Sign in to follow this  
கிருபன்

தமிழகம் முழுவதும் 144 தடை: மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது!

Recommended Posts

தமிழகம் முழுவதும் 144 தடை: மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது!

 

40.jpg

தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை மற்ற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு நாளை மாலை 6 மணி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதுதொடர்பாக 144 தடை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்கள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர்த்து மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது. அத்தியாவசிய துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது” என்றும் தெரிவித்த முதல்வர்,

வீடுகளில் இல்லாமல் விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்கும். அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், “தடை உத்தரவு நாட்களில் பணிக்கு வர முடியாத நிலையில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் எந்தத் தடையும் இல்லை. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான ஆணை வெளியிடப்படும். கொரோனா நோய் பரவுவதை தடுக்க அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

https://minnambalam.com/public/2020/03/23/40/tamil-nadu-government-announced-144-section-state

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி: தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள்   இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணமானது, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என பல சமூகங்கள் வாழும் ஒரு பகுதியாக காணப்படுகின்ற நிலையில், அந்த மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான பல தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன. எனினும், கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களை அடையாளம் கண்டு அவற்றை முகாமைத்துவம் செய்யும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்கள் அனைவரும் சிங்கள பௌர்த்தர்களாக காணப்படுகின்றனர். இதையடுத்தே, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜனாதிபதி செயலணி அங்கத்தவர்கள் ஜனாதிபதி செயலணியில் இரண்டு பௌத்த மதகுருமார்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி,பேராசிரியர்கள், தொல்பொருள் ஆணையாளர் நாயகம், நில அளவையாளர் நாயகம், பிரபல ஊடக நிறுவனமொன்றின் தலைவர் உள்ளிட்டவர்கள் அங்கம் பெறுகின்றனர்.   கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அடையாளம் காணப்படும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை பாதுகாத்தல் மற்றும் மீள் நிர்மாணம் செய்து, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான நடைமுறைகளை பின்பற்றுதல், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்கள் காணப்படும் நிலங்களை அளவீடு செய்து, அவற்றை சட்ட ரீதியிலான இடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்களை இந்த செயலணி செய்வுள்ளது. மனோ கணேஷன் எதிர்ப்பு இலங்கையில் தொல்பொருள் சின்னங்கள் முழுமையாக சிங்கள பௌத்த வரலாற்றை தழுவியதாக கூறப்படும் கருத்து முற்றிலும் பிழையானது என முன்னாள் அமைச்சரும்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேஷன் தெரிவிக்கின்றார். கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணியில், பௌத்தர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் முழுமையான சிங்கள பௌத்த வரலாறு கிடையாது எனவும் அவர் கூறினார். இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கும், இந்துக்களுக்கும் சொந்தமான பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.   தமிழர்களை பொருத்தவரையில் தொன்மை என்பது வெறுமனே தமிழ் இந்து என்ற வரையறைக்குள் மட்டுமல்லாமல், தமிழ் பௌத்தம் என்ற வரையறைக்குள்ளும் வருவதாக அவர் கூறினார். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பௌத்த சின்னங்கள் என அடையாளப்படுத்தப்படும் பெரும்பாலான சின்னங்கள் தமிழ் பௌத்த சின்னங்களாகவே காணப்படும் என அவர் குறிப்பிடுகின்றார். இலங்கையில் பௌத்த சின்னங்கள் கிடைத்தால், அது சிங்கள பௌத்த சின்னங்கள் என கூறுவது பிழையான விடயம் என மனோ கணேஷன் தெரிவிக்கின்றார். பௌத்தம் என்றால், அது சிங்களம் கிடையாது என கூறிய அவர், பௌத்தத்தின் புராதன மொழி பாலி மொழி எனவும் கூறினார். இந்த நிலையில், பௌத்த தேரர்கள், ராணுவ அதிகாரிகள், பௌத்த சிந்தனை கொண்டவர்களை இணைத்து ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதானது, நாட்டை முழுக்க முழுக்க பௌத்த மயப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தூர நோக்கை வெளிப்படுத்துவதாக அமைவதாகவும் அவர் கூறினார்.   இவ்வாறான ராஜபக்ஷவின் சிந்தனைகளையே தாம் எதிர்ப்பதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவிக்கின்றார். ஊடகவியலாளரின் கருத்து கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருட்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால், அந்த மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தின் பாரம்பரியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை போன்றதொரு எண்ணம் தோன்றுவதாக ஊடகவியலாளர்கே.எம்.ரசூல் தெரிவிக்கின்றார். சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்களும் இந்த செயலணியில் அங்கம் பெறுவதாக அவர் குறிப்பிடுகின்றார். பௌத்த பாரம்பரிய சின்னங்கள் இருப்பதாக கூறி, தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்துவதை போன்றதொரு தோற்றமே எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.   அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு இந்த செயலணியினால் வழங்கப்படும் கடமைகள் அல்லது பொறுப்புக்களை அவர்கள் நிறைவேற்றாத பட்சத்தில், அது தொடர்பில் நேரடியாக தன்னிடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி இந்த செயலணிக்கு வர்த்தமானி ஊடாக உத்தரவுபிறப்பித்துள்ளார். இந்த விடயமானது, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் அரச அதிகாரிகளுக்கு ஆபத்தான ஒரு விடயமாக அமையலாம் என சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் கூறுகின்றார். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு இலங்கை போன்ற பல்வேறு சமூக மக்கள வாழும் நாடொன்றில், மக்களின் பாரம்பரியத்தை பிரபலிக்கும் தொல்பொருள் போன்ற விடயங்களுக்கான செயலணிகள் ஸ்தாபிக்கப்படுமாக இருந்தால், அதில் மூவின மக்களும் இடம்பிடிக்க வேண்டியது கட்டாயமான விடயம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமை செயற்பட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார். அவ்வாறின்றி, சிங்கள இனத்தவரை மாத்திரம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சந்தர்ப்பத்தில், அது சிங்கள இனத்திற்கு சார்ந்த முடிவுகளாக அமையும் என்ற சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அதுமாத்திரமன்றி, இந்த செயற்பாடு தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கு சமத்துவத்தை வழங்கவில்லை என்பதை பிரதிபலிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.   இவ்வாறான செயலணியில் அனைத்து இனத்தவரும் உள்வாங்கப்பட்டிருக்கும் பட்சத்தில்,தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவரின் வரலாறு, அடையாளங்கள் சிதைக்கப்படும் அல்லது மறைக்கப்படும் என்ற சந்தேகம் எழாது என அவர் கூறுகின்றார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த செயலணி, ஜனாதிபதிக்கு மாத்திரமே பதில் கூறும் வகையில் உள்ளதாகவும், அதனால் அதன் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்காது எனவும் அவர் தெரிவிக்கின்றார். இந்த செயலணியை பௌத்த சமய பிரதிநிதிகள் மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றமையினால், ஏனைய சமயங்கள் சமமாக கருதப்படவில்லை என்ற எண்ணமும் எழுவதாக அவர் குறிப்பிடுகின்றார். மூன்று இனத்தவரும் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில், சிங்கள இனத்தவர் மாத்திரம் தொல்பொருள் தொடர்பிலாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் பெறுவார்களேயானால், அதுவும் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடு என அவர் கூறுகின்றார். அதுமாத்திரமன்றி, ஜனநாயக நாடொன்றில் ராணுவம் எந்தளவிற்கு தலையீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் காணப்படுகின்ற பின்னணியில், அனைத்து விடயங்களிலும் ராணுவம் உள்வாங்கப்படுவது அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்த செயற்பாடானது ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.   ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த செயலணியின் ஊடாக இவ்வாறான அச்ச நிலைமைகள் தோன்றுவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமை செயற்பட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை இலங்கையிலுள்ள மரபுரிமைகள், இயற்கை வளங்கள் ஆகியன மனித செயற்பாடுகளினால் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இந்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் தனித்துவத்தை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பிரபல்யப்படுத்தல் மற்றும் அம்மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் இந்த செயலணியின் பொறுப்பு என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது   https://www.bbc.com/tamil/sri-lanka-52942701
    • துல்ப‌ன்  , ஜ‌யா அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ச‌ர்வ‌தேச‌ சூழ் நிலை அறிந்து அத‌ற்கு ஏற்ற‌ போல் காய் ந‌க‌ர்த்தினார் , எம்ம‌வ‌ர் வ‌ன்னியில் இருந்து கூட‌ அவ‌ச‌ர‌ப் ப‌ட்ட‌து உண்மை தான் , வாழ்க்கையில் எல்லாரும் பிழை த‌வ‌றுக‌ள் விடுவ‌து வ‌ழ‌க்க‌ம் , எல்லாரும் க‌ண்ண‌ மூடிட்டின‌ம் நாம் அவ‌ர்க‌ளை விம‌ர்சிக்காம‌ அடுத்த‌ க‌ட்ட‌த்த‌ நோக்கி ந‌க‌ர‌ பாப்போம்   ,   
    • இந்தியாவில் வாழ்ந்திருந்த காலத்தில்ன் ஆரம்பத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் 1986 ம் ஆண்டின் நடுப்பகுதியில்  பாத்திமா மெஸ் எனும் பெயரில் ஒரு பதிவான காரல் வீட்டில் உணவகம் ஒன்று இருந்தது. அ வ்வஏளையில் தமிழ் நாட்டின் கிராமப்புற உணவின் சுவையை அங்குதான் நான் அறிந்துகொண்டேன் அதன்பைன்னராக நான் இந்தியாவில் வாழ்ந்தகாலங்களில் முன்னமே திட்டமிடாத பல பயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன் அது அப்போதைய காஸ்மீரிலிருந்து நேபாள் நாட்டின் தலைகர் காட்மண்ட் வரைக்குமானது, ஆனால் இப்போதுபோல் லடாக் எனும் பகுதிக்குப் பயணம் செய்வது அவ்வேளையில் அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை, தவிர காஸ்மீர் பயணம் நான் படித்த பிரசிடென்ஸ்சிக் கல்லூரியால் ஒழுங்குசெய்யப்பட்டது, ஆகவே அதுகூட மட்டுப்படுக்தப்பட்டதாகும் தவிர சென்னையில் சில உணவகங்கள் பிராந்திய உணவுகளை விற்பனை செய்ய இருந்தாலும் பாணிபஜார் பகுதியிலுள்ள ஆந்திரா முறையிலான உணவகம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதரும் உணவுப்பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அங்கு கிடைக்கும் உறைப்பான கறி வகைகள். அவ்வுணவகத்துக்குப் பக்கத்தில் "உம்மிடி பங்காரு" எனும் பெயரில் அவ்வேளைய மட்ராசின் மேட்டுக்குடிகளுக்கான புடவைக்கடை இருந்தது நினைவு. இபோது இந்தியா காபி கவுஸ் இருக்க இல்லையா தெரியாது அங்கு பரிமாறும் காப்பி அலாதியான சுவையுள்ளது. வூட்லஸ்சும் அப்படியே. அவ்வேளையில் சானியனின் காப்பிக்கனவை நிறைவு செய்தது நரசுஸ் காப்பி ஆகும். தவிர மண்ணடி அதாவது பாரிஸ் கார்ணர் பர்மாபஜார் பகுதிக்கு அண்மித்து லிங்கிச்செட்டி தெரு  தம்புச்செட்டிதெரு மூலையில் என நினைக்கிறேன் அங்கு ஒரு சிறிய யூஸ் கடை இருந்தது அந்தப்பக்கம் யாராவது கிப்ஸ் சாராம்  வாங்கத் தெரிந்தவர்களுடன் போனால் அங்கு விற்கப்படும் சாத்துக்குடி யூசைச் சுவைக்கத் தவறுவதில்லை கண்முன்னாலேயே தயாரித்து நடுத்தரமான கிளாசில் ஊற்றித்தருவார்கள். தவிர ஊருக்கு ஊர் வைன் சாப் எனு பெயரில் மதுசாலைகள் இருந்தாலும் பல்லாவரம் சந்தியிலிருந்து கிழக்குப்பக்கமாக சென்னை ஏயார்போட்டுக்குப் பின்னால் பொழிச்சனூர் எனும் பகுதி அதிகமான செங்கல் சூழ்களும் பனைகளும் நிறைந்த பகுதியுமாக அப்போது இருந்தது அதையொட்டி ஒரு ஆறும் அப்போது  மாரிகாலங்களில் மட்டும் தண்ணீருடன் காணப்படும், இப்போது அப்பகுதி சென்னையின் பெரும் குடியிருப்புப்புப் பகுதியாக காலம் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது. அவ்வேளையில் சென்னையை அண்டியுள்ள குறிப்பிட்ட சில பனங்கள்ளு ரசிகர்களுக்கான சரணாலையமாக இருந்தது அதில் நானும் அவ்வேளைகளில் புலம்பெயர் நாடுகளிலிருந்து வரும் எம்மவர்களும் அடக்கம்.  திருப்பதியில் சாமிகும்பிட்டுவிட்டு வரும்போது கையில் ஒரு சிறிய லட்டும் அதோடு அன்னதானத்துக்கான ஒரு டோகனும் கொடுப்பார்கள் கொஞ்சம் மினக்கேடுதான் ஆனால் உள்ளே நுளைந்து அந்தச்சாப்பாடைச் சாப்பிட்டால் வெறும் சாம்பார் சாதம் தான் ஆனால் அதற்குள் முதக்கும் செத்தமிளகாயைக் கேட்டு வாங்கிக் கடித்துச் சாப்பிட்டால் சின்னக்கடையில் மீன் விற்கும் அக்கா சொல்ல்கிறமாதிரி "ஆண்டவரின் விலா எலும்பு தெரியிம்"
    • தாத்தா , நீங்க‌ள் அவ‌ர் ம‌ன‌ம் நோகும் ப‌டி ஒன்றும் எழுத‌ வில்லை ,  நானும் நாதாவும் ப‌க‌ல‌வ‌னை பார்த்து நேர்மையாய் தான் ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்டோம் , அதில் அவ‌ர் ம‌ன‌ம் நோகும் ப‌டி நாம் ந‌ட‌ந்து கொள்ள‌ வில்லை , அண்ண‌ன் சீமானை த‌ர‌ம் தாழ்த்தி ப‌க‌ல‌வ‌ன் அருவ‌ருப்பாக‌ எழுதி இருந்தார் , அத‌ற்கு பிற‌க்கு யோசிச்சு பார்த்தேன் இவ‌ரை எல்லாம் ஏன் அண்ணா என்று அழைக்க‌னும் , அவ‌ரின் பெய‌ரை சொல்லி அழைப்ப‌தே ச‌ரி என்று என் ம‌ன‌சு சொல்லிச்சு