Sign in to follow this  
தமிழ் சிறி

நெருக்கடி கால கொள்வனவு, நாடளாவிய முடக்கங்கள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள சர்வதேச எச்சரிக்கை!

Recommended Posts

 

 

நெருக்கடி கால கொள்வனவு, நாடளாவிய முடக்கங்கள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள சர்வதேச எச்சரிக்கை!

அதிகரித்துவரும் ,நெருக்கடி கால கொள்வனவு மற்றும் நாடளாவிய முடக்கங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின், உணவு மற்றும் விவசாய அமையத்தால், குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதான தானியங்கள் மற்றும் என்னை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் தற்போது விநியோகத்துக்கு தவையான சேமிப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தில் இந்நிலையினை தடுக்க முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன.  இதனடிப்படையில் தனிமைப்படுத்தல் காலத்துக்கு தேவையான பொருட்களை பொது மக்கள் சேமித்து வருகின்றனர். இதனால், மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு உலகளாவிய ரீதியில் நிலவி வருகின்றது.

இந்நிலையில் குறித்த அத்தியாவசியப் பொருட்களுக்கான கேள்வி மற்றும் விநியோகம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமையத்தின் மூத்த ஆய்வாளர் ஒருவர் குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

உலகமெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் பேர் இலக்காகியுள்ளதுடன், பதின்மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

குறித்த வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் தாக்க ஆரம்பித்துள்ள இந்நிலையில், வளம் பொருந்திய நாடுகளிடம் இருந்தும் பெரு நிறுவனங்களிடம் இருந்தும் நாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி பதுக்குவது, உலகளாவிய ரீதியில் நெருக்கடியினையே உண்டுபண்ணும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமையத்தின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் அப்துல்ரெஸா அப்பாஸியன் (Abdolreza Abbassian) தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போர் காலத்துடன் ஒப்பிடப்படும் இந்நெருக்கடியான காலப்பகுதியில் எழுந்திருப்பது, வெறுமனே விநியோகம் தொடர்பான பிரச்னை அல்லவெனவும், உணவுப் பாதுகாப்பு தொடர்பான நடைமுறை மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய காலப்பகுதி இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நெருக்கடி-கால-கொள்வனவு-ந/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this