இப்படி செய்வது ஆச்சரியாமக உள்ளது. தங்கள் தஞ்சமடைந்த நாட்டிலுள்ள் எந்தவித வியாபார யும் பின்பற்றாத இவர்களை என்ன செய்வது. இங்கு 1 கிலோ tilda பாஸ்மதி அரிசிவிலை CAD 8 மட்டுமே.
LULU எனும் சுப்ப்ர் மார்கட்டில் எல்லா பொருட்களும் எந்த வித தட்டுப்படும் இன்றி மிக மலிவாக‌ கிடைக்கின்றது.

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

Link to comment
Share on other sites

50 minutes ago, colomban said:

ஒரு வளர்ந்த நாட்டில் இப்படி செய்வது ஆச்சரியாமக உள்ளது. தங்கள் தஞ்சமடைந்த நாட்டிலுள்ள் எந்தவித வியாபார யும் பின்பற்றாத இவர்களை என்ன செய்வது. இங்கு 1 கிலோ tilda பாஸ்மதி அரிசிவிலை CAD 8 மட்டுமே.
LULU எனும் சுப்ப்ர் மார்கட்டில் எல்லா பொருட்களும் எந்த வித தட்டுப்படும் இன்றி மிக மலிவாக‌ கிடைக்கின்றது.

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

நான் குறிப்பிட்ட Tilda விலையானது ஒரு கிலோ விற்கானது அல்ல. 4.5 கிலோ ( பத்து இறாத்தல்) இற்கான விலை. நீங்கள் குறிப்பிட்ட அங்குள்ள விலைப் படி பார்த்தால் CAD 36 இற்கும் மேல் வரும் 4.5 கிலோவுக்கு. எனவே இங்கு மலிவு.

அரிசிக்கு இங்கு வரி இல்லை. ஆனால் ஷவர்மாவுக்கு உண்டு. அதை விற்கும் விற்பனையாளருக்கு வேறு வரிகளும் உண்டு, எனவே வரிகள் இல்லாத மத்திய கிழக்கு நாடுகள் போல் 3 டொலருக்கு விற்க முடியாது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Clampdown on shops exploiting customers amid coronavirus pandemic.

https://www.itv.com/news/2020-03-20/watchdog-to-clamp-down-on-retailers-exploiting-coronavirus/

Link to comment
Share on other sites

எம்மவர் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பார்த்தேன், இடையில் ஒருவர் ஊடறுத்து இடம் எடுத்துவிட்டார். அவருக்கு அண்மையில் போய் கதைக்கவும் மனம் விரும்பவில்லை. அதேவேளை, நேற்று ஒரு கோப்பிக்கடையில் நின்றபொழுது ஒரு வட இந்தியரும் அதையே செய்தார். வரிசையில் நிற்கிறேன் என்றேன், அசடு வழிய சென்றார். 

பணத்தை செலுத்தும் பொழுது, காசாளாரிடம் மெதுவாக சொன்னேன். இந்த சமூக இடைவெளி பற்றி ஒரு அறிவித்தலை போடலாம் என்றேன். அத்துடன், பொருட்களை விற்பதற்கு நன்றியும் சொன்னேன்.  நாளைக்கு பணம் இருந்தாலும் பொருட்கள் இல்லாத நிலை வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ampanai said:

எம்மவர் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பார்த்தேன், இடையில் ஒருவர் ஊடறுத்து இடம் எடுத்துவிட்டார். அவருக்கு அண்மையில் போய் கதைக்கவும் மனம் விரும்பவில்லை. அதேவேளை, நேற்று ஒரு கோப்பிக்கடையில் நின்றபொழுது ஒரு வட இந்தியரும் அதையே செய்தார். வரிசையில் நிற்கிறேன் என்றேன், அசடு வழிய சென்றார். 

பணத்தை செலுத்தும் பொழுது, காசாளாரிடம் மெதுவாக சொன்னேன். இந்த சமூக இடைவெளி பற்றி ஒரு அறிவித்தலை போடலாம் என்றேன். அத்துடன், பொருட்களை விற்பதற்கு நன்றியும் சொன்னேன்.  நாளைக்கு பணம் இருந்தாலும் பொருட்கள் இல்லாத நிலை வரலாம். 

துருக்கிக் காரர்களுக்கும்,அந்த இடைவெளி... தமக்காக, ஒதுக்கி  விடப்பட்டது 
என நினைக்கும் மனோநிலையில் இருப்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, colomban said:

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

என்ன இருந்தாலும் ஓமணக்குட்டியின்ர சாப்பாடு மாதிரி வராதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 8:00 PM, சண்டமாருதன் said:

நோய்த் தொற்றுக்கு பயந்து சனம் அவதிப் படும் நேரத்தில் இப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமில்லை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.  ஒரே அளவு அரிசியின் விலையை இரண்டு மடங்காக்கியிருக்கிறாங்கள். 

மிகச் சரியான வார்த்தைப் பிரயோகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.