Jump to content

தமிழகம் முழுவதும் 144 தடை: மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் 144 தடை: மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது!

 

40.jpg

தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை மற்ற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு நாளை மாலை 6 மணி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதுதொடர்பாக 144 தடை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்கள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர்த்து மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது. அத்தியாவசிய துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது” என்றும் தெரிவித்த முதல்வர்,

வீடுகளில் இல்லாமல் விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்கும். அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், “தடை உத்தரவு நாட்களில் பணிக்கு வர முடியாத நிலையில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் எந்தத் தடையும் இல்லை. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான ஆணை வெளியிடப்படும். கொரோனா நோய் பரவுவதை தடுக்க அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

https://minnambalam.com/public/2020/03/23/40/tamil-nadu-government-announced-144-section-state

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.