Jump to content

Recommended Posts

யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை தொடா்பாக ஊடகங்களுக்கு இன்று மாலை கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டிருக்கின்றார்.

இதனடிப்படையில் 1,729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரியாலை பகுதியில் மட்டும் 192 பேரும் 80 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றது.

அதேபோல், கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டிருக்கும் தாவடி கிராமத்தின் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கிறது.

 

இதேவேளை, மேலும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவதால் நோய் பரவலை தடுக்கலாம்.

அதேபோல் ஊரடங்கு மேலும் 2 அல்லது 3 வாரங்களுக்கு நீடிக்கப்படலாம். எனவே மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

தமக்குத் தேவையான உதவிகளை மக்கள் தமது பிரதேச செயலர் ஊடாகத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

வெதுப்பகப் பொருட்களை விநியோகம் செய்ய இன்று காலை நடவடிக்கை எடுத்தோம். அதனை மாலையிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன் அத்தியவசிய உணவுப் பொருட்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோல் பிரதேச செயலர்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவர்களுக்கு உலர் உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

மேலும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஊடாக ஒரு மில்லியன் ரூபாய் நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது.

மேலும் பிரதமர் ஊடாக மாவட்டத்திற்கு ஒரு மில்லியன் வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கிறது. எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும்.

மக்கள் விழிப்பாக இருப்பதுடன் நோய் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/srilanka/01/241670?ref=rightsidebar

Link to comment
Share on other sites

கொரோனா நோயாளியின் தாவடி பகுதி வீட்டில் விழிப்புணர்வு நடவடிக்கை

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மதபோதகருடன் உரையாடிய தாவடியைச் சேர்ந்த கட்டட தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரின் தாவடியில் அமைந்துள்ள வீட்டுச்சூழலில் விழிப்புணர்வு நடவடிக்கை ?மேற் கொள்ளப்பட்டது.

அப்பகுதி சுகாதாரப்பகுதியினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

https://www.ibctamil.com/srilanka/80/139634

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்த்தரின் திருவிளையாடல் புராணம். ஆண்டவனை சொல்லி ஆட்களை சாகடிப்பது ஒரு வகை. 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண கொரோனா நோயாளி கொழும்பில் எப்படி உள்ளார்?

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் கொழும்புக்கு அனுப்பப்பட்டநிலையில் அங்கு அவரது உடல் நிலை சாதாரணமாகவே உள்ளது.

ஆகவே அவர் இன்னும் சில நாட்கள் சிகிச்சை பெற்று அந்த சிகிச்சையின் பின்னர் அவரது உடலில் கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டபின்னர் அவர் வீட்டுக்கு வருவாரென எதிர்பார்ப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை காணொளி வடிவில்

https://www.ibctamil.com/srilanka/80/139736

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள 214 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் -யாழ். அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் மனைவி மூலம், சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள 214 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.சுவிஸ் பாஸ்டரை சந்தித்து பேசிய போது கொரானா தொற்றுக்கு உள்ளாகிய நபரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை வழங்கியுள்ளதால் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அந்த சமுர்த்திக் கொடுப்பனவை பெற்றவர்கள் என அத்தனை பேரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

தாவடிப் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபரின் மனைவி சமுர்த்தி உத்தியோகஸ்தராவார். அவர் அண்மையில் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கியுள்ளார். எனவே அவரிடம் இருந்து சமுர்த்தி கொடுப்பனவினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அடையாளம் காணப்பட்ட நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கை உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/uncategorized/சண்டிலிப்பாய்-பகுதியில்/

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

அடையாளம் காணப்பட்ட நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கை உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நல்ல விஷயம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.