Jump to content

கொரோனா விழிப்புணர்வில் எம்.ஜி.ஆர் பாடல்…! கையை தொட்டா.. நீ கெட்ட..


Recommended Posts

 

கிராமப்புற மக்களிடம் கொரோனா விழிப்புணர்வை வேகமாக கொண்டு சேர்க்கும் விதமாக எம்.ஜி.ஆரின் பாடல் ஒன்று பயன்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் நோயின் அச்சமின்றி  பேருந்து பயணத்திற்கு முண்டியடிக்கும் நபர்கள் பின்பற்ற வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கிருமி பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இத்தாலியின் நிலைமையை பார்த்தும் அஞ்சாத நம்மவர்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்பதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டமாக முண்டியடித்த பயணிகளின் இந்த காட்சிகளே சாட்சி..!

பேருந்து பயணத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த பேருந்துகளின் எண்ணிக்கையை அரசு கணிசமாக குறைத்தாலும், ஏதோ பண்டிகையை கொண்டாட ஊருக்கு செல்வது போல நகரத்தில் இருந்து அவசர அவசரமாக சொந்த கிராமத்திற்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

சொந்த ஊருக்கு செல்வதெல்லாம் சரி, அங்கும் இந்த கொள்ளை நோய் பரவாமல் இருக்க வேண்டுமானால், நோயின் அறிகுறி இல்லாவிட்டாலும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வீட்டுக்குள் தனித்திருங்கள், அதனை சம்பந்தப்பட்ட கிராமத்தினர் உறுதிப்படுத்துங்கள் என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

இந்த நிலையில், கிராமபுறத்தில் உள்ள மக்களுக்கு, கொரோனா வைரஸ் கிருமியானது, கையால் தொட்டால் எளிதில் பரவக்கூடியது என்பதை எளிமையாக உணர்த்தும் விதமாக தர்மம் தலைக்காக்கும் படத்தில் டாக்டராக நடித்திருக்கும் எம்.ஜி.ஆரும் நோயாளி போல் நடிக்கும் சரோஜாதேவியும் பாடும் பிரபல காதல் பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதில் தொட்டுவிட தொட்டுவிட தொடரும், கைபட்டுவிட பட்டுவிட மலரும் என்பதை கைபட்டுவிட பட்டுவிட கொரோனா பரவும் என்று அந்த பாடலை மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆயிரம் விழிப்புணர்வு படங்கள் காட்டினாலும் சுயக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் இத்தாலி அதிபர் போல சடலங்களை புதைக்க கூட இடமில்லை என்று கண்ணீர் விட்டு கதறும் விபரீத நிலை தான் அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.</p>
<p>நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தாவது, முககவசம் அணிந்து, கைகளை நன்றாக கழுவி, தனித்திருந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம்..! கொரோனா பரவுவதை முழுமையாக தடுப்போம்..!

https://www.polimernews.com/dnews/104761/கொரோனா--விழிப்புணர்வில்எம்.ஜி.ஆர்-பாடல்…!-கையைதொட்டா..-நீ-கெட்ட..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.