Jump to content

கொரோனா வைரஸ் - தொற்றை / பாதிப்பை தடுப்பது / குறைப்பது எப்படி?


Recommended Posts

625.0.560.320.160.600.053.800.700.160.90

வெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்!

வெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும் என விசேட வைத்தியர் அநுருத்த பாதனிய குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்று வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த அவர், “கொரோனா வைரஸானது ஒரு மாதத்திற்குள் நபரொருவரிலிருந்து சுமார் 403 பேருக்கு மிக வேகமாக பரவக் கூடியளவு ஆபத்தானது.

இதன் பாரதூரத் தன்மையை உணர்ந்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்போது பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

பொதுமக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல் உள்ளிட்டவற்றுக்காகவே தற்காலிகமாக ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அனைவரும் உணர்ந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கொரோனா வைரஸ் தீவிரமாகக் பரவலடைந்தால் எமது சொத்துக்கள் மாத்திரமின்றி விலைமதிப்பற்ற உயிரையும் பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.

வைரஸ் பரவல் தீவிரமடைந்தால் பொது மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் காணப்படும் சிக்கல் குறித்து எம்மைப் போன்றே நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.

ஒரு மாதத்திற்குள் ஒரு நபரிடமிருந்து சுமார் 403 பேருக்கு மிகத் துரிதமாக இந்த வைரஸ் பரவும் என்பது இதில் காணப்படும் மிகப் பாரதூரமான விடயமாகும்.

எனவே தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய செல்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வெளியில் செல்வது சிறந்ததாகும். அவ்வாறு வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது அத்தியாவசியமானது என்பதோடு விற்பனை நிலையங்களில் பிரிதொருவரிலிருந்து சுமார் 1 மீற்றர் தூர இடைவெளியில் நிற்க வேண்டும்.

பொருட்களை கொள்வனவு செய்து வீடு திரும்பிய பின்னர் கொள்வனவு செய்த பொருட்களை சிறிது நேரம் வெயிலில் வைத்து வீட்டுக்குள் எடுத்துச் செல்ல வேண்டும்.

அத்தோடு வெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும். ஆடைகளை சலவை செய்து வெயிலில் உலர வைத்து எடுப்பதும் அவசியமாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/வெளியில்-சென்று-திரும்பு/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவிலிருந்து முதியோர்களை பாதுகாப்போம் : முதியோர் செயலகம் வழங்கும் ஆலோசனைகள்

கொவிட் 19 வைரசு நாட்டில் பரவுவதன் மூலம் வயதில் முதிர்ந்த நபர்கள் இந்த வைரசு மூலம் பாதிப்புக்குள்ளாவதை தடுப்பதற்கு அமைவாக , தேசிய முதியோர் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு அமையும்.
கொவிட் 19 பரவுவதையடுத்து கூடுதலான அனர்த்தத்தை எதிர்கொள்ளும் குழுவினராக வயதில் கூடியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அடையாளங்காணப்பட்டுள்ள பின்புலத்தின் கீழ் இந்தக் குழுவினரை வைரசிலிருந்து மிகவும் முக்கியமாக பாதுகாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கையில் சுமார் 30 இலட்சம் பேரைக்கொண்ட முதியோர் சமூகத்தை கொவிட் 19 வைரசிலிருந்து பாதுகாப்பதற்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இதில் , இலங்கை முதுமை நோய் மருத்வர் வைத்திய விஞ்ஞான சங்கத்தின் தலைவர் டாக்டர் திருமதி பத்மா குணரத்ன அவர்களினால் கொவிட் 19 வைரசு பரவுவதை தொடர்ந்து அதிலிருந்து முதியோரை பாதுகாப்பதற்காக கீழ்கண்ட ஆலோசனைகளை உள்ளடக்கிய செய்தியொன்றை விடுத்துள்ளார்.
வீடுகளிலுள்ள முதியோரைப் போன்று அரச மற்றும் தனியார் பிரிவினால் நடத்தப்பட்டுவரும் முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர் கீழ்கண்ட ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டும்.
01. இந்த வைரசு முதியோரான உங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதினால் ஏனையோருடன் நெருங்கிய தொடர்புகொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
02. வைத்தியசாலை சிகிச்சைக்காக செல்வதை குறைத்து உங்களது மருந்தை ஏனையோரின் மூலம் அருகிலுள்ள மருந்தகங்களில் பெற்றுக்கொண்டு முறையாகப் பயன்படுத்துங்கள்
03. தற்பொழுது கைகளை சவர்க்காரத்தைப் பயன்படுத்தி அடிக்கடி கழுவிக்கொள்ளுங்கள் (விசேடமாக பணப்பாவணை மற்றும் வெளியிடங்களுக்கு சென்று வந்த பின்னர்)
04. ஏனையோருடன் உரையாடும் பொழுது ஆகக்குறைந்து 3 அடி இடைவெளி தூரத்தை கடைபிடியுங்கள்
05. பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினரை அரவணைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
06. இருமும் பொழுதும் தும்மும்பொழுதும் வாய் மற்றும் மூக்கை பாதுகாப்பாக மூடிக்கொள்ளவும்
07. புதியவர்களைவ வீட்டுக்கு அழைத்தல் மற்றும் கூட்டமாக கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
08. அவசிய விடயத்திற்காக வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்
09. எப்பொழுதும் கொதித்தாரிய நீரை பயன்படுத்துவதுடன் குளிர்பானங்களை அருந்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
10. மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்திருங்கள். சுகமான நித்திரை மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்.
இதற்கு மேலதிகமாக வயது பிரிவுகளுக்கு அமைய நோக்கும் பொழுது வயதானவர்களுக்கு இந்த நோய் தொற்றும் சதவீதத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு 15 சதவீதமும் 70 தொடக்கம் 79 வயதுக்குட்பட்டவர்களுக்கு 9சதவீதமும் , 60 – 69 வயதிற்குட்பட்டவர்களுக்கு 3.8 சதவீதமும் என்ற ரீதியில் இருக்கக்கூடும்.
இதற்கமைவாக , இந்த நிலை தணியும் வரை வயதானோர் மேற்கண்ட ஆலோசனைகளை கடைபிடித்து தமது இருப்பிடங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தேசிய முதியோர் செயலகம் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
-(3)

 

http://www.samakalam.com/செய்திகள்/கொரோனாவிலிருந்து-முதியோ/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிக தெளிவான எளிமையான விளக்கம்.
இன்றைய நிலைமையில் அவசியம் கேட்க வேண்டிய ஒன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.